search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மகாராஷ்டிரா பட்ஜெட்"

    • பெட்ரோல் விலை லிட்டருக்கு 65 காசும், டீசல் விலை லிட்டருக்கு 2.60 ரூபாயும் குறைய இருக்கிறது.
    • ஜூலை 1-ந்தேதி முதல் இந்த விலை குறைப்பு அமலுக்கு வரும்.

    மகாராஷ்டிரா மாநில சட்டமன்றத்தில் ஏக் நாத் ஷிண்டே தலைமையிலான அரசு 2024-25-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தது. துணை முதல்வரும், நிதி மந்திரியுமான அஜித் பவார் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

    அப்போது மும்பை பெருநகர் மாநகராட்சி பகுதிகளில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரி குறைக்கப்படும் என அறிவித்தார்.

    இதனால் பெட்ரோல் விலை லிட்டருக்கு 65 காசும், டீசல் விலை லிட்டருக்கு 2.60 ரூபாயும் குறைய இருக்கிறது. இதனால் அரசுக்கு 200 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும் என அஜித் பவார் தெரிவித்தார்.

    இது தொடர்பாக முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேயிடம் செய்தியாளர்கள் கேட்டபோது அவர் கூறும்போது "பட்ஜெட்டில் வாட் வாரி குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டமன்றத்தில் பட்ஜெட் நிறைவேற்றப்பட்ட பின், ஜூலை 1-ந்தேதி முதல் நடைமுறைக்கு வரும்" என்றார்.

    • 21 முதல் 60 வயதுடைய தகுதியுடைய பெண்களுக்கு மாதந்தோறும் 1500 ரூபாய் வழங்கப்படும்.
    • ஐந்து பேர் கொண்ட குடும்பத்தினருக்கு வருடத்திற்கு 3 சமையல் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும்.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் வருகிற அக்டோபர் மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் சட்டமன்றத்தில் துணை முதல்வரான அஜித் பவார் 2024-25 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது பல்வேறு இலவச திட்டங்களை அறிவித்தார்.

    21 முதல் 60 வயதுடைய தகுதியுடைய பெண்களுக்கு மாதந்தோறும் 1500 ரூபாய் வழங்கப்படும். ஐந்து பேர் கொண்ட குடும்பத்தினருக்கு வருடத்திற்கு 3 சமையல் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும்.

    மின்சார கட்டணம் செலுத்தாத 44 லட்சம் விவசாயிகள் கட்டணம் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்தார். இவை அனைத்தும் ஜூலை மாதத்தில் இருந்து அமலுக்கு வரும் வர இருக்கிறது. இந்த திட்டங்களுக்காக பட்ஜெட்டில் 46 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்படும் எனவும் தெரிவித்தள்ளார்.

    ×