search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாதுகாப்பு உற்பத்தி"

    • பிரதமர் மோடியின் தலைமையில் மேக் இன் இந்தியா திட்டம் ஆண்டுக்கு ஆண்டு புதிய மைல்கற்களை கடந்து வருகிறது.
    • 2023-24ல் பாதுகாப்பு உற்பத்தியின் மதிப்பில் இந்தியா இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்த வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

    புதுடெல்லி:

    பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    2023-24 ஆம் ஆண்டில் பாதுகாப்பு உற்பத்தியின் மதிப்பில் நாடு எப்போதும் இல்லாத அளவுக்கு மிக உயர்ந்த வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. மேலும் மேக் இன் இந்தியா திட்டம் புதிய மைல்கற்களை கடந்து வருகிறது.

    உலகளாவிய பாதுகாப்பு உற்பத்தி மையமாக இந்தியாவை வளர்ப்பதற்கு உகந்த ஆட்சியை உருவாக்க அரசாங்கம் உறுதி பூண்டுள்ளது.

    பிரதமர் மோடியின் தலைமையில் மேக் இன் இந்தியா திட்டம் ஆண்டுக்கு ஆண்டு புதிய மைல்கற்களை கடந்து வருகிறது.

    2023-24ல் பாதுகாப்பு உற்பத்தியின் மதிப்பில் இந்தியா இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்த வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. உற்பத்தியின் மதிப்பு 2023-24-ல் ரூ.1,26,887 கோடியை எட்டியுள்ளது. இது முந்தைய நிதியாண்டில் உற்பத்தி மதிப்பை விட 16.8 சதவீதம் அதிகமாகும்.

    பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் பாதுகாப்பு பொருட்களை உற்பத்தி செய்யும் பிற பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழில்துறை உட்பட இந்திய தொழில்துறைக்கு வாழ்த்துகள்.

    இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.


    ×