search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "23 லட்சம்"

    • பேன்சி நம்பர் அவற்றின் இலக்கங்கள், எழுத்துக்களின் வரிசைகளுக்காக தேர்வு செய்யப்படுகின்றன.
    • பேன்சி நம்பர்களைப் பெறுவதற்கு டெல்லி போக்குவரத்து துறை ஆன்லைன் வாயிலாக ஏலம் நடத்துகிறது.

    புதுடெல்லி:

    எளிய முறையில் நினைவில் வைத்துக் கொள்ளும் வகையில் பேன்சி நம்பர் கொண்ட நம்பர் பிளேட்களை வாங்குகின்றனர்.

    இந்த வகையிலான பேன்சி நம்பர் அவற்றின் இலக்கங்கள், எழுத்துக்களின் வரிசைகளுக்காக தேர்வு செய்யப்படுகின்றன. இவை தனிப்பட்ட விருப்பத் தேர்வுகள், அதிர்ஷ்ட எண்கள் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுகின்றன.

    இதற்கிடையே, வாகனங்களுக்கான பேன்சி நம்பர்களைப் பெறுவதற்கு டெல்லி போக்குவரத்து துறை ஆன்லைன் வாயிலாக ஏலம் நடத்துகிறது.

    இந்நிலையில், டெல்லி போக்குவரத்துத்துறை கடந்த ஜனவரி முதல் ஜூன் வரை நடத்திய ஏலத்தில் பெரும்பாலான வாகன ஓட்டிகள் விரும்பும் 0001 என்ற பேன்சி எண்ணுக்கு மார்ச் மாதம் நடந்த ஏலத்தில் 5 லட்சம் ரூபாய் ஆரம்ப விலையாக நிர்ணயிக்கப்பட்டது. இறுதியில் இந்த எண் 23.4 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது. ஏலத்தில் எடுத்தவரின் பெயர், விவரங்கள் வெளியிடப்படவில்லை.

    இதற்கு அடுத்தபடியாக 0009 என்ற பதிவு எண் கடந்த ஜூன் மாதத்தில் 11 லட்சம் ரூபாய்க்கும், 0007 என்ற எண் ஜனவரி மாதத்தில் 10.8 லட்சம் ரூபாய்க்கும் ஏலம் போனது.

    இதுபோன்ற எண்களை பெரும்பாலும் அரசியல் கட்சி தலைவர்கள், அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள் ஏலத்தில் எடுப்பதாக போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×