search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிகரெட் கம்பெனி"

    • தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகம் எதன் அடிப்படையில் சித்தா சான்றிதழ் படிப்பு வழங்குகிறது.
    • யுஜிசியிடம் உரிய அனுமதி பெற்று உள்ளதா என்றும் நீதிபதி கேள்வி.

    தஞ்சை மாவட்டம் வல்லத்தில் சித்த மருத்துவ கிளினிக் நடத்தி வரும் ஜெயக்குமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

    இந்த மனு மீதான விசாரணை இன்று நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது, "தான் சித்த மருத்துவம் கிளினிக் நடத்துவதில் தலையிடக் கூடாது என தஞ்சாவூர் மாவட்ட காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    தமிழ் பல்கலைக்கழகம் வழங்கும், சித்தா படிப்பு சான்றிதழை வைத்து சித்த மருத்துவம் பார்க்க முடியாது என சான்றிதழில் சிறிய அளவில் குறிப்பிடப்பட்டுள்ளது என பல்கலை தரப்பில் கூறப்பட்டது.

    தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகம் எதன் அடிப்படையில் சித்தா சான்றிதழ் படிப்பு வழங்குகிறது என்றும் சிகரெட் கம்பெனிக்கும், தமிழ் பல்கலைக்கழகத்திற்கும் வித்தியாசம் இல்லையா ? என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

    மேலும், யுஜிசியிடம் உரிய அனுமதி பெற்று உள்ளதா என்றும் நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

    அவ்வாறு அனுமதி பெறாமல் சான்றிதழ் படிப்பு நடத்தினால் ஏன் பல்கலைக்கழக துணை வேந்தர், பதிவாளர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்க கூடாது என்றும் கூறினார்.

    ×