search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பயிற்சி ஐஏஎஸ்"

    • குற்றம் நிரூபிக்கப்படும் வரை நிரபராதி என இந்திய அரசியலமைப்பு சொல்கிறது.
    • கமிட்டி முன் அனைத்து தகவலையும் தெரிவிப்பேன். அப்போது உண்மை வெளிப்படும்.

    யு.பி.எஸ்.சி. தேர்வில் வெற்றி பெற்ற பூஜா கேத்கர் மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டத்தில் பயிற்சி பெற்று வந்தார். ஓராண்டு பயிற்சி காலத்திலேயே அவர் தனது சொந்த ஆடி காரில் சைரன் மற்றும் மகாராஷ்டிர அரசு என ஸ்டிக்கர் ஒட்டி சென்றுள்ளார்.

    பயிற்சி அதிகாரிகளுக்கு இல்லாத வசதியை அவர் அலுவலகத்தில் கேட்டுள்ளார். இதுகுறித்து தலைமை செயலாளருக்கு, புனே ஆட்சியர் சுகாஸ் திவாசே புகார் தெரிவித்தார். இதையடுத்து அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

    மேலும், பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கான ஓபிசி பிரிவைச் சேர்ந்தவர் என்றும், தனக்கு பார்வை மற்றும் மன இறுக்க குறைபாடு உள்ளதாக தெரிவித்தும் மாற்றுத்தினாளிகளுக்கான பிரிவில் (பி.டபிள்யூ.பி.டி) இவர் வேலைக்கு சேர்ந்தார் என குற்றம்சாட்டப்பட்டது. மேலும், அவரது தந்தையின் சொத்து மதிப்பு, அவரது தாய் துப்பாக்கியால் மிரட்டினது என தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் இது தொடர்பாக விசாரணை நடத்த கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் மீடியா விசாரணை மூலம் என்னை குற்றவாளி என நிரூபிப்பது தவறு என பூஜா கேத்கர் தெரிவித்துள்ளார். மேலும் தனது கருத்துகளை கமிட்டி முன் எடுத்து வைப்பேன் எனத் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக பூஜா கேத்கர் கூறியதாவது:-

    ஒரு தகுதியான பயிற்சியாளராக இங்கு எனது வேலை கற்றுக் கொள்வதும், வேலை செய்வதும்தான். அதைத்தான் நான் செய்து வருகிறேன். அதற்கு மேல் என்னால் ஏதும் கூற முடியாது.

    அரசால் நியமிக்கப்பட்டுள்ள கமிட்டி முடிவு செய்யும். மாறாக நான் அல்லது நீங்கள் (மீடியா) அல்லது பொதுமக்கள் முடிவு செய்ய முடியாது. கமிட்டியின் முடிவு பொதுமக்களுக்கும், ஆய்வுக்கும் வைக்கப்படும். விசாரணை சென்று கொண்டிருப்பதால் தற்போது அது குறித்து கருத்து தெரிவிக்க எனக்கு உரிமை கிடையாது.

    குற்றம் நிரூபிக்கப்படும் வரை நிரபராதி என இந்திய அரசியலமைப்பு சொல்கிறது. ஆகவே, மீடியா விசாரணையில் அனைவரது பார்வையிலும் என்னை குற்றவாளி என நிரூபிப்பது தவறு. கமிட்டி முன் அனைத்து தகவலையும் தெரிவிப்பேன். அப்போது உண்மை வெளிப்படும். குழு எடுக்கும் எந்த முடிவும் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் இருக்க வேண்டும் என நினைக்கிறேன்.

    இவ்வாறு பூஜா கேதகர் தெரிவித்துள்ளார்.

    ×