search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கேப்டன்ஷிப்"

    • கேப்டன்ஷிப் என்று வரும் போது நான் அவரைப் பார்த்து கற்றுக்கொள்கிறேன்.
    • கண்டிப்பாக கேப்டன்ஷிப்பை நான் மகிழ்ச்சியுடன் செய்கிறேன்.

    ஜிம்பாப்வே - இந்தியா அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்றது. இதில் சுப்மன் கில் தலைமையிலான இந்தியா 4-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

    இந்நிலையில் ரோகித் சர்மாவை பார்த்து தான் கேப்டன்ஷிப் செய்வதாக சுப்மன் கில் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    நீங்கள் ரோகித் பாய் அல்லது மஹி பாய், விராட் பாய், ஹர்திக் பாய் போன்ற அனைவரிடமிருந்தும் குணங்களை எடுத்துக் கொள்ளலாம். அவர்கள் அனைவருக்கும் சிறந்த குணங்கள் உள்ளன. இருப்பினும் ரோகித் பாய் தலைமையில் நான் அதிகமாக விளையாடியுள்ளேன். எனவே கேப்டன்ஷிப் என்று வரும் போது நான் அவரைப் பார்த்து கற்றுக்கொள்கிறேன். 

    அவர் தலைமையில் நான் மகிழ்ச்சியாக விளையாடி வருகிறேன். கண்டிப்பாக கேப்டன்ஷிப்பை நான் மகிழ்ச்சியுடன் செய்கிறேன். உண்மையில் அது என்னுடைய சிறந்த செயல்பாடுகளை வெளிக்கொண்டு வருகிறது.

    ஏனெனில் அது என்னை போட்டியில் முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள வைக்கிறது. அதே சமயம் அழுத்தமும் இருக்கும். ஆனால் அதை எக்ஸ்ட்ரா அழுத்தம் என்று சொல்ல மாட்டேன். பேட்ஸ்மேனாக இருக்கும் போது கூட நீங்கள் நன்றாக செயல்படவில்லையெனில் அழுத்தம் ஏற்படும். கேப்டனாக இருக்கும் போது பல்வேறு உணர்வுகள் வெளிப்படும். அதில் அழுத்தமும் ஒன்றாகும். அதைத் தாண்டி நீங்கள் வெற்றி பெறும் போது கிடைக்கும் திருப்தி அற்புதமானது.

    இவ்வாறு கில் கூறினார்.

    ×