search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அத்திக் அகமது"

    • கேங்ஸ்டாராக இருந்து அரசியல்வாதியாக மாறிய அத்திக் அகமது சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
    • வேறு பெயரில் 2.377 ஹெக்டேர் நிலம் வாங்கியிருந்தது தெரியவந்ததால் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    உத்தர பிரதேச மாநிலத்தில் கேங்ஸ்டாராக இருந்து அரசியலுக்கு வந்தவர் அத்திக் அகமது. இவர் நீதிமன்றத்திற்கு அழைத்து வரும்போது சுட்டுக் கொல்லப்பட்டார்.

    அத்திக் அகமது மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. கிரிமினல் செயல்கள் மூலம் அதிக அளவில் பணம் சம்பாதித்துள்ளார். அந்த பணத்தில் கோடிக்கணக்கான அளவில் சொத்துகள் வாங்கி குவித்துள்ளார்.

    இந்த நிலையில் அத்திக் அகமது பெயரில் இருந்து 2.377 ஹெக்டேர் (ஒரு ஹெக்டேர் 2.47 ஏக்கர்) நிலத்தை உத்தர பிரதேச அரசு கையகப்படுத்தியுள்ளது. பிரயாக்ராஜ் பகுதியில் உள்ள இந்த நிலம் சுமார் 50 கோடி ரூபாய் மதிப்பிலானதாகும்.

    இது தொடர்பாக மாவட்ட அரசு வழக்கறிஞர் (கிரிமினல்) குலாப் சந்திரா அக்ராஹரி கூறுகையில் "குற்றச் செயல் மூலமாக கிடைத்த பணத்தை பயன்படுத்தி அத்திக் அகமது 2.377 ஹெக்டேர் நிலத்தை வாங்கியுள்ளார். அந்த நிலத்தை ஹூபலால் பெயரில் பதிவு செய்துள்ளார். தேவைப்பட்டால் இந்த நிலத்தை தனது பெயருக்கு மாற்றலாம் என பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலத்தை போலீசார் கடந்த நவம்பர் மாதம் பறிமுதல் செய்தனர்.

    இந்த நிலத்திற்கு கடந்த மூன்று மாதங்களாக உரிமையாளர் என்ற பெயரில் யாரும் உரிமை கோரவில்லை. இதனால் நிலம் அரசுக்கு மாற்றப்பட்டுள்ளது. 

    ×