search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வங்காளதேசம் வன்முறை"

    • டாக்காவில் இருந்து வெளியேறிய ஷேக் ஹசீனா தற்போது இந்தியாவில் உள்ளார்.
    • லண்டனில் தற்காலிகமாக குடியேற அடைக்கலம் கேட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    வங்காளதேசத்தில் இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் தீவிரம் அடைந்ததால் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா டாக்காவில் இருந்து வெளியேறினார். அவர் தற்போது இந்தியாவில் உள்ளார்.

    லண்டனில் தற்காலிகமாக குடியேற அனுமதி கேட்டுள்ளதாக தெரிகிறது. அனுமதி கிடைத்தால் லண்டனில் அடைக்கலம் புகுவார்.

    ஆனால் இங்கிலாந்தின் குடியேற்ற சட்டத்தின்படி தனிநபர் இங்கிலாந்துக்கு பயணம் செய்து அடைக்கலம் அல்லது தற்காலிக தஞ்சம் கோர முடியாது.

    இங்கிலாந்தில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற தொழிலாளர் கட்சி வெற்றி பெற்று கெய்ர் ஸ்டார்மெர் பிரதமராக உள்ளார். இவரது தலைமையிலான இங்கிலாந்து "அடைக்கலம் கேட்கும் தனிநபர்கள் அவர்கள் சென்றடையும் முதல் பாதுகாப்பான நாட்டில் அதை செய்ய வேண்டும். தேவைப்படும் மக்களுக்கு பாதுகாப்பு வழங்கி இங்கிலாந்து பெருமைக்குரிய சாதனைப் படைத்துள்ளது. எனினும் இங்கிலாந்துக்கு பயணம் செய்து அடைக்கலம் கேட்கும் அல்லது இடைக்கால தஞ்சம் அடைவதற்கான வசதி இல்லை" எனத் தெரிவித்துள்ளது.

    இருந்த போதிலும் முறையாக அடைக்கலம் கோரிக்கை குறித்து இங்கிலாந்து அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    • வங்காளதேசத்தில் கடந்த 15-ம் தேதி தொடங்கிய போராட்டம் வன்முறையாக வெடித்தது.
    • இந்தப் போராட்டத்தில் 150-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

    டாக்கா:

    வங்காளதேசத்தில் கடந்த 15-ம் தேதி சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட தியாகிகள் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் 30 சதவீத இடஒதுக்கீட்டை ரத்துசெய்ய வேண்டும் எனக்கோரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

    இதற்கு எதிராக ஆளுங்கட்சியின் மாணவர்கள் அணி பிரிவு போராட்டம் நடத்தியது. எதிர்க்கட்சியான வங்காளதேச தேசிய கட்சி மற்றும் ஜமாத்-இ-இஸ்லாமியின் வலதுசாரி பிரிவு மாணவர்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் குதித்தன. மாணவர்கள் நடத்திய போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறையால் 150-க்கும் அதிகமானோர் பலியாகினர்.

    இந்நிலையில், இந்த வன்முறைக்கு காரணமான ஜமாத்-இ-இஸ்லாமி கட்சியின் மாணவர் அமைப்பான இஸ்லாமிக் சதாரா ஷிபிர் என்ற அமைப்பை வங்காளதேச அரசு இன்று தடை செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும், நாட்டின் நலனுக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளது.

    அரசின் அறிவிப்புக்கு கண்டனம் தெரிவித்துள்ள ஜமாத் இ இஸ்லாமி கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், அவாமி லீக் தலைமையிலான ஆளும் கூட்டணியின் முடிவு சட்டவிரோதமானது, சட்டத்திற்குப் புறம்பானது மற்றும் அரசியலமைப்பிற்கு விரோதமானது என தெரிவித்துள்ளது.

    • மாணவர்கள் போராட்டத்துக்கு ஆளும் அவாமி லீக் கட்சியின் மாணவர் பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
    • இருதரப்புக்கு இடையே நடந்த மோதல் வன்முறையில் முடிந்தது.

    புதுடெல்லி:

    பாகிஸ்தானிடம் இருந்து சுதந்திரம் பெறுவதற்காக கடந்த 1971-ல் நடந்த போரில் பங்கேற்ற வங்காளதேசத்தின் சுதந்திரப் போராட்ட தியாகிகளின் குடும்பத்தினருக்கு அரசு வேலைவாய்ப்புகளில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது. இந்த படைவீரர் இடஒதுக்கீடு முறை பாரபட்சமாக இருக்கிறது என மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.

    டாக்காவில் உள்ள ஜஹாங்கீர் நகர் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் நடத்திய போராட்டத்துக்கு ஆளும் அவாமி லீக் கட்சியின் மாணவர் பிரிவைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இருதரப்புக்கு இடையே நடந்த மோதல் வன்முறையில் முடிந்தது. போலீசார் கண்ணீர் புகைகுண்டுகளை வீசி மாணவர்களை கலைத்தனர். இந்த வன்முறையில் 200-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியானது. போலீசார் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

    இந்நிலையில், வன்முறையால் பாதிக்கப்பட்ட வங்காளதேசத்தில் இருந்து இதுவரை 6,700 இந்திய மாணவர்கள் பல்வேறு போக்குவரத்து மூலம் நாடு திரும்பியுள்ளனர் என வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.

    ×