search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மனு பாக்கர்"

    • இந்திய வீராங்கனை மனு பாக்கர் இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தினார்.
    • அதில் ஷூட் ஆப் முறையில் பதக்கத்தை தவறவிட்டார் மனு பாக்கர்.

    பாரீஸ்:

    பாரீஸ் ஒலிம்பிக்கில் இன்று நடைபெற்ற பெண்களுக்கான 25 மீட்டர் பிஸ்டல் இறுதிச்சுற்றில் இந்தியாவின் மனு பாக்கர் பங்கேற்றார்.

    இதில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் மற்றும் ஹங்கேரி வீராங்கனை 28 புள்ளிகள் பெற்று 3-வது இடம் பிடித்தனர்.

    வெற்றியாளரை நிர்ணயிக்கும் ஷூட் ஆப் முறையில் ஹங்கேரி வீராங்கனை வென்று வெண்கலம் வென்றார். தென் கொரியா வீராங்கனை தங்கமும், பிரான்ஸ் வீராங்கனை வெள்ளிப் பதக்கமும் வென்றனர்.

    இதன்மூலம் மனு பாக்கர் நூலிழையில் 3வது பதக்கத்தைப் பெறும் வாய்ப்பை இழந்தார்.

    ஒலிம்பிக் போட்டியில் மனு பாக்கர் பதக்கம் தனிநபர் மற்றும் கலப்பு இரட்டையரில் வெண்கலம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஒரே ஒலிம்பிக்கில் 2 பதக்கங்களை வென்று வரலாற்று சாதனை படைத்தார்.
    • நீரஜ் சோப்ராவைப் போலவே மனு பாக்கரும் தேசிய விளையாட்டு பிராண்டாக மாறுவதற்கான வாய்ப்பு இருப்பதாகத் தெரிகிறது.

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவை சேர்ந்த 117 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். துப்பாக்கி சுடுதல் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் மகளிர் தனிநபர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று சாதித்த இந்தியாவின் மனு பாக்கர், துப்பாக்கி சுடுதல் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில் சரப்ஜோத் சிங்குடன் இணைந்து பங்கேற்றார். அதிலும், வெண்கலப் பதக்கம் வென்ற மனு பாக்கர், ஒரே ஒலிம்பிக்கில் 2 பதக்கங்களை வென்று வரலாற்று சாதனை படைத்தார்.

    இதையடுத்து, துப்பாக்கி சுடுதல் 25 மீட்டர் பிஸ்டல் மகளிர் தனிநபர் பிரிவில் களமிறங்கிய மனு பாக்கர், தகுதிச்சுற்றில் 590 புள்ளிகளுடன் இரண்டாவது இடம் பிடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இன்று பிற்பகலில் இறுதிப் போட்டி நடைபெற உள்ள நிலையில், 25 மீட்டர் துப்பாக்கி சுடுதலிலும் பதக்கம் வென்று ஒரே ஒலிம்பிக்கில் 3-ஆவது பதக்கத்தை மனு பாக்கர் உறுதி செய்வாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    இந்த நிலையில், மனு பாக்கரை சுமார் 40 பிராண்டுகள் ஒப்பந்தம் செய்ய அணுகியுள்ளது எனவும் அவரது பிராண்ட் மதிப்பு 6 முதல் 7 மடங்கு உயர்ந்துள்ளது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

    ஒலிம்பிக் போட்டிகளுக்கு முன்பு ஒரு ஒப்பந்தத்திற்கு ரூ.20 முதல் 25 லட்சம் வரை இருந்த அவரது கட்டணம் தற்போது ரூ.1.5 கோடி வரை உயர்ந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

    கடந்த ஒலிம்பிக் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவைப் போலவே மனு பாக்கரும் தேசிய விளையாட்டு பிராண்டாக மாறுவதற்கான வாய்ப்பு இருப்பதாகத் தெரிகிறது.

    • இந்திய வீராங்கனை மனு பாக்கர் 590 புள்ளிகள் பெற்று 2-வது இடம் பிடித்தார்.
    • இதன்மூலம் இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தினார்.

    பாரீஸ்:

    பாரீஸ் ஒலிம்பிக்கில் இன்று நடைபெற்ற பெண்களுக்கான 25 மீட்டர் பிஸ்டல் தகுதிச்சுற்று பிரிவில் இந்தியாவின் மனு பாக்கர் பங்கேற்றார். மொத்தம் 8 பேர் பங்கேற்றனர்.

    இதில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் 590-24x புள்ளிகள் பெற்று 2-வது இடம் பிடித்தார். இதன்மூலம் இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தினார்.

    ஹங்கேரி வீராங்கனை 592 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளார்.

    மற்றொரு இந்திய வீராங்கனை ஈஷா சிங் 18-வது இடம்பிடித்தார்.

    ஒலிம்பிக் போட்டியில் மனு பாக்கர் பதக்கம் தனிநபர் மற்றும் கலப்பு இரட்டையரில் வெண்கலம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் மனு பாக்கர் வெண்கலப் பதக்கம் பெற்றுள்ளார்.
    • மனுபாக்கர்-சரப்ஜோத் சிங் ஜோடி இன்று வெண்கலப் பதக்கம் பெற்று அசத்தியது.

    புதுடெல்லி:

    உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது.

    துப்பாக்கி சுடுதலில் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர்பிஸ்டல் பிரிவில் மனு பாக்கர் வெண்கலப் பதக்கம் பெற்று இந்தியாவின் பதக்க கணக்கை தொடங்கினார்.

    இதற்கிடையே, மனுபாக்கர்-சரப்ஜோத் சிங் ஜோடி இன்று நடந்த வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் தென்கொரிய ஜோடியை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் பெற்று அசத்தியது. ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு கிடைத்துள்ள 2வது பதக்கம் இதுவாகும்.


    இந்நிலையில், வெண்கலம் வென்ற மனு பாக்கர், சரப்ஜோத் சிங் ஆகியோருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள அறிக்கையில், துப்பாக்கி சுடுதல் கலப்பு அணி 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில் இந்தியாவுக்காக வெண்கலப் பதக்கம் வென்ற மனு பாக்கர் மற்றும் சரப்ஜோத் சிங் ஆகியோருக்கு வாழ்த்துகள். ஒரே ஒலிம்பிக்கில் 2 பதக்கங்களை வென்ற இந்தியாவின் முதல் பெண் துப்பாக்கி சுடுதல் வீராங்கனை என்ற வரலாறு படைத்துள்ளார் மனு பாக்கர். அவர் எங்களை மிகவும் பெருமைப்படுத்தினாள். அவருக்கும் சரப்ஜோத் சிங்குக்கும் எதிர்காலத்தில் மேலும் பல விருதுகள் கிடைக்க வாழ்த்துகிறேன் என தெரிவித்துள்ளார்.

    • இருவரும் சிறப்பான திறமையையும், குழுப்பணியையும் வெளிப்படுத்தியுள்ளனர்.
    • இந்தியா நம்பமுடியாத மகிழ்ச்சியில் உள்ளது.

    உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் 117 பேர் கொண்ட இந்திய அணி 16 விளையாட்டுகளில் பங்கேற்கிறது.

    துப்பாக்கி சுடுதலில் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர்பிஸ்டல் பிரிவில் மனு பாக்கர் வெண்கலப் பதக்கம் பெற்று இந்தியாவின் பதக்க கணக்கை தொடங்கினார்.

    இதையடுத்து, மனுபாக்கர்-சரப்ஜோத் சிங் ஜோடி வெண்கல பதக்கத்துக்கு மோதும் வாய்ப்பை பெற்றது. இந்த ஜோடி இன்று நடந்த வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் தென்கொரியாவின் யெஜின்-வோன்ஹோலீ ஜோடியை எதிர் கொண்டது.

    இதில் மனுபாக்கர்-சரப்ஜோத் சிங் ஜோடி சிறப்பாக செயல்பட்டு வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றியது. இந்திய ஜோடி 16-10 என்ற கணக்கில் கொரியா ஜோடியை வீழ்த்தியது. இந்தியாவுக்கு கிடைத்த 2-வது பதக்கம் இதுவாகும். மனுபாக்கர் 2-வது பதக்கத்தை பெற்றார்.

    இந்த நிலையில், 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்புப் பிரிவில் வெண்கலம் வென்ற இந்தியாவின் மனு பாக்கர்- சரோப்ஜோத் இணைக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மோடி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    எங்கள் துப்பாக்கி சுடும் வீரர்கள் தொடர்ந்து எங்களை பெருமைப்படுத்துகிறார்கள்!

    மனு பாக்கர் மற்றும் சரப்ஜோத் சிங் ஒலிம்பிக்ஸில் 10மீ ஏர் பிஸ்டல் கலப்பு பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றதற்காக வாழ்த்துகள். இருவரும் சிறப்பான திறமையையும், குழுப்பணியையும் வெளிப்படுத்தியுள்ளனர். இந்தியா நம்பமுடியாத மகிழ்ச்சியில் உள்ளது.

    மானுவைப் பொறுத்தவரை, இது அவரது தொடர்ச்சியான இரண்டாவது ஒலிம்பிக் பதக்கம் ஆகும். இது அவரது நிலையான சிறப்பையும் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்துகிறது.

    • இந்திய ஜோடி 16-10 என்ற கணக்கில் கொரியா ஜோடியை வீழ்த்தியது.
    • ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர்ரைபிள் பிரிவில் இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்று இருந்த அர்ஜூன் பபுதா மயிரிழையில் வெண்கல பதக்கத்தை தவறவிட்டார்.

    உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் 117 பேர் கொண்ட இந்திய அணி 16 விளையாட்டுகளில் பங்கேற்கிறது.

    துப்பாக்கி சுடுதலில் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர்பிஸ்டல் பிரிவில் மனு பாக்கர் வெண்கலப் பதக்கம் பெற்று இந்தியாவின் பதக்க கணக்கை தொடங்கினார்.

    போட்டியின் 2-வது நாளில் அவர் பதக்கம் பெற்றுக்கொடுத்து நாட்டுக்கு பெருமை சேர்த்தார்.

    இந்த நிலையில் மனு பாக்கர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவிலும் வெண்கல பதக்கத்துக்கான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். அவரும், சரப்ஜோத் சிங் ஜோடியும் இணைந்து நேற்று நடந்த தகுதி சுற்றில் 580 புள்ளிகளை பெற்று 3-வது இடத்தை பிடித்தது.

    இதன் மூலம் மனுபாக்கர்-சரப்ஜோத் சிங் ஜோடி வெண்கல பதக்கத்துக்கு மோதும் வாய்ப்பை பெற்றது. இந்த ஜோடி இன்று நடந்த வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் தென்கொரியாவின் யெஜின்-வோன்ஹோலீ ஜோடியை எதிர் கொண்டது.

    இதில் மனுபாக்கர்-சரப்ஜோத் சிங் ஜோடி சிறப்பாக செயல்பட்டு வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றியது. இந்திய ஜோடி 16-10 என்ற கணக்கில் கொரியா ஜோடியை வீழ்த்தியது. இந்தியாவுக்கு கிடைத்த 2-வது பதக்கம் இதுவாகும். மனுபாக்கர் 2-வது பதக்கத்தை பெற்றார். 

    அந்த வகையில் ஒரே ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்களை வென்ற முதல் இந்திய பெண் என்ற சாதனையை மனுபாக்கர் பெற்றுள்ளார். மேலும் 124 ஆண்டுகளில் ஒரே ஒலிம்பிக் இரண்டு பதக்கங்களை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

    பெண்களுக்கான 10 மீட்டர் ஏர்ரைபிள் பிரிவில் இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருந்த ரமீதா 7-வது இடத்தை பிடித்து ஏமாற்றம் அளித்தார். அவர் 145.3 புள்ளிகளை பெற்றார்.

    இதேபோல ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர்ரைபிள் பிரிவில் இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்று இருந்த அர்ஜூன் பபுதா மயிரிழையில் வெண்கல பதக்கத்தை தவறவிட்டார். அவர் 208.4 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தை பிடித்தார்.

    ×