search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேசிய நாய்கள் கண்காட்சி"

    • பல்வேறு நாடுகளை சேர்ந்த நடுவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
    • 6 பிரிவுகளாக தகுதி சுற்று போட்டிகள் நடைபெற்றது.

    கொடைக்கானல்:

    கொடைக்கானலில் இன்று 2-வது நாளாக தேசிய அளவிலான நாய்கள் கண்காட்சி நடைபெற்றது. இதில் பல்வேறு வகையான நாய்கள் இடம்பெற்று சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்தது. தி கொடைக்கானல் கென்னல் அசோசியேசன், தி மெட்ராஸ் கெனைன் கியம், தி சேலம் அக்மி கென்னல் கிளப் சார்பில் கொடைக்கானலில் தேசிய அளவிலான நாய்கள் கண்காட்சி நேற்று தொடங்கியது.

    2 நாட்கள் நடைபெற்ற இந்த கண்காட்சியில் நாடு முழுவதும் இருந்து 424 நாய்கள் பங்கேற்றன. பாக்ஸர், டாபர்மேன், கிரேடன், ஜெர்மன் செப்பர்டு, ஆஸ்திரேலியன் புல்டாக், பக், டாக்செண்ட், ஆப்கான் கவுண்ட், பிகில், பொமேரியன், கோல்டன் ரெட்ரீவர், சிஜூ, சிப்பி பாறை, ராஜபாளையம், ஹஸ்கி உள்ளிட்ட 60 வகையான நாய் இனங்கள் போட்டியில் பங்கு பெற்றன.

    நாய்களின் வகைகளுக்கேற்ப 6 பிரிவுகளாக தகுதி சுற்று போட்டிகள் நடைபெற்றது. நாய்களின் பராமரிப்பு, விதிமுறை, கீழ்ப்படிதல் ஆகியவற்றின் அடிப்படையில் பரிசுகள் வழங்கப்பட்டன.

    இன்று நடைபெற்ற கண்காட்சியில் ஒட்டுமொத்த சாம்பியன்களை தேர்ந்தெடுக்க பல்வேறு நாடுகளை சேர்ந்த நடுவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    பல்வேறு வகையான நாய் இனங்கள் அணிவகுத்து சென்றது சுற்றுலா பயணிகளை கவர்ந்தது. இன்று விடுமுறை தினம் என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். அவர்கள் பிரையண்ட் பூங்கா, நட்சத்திர ஏரி, வெள்ளி நீர்வீழ்ச்சி உள்ளிட்ட இடங்களை கண்டு ரசித்ததுடன், நாய் கண்காட்சியிலும் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.

    ×