search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஸ்ரீ சரபேஸ்வரர்"

    • ஸ்ரீ சரபேஸ்வரர் பூசை செய்வதற்கு உகந்த நேரம் ஞாயிறு மாலை 4.30 முதல் 6.00 மணி வரையிலான ராகு கால நேரமாகும்.
    • இந்த ராகு காலத்தில் சரபேஸ்வரரை வழிபடுபவர்களின் எதிரிகள் அழிக்கப்படுவார்கள்.

    ஸ்ரீ சரபேஸ்வரர் பூசை செய்வதற்கு உகந்த நேரம் ஞாயிறு மாலை 4.30 முதல் 6.00 மணி வரையிலான ராகு கால நேரமாகும்.

    இந்த ராகு காலத்தில் சரபேஸ்வரரை வழிபடுபவர்களின் எதிரிகள் அழிக்கப்படுவார்கள். அவர்களின் நோய்கள் நீங்கும். செயல்களில் வெற்றி பெறுவார்கள்.

    எத்தகைய விதியையும் மாற்றும் வல்லமை சரபேசுவரருக்கு மட்டுமே உண்டு.

    இந்தக் கலி யுகத்தில் மனிதன் தன்னுடைய அபரிமிதமான அறிவியல் வளர்ச்சியால் ஏற்படுத்திக் கொடுக்கும் எல்லாவிதமான ஆபத்துகளிலிருந்தும் தப்புவதற்குச் சரணடைய வேண்டிய ஒரே தெய்வம் சரபேசரே.

    இவரை வேதங்கள் அழிக்கும் கடவுளான அக்கினி தத்துவத்திற்கு உரியவராகக் குறிப்பிட்டாலும் நமக்குக் கண்ணுக்குப் புலப்படாத எதிரிகளையும் அழித்து நம்முடைய துன்பங்களைத் தீர்த்து, தன்னிடம் சரணடைந்தவர்களுக்கு அபளமளிக்கும் தெய்வம் சரபேஸ்வரராகும்.

    இயற்கையின் சீற்றங்களான நிலநடுக்கம், இடி, புயல், மழை, சூறாவளி, ஆழிப்பேரழிவும், தீவிபத்து, விஷக்கடிகள், மருத்துவத்தால் கைவிடப்பட்ட மாறாத உடல் உபாதைகள் மற்றும் மனோ வியாதிகள், தொடர்ந்து வந்து உறுத்தும் ஊழ்வினையின் காரணமாக பரிகாரமே காணமுடியாது என்று தீராத துன்பம் தர முயலும் கொடிய தரித்திரங்களும் சரபரை வழிபடும் பக்தனைத் தாக்காமல் விட்டு ஓடிவிடும். இப்படி விதியையே புரட்டிப்போட்டு நல்லதை செய்யும் சக்தி சரபேசுவரருக்கு மட்டுமே உண்டு.

    எதிரிகள் குலநாசம், பில்லி, சூனிய ஒழிப்பு, மரண பயம் அகலுதல், நீடித்த ஆயுள், எந்த வியாதியும் நெருங்காத சூழ்நிலை என்று பாதுகாப்பு வளையங்களாக சரபேஸ்வரர் வழிபாடு திகழ்கிறது.

    சரபரின் சக்திகளான பிரத்தியங்கராவும், சூலினியும் பில்லி சூனியம், ஏவல், பூதப்பிரேத, பிசாச பயங்களை அழித்தொழிக்கும் வல்லமை பெற்றவை. சரபரை வழிபடுபவர் மீது மேற்சொன்ன அபிசார கர்மாக்களை செய்பவன் எவனோ அவனையே திருப்பித் தாக்கி அழிப்பாள். கால பைரவ சக்தியான அதர்வணப் பிரத்தியங்கிரா தேவி.

    இவள் சிவ துவேஷங்களில் ஈடுபடுகிறவர்களை அழிக்கும் சக்தியாக விளங்குவதால் இவளைத் தியானிக்கும் எவரையும் யாருடைய துவேஷமும் ஒன்றும் செய்ய முடியாது என்பது கண்கூடு.

    சரபரின் இன்னொரு சக்தியான சூலினி தேவி துர்க்கையின் அம்சமாக விளங்குவதால் இவளை வழிபடுபவர்களுக்குத் திருமணத் தடைகளும், தரித்திரங்களும், எதிரியின் தடைகளில் உண்டான துக்கங்களும் விலகும். மிருத்யுவை நாசம் செய்து நலம் செய்பவள் சூலினி என்று வேதங்களில் கூறப்படுகின்றது. ஆகவே காரியத் தடைகள் அகல சூலினி தேவியை வழிபடுதல் வேண்டும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சரபரை வழிபட்டால் பில்லி,சூன்யம், ஏவல், பிணி, கடன் தொல்லை, இவற்றிலிருந்து விடுபடலாம்.
    • திருமணத்தடை அகன்று விரைவில் திருமணம் நடக்கும்.

    பிரதோஷ காலத்தில் சரபேஸ்வரரை வழிபடுவது சிறப்பு. அருகம்புல்லும், வில்வமும் கொண்டு வழிபடுவது சிறந்தது.

    சரபரை வழிபட்டால் பில்லி,சூன்யம், ஏவல், பிணி, கடன் தொல்லை, இவற்றிலிருந்து விடுபடலாம்.

    திருமணத்தடை அகன்று விரைவில் திருமணம் நடக்கும்.

    அமாவாசை, பவுர்ணமி மற்றும் பிரதோஷ நாட்களில் வழிபடுவது சிறப்பு.

    ராகு காலத்தில் வழிபடுவது மிக்க நல்லது.

    சத்ரு சம்ஹாரமே சரபேஸ்வரரின் அபரிமிதமான சக்தி.

    பக்தர்கள் முழு மனதோடு வழிபட்டு, சரண் அடைந்து சரபரின் அருளைப் பெறலாம்.

    சரபரை ஒரு நிமிஷம் உள்ளன்புடன் நினைத்தாலே போதும் எதிரிகள் குலநாசம், போக மோக்ஷ பலம், முக்தி ஏற்படும்.

    ஹரியும் சிவனும் ஒன்றே என்ற தத்துவத்தை மக்கள் உணரவேண்டும் என்பதை மக்களுக்கு உணர்த்தவே சரபேஸ்வரரின் தோன்றல் நடந்ததாக கூறுவது உண்டு.

    திண்டுக்கல் நகரில் நாகல்நகர் சந்தைரோடு பகுதியில் உள்ள பொன்னழகு காளியம்மன் கோவிலில் சரபேஸ்வரர் சன்னதி உள்ளது.

    இங்கு பிரதிவாரம் ஞாயிற்றுக்கிழமை சரபேஸ்வரருக்கு யாகம் நடைபெறுகிறது.

    இந்த யாகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு பயனடைந்து வருகின்றனர்.

    வீட்டில் ஸ்ரீசரபேஸ்வரர் படம் வைத்து பெண்கள் ராகு கால வேளையில் துதித்து வந்தால் வீட்டில் துர் தேவதைகள் எல்லாம் விலகிவிடும்.

    சரபேசுவரரை மனம் உருக வழிபட்டால் செய்வினை கோளாறு, உடல்நிலை பாதிப்பு, கடன் தொல்லை, எதிரிகளால் ஏற்படும் துன்பங்கள், கடன் நிவர்த்தி எல்லாம் சர்வ நாசம் செய்து உங்களுக்கு உங்கள் குடும்பத்துக்கு நன்மை தருவார்.

    புதுச்சேரியிலிருந்து திண்டிவனம் செல்லும் பாதையில் 6 கிலோ மீட்டர் மொட்டாண்ஹில் பக்கம் பிரத்தியங்கரா தேவி உக்கிரமான முறையில் கோவில் கொண்டுள்ளாள்.

    ஸ்ரீநரசிம்ம மூர்த்தியும், ஸ்ரீசரபேஸ்வரர் மூர்த்தியும் சேர்ந்தருள் செய்த சந்தி நேரத்தில் பூஜை செய்வது நல்லது.

    ஸ்ரீசரபேஸ்வரரை வழிபட செல்லுகையில் இல்லத்திலிருந்தே செருப்பு அணியாமல் செல்வது நல்லது.

    ஸ்ரீசரபமூர்த்தி, ஸ்ரீபிரத்தியங்கிரதேவி, ஸ்ரீ துர்க்காதேவி, ஸ்ரீ நரசிம்மமூர்த்தி போன்ற சுவாமி படங்களை வீட்டில் வைத்தும் வழிபடலாம்.

    ஸ்ரீசரபேஸ்வரர் சிலை வடிவமாக இருந்தால் முழு சந்தனக்காப்பும், தூணில் சரப ரூபமிருந்தால் தேங்காய் எண்ணை காப்பும் செய்தும் வழிபடவேண்டும்.

    எதிரே ஸ்ரீநரசிம்மர் இருந்தால் முதலில் அவருக்குத்தான் நல்லெண்ணைய் காப்பும், தைலக்காப்பும் செய்ய வேண்டும்.

    • கங்கைகொண்ட சோழபுரம், தாராபுரம், காரைக்குடி சிவன் கோவில்களில் ஸ்ரீ சரபேஸ்வரருக்குத் தனி சந்நிதிகள் உள்ளன.
    • உக்கிரம் தீர்ந்த சாந்த சொரூபியான நரசிம்மத்தை அன்புடன் வாரி அனைத்துக் கொள்ளும்படியான அபூர்வ தரிசனம்.

    ஸ்ரீ சரபேஸ்வரர் உருவம் ஆலயத்தின் தூணில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.

    அதுமட்டுமல்லாமல் பங்குனித் திருவிழாவில் சோமாஸ்கந்தமூர்த்திக்கு ஒரு வாகனமாயும் அமைக்கப் பட்டுள்ளன.

    திருமயிலை தெற்கு மாட வீதியில் இருக்கும் ஸ்ரீ வெள்ளீஸ்வரர் ஆலயத்திலும் ஸ்ரீ சரபேஸ்வரர் வழிபாடு சிறப்பாக நடந்து கொண்டு வருகிறது.

    பல பக்தகோடிகளின் வேண்டுகோளை ஸ்ரீ சரபேஸ்வரர் பூர்த்தி செய்கிறார்.

    கங்கைகொண்ட சோழபுரம், தாராபுரம், காரைக்குடி சிவன் கோவில்களில் ஸ்ரீ சரபேஸ்வரருக்குத் தனி சந்நிதிகள் உள்ளன.

    இவையன்றி சென்னையை அடுத்துள்ள திரிசூலம், திரிசூலநாதர் ஆலயம், திருவண்ணாமலை அண்ணாமலையார், சிதம்பரம் நடராஜர் கோவில் இங்கெல்லாம் சரபேஸ்வரர் மண்டபத்தூணில் சிற்பமாகக் காணப்படுகின்றார்.

    சென்னையில் உள்ள கோயம்பேடு குசலபுரீஸ்வரர் என்ற குறுங்காலீஸ்வரர் கோவில் மண்டபத் தூணில் காணப்படும் சரபேஸ்வரரின் வடிவம் மிக அற்புதமானது.

    உக்கிரம் தீர்ந்த சாந்த சொரூபியான நரசிம்மத்தை அன்புடன் வாரி அனைத்துக் கொள்ளும்படியான அபூர்வ தரிசனம்.

    திருவாரூர் கோவிலின் மேலைக் கோபுரம், வைத்தீஸ்வரன் கோவில் கிழக்குக் கோபுரம், மதுரை மீனாட்சி ஆலய தெற்குக்கோபுரம், சிதம்பரம் நடராஜர் ஆலயக் கோபுரம் இங்கெல்லாம் சரபேஸ்வரர் சுதை வடிவங்களில் காணப்படுகின்றார்.

    இத்தகைய ஆலயங்களில் காணப்படும் சரப மூர்த்தியை வழிபட்டால் தீவினை மறைந்து நன்மைகள் பல உண்டாகும் என்று கூறப்படு கிறது.

    • ஆலய மூலவருக்கு ஸ்தம்ப சரபேஸ்வரர் என்று பெயர்.
    • இவர் நின்ற நிலையில் நான்கு கைகளும், இரு முகமும் உடையவராக விளங்குகிறார்.

    சென்னையை அடுத்த திரிசூலம் என்னுமிடத்தில் அபூர்வமான கலையம்சம் நிறைந்த விக்கிரகத்துடன் அமைந்துள்ளது இக்கோவில்.

    ஆலய மூலவருக்கு ஸ்தம்ப சரபேஸ்வரர் என்று பெயர்.

    இவர் நின்ற நிலையில் நான்கு கைகளும், இரு முகமும் உடையவராக விளங்குகிறார்.

    இரு கைகளில் மான், மழுவினை ஏந்தியிருப்பதுடன், இரு கைகளால் நரசிம்மரை மடியில் கிடத்தி பிடித்துக்கொண்டிருப்பது போல் அமைந்துள்ளது சிறப்புமிக்க ஒன்றாகும்.

    • இந்த சரபேஸ்வரரின் சக்திகளாக பிரத்தியங்கிரா தேவியும், சூலினியும் விளங்குகின்றனர்.
    • இந்த இருவரையும் சரபேஸ்வரரின் மனைவியர் என்று அழைக்கின்றனர்.

    சென்னை, தாம்பரத்தில் இருந்து 10 கி.மீ. தூரத்தில் உள்ள மாடம்பாக்கம், தேனுபூரீஸ்வரர் ஆலயம், இதே மூன்றாம் குலோத்துங்க சோழனால் நிர்மானிக்கப்பட்டதாகும்.

    நான்கு வேதங்களும் வந்து வணங்கியதால் இத்தலத்திற்கு சதுர்வேதமங்களம் என்ற பெயரும், காமதேனு வழிபட்டதால் காமதேனுபுரி என்ற பெயர்களும் உண்டு.

    இக்கோவில் உள்ள சரபேஸ்வரர் மிகவும் சக்தி வாய்ந்தவர் என்று கூறப்படுகின்றது.

    இவரை வழிபட்டால் மனதால் எண்ணிய காரியங்கள் யாவும் விக்கினமின்றி உடனே நிறைவேறும் என்றும் கூறப்படுகிறது.

    இந்த சரபேஸ்வரரின் சக்திகளாக பிரத்தியங்கிரா தேவியும், சூலினியும் விளங்குகின்றனர்.

    இந்த இருவரையும் சரபேஸ்வரரின் மனைவியர் என்று அழைக்கின்றனர்.

    சரபரின் இரு இறக்கைகளாக விளங்கும் இவர்கள் சக்தியின் திருஅவதாரம் என்றும் கூறப்படுகின்றது.

    இம்மூவருக்கும் ஞாயிற்றுக் கிழமைகளில் மாலை 4.30 முதல் 6 மணிக்குள் நடைபெறும் ராகுகால பூஜை மிகவும் சிறப்புடையது.

    இதுமட்டுமே அல்லாது பிரதோஷ கால பூசையும் இங்கு சிறப்பாக வழிபடப்படுகின்றது.

    தொடர்ந்து ஆறு வாரங்கள் சரபேஸ்வரர் பூசையில் கலந்து கொண்டு தரிசித்தால் அவரவர் மனதில் நினைத்த காரியங்கள் உடனுக்குடன் நிறைவேறுகின்றன என அனுபவப்பட்டவர்கள் கூறுகின்றனர்.

    காதல், திருமணம், மக்கட்பேறு, கல்வி முதலானவை குறித்த வேண்டுதல்கள் இக்கோவிலில் உடனுக்குடன் நிறைவேறுவதால் இக்கோவிலுக்குப் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

    • தஞ்சை மாவட்டம், தாராசுரத்தில் ஐராவதேசுவரர் ஆலயத்தில் உள்ள சரபேஸ்வரர் வடிவம் தமிழகத்தின் இரண்டாவது சிறப்பாகும்.
    • இந்த சரப மூர்த்திக்கு மேலே கூப்பிய கரங்களுடனான சிறிய உருவங்கள் சிலவும் காணப்படுகின்றன.

    தஞ்சை மாவட்டம், தாராசுரத்தில் ஐராவதேசுவரர் ஆலயத்தில் உள்ள சரபேஸ்வரர் வடிவம் தமிழகத்தின் இரண்டாவது சிறப்பாகும்.

    இரண்டாம் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட இக்கோவிலின் ராஜ கம்பீர மண்டபத்தின் மேற்குப்பக்கச் சுவரில் சரபேஸ்வரரின் அழகிய சிற்பம் உள்ளது.

    இந்த சிற்பத்தில் சிங்கத்தின் முகத்தினையும், கிரீடம் அமைந்த தலையையும், விரிந்த இறகுகளையும் கொண்டு விளங்கும் சரப மூர்த்தியின் காலுக்கடியில் கூப்பிய கரங்களுடன் நரசிம்மர் காணப்படுகின்றார்.

    இந்த சரப மூர்த்திக்கு மேலே கூப்பிய கரங்களுடனான சிறிய உருவங்கள் சிலவும் காணப்படுகின்றன.

    • சோழர்கள் ஆட்சி காலத்தில் தான் சரபேஸ்வரர் வழிபாடு அறிமுகமாகியது.
    • சரப மூர்த்தி வடிவத்தினைக் கோவில்களில் அமைப்பதாலும் வழிபடுவதாலும் எதிரிகள் அழிக்கப்படுவார்கள்.

    சோழர்கள் ஆட்சி காலத்தில் தான் சரபேஸ்வரர் வழிபாடு அறிமுகமாகியது.

    சரப மூர்த்தி வடிவத்தினைக் கோவில்களில் அமைப்பதாலும் வழிபடுவதாலும் எதிரிகள் அழிக்கப்படுவார்கள்.

    போர்களில் வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கையின் அடிப்படையிலேயே சோழர்கள் சரபேஸ்வரர் வழிபாட்டினைத் துவங்கினார்கள்.

    துக்காச்சி

    தஞ்சை மாவட்டம், கும்பகோணத்திற்கு அருகில் உள்ள துக்காச்சி என்ற ஊரில் உள்ள ஆபத்சகாயேசுவரர் கோவிலில் தான் முதன்முதலில் சரப மூர்த்தியின் சிற்பம் அமைக்கப்பட்டது.

    விக்கிரம சோழன் (கி.பி.1118-1135) காலத்தில் நிறுவப்பட்டுள்ள இந்த கோவிலில் அமைக்கப்பட்ட சரபேஸ்வரர் சிலைதான் தற்போதுள்ள சரபேஸ்வரரின் வடிவங்களில் மிகப் பழமையானதாகும்.

    • நரசிம்மரின் அவதாரம் தலையையும், மனித உடலையும் கொண்டது.
    • ஆனால் சரபேஸ்வர அவதாரமோ யாளி, மனிதன், பக்ஷி என்னும் மூன்று உருவத்தினையும் கலந்ததாகும்.

    நரசிம்மரின் அவதாரம் தலையையும், மனித உடலையும் கொண்டது.

    ஆனால் சரபேஸ்வர அவதாரமோ யாளி, மனிதன், பக்ஷி என்னும் மூன்று உருவத்தினையும் கலந்ததாகும்.

    யாளி என்பது விலங்குகளில் மிக சக்தி வாய்ந்த மிருகமாகும்.

    பக்ஷிகளில் சரப பக்ஷி மிகவும் சக்தி வாய்ந்ததாகும்.

    அதாவது மனித தன்மையினையும், மிருக தன்மையினையும் ஒருங்கே அமைய பெற்ற தெய்வ வடிவே சரபேஸ்வர உருவமாகும்.

    சரபேஸ்வரரின் உடல் சிலம்பு அணிந்த திருவடிகளாய் கால்கள் எட்டு, மான், மனு, சர்ப்பம், அக்னி என்னும் நான்கினையும் தாங்கி நிற்கும் திருக்கரங்கள் நான்கு, சந்திரன், சூரியன், அக்னி என்னும் மூன்றினையும் குணமாகக் கொண்ட கண்கள் மூன்று, வெளியில் நீண்டு தொங்கிக்கொண்டிருக்கும் நாக்கு, பக்ஷிகளின் தலைவனாகிய கருடனின் மூக்கினை போன்று நீண்டிருக்கும் மூக்கு, கொடிய அம்பினை போன்ற கூர்மையுடைய நகங்கள், அதிபயங்கரமான கோர பற்கள், இரு இறக்கைகளாக பிரத்தியங்கிரா தேவியும், துர்கா சூலினியும், இரு தொடைகளாக ரோக தேவதையும், எமனும், வயிற்று பகுதியாக வட முகாக்னி, கொண்டை முடியில் பிறை நிலா ஆகியவற்றை கொண்டது.

    மான்:

    மான், யாருக்கும் எவ்விதக் கெடுதலும் நினையாமல் ஸாத்வீகமாக இருப்பதை குறிப்பதாகும்.

    ஸர்ப்பம்:

    ஸர்ப்பம், குண்டலினீ சக்தியை ஏற்படுத்துவதாகும்.

    மழூ:

    மழு, "நான்" என்ற அகந்தையை அழிப்பதாகும்.

    அக்னி:

    அக்னி, ஞானத்தை அளிப்பதாகும்.

    ×