search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டொனல்டு டிரம்ப்"

    • உலகம் மூன்றாம் உலகப்போரை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்றும் அது தவிர்க்கமுடியாத ஒன்றாக மாறியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
    • காம்ரேட் கமலா ஹாரிஸ் தேர்தல் பிரச்சாரம் என்ற பெயரில் சகாக்களுடன் பஸ்சில் டூர் சென்று கொண்டிருக்கிறார்'

    ரஷியா- உக்ரைன் போர், இஸ்ரேல்- பாலஸ்தீன போர் என்பது அந்தந்த நாடுகளுக்கிடையேயான போர் மட்டுமல்ல. உலக நாடுகள்,போரிடும் இரண்டு நாடுகளில் யாருக்கு ஆதரவு என்ற நிலைப்பாட்டின் மூலம் இரண்டு அணிகளாக பிரிந்து நிற்கிறது. இஸ்ரேல் மற்றும் உக்ரைனுக்கு மேற்குலகம் ஆதரவு அளித்து வருவதுபோல், பாலஸ்தீனத்துக்கு மத்திய கிழக்கு நாடுகளும், ரஷியாவுக்கு சீனா வட கொரியா ஆகியவை ஆதரவாக நிற்கின்றன.

    இந்நிலையில் இந்த போர்கள் மூன்றாம் போர் மூள்வதற்கான முன்னறிவிப்புகளாகவே உள்ளன என்று பலரும் பயத்தில் உள்ளனர். அதை உறுதிப்படுத்தும் வகையில் உலகப் பொருளாதாரத்திலும் ராணுவ பலத்திலும் மிகப்பெரிய சக்தியாக விளங்கும் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் தற்போது கருத்து ஒன்றைத் தெரிவித்துள்ளார். அதாவது, உலகம் மூன்றாம் உலகப்போரை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்றும் அது தவிர்க்கமுடியாத ஒன்றாக மாறியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

    நேற்றைய தினம் நடந்த லெபனான்-இஸ்ரேல் இடையேயான வான் வெளி தாக்குதல்கள், மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம், பிரச்சனைகளைச் சரி செய்வதற்காக அமரிக்க வான் படைத் தளபதி CQ பிரவுனின் திடீர் மத்திய கிழக்கு பயணம் ஆகியவற்றை முன்வைத்து,

    'உலகம் மூன்றாம் உலகப் போரை நோக்கிசென்று கொண்டிருக்கிறது ஆனால் தூங்குமூஞ்சி [sleepy] ஜோ [பைடன்] கலிபோர்னியா பீச்சில் தூங்கிக்கொண்டு இருக்கிறார். ஜனநாயகவாதிகளால் [கட்சியால்]ஜோ புறக்கணிக்கப்பட்டுவிட்டார். காம்ரேட் [கம்யூனிஸ்ட்] கமலா ஹாரிஸ் தேர்தல் பிரச்சாரம் என்ற பெயரில் சகாக்களுடன் பஸ்சில் டூர் சென்று கொண்டிருக்கிறார்' என்று தனது எக்ஸ் பக்கத்தில் விமர்சித்துள்ளார்.  

    • டொனால்டு டிரம்ப்-ஐ கடந்த ஆகஸ்ட் 13 அன்று நேர்காணல் செய்தார்.
    • 2020 இல் ஜோ பைடனுக்கும், தற்போது 2024 இல் டிரம்புக்கும் ஆதரவான நிலைப்பாட்டை எலான் மஸ்க் எடுத்துள்ளார்

    அமேரிக்காவில் வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடக்க உள்ள நிலையில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஆளும் ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக தற்போதய துணை அதிபர் கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார். கமலா ஹாரிஸை தனிப்பட்ட முறையிலும் தாக்கிப் பேசி வரும் டொனல்டு டிரம்ப், கமலா ஹாரிஸை கம்யூனிச தலைவராக சித்தரிக்க முயன்று வருகிறார்.

    இதற்கிடையில் உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரும், ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா மற்றும் எக்ஸ் தளத்தின் உரிமையாளருமான எலான் மஸ்க் அமெரிக்க அதிபர் தேர்தலில் களம் காணும் டொனால்டு டிரம்ப்-ஐ கடந்த ஆகஸ்ட் 13 அன்று நேர்காணல் செய்தார். இந்த நேர்காணல் எக்ஸ் தளத்தின் ஸ்பேசஸில் நடைபெற்றது.

    இந்த நிலையில்தான், தான் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றால், எலான் மஸ்க்  மந்திரிசபையில் ஒரு பதவியையோ அல்லது வெள்ளை மாளிகை ஆலோசகர் பதவியையோ ஏற்றுக்கொள்ள வலியுறுத்துவேன் என்று தெரிவித்துள்ளார். இதற்கு முன்னதாகவும் டிரம்ப் அதிபரானால் வெள்ளை மாளிகை ஆலோசகராக எலான் மஸ்க் இருக்க அவரிடம் பேச்சுவார்த்தை நடந்ததாக அரசியல் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் எலான் மஸ்க் அதை முற்றிலும் மறுத்திருந்தார். இந்த நிலையில்தான் டிரம்ப் பொது வெளியில் இதுகுறித்து வெளிப்படையாகவே தற்போது பேசியுள்ளார்.

     2008 and 2012 காலகட்டம்வரை பராக் ஒபாமாவுக்கு, 2016 இல் ஹிலாரி கிளிண்டனுக்கும், 2020 இல் ஜோ பைடனுக்கும், தற்போது 2024 இல் டிரம்புக்கும் ஆதரவான  நிலைப்பாட்டை எலான் மஸ்க் எடுத்துள்ளது குறிப்பிடதக்கது

    ×