search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சந்தீப் கோஷ்"

    • கொல்கத்தாவில் உள்ள நீதிமன்றத்தில் ஜாமின் கோரி சந்தீப் கோஷ், அபிஜீத் மோண்டல் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர்.
    • சந்தீப் கோஷ் மீதான குற்றச்சாட்டின் தன்மை மோசமாக உள்ளது.

    ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷுக்கு ஜாமின் மறுத்த சிபிஐ நீதிமன்றம், அவர் மீதான குற்றச்சாட்டின் தன்மை நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை விதிக்கப்படலாம் என்றும் கூறியுள்ளது.

    கொல்கத்தாவில் உள்ள நீதிமன்றத்தில் ஜாமின் கோரி சந்தீப் கோஷ், அபிஜீத் மோண்டல் ஆகியோர் மனு தாக்கல் செய்தனா். இவா்களின் மனு மீது கடந்த வாரம் விசாரணை மேற்கொண்ட கூடுதல் தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட் எஸ்.டே கூறுகையில், 'பெண் மருத்துவா் கொலை தொடா்பான சிபிஐ விசாரணை முழு வீச்சில் நடைபெறுவது வழக்கு குறிப்பேடு மூலம் தெரிகிறது. சந்தீப் கோஷல் மீதான குற்றச்சாட்டின் தன்மை மோசமாக உள்ளது. அந்தக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படக் கூடும்' என்று தெரிவித்து சந்தீப் கோஷ், அபிஜீத் மோண்டலின் ஜாமின் மனுக்களை நிராகரித்தார்.

    கடந்த மாதம் அரசு நடத்தும் மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆதாரங்களை சேதப்படுத்தியதாகவும், எஃப்ஐஆர் பதிவு செய்வதில் தாமதம் செய்ததாகவும் கோஷ் மற்றும் தலா காவல் நிலையத்தின் முன்னாள் அதிகாரி அபிஜித் மோண்டல் ஆகியோரை சிபிஐ கைது செய்தது.

    • முன்னாள் தலைவர் சந்தீப் கோஷ் மீது ஜூன் மாதம் புகார்.
    • பொலீசார் விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    மேற்கு வங்க மாநிலம் ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை முதல்வராக இருந்தவர் சந்தீப் கோஷ். பெண் டாக்டர் கற்பழித்து கொலை செய்யப்பட்டது தொடர்பாக மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இதனால் சந்தீப் கோஷ் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.

    சிபிஐ இவரிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தியது. சுமார் 53 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. இந்த நிலையில் இந்த மருத்துவமனையில் நிதி முறைகேடு நடைபெறுவதாக கடந்த ஜூன் மாதம் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகார் தொடர்பாக ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. போலீசார் நிதி முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் போலீசார் சந்தீப் கோஷ் மீது ஊழல் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 2021-ல் இருந்து முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்த ஐ.ஜி. பிரணாப் குமார் தலைமையில் சிறப்பு விசாரணைக் குழு (SIT) அமைக்கப்பட்டது. இந்த குழு சந்தீப் கோஷ் முதல்வராக இருந்த காலத்தில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தும்.

    பெண் மருத்துவர் கொலை தொடர்பாக பெற்றோர்களிடம் தாமதமாக தெரிவித்தது. கொலை நடைபெற்ற இடத்தில் புதுப்பித்தல் வேலை தொடர்பாக அவர் எடுத்த முடிவு ஆகியவை குறித்து சிபிஐ கேள்விகள் கேட்டது.

    சந்தீப் கோஷை சுற்றி சர்ச்சைகள் சுற்றி வரும் நிலையில் முடிச்சுகள் இன்னும் அவிழ்க்கப்படாமல் உள்ளது. கொல்கத்தா உயர்நீதிமன்றம், அடுத்த உத்தரவு வரை சந்தீப் கோஷை மற்ற மருத்துவ கல்லூரியில் நியமனம் செய்யக் கூடாது உன உத்தரவிட்டுள்ளது.

    ×