என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கார்பன் இழை"
- மாணவர்கள் இந்தக் கடிதங்களை சோதனைப் பொருளாகப் பயன்படுத்துகின்றனர்.
- சேர்க்கை கடிதத்தை பழங்கள் மற்றும் இறைச்சியை வெட்டுவதற்கு பயன்படுத்துகின்றனர்.
பீஜிங்:
சீனாவின் பீஜிங் நகரில் பீஜிங் வேதியியல் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இந்தப் பல்கலைக்கழகத்தில் சேருவதற்காக மாணவர்கள் விண்ணப்பம் செய்திருந்தனர்.
இந்நிலையில், விண்ணப்பதாரர்களுக்கு 0.2 மில்லிமீட்டர் தடிமன் கொண்ட மிக மெல்லிய கார்பன் இழை கொண்டு அச்சிடப்பட்ட சேர்க்கை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
முதலாம் ஆண்டு மாணவர்கள் இந்தக் கடிதங்களை நினைவுப் பொருளாக வைப்பதற்குப் பதில், அவற்றை சோதனைப் பொருளாகப் பயன்படுத்துகின்றனர். சேர்க்கை கடிதத்தை பழங்கள் மற்றும் இறைச்சியை வெட்டுவதற்கு பயன்படுத்துகின்றனர்.
இதையடுத்து, மாணவர்கள் கடிதங்களைப் பரிசோதிப்பதை நிறுத்தும்படியும், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் நவீன சாதனைகளை பிரதிபலிக்கும் தனித்துவமான கலைப்பொருளாக பாதுகாக்க வேண்டும் என பல்கலைக்கழக நிர்வாகம் வலியுறுத்தியது.
தங்கள் ஆய்வகங்களில் உருவாக்கப்படும் பொருட்கள் எவ்வளவு நீடித்த மற்றும் நம்பகமானவை என்பதைக் காட்ட விரும்பவே இந்தக் கடிதங்கள் அனுப்பப்பட்டது என பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.