என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மேற்குவங்க சட்டசபை"
- மேற்கு வங்க சட்டசபையில் பலாத்கார தடுப்பு மசோதா சமீபத்தில் நிறைவேற்றப்பட்டது.
- இந்த மசோதாவை மாநில கவர்னர் ஆனந்த் போஸ் ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பினார்.
கொல்கத்தா:
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் பணியாற்றிய 31 வயது பெண் டாக்டர் கருத்தரங்கு அறையில் கடந்த மாதம் 9-ம் தேதி பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். இச்சம்பவம் நாடுமுழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்தச் சம்பவத்தை தொடர்ந்து மேற்கு வங்கத்தில் பாலியல் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை அளிக்கும் வகையில் சட்டம் கொண்டு வரப்படும் என முதல் மந்திரி மம்தா பானர்ஜி கூறினார்.
இதையடுத்து, கடந்த 3-ம் தேதி நடைபெற்ற மேற்கு வங்க சிறப்பு சட்டசபை கூட்டத்தில், பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை வழங்கும் மசோதா நிறைவேற்றப்பட்டது.
இந்த மசோதா பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளைத் தடுத்து (குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கி) பாதுகாப்பு அளிக்கும் வகையில் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.
இந்நிலையில், மேற்கு வங்க சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட பலாத்கார தடுப்பு மசோதாவை கவர்னர் சி.வி.ஆனந்த் போஸ், ஜனாதிபதி திரவுபதி முர்முவின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்தார்.
- மேற்குவங்க மாநிலத்தின் சிறப்பு சட்டசபைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
- பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை வழங்கும் மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
கொல்கத்தா:
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் பணியாற்றிய 31 வயது பெண் டாக்டர் கருத்தரங்கு அறையில் கடந்த மாதம் 9-ம் தேதி பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். இச்சம்பவம் நாடுமுழுதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த 21 நாளாக டாக்டர்கள், பொதுமக்கள், தன்னார்வலர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், மேற்குவங்க மாநிலத்தின் சிறப்பு சட்டசபைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், பலாத்கார தடுப்பு மசோதா தாக்கல் செய்யப்பட்டது. அதில் பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை வழங்க வழி உள்ளது.
அப்போது மம்தா பானர்ஜி பேசுகையில், புதிய மசோதா மூலம் சட்டத்தில் உள்ள ஓட்டைகளை அடைக்க முயற்சித்துள்ளோம். மேற்கு வங்கத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் நீதிமன்றங்கள் மூலம் நீதியைப் பெறுகின்றனர். புகார்களை விரைந்து விசாரித்து குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க மசோதா வழிவகுக்கிறது. பாலியல் வன்கொடுமைகள் மனிதகுலத்திற்கு எதிரானவை. சமூக சீர்திருத்தங்கள் தேவை என தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து இந்த மசோதா சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என்ற ஷரத்து இந்த மசோதாவில் சேர்க்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்கள் உயிரிழக்கும் பட்சத்தில் இந்த உச்சபட்ச தண்டனை குற்றவாளிகளுக்கு அளிக்கப்படும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்