என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஸ்டிராவிஸ் ஹெட்"
- ஸ்காட்லாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் டிராவிஸ் ஹெட் 17 பந்தில் அரை சதம் விளாசினார்.
- முதல் 6 ஓவரில் ஆஸ்திரேலியா 113 ரன்கள் குவித்தது.
ஆஸ்திரேலிய அணி 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக ஸ்காட்லாந்து சென்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய ஸ்காட்லாந்து அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்கள் சேர்த்தது.
இதனையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 9.4 ஓவரில் 155 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டி20 கிரிக்கெட்டில் பவர் பிளேயில் அதிக ரன்கள் விளாசிய அணி என்ற வரலாற்று சாதனையை ஆஸ்திரேலிய அணி படைத்துள்ளது. டிராவிஸ் ஹெட் மற்றும் மிட்செல் மார்ஷ் ஜோடி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் இந்த சாதனை படைக்கப்பட்டது. ஆஸ்திரேலிய அணி முதல் 6 ஓவரில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 113 ரன்கள் குவித்தது.
5-வது ஓவரில் மிட்செல் மார்ஷ் 30 ரன்களும் 6-வது ஓவரில் டிராவிஸ் ஹெட் 26 ரன்களும் அதிகபட்சமாக குவித்தனர். குறிப்பாக ஹெட் 17 பந்தில் அரை சதம் விளாசினார்.
- ஸ்காட்லாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.
- ஆட்டநாயகனாக டிராவிஸ் ஹெட் தேர்வு செய்யப்பட்டார்.
ஆஸ்திரேலிய அணி 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக ஸ்காட்லாந்து சென்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி இன்று நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய ஸ்காட்லாந்து அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்கள் சேர்த்தது.
இதனையடுத்து ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க்- டிராவிஸ் ஹெட் ஆகியோர் களமிறங்கினர். ஆஸ்திரேலிய டி20 அணியில் ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க் அறிமுகமானார். அவர் அறிமுக போட்டியில் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.
இதனை தொடர்ந்து டிராவிஸ் ஹெட் மற்றும் மிட்செல் மார்ஷ் ஜோடி சேர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். மார்ஸ் 12 பந்தில் 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ருத்ரதாண்டவம் ஆடிய ஹெட் 25 பந்தில் 80 ரன்கள் குவித்து வெளியேறினார். அடுத்து வந்த ஜோஸ் இங்கிலீஸ் - ஸ்டோய்னிஸ் ஜோடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர்.
ஆஸ்திரேலிய அணி 9.4 ஓவர்களில் 155 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக டிராவிஸ் ஹெட் தேர்வு செய்யப்பட்டார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்