search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முக ஸ்டாலின்"

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 'அண்ணா விருது' வழங்கி கவுரவித்தார்.
    • க.சுந்தரம் மறைவுக்கு தி.மு.க. நிர்வாகிகள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    திமுக முன்னாள் அமைச்சர், பொன்னேரி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.,வும் அக்கட்சியின் ஆதிதிராவிட நலக் குழுவின் தலைவருமான க.சுந்தரம் (76) உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.

    திமுகவின் பட்டியலினத் தலைவர்களில் முக்கியமானவரான க.சுந்தரம், இரண்டு முறை திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார்.

    1989-ம் ஆண்டு திமுக ஆட்சியில் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சராகவும், 1996 - 2001 திமுக ஆட்சியில் பால்வளத் துறை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.

    2001ம் ஆண்டு இதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றிவாய்ப்பை இழந்தார். திமுகவில் முக்கியத்துவம் வாய்ந்த பதவிகளில் ஒன்றான துணை பொதுச் செயலாளராகவும் அவர் இருந்துள்ளார்.

    கடந்தாண்டு திமுக முப்பெரும் விழாவில் க.சுந்தரத்திற்கு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 'அண்ணா விருது' வழங்கி கவுரவித்தார். க.சுந்தரம் மறைவுக்கு தி.மு.க. நிர்வாகிகள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், மறைந்த முன்னாள் அமைச்சர் க.சுந்தரம் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

    பிறகு, க.சுந்தரம் குடும்பத்தினரை நேரில் சந்தித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்தார்.

    • எதிர்க்கட்சித் தலைவருக்கு பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய அரசு விரைந்து செயல்பட வேண்டும்.
    • வன்முறை மற்றும் மிரட்டலுக்கு ஜனநாயகத்தில் இடமில்லை என்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும்.

    "இந்திரா காந்திக்கு நேர்ந்தது உங்களுக்கும் நேரும்" என எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு, ஷிண்டே சிவசேனா கட்சியின் எம்.எல்.ஏ. மிரட்டல் விடுத்துள்ளார்.

    இதற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    பாஜக தலைவர் ஒருவர் ராகுல்காந்தி 'அவரது பாட்டிக்கு நேர்ந்த கதியை சந்திக்க நேரிடும்' என்ற மிரட்டலுக்கும், ஷிண்டே சிவசேனா கட்சியின் எம்.எல்.ஏ. ராகுல் காந்தியின் நாக்கை அறுப்பதாக கூறிய மிரட்டல்கள் பற்றிய ஊடகச் செய்திகளால் ஆழ்ந்த அதிர்ச்சி அடைந்துள்ளேன்.

    எனது சகோதரர் ராகுலுக்கு மக்களின் ஆதரவு அதிகரிப்பது, சிலரை நிலைகுலைய வைத்துள்ளது.

    எதிர்க்கட்சித் தலைவருக்கு பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய அரசு விரைந்து செயல்பட்டு, வன்முறை மற்றும் மிரட்டலுக்கு ஜனநாயகத்தில் இடமில்லை என்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • திமுக பவள விழா கூட்டம் குறித்தே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
    • அனைத்து அமைச்சர்களும் முதலமைச்சருக்கு துணையாக இருப்போம்.

    சென்னை:

    சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயத்தில் திமுக மூத்த நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வந்த ஆலோசனை முடிவடைந்தது.

    இந்நிலையில் திமுக இளைஞர் அணிச் செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * திமுக பவள விழா கூட்டம் குறித்தே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

    * திமுக தொண்டர்கள் தங்கள் விருப்பத்தை தெரிவித்துள்ளனர். துணை முதல்வர் பொறுப்பு குறித்து முதலமைச்சர் முடிவெடுப்பார்.

    * அனைத்து அமைச்சர்களும் முதலமைச்சருக்கு துணையாக இருப்போம்.

    * தமிழகத்தில் பெரியாரை தொடாமல் அரசியல் செய்ய முடியாது என்று பெரியார் நினைவிடத்தில் விஜய் அஞ்சலி செலுத்தியது குறித்து அவர் கருத்து தெரிவித்தார்.

    • அண்ணா அறிவாலயத்தில் திமுக மூத்த நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை.
    • கட்சி தொண்டர்கள் பலரும் அறிவாலயத்திற்கு வெளியே குவிந்துள்ளனர்.

    சென்னை:

    சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயத்தில் திமுக மூத்த நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகின்றார்.

    ஆலோசனையில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா, திருச்சி சிவா, அமைச்சர்கள் எ.வ.வேலு, பொன்முடி, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

    துணை முதலமைச்சர், புதிய மாவட்ட செயலாளர்கள், 2026 சட்டசபை தேர்தல் போன்ற விவகாரங்கள் குறித்து ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    துணை முதலமைச்சராக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவிக்கப்பட வாய்ப்பு என கருதப்படும் நிலையில் கட்சி தொண்டர்கள் பலரும் அறிவாலயத்திற்கு வெளியே குவிந்துள்ளனர்.

    • அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என இறுதிவரை போராடியவர் பெரியார்.
    • மகளிருக்கு சொத்தில் சம உரிமை கொடுத்தவர் கலைஞர் கருணாநிதி.

    சென்னை:

    தந்தை பெரியார் நினைவு சொற்பொழிவு நிகழ்ச்சி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பில் கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.

    இந்த சொற்பொழிவில் பேச்சாளர்களாக திரைப்பட இயக்குனர் கரு. பழனியப்பன், திராவிடர் கழகத்தின் துணை பொது செயலாளர் வழக்கறிஞர் மதிவதனி, கெனித்ராஜ் அன்பு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு விழாப்பேருரை ஆற்றினார்.

    விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பில், ஏன் தந்தை பெரியார் நினைவு கருத்தரங்கத்தை நடத்துகிறார்கள் என உங்களுக்கு கேள்வி இருக்கலாம். வாழ்வில் வெற்றி பெற நினைக்கும் ஒவ்வொரு இளைஞனுக்கும் விளையாட்டு போட்டிகளில் சாதிக்க துடிக்கும் ஒவ்வொரு விளையாட்டு வீரனுக்கும் சுறுசுறுப்பு, விடாமுயற்சி, துவண்டு போகாத மன உறுதி, பகுத்தறிய வேண்டிய ஆராய்ச்சி மனப்பான்மை மிக மிக அவசியம்.

    தந்தை பெரியாரிடம் இவை அனைத்துமே அடிப்படை குணங்களாக இருந்தன. பெரியார் மரணத்தின்போது பெரியார் தன் சுற்றுப்பயணத்தை தான் முடித்துக்கொண்டிருக்கிறார் நாம் தொடர்வோம் என்று கலைஞர் எழுதினார்.

    பெரியார் உடலால் மறைந்தாலும் அவருடைய கருத்துக்கள் என்றைக்கும் அழியாது. 95 வரை வாழ்ந்த பெரியார் இறுதி வரைக்கும் தமிழ்நாட்டின் பிற்படுத்தப்பட்ட ஒடுக்கப்பட்ட விளிம்பு நிலை மக்களின் உரிமைக்காக உழைத்தவர்.

    பகுத்தறிவு சமூகநீதி சுயமரியாதை கொள்கைகளை தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் கொண்டு சேர்த்தார்கள். அவருடைய கருத்துக்கள் என்றைக்கும் இளமையுடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.

    இங்கு ஏராளமான மாணவர்கள் அமர்ந்துள்ளீர்கள். ஆனால் நூறாண்டுகளுக்கு முன்பு குறிப்பிட்ட சிலர் தான் படிக்க வேண்டும். மற்றவர்கள் குலத்தொழிலை செய்ய வேண்டும் அவர்களெல்லாம் படித்தாலே தீட்டு என்று சொன்னார்கள்.

    குறிப்பாக மகளிர் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்றும் பொது இடத்தில் சிரித்தால் கூட தப்பு என்றும் கூறினார்கள். இன்றைக்கு அந்த நிலைமை மாறியுள்ளது. எல்லோரும் படிக்கிறார்கள். எல்லோரும் வேலைக்கு செல்கிறார்கள்.

    யார் இந்த மாற்றத்தை தமிழ்நாட்டில் கொண்டு வந்தது என எண்ணிப் பார்த்தால் அது தந்தை பெரியாராக தான் இருக்கும்.

    பெரியார் பேசிய அத்தனை வடிவங்களுக்கும் செயல் வடிவம் கொடுத்தது பேரறிஞர் அண்ணா. முத்தமிழ் அறிஞர் கலைஞர் தலைமையிலான தி.மு.க. அரசு தான் இன்றைக்கும் அந்த பணியை நம்முடைய முதலமைச்சர் செய்து கொண்டிருக்கிறார்.

    எல்லோருக்கும் சம வாய்ப்பு வேண்டும். உரிமை மறுக்கப்பட்டவர்களுக்கு கூடுதல் உரிமைகள் வேண்டும் என்ற பெரியாரின் பிறந்த நாளை நம் முதலமைச்சர் சமூக நீதி நாளாக அறிவித்தார்.

    சுயமரியாதை திருமணம் செல்லும் என அண்ணா சட்டம் கொண்டு வந்தார். மகளிர் குடும்ப சொத்தில் சம உரிமை உண்டு என கலைஞர் சட்டம் கொண்டு வந்தார். காவல்துறை ராணுவத்தில் பெண்கள் வரவேண்டும் என பெரியார் சொன்னார்.

    இந்தியாவிலேயே முதல்முறையாக 50 வருடத்திற்கு முன்னாடியே தமிழ்நாடு காவல்துறையில் பெண்கள் பணியாற்றலாம் என்கிற நிலையை ஏற்படுத்தியவர் கலைஞர் தான். இன்றைக்கு பெண்கள் உயர் கல்வி படிக்க வேண்டும். என்ற எண்ணத்தோடு புதுமைப்பெண் திட்டத்தை நம் முதலமைச்சர் தந்துள்ளார்.

    உங்களில் பல பேருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கல்வி உதவித்தொகை வருகிறது. வறுமை காரணமாக கல்வியை விட்டு விடக்கூடாது என தமிழ் புதல்வன் திட்டம் மூலம் மாதம் ஆயிரம் ரூபாய் கல்வி உதவித்தொகை கொடுக்கப்பட்டு வருகிறது. மகளிர் மகிழ்ச்சியாக வாழ வேண்டும். சுயமரியாதையோடு வாழ வேண்டும். அவர்களுக்கு பொருளாதார சுதந்திரம் வேண்டும் என்று பெரியார் போராடினார்.

    அதற்கு செயல் வடிவம் கொடுக்கிற விதமாக இந்தியாவிலேயே முதல் முறையாக தான் மகளிர் சுய உதவி குழுக்களை கலைஞர் தொடங்கினார். மகளிரின் பொருளாதார சுதந்திரத்தை உறுதிப்படுத்திட நம்முடைய முதலமைச்சர் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை கொண்டு வந்தார். எல்லோரும் நல்ல வேலைக்கு போக வேண்டும் என்ற பெரியாரின் கனவை நினைவாக்க நான் முதல்வன் திட்டத்தை முதலமைச்சர் உங்களுக்கு கொடுத்திருக்கிறார். ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., நீதிபதி மாதிரியான உயர் பதவிகளுக்கு ஏழை எளிய கிராம பிற்படுத்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மாணவர்கள் வரவேண்டும் என வாழ்நாள் முழுக்க போராடியவர் தந்தை பெரியார்.

    அதனை செயல்படுத்தும் விதமாக நம்முடைய முதலமைச்சர் யு.பி.எஸ்.சி. தேர்வுக்கு தயாராகிற மாணவர்கள் இளைஞர்களுக்கு மாதம் ரூ.7,500 நிதி உதவி வழங்குகிறார். அது மட்டுமல்லாமல் முதல் நிலை தேர்வில் வென்றால் 25 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை கொடுக்கிறார்கள்.

    அனைத்து சாதியினரும் அர்ச்சகர் என்கிற நிலையை ஏற்படுத்த பெரியார் இறுதிவரை போராடினார். அது முடியாமல் போனபோது பெரியாரின் நெஞ்சில் தைத்த அந்த முள்ளை எடுக்கும் விதமாக அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஏன் பெண்களும் அர்ச்சகராக பணியாற்றலாம் என்கிற நிலையை நம் முதலமைச்சர் ஏற்படுத்தினார்.

    பெரியார் இல்லாமல் நாம் யாரும் இல்லை என்று அறிஞர் அண்ணா சொன்னார். என்னை எத்தனையோ பெயர்களை சொல்லி புகழ்ந்தாலும் பெரியார் வழியை பின்பற்றும் மானமிகு சுயமரியாதைக்காரன் என்று சொல்லும்போது பெரும் மகிழ்ச்சி ஏற்படுகிறது என்றார் கலைஞர்.

    பெரியார் இறந்து 50 ஆண்டுகளுக்கு மேல் ஆனாலும் அவருடைய கருத்துக்களும் சிந்தனைகளும் இன்றைக்கு சமகாலத்தில் ஒத்துப்போகும் அளவிற்கு உள்ளது. அது என்றைக்கும் இருக்கும் ஆகவே தான் இந்த கருத்தரங்கை ஏற்பாடு செய்துள்ளோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்வில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை கூடுதல் தலைமை செயலாளர் அதுல்யா மிஸ்ரா, விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலாளர் மேகநாத ரெட்டி, சட்டமன்ற உறுப்பினர் எழிலன், மாநகராட்சி துணை மேயர் மகேஷ் குமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தமிழக அமைச்சரவை விரைவில் மாற்றப்பட இருப்பதாக கடந்த சில மாதங்களாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருந்தது.
    • உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சரானால் மகிழ்ச்சி அடைவோம் என்று மூத்த அமைச்சர்கள் பலரும் நிகழ்ச்சியில் பேசி வந்தனர்.

    சென்னை:

    தமிழக அமைச்சரவை விரைவில் மாற்றப்பட இருப்பதாக கடந்த சில மாதங்களாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருந்தது.

    இது மட்டுமின்றி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக விரைவில் நியமிக்கப்படுவார் என்றும் கூறப்பட்டது.

    உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சரானால் மகிழ்ச்சி அடைவோம் என்று மூத்த அமைச்சர்கள் பலரும் நிகழ்ச்சியில் பேசி வந்தனர். ஆனாலும் அது உறுதிப்படுத்தப்படாமல் இருந்தது.

     

    அமெரிக்க சுற்றுப்பயணத்தை முடித்து விட்டு வந்த பின்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக அமைச்சரவையில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தெரிவித்து இருந்தார்.

    இந்நிலையில் தமிழக அமைச்சரவை மாற்றம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது.

    அமைச்சரவை மாற்றம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    • வரும் 21, 22, 23 ஆகிய 3 நாட்கள் பிரதமர் மோடி அமெரிக்காவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார்.
    • பிரதமர் அமெரிக்கா செல்லும் முன்னர் சந்திப்பு நடக்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த வாரம் அமெரிக்கா சென்று திரும்பியபோது தமிழகத்துக்கு தர வேண்டிய நிதியை கேட்டு பெற பிரதமர் மோடியை விரைவில் சந்திப்பேன் என்று கூறி இருந்தார்.

    அதன்படி பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

    டெல்லி செல்லும்போது சமீபத்தில் மறைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி இல்லத்திற்கு சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்த உள்ளதாகவும் அதனை தொடர்ந்து பிரதமர் மோடியை சந்திக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது.

    பிரதமர் மோடியை சந்திக்கும்போது பி.எம்.ஸ்ரீ திட்டம் தொடர்பாக தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நிதி மற்றும் மெட்ரோ ரெயில் திட்டம்-II செயல்படுத்துவதற்கான நிதியை கேட்டு பெறுவதற்கும் அவர் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

    மேலும் தமிழக நலன் சார்ந்த பல்வேறு அம்சங்கள் அடங்கிய கோரிக்கை மனுவையும் பிரதமரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி வலியுறுத்துவார் என தெரிகிறது.

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் டெல்லி செல்லும் பயணத்திற்கான ஏற்பாடுகளில் அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

    இதற்காக 19 அல்லது 20-ந்தேதி டெல்லி செல்ல வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால் அதிகாரப்பூர்வமாக இன்னும் அறிவிக்கப்படவில்லை.

    • அமெரிக்கா சென்றோம் என்று சொல்வதை விட வென்றோம் என்றுதான் சொல்ல வேண்டும்.
    • தொண்டர்களில் மூச்சுக்காற்று, ரத்தம், உழைப்பால்தான் திமுக 75 ஆண்டுகளாக நிலைத்து நிற்கிறது.

    செப்டம்பர் 15-ந்தேதி முன்னாள் முதலமைச்சர் அண்ணா பிறந்த தினம், செப்டம்பர் 17-ந்தேதி தந்தை பெரியார் பிறந்த நாள் மற்றும் தி.மு.க. தொடங்கப்பட்ட நாளாகும். இந்த மூன்றையும் இணைத்து முப்பெரும் விழா தி.மு.க. சார்பில் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.

    இந்தாண்டு, தி.மு.க. தொடங்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி பவளவிழா ஆண்டாக கொண்டாடப்படுகிறது. எனவே, தி.மு.க. பவள விழா மற்றும் முப்பெரும் விழா சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது..

    திமுக முப்பெரும் மற்றும் பவள விழாவில் பேசுவதற்கு முன்பு "கழகம் நல்ல கழகம்.. திராவிட முன்னேற்ற கழகம்" என்ற பாடலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாடினார். பின்னர் பேசிய அவர், "தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக14 நாட்கள் அமெரிக்க பயணம், நானும் தம்பி டி.ஆர்.பி. ராஜாவும் சென்றோம். சென்றோம் என்று கூறுவதை விட, வென்றோம் என்றுதான் கூற வேண்டும். இந்த முதலீடுகள் மூலம் பல்லாயிரம் வேலைவாய்ப்புகள் கிடைக்க உள்ளன.

    எண்ணி அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. எனக்கு அமெரிக்க வாழ் மக்கள் கொடுத்த வரவேற்பு மறக்கவே முடியாது. அமெரிக்கா சென்றோம் என்று சொல்வதை விட வென்றோம் என்றுதான் சொல்ல வேண்டும்.

    தமிழ்நாடும், திமுகவும் எனது இரு கண்கள் என செயல்பட்டுவரும் இந்நேரத்தில் பவள விழாவில் பங்கேற்பது என் வாழ்நாள் பெருமையாக கருதுகிறேன். தொண்டர்களில் மூச்சுக்காற்று, ரத்தம், உழைப்பால்தான் திமுக 75 ஆண்டுகளாக நிலைத்து நிற்கிறது

    ஒரு இயக்கம் 75 ஆண்டுகள் கழித்தும் கம்பீரமாக காட்சியளிப்பது சாதாரனமான சாதனை அல்ல. இதற்கு நமது அமைப்பு முறைதான் காரணம் என்பதை, நான் நெஞ்சை நிமிர்த்து சொல்வேன்.

    கடந்து வந்த 75 ஆண்டுகளில் எத்தனையோ சாதனைகளை செய்துள்ளோம். திமுகவின் தேவை இன்னும் 100 ஆண்டுகளுக்கு இருக்கிறது. கல்வி, பொருளாதாரம், தொழில்நுட்பம், உட்கட்டமைப்பு, சமூகநீதி உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் மாநிலத்தை முன்னேற்றியுள்ளோம்

    எல்லா கனவுகளும் நிறைவேறிவிட்டது என்றால், இல்லை. ஆனால், எல்லா நெருக்கடிகளுக்கும் மத்தியில்தான் மாநிலத்தை முன்னேற்றும் ஒற்றை இலக்குடன் அரசு செயல்பட்டுவருகிறது. மாநில சுய ஆட்சி என்பது நம் உயிர்நாடி.

    இன்று கிரீம் பன்னுக்கு எவ்வளவு வரி எனக் கேட்கக் கூட உரிமை இல்லாத நிலைதான் உருவாகியுள்ளது.

    எதிர்வரும் தேர்தலிலும் நமக்குத்தான் வெற்றி. இதை ஆணவத்தில் சொல்லவில்லை. உங்கள் மீது இருக்கும் நம்பிக்கையில் சொல்கிறேன்.

    திமுகவுக்கு தித்திக்கும் கொள்கை இருக்கு. கொள்கையை காக்கும் படையாக தொண்டர்கள் இருக்கிறார்கள். தொண்டர்களின் வீரத்தால் துணிச்சல் பெற்ற தலைமை இருக்கு. நூற்றாண்டை நோக்கி முன்னேறுவோம்

    நம்முடைய இலக்கு 2026 தேர்தல். இதுவரைக்கும், இப்படி ஒரு வெற்றியை எந்தக் கட்சியும் பெற்றது இல்லை என வரலாறு சொல்ல வேண்டும்" என்று தெரிவித்தார்" என்று தெரிவித்தார்.

    • திமுக பவள விழா சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது.
    • உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சராக்க வேண்டாமா என முன்னாள் எம்.பி. எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் பேச்சு

    தி.மு.க. பவள விழா மற்றும் முப்பெரும் விழா இன்று சென்னையில் நடைபெற்று வருகிறது.

    செப்டம்பர் 15-ந்தேதி முன்னாள் முதலமைச்சர் அண்ணா பிறந்த தினம், செப்டம்பர் 17-ந்தேதி தந்தை பெரியார் பிறந்த நாள் மற்றும் தி.மு.க. தொடங்கப்பட்ட நாளாகும். இந்த மூன்றையும் இணைத்து முப்பெரும் விழா தி.மு.க. சார்பில் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.

    இந்தாண்டு, தி.மு.க. தொடங்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி பவளவிழா ஆண்டாக கொண்டாடப்படுகிறது. எனவே, தி.மு.க. பவள விழா மற்றும் முப்பெரும் விழா சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது..

    தி.மு.க பவளவிழா மற்றும் முப்பெரும் விழாவில், முன்னாள் எம்.பி. தஞ்சை எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் அவர்களுக்கு மு.க.ஸ்டாலின் விருதினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

    பின்னர் விருது வென்றவர்கள் சார்பில் எஸ்.எஸ். பழனி மாணிக்கம் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், "தி.மு.க வின் வெள்ளி விழா, பொன்விழா ஆண்டை கலைஞர் கொண்டாடினார். பவள விழா ஆண்டை முதலமைச்சராகிய நீங்கள் கொண்டாடுகிறீர்கள். இந்தியாவில் உள்ள எல்லா அரசாங்கமும் திராவிட மாடல் அரசை பின்பற்றுகின்றன. உங்கள் பெயரால் எனக்கு விருது வழங்கியது என் வாழ்நாளில் நான் செய்த பாக்கியம்.

    "உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சராக்க வேண்டாமா..? உங்களை (மு.க.ஸ்டாலின்) பேராசிரியர் அன்பழகன் ஏற்றுக்கொண்டதைப்போல நாங்களும் அவரை ஏற்றுக்கொள்வோம். காலம் தாழ்த்தாதீர்கள்" என்று தெரிவித்தார்.

    • தி.மு.க. தொடங்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி பவளவிழா ஆண்டாக கொண்டாடப்படுகிறது.
    • தி.மு.க. பவள விழா சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.

    சென்னை:

    தி.மு.க. பவள விழா மற்றும் முப்பெரும் விழா இன்று சென்னையில் நடைபெற்று வருகிறது.

    ஆண்டுதோறும் செப்டம்பர் 15-ந்தேதி முன்னாள் முதலமைச்சர் அண்ணா பிறந்த தினம், செப்டம்பர் 17-ந்தேதி தந்தை பெரியார் பிறந்த நாள் மற்றும் தி.மு.க. தொடங்கப்பட்ட நாளாகும். இந்த மூன்றையும் இணைத்து முப்பெரும் விழா தி.மு.க. சார்பில் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.

    இந்தாண்டு, தி.மு.க. தொடங்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி பவளவிழா ஆண்டாக கொண்டாடப்படுகிறது. எனவே, தி.மு.க. பவள விழா மற்றும் முப்பெரும் விழா சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.

    விழாவில் பெரியார், அண்ணா, கருணாநிதி உள்ளிட்டோர் பெயர்களிலான விருதுகள், கட்சியில் சிறப்பாக செயல்பட்டோருக்கான பரிசுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி உரையாற்றுகிறார்.

    திமுக முப்பெரும் விழாவில் இருபெரும் நாற்காலிகள் போடப்பட்டுள்ளன. அதில் ஒரு நார்காலியில் AI மூலம் கலைஞர் அமர்ந்து பேசுவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றொரு நாற்காலியில் அமர்வார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விசேஷ ஏற்பாட்டால் திமுக தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    • புரட்டுக் கதைகளுக்கும் - வறட்டு வாதங்களுக்கும் வளைந்து கொடுக்காதீர்கள்.
    • இன்று உலகம் முழுவதும் தமிழர் உயர்ந்த நிலைகளில் இருப்பதற்கு, தந்தை பெரியாரின் சிந்தனையும் உழைப்புமே அடித்தளம்!

    சென்னை:

    திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    புரட்டுக் கதைகளுக்கும் - வறட்டு வாதங்களுக்கும் வளைந்து கொடுக்காதீர்கள். எல்லாவற்றுக்கும் மேலானது சுயமரியாதை என இனமான உணர்வூட்டி நிமிர்நடை போட வைத்த பகுத்தறிவுப் பகலவனுக்குப் புரட்சி வணக்கம்!

    இன்று உலகம் முழுவதும் தமிழர் உயர்ந்த நிலைகளில் இருப்பதற்கு, தந்தை பெரியாரின் சிந்தனையும் உழைப்புமே அடித்தளம்!

    ஆயிரமாண்டு மடமையைப் பொசுக்கிய அவரது அறிவுத்தீதான், நமது பாதைக்கான வெளிச்சம்! அந்த வெளிச்சத்தில் சமத்துவ உலகத்தை நிறுவுவதே நமது தலையாய பணி! என்று தெரிவித்துள்ளார்.

    • தி.மு.க. தொடங்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி பவளவிழா ஆண்டாக கொண்டாடப்படுகிறது.
    • பவள விழா ஆண்டில் புதிதாக மு.க. ஸ்டாலின் பெயரிலும் விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.

    சென்னை:

    தி.மு.க. பவள விழா மற்றும் முப்பெரும் விழா இன்று சென்னையில் நடைபெறுகிறது.

    விழாவில் பெரியார், அண்ணா, கருணாநிதி உள்ளிட்டோர் பெயர்களிலான விருதுகள், கட்சியில் சிறப்பாக செயல்பட்டோருக்கான பரிசுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி உரையாற்றுகிறார்.

    ஆண்டுதோறும் செப்டம்பர் 15-ந்தேதி முன்னாள் முதலமைச்சர் அண்ணா பிறந்த தினம், செப்டம்பர் 17-ந்தேதி தந்தை பெரியார் பிறந்த நாள் மற்றும் தி.மு.க. தொடங்கப்பட்ட நாளாகும். இந்த மூன்றையும் இணைத்து முப்பெரும் விழா தி.மு.க. சார்பில் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.

    இந்தாண்டு, தி.மு.க. தொடங்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி பவளவிழா ஆண்டாக கொண்டாடப்படுகிறது. எனவே, தி.மு.க. பவள விழா மற்றும் முப்பெரும் விழா சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.

    தென்சென்னை மாவட்ட தி.மு.க. சார்பில் மாலை 5 மணிக்கு நடைபெறும் விழாவுக்கு தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமை தாங்குகிறார். இவ்விழாவில் பெரியார் விருதை பாப்பம்மாளுக்கும் அண்ணா விருது-அறந்தாங்கி மிசா ராமநாதனுக்கும் கலைஞர் விருது-ஜெகத் ரட்சகனுக்கும் பாவேந்தர் விருது-கவிஞர் தமிழ்தாசனுக்கும், பேராசிரியர் விருது-வி.பி.ராஜனுக்கும் ஸ்டாலின் வழங்குகிறார்.


    இதேபோல் பவள விழா ஆண்டில் புதிதாக மு.க. ஸ்டாலின் பெயரிலும் விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த விருதை முதல்வரிடம் இருந்து எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் பெறுகிறார்.

    இதுதவிர, கட்சியில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் பண முடிப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார். அந்த வகையில், ஒன்றியம், நகரம், பகுதி, பேரூர் ஆகியவற்றில் சிறப்பாக செயல்பட்டு வரும் கட்சி நிர்வாகிகளுக்கு பண முடிப்பு வழங்கப்படுகிறது. மண்டல அளவில் 4 பேர் வீதம் 16 பேருக்கு இந்த பண முடிப்பு வழங்கப்படுகிறது. விருது மற்றும் பணமுடிப்பை வழங்கியபின் ஸ்டாலின் உரையாற்றுகிறார்.

    விழாவில், துணை பொதுச்செயலாளர்கள் க.பொன்முடி, ஐ.பெரிய சாமி, ஆ.ராசா, கனிமொழி, அந்தியூர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர் கே.என்.நேரு ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர். தென் சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் மா.சுப்பிமணியன் வரவேற்புரையாற்றுகிறார்.

    இந்த விழாவில், தமிழகம் முழுவதில் இருந்தும் தொண்டர்கள் பங்கேற்கும் வகையில், முதலமைச்சர் ஸ்டாலின் அழைப்பு விடுத்து உள்ளார். இதையடுத்து, நேற்று மாலை முதலே தொண்டர்கள் வரத் தொடங்கி விட்டனர்.

    இதையடுத்து, ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் அமரும் வகையில், பிரமாண்ட அரங்கம் அமைக்கப்பட்டு உள்ளது. அனைவரும் விழாவை முழுமையாக காணும் வகையில் பெரிய அளவிலான டிஜிட்டல் திரைகளும் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ளன.

    மேலும், 75 அடி உயர கொடிக் கம்பத்தில் கட்சி கொடியை ஸ்டாலின் ஏற்றுகிறார். விழா நடைபெறும் வளாகத்தில் 75 ஆண்டு தி.மு.க. வரலாற்றை விளக்கும் 100 அடிகட் அவுட் வைக்கப்பட்டுள்ளது. இது தவிர, சென்னை அண்ணா அறிவாலயம், அன்பகம் ஆகிய தி.மு.க. அலுவலகங்கள் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. பொன்விழா இலச்சினை லேசர் ஒளி விளக்குகளால் ஒளிர்கின்றன.

    ×