search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சபாகரீம்"

    • டோனி, விராட் கோலி போன்று வேறு எந்த இந்திய கேப்டனும் செய்யாதை ரோகித்சர்மா செய்து காட்டியுள்ளார்.
    • ரோகித் சர்மா முதல் பந்தில் இருந்தே வெற்றிக்காக அதிரடியாக விளையாட வேண்டும் என்ற அணுகுமுறையை பின்பற்றுகிறார்.

    புதுடெல்லி:

    கான்பூர் டெஸ்ட் போட்டியில் முதல் நாள் ஆட்டம் மழையால் சில மணி நேரங்களே நடந்தது. 2-வது மற்றும் 3-வது நாள் போட்டி மழையால் ரத்தானது. இதனால் இந்த டெஸ்ட் 'டிரா'வை நோக்கி செல்வது தெளிவாக தெரிந்தது.

    ஆனால் நேற்றைய 4-வது நாளில் இந்திய அணி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 20 ஓவர் போட்டியை போல ஆடியது. கடைசி நாளில் முடிவு ஏற்பட்டு விட வேண்டும் என்ற நோக்கத்தில் விளையாடியது.

    கேப்டன் ரோகித்சர்மா 2 சிக்சர்களுடன் 2-வது ஓவரில் அதிரடியை வெளிப்படுத்தினார். அவரும் ஜெய்ஷ்வாலும் 23 பந்தில் 55 ரன் தொடக்க விக்கெட்டும் எடுத்தனர். ரோகித் சர்மா 11 பந்தில் 3 சிக்சருடன் 23 ரன் எடுத்தார். ஜெய்ஷ்வால், கே.எல். ராகுல் ஆகியோரும் மிகவும் அதிரடியாக விளையாடினார்கள். டெஸ்ட் போட்டிக்கு உயிர் கொடுத்த இந்த அதிரடி ஆட்டம் அனைவரையும் கவர்ந்தது.

    ரோகித்சர்மாவின் இந்த அணுகுமுறையை முன்னாள் கிரிக்கெட் கீப்பரும், முன்னாள் தேர்வாளருமான சபாகரீம் பாராட்டி உள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    டோனி, விராட் கோலி போன்று வேறு எந்த இந்திய கேப்டனும் செய்யாதை ரோகித்சர்மா செய்து காட்டியுள்ளார். அவரது அணுகுமுறை பாராட்டத்தக்கது. அவரது குணாதியத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

    ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவர் உலகக்கோப்பையை தொடர்ந்து அவர் டெஸ்டிலும் தற்போது மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதை நாம் பார்க்கிறோம். இதுதான் ரோகித் சர்மாவின் தலைமையில் ஏற்பட்டுள்ள புத்துணர்ச்சியான விஷயமாகும்.

    கடந்த காலத்தில் இருந்த கேப்டன்கள் நல்ல நிலையில் இருக்கும்போது தான் வெற்றியை நோக்கி செல்வோம் என்ற மனநிலையை கொண்டிருந்தனர். முதல் 6 ஓவர்கள் நேரம் எடுத்து பின்னர் அதிரடி காட்டுவோம் என்ற அணுகு முறையை பின்பற்றினர். ஆனால் ரோகித் சர்மா முதல் பந்தில் இருந்தே வெற்றிக்காக அதிரடியாக விளையாட வேண்டும் என்ற அணுகுமுறையை பின்பற்றுகிறார்.

    இவ்வாறு சபாகரீம் கூறியுள்ளார்.

    ×