search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மகளிர் 20 ஓவர் உலககோப்பை"

    • மொத்தம் 23 ஆட்டங்கள் நடக்கிறது.
    • 20 ஓவர் உலக கோப்பையில் 10 நாடுகள் பங்கேற்கின்றன.

    ஷார்ஜா:

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ( ஐ.சி.சி.) மகளிர் 20 ஓவர் உலககோப்பை போட்டியை 2009-ம் ஆண்டு அறிமுகம் செய்தது.

    இங்கிலாந்தில் நடந்த இந்த போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இங்கிலாந்து சாம்பியன் பட்டம் வென்றது. கடைசியாக கடந்த ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடந்த போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.

    2 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்தப் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 8 இருபது ஓவர் உலக கோப்பை நடை பெற்றுள்ளது.

    ஆஸ்திரேலியா அதிகபட்சமாக 6 தடவை (2010, 2012, 2014, 2018, 2020, 2023) உலககோப் பையை வென் றுள்ளது. இங்கிலாந்து (2009), வெஸ்ட் இண்டீஸ் (2016) அணிகள் தலா ஒரு முறை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி உள்ளன.

    9-வது மகளிர் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. வருகிற 20-ந் தேதி வரை துபாய், ஷார்ஜாவில் போட்டிகள் நடைபெறுகிறது.

    வங்காள தேசத்தில் நடைபெற இருந்த போட்டி அங்கு ஏற்பட்ட அரசியல் சூழல் காரணமாக ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு மாற்றப்பட்டது.

    20 ஓவர் உலக கோப்பையில் 10 நாடுகள் பங்கேற்கின்றன. அவை 2 பிரிக்கப் படுள்ளன. அதன் விவரம்:

    ஏ பிரிவு : நடப்பு சாம்பி யன் ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை.

    பி பிரிவு: இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேசம், ஸ்காட்லாந்து.

    ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும் 'லீக்' முடிவில் இரண்டு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும் 15-ந் தேதியுடன் லீக் ஆட்டங்கள் முடிகிறது.

    முதல் அரை இறுதி அக்டோபர் 17-ந் தேதியும், 2-வது அரை இறுதி 18-ந் தேதியும், இறுதிப்போட்டி அக்டோபர் 20-ந் தேதியும் நடக்கிறது. மொத்தம் 23 ஆட்டங்கள் நடக்கிறது.

    ஸ்மிருதி மந்தனா தலைமையில் இந்திய அணி இந்த போட்டியில் கலந்து கொள்கிறது. இந்திய அணி இதுவரை உலக கோப்பையை வென்ற தில்லை. 2020-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவிடம் இறுதிப்போட்டியில் தோற்றது சாம்பியன் பட்டத்தை இழந்தது.

    முதல் முறையாக 20 ஓவர் உலக கோப்பையை வெல்லுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் நியூசிலாந்தை 4-ந்தேதி எதிர்கொள்கிறது. இரவு 7.30 மணிக்கு துபாயில் இந்த போட்டி நடக்கிறது. 6-ந் தேதி பாகிஸ்தானுடனும் (மாலை 3.30), 9-ந் தேதி இலங்கையுடனும் (இரவு 7.30), 13-ந் தேதி ஆஸ்திரேலியாவுடனும் (இரவு 7.30) மோதுகிறது.

    நாளை நடைபெறும் தொடக்க ஆட்டங்களில் வங்காளதேசம்-ஸ்காட் லாந்து (மாலை 3.30) பாகிஸ்தான்-இலங்கை (இரவு 7.30) அணிகள் மோதுகின்றன.

    ×