search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிருஷ்ணா நீர்வரத்து அதிகரிப்பு"

    • அணைகளில் இருந்து உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.
    • இன்று காலை 8 மணி அளவில் நீர்மட்டம் 92.58 அடியாக குறைந்தது.

    மேட்டூர்:

    கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பொழிந்து அங்குள்ள கிருஷ்ணராஜசாகர், கபினி ஆகிய அணைகளில் தண்ணீர் போதுமான அளவு நிரம்பிய பிறகே உபரி நீர் தமிழகத்திற்கு திறந்து விடப்படுகிறது.

    இந்த உபரி நீர் காவிரி ஆறு வழியாக தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணைக்கு வந்தடைகிறது.

    தற்போது காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இதனால் கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளில் இருந்து உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

    இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு நேற்று வினாடிக்கு 12,713 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை அதிகரித்து வினாடிக்கு 15,710 கன அடி வீதம் தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது.

    தொடர்ந்து மேட்டூர் அணையில் இருந்து தமிழக காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 15 ஆயிரம் கன அடியும், கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்துக்கு 800 கன அடி நீரும் காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    நீர் வரத்தை விட மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு அதிகமாக உள்ளதால் இன்று காலை 8 மணி அளவில் நீர்மட்டம் 92.58 அடியாக குறைந்தது. நீர் இருப்பு 55.54 டி.எம்.சி. உள்ளது.

    ×