என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "2026 காமன் வெல்த் விளையாட்டு"
- கடந்த முறையும் துப்பாக்கி சுடுதல் இடம் பெறவில்லை. தற்போதும் சேர்க்கப்படவில்லை.
- செலவை கட்டுப்படுத்தும் விதமாக டேபிள் டென்னிஸ், ஸ்குவாஷ், டிரையத்லான் ஆகிய போட்டிகளும் நீக்கப்பட்டுள்ளன.
லண்டன்:
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி 1911-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்தப் போட்டி நடைபெற்று வருகிறது.
கடைசியாக காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காமில் 2022-ம் ஆண்டு நடைபெற்றது.
2026-ம் ஆண்டுக்கான காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோ நகரில் ஜூலை 23-ந் தேதி முதல் ஆகஸ்டு 2-ந் தேதி வரை நடக்கிறது. 12 ஆண்டுகளுக்கு பிறகு அங்கு இந்தப் போட்டி நடக்கிறது. கடைசியாக 2014-ல் நடைபெற்றது.
23-வது காமன்வெல்த் விளையாட்டான இதில் இடம் பெறும் போட்டிகள் குறித்து காமன்வெல்த் விளையாட்டு கூட்டமைப்பு இன்று அறிவித்தது.
ஹாக்கி, துப்பாக்கி சுடுதல், மல்யுத்தம், பேட்மிண்டன், கிரிக்கெட் ஆகிய விளையாட்டுகள் நீக்கப்பட்டுள்ளன. கடந்த முறையும் துப்பாக்கி சுடுதல் இடம் பெறவில்லை. தற்போதும் சேர்க்கப்படவில்லை.
செலவை கட்டுப்படுத்தும் விதமாக டேபிள் டென்னிஸ், ஸ்குவாஷ், டிரையத்லான் ஆகிய போட்டிகளும் நீக்கப்பட்டுள்ளன. கடந்த முறை இடம் பெற்ற போட்டியில் 7 விளையாட்டுகள் நீக்கப்பட்டுள்ளன.
இந்த விளையாட்டுகள் நீக்கப்பட்டது இந்தியாவுக்கு மிகப்பெரிய பாதிப்பாகும். ஏனென்றால் இந்த விளையாட்டுகளில் இந்தியாவுக்கு பதக்க வாய்ப்பு இருக்கிறது. கடந்த முறை இந்தியா பதக்கம் வென்ற 6 விளையாட்டுகளும் தற்போது நீக்கப்பட்டு உள்ளன.
காமன்வெல்த் விளையாட்டு கூட்டமைப்பின் இந்த முடிவு இந்தியாவுக்கு மிகப்பெரிய பின்னடைவாகும்.
2022 காமன்வெல்த் விளையாட்டில் இந்தியா 22 தங்கம், 16 வெள்ளி, 23 வெண்கலம் ஆக மொத்தம் 61 பதக்கம் பெற்று பதக்கப் பட்டியலில் 4-வது இடத்தை பிடித்தது.
நீக்கப்பட்ட போட்டிகளில் இருந்து இந்தியாவுக்கு 30 பதக்கங்கள் 2022-ல் கிடைத்துள்ளது. 2022-ல் பங்கேற்ற 210 இந்திய விளையாட்டு வீரர் வீராங்கனைகளில் 98 பேர் நீக்கப்பட்ட விளையாட்டுகளில் பங்கேற்றவர்கள். இதனால் 2026 காமன்வெல்த் போட்டியில் இவர்களின் நிலை கேள்விகுறியாகி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்