என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சான்ட்னெர்"
- ஜடேஜா 38 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
- வாஷிங்டன் சுந்தர் 18 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி புனேயில் நடைபெற்று வருகிறது. நேற்று தொடங்கிய போட்டியில் நியூசிலாந்து டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் கான்வே (76), ரச்சின் ரவீந்திரா (65) சிறப்பாக விளையாடினர். வாஷிங்டன் சுந்தர் 7 விக்கெட் வீழ்த்த 259 ரன்னில் ஆல்அவுட் ஆனது.
பின்னர் இந்தியா முதல் இன்னிங்சை தொடங்கியது. கேப்டன் ரோகித் சர்மா ரன்ஏதும் எடுக்காமல் சவுத்தி பந்தில் டக்அவுட் ஆனார். அதோடு இந்தியா முதல் நாள் ஆட்ட முடிவில் 11 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 16 ரன்கள் எடுத்திருந்தது. ஜெய்ஸ்வால் 6 ரன்களுடனும், சுப்மன் கில் 10 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ஜெய்ஸ்வால்- சுப்மன் கில் ஜோடி நிதானமாக விளையாடியது. அணியில் ஸ்கோர் 21.3 ஓவரில் 50 ரன்னாக இருக்கும்போது சுப்மன் கில் 72 பந்தில் 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அடுத்து விராட் கோலி களம் இறங்கினார். இவர் 9 பந்துகளில் 1 ரன் எடுத்து சான்ட்னெர் பந்தில் க்ளீன் போல்டாகி ஏமாற்றம் அளித்தார். அதன்பின் இந்திய விக்கெட்டுகள் தொடர்ந்து விழுந்தது. ஜெய்ஸ்வால் 60 பந்தில் 30 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
ரிஷப் பண்ட் 18 ரன்களும், சர்பராஸ் கான் 11 ரன்களும், அஸ்வின் 4 ரன்களும் எடுத்து வெளியேறினர். சான்ட்னெர் 4 விக்கெட் வீழ்த்தினார். கிளென் பிளிப்ஸ் ரிஷப் பண்ட், ஜெய்ஸ்வால் ஆகியோரை வீழ்த்தினார். இந்தியா 103 ரன்கள் எடுப்பதற்குள் ஏழு விக்கெட்டுகளை இழந்து திணறியது
இன்றைய 2-வது நாள் மதிய உணவு இடைவேளை வரை இந்தியா 7 விக்கெட் இழப்பிற்கு 107 ரன்கள் எடுத்திருந்தது. ஜடேஜா 11 ரன்னுடனும், வாஷிங்டன் சுந்தர் 2 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
உணவு இடைவேளை முடிந்து மீண்டும் ஆட்டம் தொடங்கியது. ஜடேஜா 38 ரன்கள் எடுத்த நிலையில் சான்ட்னெர் பந்தில் ஆட்டமிழந்தார். வாஷிங்டன் ஒரு பக்கம் நிற்க மறுபக்கம் ஆகாஷ் தீப் 6 ரன்னிலும், பும்ரா டக்அவுட் ஆக இந்தியா 45.3 ஓவரில் 156 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. வாஷிங்டன் சுந்தநர் 18 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
நியூசிலாந்து அணி சார்பில் சான்ட்னெர் 7 விக்கெட்டும், பிளிப்ஸ் 2 விக்கெட்டும், சவுத்தி 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
103 ரன்கள் முன்னிலையுடன் நியூசிலாந்து 2-வது இன்னிங்சில் விளையாடி வருகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்