search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரதமர் மோடி வாழ்த்து"

    • தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
    • அரசியல் கட்சி தலைவர்களும், திரையுலகினரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

    நாடு முழுவதும் இன்று தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    பண்டிகையை தொடர்ந்து மக்களுக்கு அரசியல் கட்சி தலைவர்களும், திரையுலகினரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    நாட்டு மக்கள் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள். இந்த தெய்வீக தீபத் திருநாளில், அனைவரும் ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும், வளமாகவும் வாழ வாழ்த்துகிறேன்.

    மகாலட்சுமி மற்றும் ஸ்ரீ விநாயகப் பெருமானின் ஆசியுடன் அனைவரும் செழிக்கட்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ×