search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முதலமைச்சர் முக ஸ்டாலின்"

    • மருத்துவர் பாலாஜி என்பவரை சிகிச்சை பெற்று வந்த பெண்ணின் மகன் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    • மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்திய விக்னேஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.

    சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவர் பாலாஜி என்பவரை சிகிச்சை பெற்று வந்த பெண்ணின் மகன் விக்னேஷ் கத்தியால் குத்திய சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த சம்பவத்தில் ஈடுபட்ட விக்னேஷ் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே, விக்னேஷ் கத்தியால் தாக்கியதில், தலை, கழுத்த, காது, முதுகு உள்ளிட்ட இடங்களில் மருத்துவர் படுகாயம் அடைந்ததை அடுத்து, அவருக்கு அங்கேயே சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    மருத்துவரை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.

    இந்நிலையில் சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மருத்துவர் பாலாஜியிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக நலம் விசாரித்துள்ளார்.

    அப்போது, மருத்துவர் பாலாஜியின் உடல்நலம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்.

    • இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்திட ஆணையிட்டுள்ளேன்.
    • பணியின்போது அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்தல் நம் அனைவரின் கடமையாகும்.

    கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவரை நோயாளியின் மகன் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இது குறித்து முதலமைச்சர் முக ஸ்டாலின் கூறியதாவது:-

    கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் பாலாஜியை நோயாளியின் குடும்ப உறுப்பினர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது.

    இக்கொடுஞ்செயலில் ஈடுபட்ட நபர் உடனடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். மருத்துவருக்கு தேவையான அனைத்து சிகிச்சைகளை அளித்திடவும், இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்திடவும் ஆணையிட்டுள்ளேன்.

    அரசு மருத்துவமனைகளை நாடி வரும் நோயாளிகளுக்கு நேரம் - காலம் பார்க்காமல் உரிய சிகிச்சை அளிப்பதில் நமது அரசு மருத்துவர்களின் தன்னலமற்ற பணி அளப்பரியது. இப்பணியின்போது அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்தல் நம் அனைவரின் கடமையாகும்.

    இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நிகழாமல் தடுத்திடுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ளும்.

    • அலுவலகக் கட்டிடங்கள் கட்டும் திட்டம் 2008-ம் ஆண்டு கலைஞர் தலைமையிலான அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது.
    • அதன்படி, தற்போது வரை 312 புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டிடங்கள் கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களுக்கு வருகை தரும் பொதுமக்களின் வசதிக்காகவும், ஊராட்சி ஒன்றியப் பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் நல்ல காற்றோட்டமான அலுவலக சூழலில் பணியாற்ற ஏதுவாகவும், பழைய பழுதடைந்த கட்டிடங்களுக்குப் பதிலாக புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டிடங்கள் கட்டும் திட்டம் 2008-ஆம் ஆண்டு கலைஞர் தலைமையிலான அரசால் முதன் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது.

    அதன்படி, தற்போது வரை 312 புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டிடங்கள் கட்ட அனுமதி வழங்கப்பட்டு, அதில் 265 கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.

    இதில் ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் திட்டக்கூறு நிதியின் மூலம் கோவை பெரியநாயக்கன்பாளையம், மங்களுர் மற்றும் பண்ருட்டி, ஈரோடு அம்மாபேட்டை, தோவாளை, குன்றாண்டார் கோவில், ஆலங்குளம், மதுக்கூர் மற்றும் சேதுபாவாசத்திரம், சின்னமனூர், கருங்குளம், புள்ளம்பாடி, பொங்கலூர், கானை, மேல்மலையனூர், முகையூர் மற்றும் வானூர் ஆகிய இடங்களில் 64 கோடியே 53 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள 17 ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டிடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

    • 7 சுற்றுகள் முடிவில் மாஸ்டர்ஸ் பிரிவில் தமிழக வீரர் அரவிந்த சிதம்பரம் சாம்பியன் பட்டம் வென்றார்.
    • அரவிந்த் சிதம்பரத்துக்கு பரிசுத் தொகையாக ரூ.15 லட்சமும், பிரணவுக்கு பரிசுத் தொகையாக ரூ.6 லட்சமும் வழங்கப்படுகிறது.

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் 2-வது சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடந்தது.

    இதில், 7 சுற்றுகள் முடிவில் மாஸ்டர்ஸ் பிரிவில் தமிழக வீரர் அரவிந்த சிதம்பரம் சாம்பியன் பட்டம் வென்றார்.

    இதேபோல், சேலஞ்சர்ஸ் பிரிவில் பிரணவ் மகுடம் சூடினார். அரவிந்த் சிதம்பரத்துக்கு பரிசுத் தொகையாக ரூ.15 லட்சமும், பிரணவுக்கு பரிசுத் தொகையாக ரூ.6 லட்சமும் வழங்கப்படுகிறது.

    இந்நிலையில், சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற அரவிந்த் சிதம்பரத்திற்கும், சேலஞ்சர்ஸ் பிரிவில் மகுடம் சூடிய பிரணவ் ஆகியோருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து முதலமைச்சர் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில், தனது வியூகப் புத்திசாலித்தனத்துடன், குறிப்பாக இறுதிச் சுற்றில், தீர்க்கமானதாக நிரூபித்த கிராண்ட் மாஸ்டர் அரவிந்த் சிதம்பரத்திற்கு அவரது குறிப்பிடத்தக்க பட்டம் வென்றதற்கு வாழ்த்துகள்.

    கிராண்ட் மாஸ்டர் பிரணவ்-க்கு கைதட்டல், சேலஞ்சர்ஸ் பிரிவில் அவரது சிறப்பான செயல்திறன் எதிர்காலத்திற்கான மகத்தான நம்பிக்கையை காட்டுகிறது.

    உலக செஸ் அரங்கில் சென்னையின் அந்தஸ்தை மேலும் உயர்த்தும் நிகழ்விற்காக தமிழக விளையாட்டுத் துறைக்கும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும் பாராட்டுகள்

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 

    • தங்க நகை தொழில் போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாத காரணத்தால் தொழில் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது.
    • தங்க நகை தொழில்துறையினர் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

    தொழில் நகரான கோவை தங்க நகை தொழிலிலும் புகழ்பெற்று விளங்குகிறது.

    தேசிய அளவில் தங்க நகை தயாரிப்பில் மும்பை, கொல்கத்தாவுக்கு அடுத்து 3-வது இடத்தில் கோவை மாவட்டம் உள்ளது. கோவையில் 25 ஆயிரம் பட்டறைகள், 45 ஆயிரம் பொற்கொல்லர்கள், முதன்மை நகை தயாரிப்பாளர்கள் என இந்த தொழிலில் நேரடியாக ஒரு லட்சம் பேர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர்.

    கோவையில் தயாரிக்கப்படும் தங்க நகைகள் சிங்கப்பூர், மலேசியா, லண்டன், அமெரிக்கா உள்ளிட்ட பல வெளிநாடுகளிலும் அதிகளவு விற்பனை செய்யப்படுகின்றன.

    வங்கதேசம், இலங்கை போன்ற நாடுகளுக்கு நேரடியாக ஏற்றுமதி செய்தால் அதிக வரி விதிக்கப்படும் என்பதால், துபாய் மூலம் அதிக ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

    இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த இந்த தொழில் போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாத காரணத்தால் தொழில் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் சமீபத்தில் கோவையில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், குறிச்சி தொழிற்பேட்டையில் ரூ.126 கோடி மதிப்பில் தங்க நகை தொழில் பூங்கா அமைக்கப்படும் என அறிவித்தார். இந்த அறிவிப்பானது தங்க நகை தொழில்துறையினர் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

    இதுகுறித்து கோவை தங்க நகை தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் கூறியதாவது:-

    கோவை மாவட்டத்தில் வணிகர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் விற்பனை பிரிவுகளில் தினமும் 200 கிலோ எடையிலான தங்கம் வர்த்தகம் நடைபெறுகிறது.

    தமிழக முதலமைச்சரின் அறிவிப்பு இந்த தொழிலில் உள்ள அனைவருக்கும் மிகப்பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.

    தினமும் கோவை, பிற மாவட்டம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமானோர் தங்க நகை வர்த்தகம் தொடர்பான பணிகளுக்கு கோவை வந்து செல்கிறார்கள். இவ்வாறு வருவோருக்கு குடிநீர், ஓய்வறை, கழிப்பிடம் என அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளை தமிழக அரசு சார்பில் ஏற்படுத்தி தர வேண்டும்.

    கோவை குறிச்சியில் அமைக்கப்படும் தங்க நகை தொழில் பூங்கா திட்டத்தால் இந்த தொழில் மேலும் சிறப்பான வளர்ச்சியை பெறும். தினசரி வர்த்தகம் 250 கிலோவாக உயரும்.

    வேலை வாய்ப்பு 20 சதவீதம் அதிகரிக்கும். கோவைக்கு தினமும் வர்த்தகம் செய்ய வருவோர் எண்ணிக்கை அதிகரிக்கும். தொழில் வளர்ச்சிக்கு ஏற்ப பூங்கா செயல்பட தொடங்கிய பின் வளாகத்தில் வாங்குவோர் விற்போர் கண்காட்சி நடத்த தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    இதனால் தேசிய அளவில் மட்டுமின்றி துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் வர்த்தகர்கள் பலர் கோவைக்கு அதிக எண்ணிக்கையில் வந்து தங்க வணிகம் மேற்கொள்வார்கள்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • 2005 நவம்பர் முதல் இதுவரை வழங்கிய நிதி ரூ.5 கோடியே 11 லட்சத்து 90 ஆயிரம்.
    • 8 பேருக்கு தலா ரூபாய் 25 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.2 லட்சம் இன்று (11-ந்தேதி) மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

    சென்னை:

    கலைஞர் கருணாநிதி அறக்கட்டளைக்காக, தலைவர் கலைஞர் தனது சொந்த பொறுப்பில் அளித்த ரூ.5 கோடி ரூபாயினை வங்கியில் வைப்பு நிதியாக போடப்பட்டு, அதில் கிடைக்கப்பெறும் வட்டித் தொகையினைக் கொண்டு, மாதந்தோறும் ஏழை எளிய நலிந்தோர்க்கு உதவித் தொகையாக 2005 நவம்பர் மாதம் முதல் 2007 ஜனவரி மாதம் வரை வழங்கப்பட்டு வருகிறது.

    2005 நவம்பர் முதல் இதுவரை வழங்கிய நிதி ரூ.5 கோடியே 11 லட்சத்து 90 ஆயிரம். இந்த மாதம் நலிந்தோர் மற்றும் மருத்துவ உதவி நிதியாக மொத்தம் 8 பேருக்கு தலா ரூபாய் 25 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.2 லட்சம் இன்று (11-ந்தேதி) மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

    ×