search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கன்னியாகுமரி மீனவர்கள்"

    • விபத்தில், 11 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில் இருவரை தேடும் பணி நடந்து வருகிறது.
    • மீனவரை மீட்க நடவடிக்கை எடுக்கும்படி மத்திய அரசுக்கு காங்கிரஸ் எம்.பி விஜய் வசந்த் கோரிக்கை வைத்துள்ளார்.

    கோவா கடற்பகுதியில் இந்திய கடற்படை நீர்மூழ்கிக் கப்பல், மீனவர்கள் படகின் மீது மோதி விபத்து ஏற்பட்டது.

    13 மீனவர்களுடன் வந்த மர்தோமா [Marthoma] படகின் மீது ஸ்கார்பீன்- கிளாஸ் [Scorpene-class] கடற்படை நீர்மூழ்கியானது மோதியது.

    இந்த விபத்தில், 11 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில் இருவரை தேடும் பணி நடந்து வருகிறது.

    இதில், மாயமான கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த மீனவரை மீட்க நடவடிக்கை எடுக்கும்படி மத்திய அரசுக்கு காங்கிரஸ் எம்.பி விஜய் வசந்த் கோரிக்கை வைத்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    கடலில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டிருந்தபோது படகு கவிழ்ந்து கடலில் காணாமல் போன கன்னியாகுமரி மாவட்டம் கொட்டில்பாடு பகுதியை சேர்ந்த ஜெனிஸ்மோன் என்ற மீனவ சகோதரரை மீட்க கோரி இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் மற்றும் இந்திய கப்பற்படை உயரதிகாரிக்கு கடிதம் எழுதியுள்ளேன்.

    மேலும், கப்பற்படை அதிகாரிகளை தொடர்பு கொண்டு மீனவர்களை மீட்க ஆவன செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளேன்.

    ஆழ்கடலில் மீன் பிடிக்கச் சென்றபோது இந்திய கடற்படைக்கு சொந்தமான நீர்மூழ்கி கப்பலுடன் ஏற்பட்ட விபத்தில் படகு கவிழ்ந்து மீன்பிடி படத்திற்குள் இருந்த இரண்டு மீனவர்களை காப்பாற்ற முடியாமல் போனது. இவர்கள் படகுக்குள் சிக்கி மூழ்கி இருப்பார்கள் என சந்தேகம் எழுந்துள்ளது.

    இந்திய கப்பற்படையின் பயிற்சி பெற்ற வீரர்களால் இவர்களை கடலின் அடி தளத்திற்கு சென்று தேட முடியும். ஆகவே இந்திய கப்பற்படை சிறப்பு வீரர்களை இதற்காக அனுப்ப வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ×