என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 94331
நீங்கள் தேடியது "slug 94331"
தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல்நலம் பாதிக்கப்பட்டு இருக்கும் தகவல் வெளியானதில் இருந்து சமூக வலைதளங்களில் லட்சக்கணக்கானவர்கள் தங்கள் கருத்துக்களை பதிவுகளாக வெளியிட்டு வருகிறார்கள். #Karunanidhi
சென்னை:
தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல்நலம் பாதிக்கப்பட்டு இருக்கும் தகவல் வெளியானதில் இருந்து சமூக வலைதளங்களில் லட்சக்கணக்கானவர்கள் தங்கள் கருத்துக்களை பதிவுகளாக வெளியிட்டு வருகிறார்கள்.
நேற்று இரவு 10 மணிக்கு கருணாநிதி பற்றிய சமூக வலைத்தள பதிவுகள் அதிகரித்தன.
பெரும்பாலானவர்கள் கருணாநிதி விரைவில் நலம் பெற தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தனர். பலர் கருணாநிதியின் தனித்துவத்தை, திறமையை தங்களது பதிவுகளில் சுட்டிக்காட்டி இருந்தனர்.
கருணாநிதி புகழை சிறப்பிக்கும் வகையில் சிலரது டுவிட்டர் பதிவுகள் இருந்தன. பிரபலங்களும் டுவிட்டர் மூலம் கருணாநிதி நலம் பெற தகவல்களை பதிவிட்டுள்ளனர்.
தமிழ்நாட்டவர்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் வாழும் தமிழர்களும் கருணாநிதி நலம் பெற இறைவனிடம் பிரார்த்திப்பதாக குறிப்பிட்டுள்ளனர். குறிப்பாக ஈழத் தமிழர்கள் கருணாநிதியை புகழ்ந்து உருக்கத்துடன் பதிவு செய்துள்ளனர்.
கனடா, அமெரிக்காவில் உள்ளவர்களும் பெரும் அளவில் கருணாநிதி நலம் பெற பிரார்த்திப்பதாக கூறி உள்ளனர். இதன் காரணமாக கருணாநிதி உடல்நலம் பற்றிய தகவல் புதிய டிரெண்டிங்காக மாறி உள்ளது. #Karunanidhi

பா.ஜ.க. மீண்டும் ஆட்சியமைத்தால் இந்தியா இந்து பாகிஸ்தானாக மாறிவிடும் என பேசிய சசி தரூருக்கு எதிராக கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. #HinduPakistan #ShashiTharoor
கொல்கத்தா:
பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் இந்தியா, இந்து பாகிஸ்தானாக மாறிவிடும் என்றும், இதற்கான நடவடிக்கைகளை பாரதிய ஜனதா கட்சி செய்து வருவதாகவும் காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் பேசியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அவரது கருத்திற்கு பா.ஜ.க. கடும் கண்டனம் தெரிவித்தது. இதையடுத்து சசி தரூரை காங்கிரஸ் கண்டித்தது. பொது மேடைகளில் பேசும்போது கவனத்துடன் பேச வேண்டும் என்றும் அறிவுறுத்தியது. ஆனால் தன் கருத்தில் இருந்து பின்வாங்காத சசி தரூர், மன்னிப்பு கேட்கவும் மறுத்துவிட்டார்.
இந்நிலையில், சசி தரூரின் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்கு எதிராக கொல்கத்தாவைச் சேர்ந்த வழக்கறிஞர் சுமீத் சவுத்ரி, கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர் தனது மனுவில், சசி தரூரின் கருத்துக்கள் மத உணர்வுகளை புண்படுத்துவதாகவும், அரசியலமைப்பை அவமதிப்பதாகவும் இருப்பதாக கூறியுள்ளார்.
இந்த வழக்கை இன்று விசாரித்த கொல்கத்தா உயர்நீதிமன்றம், சசி தரூருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. அதில், வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆகஸ்ட் 14-ம் தேதி ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. வழக்கமான சட்ட நடைமுறைகள் மட்டுமின்றி அவரது அதிகாரப்பூர்வ டுவிட்டர் மற்றும் பேஸ்புக் முகவரிகளுக்கும் சம்மனை அனுப்ப நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
இந்திய நீதித்துறை வரலாற்றில் டுவிட்டர் மூலம் சம்மன் அனுப்புவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. #HinduPakistan #ShashiTharoor

பன்னாட்டு அரசுகள் மற்றும் அரசியல்வாதிகளை குறிவைத்து தவறான தகவல்களை பரப்பிவந்த சுமார் 7 கோடி கணக்குகளை சமூக வலைத்தளமான டுவிட்டர் முடக்கியுள்ளது.
நியூயார்க்:
சமூக வலைத்தளமான டுவிட்டர் மூலம் பல நாடுகளை சேர்ந்த அரசுகள் மற்றும் அரசியல்வாதிகளை குறிவைத்து தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன. ‘ட்ரோல்’, ‘மீம்ஸ்’ என்ற போர்வையில் ஆபாசமான சித்தரிப்பும் செய்யப்படுகிறது.
இதுபோன்ற கருத்துகளும், சித்தரிப்பும் வெளிநாடுகளில் இருந்து அமெரிக்க அரசை தாக்கும் வகையில் அமைவதாக அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர்கள் சமீபத்தில் வருத்தம் தெரிவித்திருந்தனர்.
இது, உள்நாட்டு அரசியலுக்கு பாதகமாக இருப்பதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர். இதைதொடர்ந்து, சர்ச்சைக்குரியதும் பெரும்பாலானவர்களால் விரும்பத்தகாததுமான கருத்துகளை பதிவிடும் நபர்களின் கணக்குகளை முடக்க டுவிட்டர் நிறுவனம் சமீபத்தில் தீர்மானித்தது.
இதன் அடிப்படையில், தவறான தகவல்களை பரப்பும் கணக்குகளை கண்காணிக்கவும், முடக்கவும் அதிகமான நபர்கள் பணியமர்த்தப்பட்டனர்.
இதன் விளைவாக, கடந்த மே மற்றும் ஜூன் மாதத்தில் மட்டும் சுமார் 7 கோடி போலி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் பிரபல நாளிதழான வாஷிங்டன் போஸ்ட் இன்று வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிலவேளைகளில், ஒரே நாளில் பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. #Twittersuspends70millionaccounts #70millionaccounts

நெஞ்சிருக்கும்வரை, வெடி பட நாயகி பூனம் கவுர் போனில் வந்த மிரட்டலால் டுவிட்டரில் இருந்து விலகியதாக கூறப்படுகிறது. #PoonamKaur
சமூக வலைதளங்களால் நன்மை எவ்வளவோ அதே அளவு தீமையும் இருக்கிறது என்பதை உணர்த்தி உள்ளார் நடிகை பூனம் கவுர். நெஞ்சிருக்கும்வரை, வெடி, நாயகி உள்பட சில படங்களில் நாயகியாக நடித்தவர் பூனம் கவுர்.
தமிழில் குறைந்த படங்கள் நடித்திருந்தாலும் தெலுங்கில் பிரபலமான நடிகை. சமூக வலைதளங்களில் சுறுசுறுப்பாக இயங்கி வரும் இவர் திடீர் என்று “டுவிட்டரில் நான் உங்களை விட்டுச் செல்கிறேன். எப்போது திரும்பி வருவேன் எனத் தெரியாது’ என்று பதிவிட்டு வெளியேறியுள்ளார்.
சில தினங்களுக்கு முன் ஆபாச இணையதளம் ஒன்றில் பூனம் பற்றி தவறாக பதிவிட்டிருந்தனர். இதன் பின்னணியில் இயக்குனர் ஒருவர் இருப்பதாகக்கூறி அவரை திட்டி பதிவிட்டிருந்தார் பூனம். அந்த இயக்குனர் யார் என்பதைக் குறிப்பிடவில்லை. அதன் பின் பூனம் கவுர் சமூக வலைதளங்களிலும், போனிலும் மிரட்டப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.
அதனால் தான் டுவிட்டரில் இருந்து விலகியதாக கூறப்படுகிறது. இவரைப் போலவே தெலுங்கு முன்னணி கதாநாயகன் பவன் கல்யானின் முன்னாள் மனைவி ரேணு தேசாய் டுவிட்டரில் இருந்து சமீபத்தில் விலகினார். அவரும் மற்றொரு காரணத்துக்காக மிரட்டப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. #PoonamKaur

நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசனை டுவிட்டரில் பின்தொடருபவர்களின் எண்ணிக்கை 50 லட்சமாக உயர்ந்துள்ளது. #KamalHaasan #Twitter
சென்னை:
நடிகர் கமல்ஹாசன் சில மாதங்களுக்கு முன் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கி, நடத்தி வருகிறார். நாட்டில் நிகழும் அன்றாட சம்பவங்கள் குறித்தும், தன்னை பாதித்த விஷயங்கள் குறித்தும் சமூக வலைதளமான டுவிட்டரில் தனது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்.
கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் டுவிட்டரில் இணைந்த கமல்ஹாசன் பதிவிடும் கருத்துகளுக்கு ரசிகர்கள் தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறார்கள். அதேசமயம், வேறு சிலர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனை சமூக வலைதளமான டுவிட்டரில் பின்தொடருபவர்களின் எண்ணிக்கை 50 லட்சமாக உயர்ந்துள்ளது. #KamalHaasan #Twitter
கதுவாவில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சிறுமி குறித்த விவரங்களை வெளியிட்ட கூகுள், பேஸ்புக், டுவிட்டர் உட்பட அனைத்து சமூக ஊடகங்களுக்கும் டெல்லி ஐகோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. #delhihighcourt #kathuacase
புதுடெல்லி:
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கதுவா மாவட்டத்தில் 8 வயது சிறுமி கடந்த ஜனவரி மாதம் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பான தடயங்களை மறைத்தும், அழித்தும் திசை திருப்பியதாக மூன்று போலீசார், ஒரு சிறுவன் உள்பட எட்டு பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், கற்பழிப்பு வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமிகளின் புகைப்படங்கள், குடும்ப விவரங்களை வெளியிடக்கூடாது என அனைத்து சமூக ஊடகங்கள் மற்றும் பத்திரிக்கை நிறுவனங்களிடம் டெல்லி ஐகோர்ட் கேட்டுக்கொண்டது. ஆனால் கதுவா கற்பழிப்பு வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமியின் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியானது.
இதைத்தொடர்ந்து, டெல்லி ஐகோர்ட் கூகுள், பேஸ்புக், டுவிட்டர் மற்றும் யூடியூப் போன்ற சமூக ஊடகங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அந்த நோட்டீசில், கூகுள் மற்றும் மற்ற சமூக ஊடகங்கள் இது போன்ற தகவல்களை பதிவேற்றம் செய்வதன் மூலம் நாட்டிற்கு கேடுவிளைவிக்கின்றனர். இந்தியாவிற்கு என்று தனிப்பெருமை உள்ளது.
சிறுமியின் புகைப்படங்களை வெளியிட்டது அவள் குடும்பம் மற்றும் நாட்டிற்கு செய்யும் அநியாயமாகும். இதற்கு அனுமதி கிடையாது. இதுகுறித்து உடனடியாக விளக்கம் அளிக்க வேண்டும் எனக்குறிப்பிட்டிருந்தது.
இதற்குமுன் கதுவா சிறுமி குறித்து விவரங்களை வெளியிட்ட பத்திரிக்கை நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. #delhihighcourt #kathuacase

×

X