என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "புதுச்சேரி"
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழகத்தின் உள்மாவட்டங்களில் பரவலாக இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. கோவை, ஈரோடு, திண்டுக்கல், தேனி, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்யலாம். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக விருதுநகர் மாவட்டம் பிளவக்கல் பகுதியில் 4 செமீ மழை பதிவாகி உள்ளது. தேனி மாவட்டம் பெரியார், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் தலா 3 செமீ மழை பெய்துள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் நடந்த பிளஸ்-1 பொதுத்தேர்வினை புதுவை மற்றும் காரைக்கால் பகுதியை சேர்ந்த 6 ஆயிரத்து 949 மாணவர்களும், 7 ஆயிரத்து 906 மாணவிகளும் ஆக 14 ஆயிரத்து 855 பேர் எழுதினார்கள். அதில் 6 ஆயிரத்து 465 மாணவர்களும், 7 ஆயிரத்து 615 மாணவிகளுமாக 14 ஆயிரத்து 80 பேர் தேர்ச்சி பெற்றனர்.
அதாவது 94.78 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இது கடந்த ஆண்டைவிட 5.43 சதவீதம் அதிகம் ஆகும். அரசு பள்ளிகளை பொருத்தவரை புதுச்சேரி பகுதிகளில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் படித்த 88.64 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டைவிட 9.97 சதவீதம் அதிகம் ஆகும்.
காரைக்கால் பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் படித்த 90.87 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டைவிட 13.72 சதவீதம் அதிகமாகும். புதுச்சேரி பகுதியில் 5 அரசு பள்ளிகளும், 55 தனியார் பள்ளிகளும் 100 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளன. காரைக்காலில் 4 தனியார் பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியை அடைந்துள்ளது.
வேதியியல், பொருளியல் பாடத்தில் தலா 2 பேரும், கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தில் 5 பேரும், வணிகவியலில் ஒருவரும், கணக்குப்பதிவியலில் 18 பேரும், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பாடத்தில் 9 பேரும், வணிக கணிதத்தில் ஒருவரும் 100-க்கு 100 மதிப்பெண்களை பெற்றுள்ளனர். #Plus1Result
தமிழகத்தில் கோடை வெயில் வறுத்தெடுத்து வருகிறது. கத்திரி வெயில் தொடங்குவதற்கு முன்பே சூரியன் கோரதாண்டவம் ஆடி வருகிறது. சென்னையிலும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. இதனால் சாலையில் தண்ணீர் கிடப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும் கானல் நீர் தோன்றி மறைகிறது.
இந்தநிலையில் இன்று (சனிக்கிழமை) மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது வெயிலுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் உள்ளது.
இதுகுறித்து சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:-
தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அப்போது ஈரப்பத காற்று 30 முதல் 40 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.
தமிழகத்தின் மற்ற பகுதிகளை விடவும் நெல்லை, தேனி, கோவை மற்றும் வேலூரில் மழை அதிகமாக பெய்ய வாய்ப்பு இருக்கிறது. மேலும் வெயிலின் அளவு தற்போது இருப்பதை விடவும் 2 டிகிரி செல்சியஸ் குறையும். சென்னையை பொறுத்தமட்டில் வானம் பகுதியாக மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர். #Summer #Rain
இந்த பாராளுமன்ற தேர்தலுடன் தமிழகத்தில் காலியாக உள்ள 22 சட்டசபை தொகுதிகளில் 18 சட்டசபை தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.
இந்த தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில் ஓர் அணியும், தி.மு.க. தலைமையில் மற்றொரு அணியும் போட்டியிடுகின்றன. இதுதவிர அ.ம.மு.க., மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளும் களத்தில் உள்ளன.
கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக நடைபெற்று வந்த அனல் பறக்கும் பிரசாரம் நேற்று முன்தினம் மாலை 6 மணியுடன் ஓய்ந்தது. இதைத்தொடர்ந்து வாக்காளர்கள் அல்லாத வெளியாட்கள் தொகுதியை விட்டு வெளியேற்றப்பட்டனர்.
இந்த நிலையில், இன்று காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது. மதிய உணவு இடைவேளை இன்றி மாலை 6 மணி வரை ஓட்டுப்பதிவு இடைவிடாமல் நடைபெறும்.
இதற்காக தமிழகம் முழுவதும் 67,720 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. வாக்குப்பதிவுக்கு தேவையான மின்னணு எந்திரங்கள் உள்ளிட்ட சாதனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.
சித்திரை திருவிழாவை முன்னிட்டு, மதுரை பாராளுமன்ற தொகுதியில் மட்டும் வாக்குப்பதிவு 2 மணி நேரம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. அதாவது அந்த தொகுதியில் மட்டும் இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.
மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்துடன் ‘விவிபாட்’ கருவியும் இணைக்கப்பட்டு இருக்கும். தான் அளித்த வாக்கு உரிய வேட்பாளருக்கு சரியாக பதிவாகி இருக்கிறதா? என்பதை வாக்காளர் அந்த கருவியில் பார்த்து உறுதி செய்து கொள்ளலாம்.
ஓட்டுப்போட செல்லும்போது வாக்காளர்கள் கையில் செல்போன் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. அதனால், வாக்காளர்கள் வீட்டிலேயே செல்போனை வைத்துவிட்டு செல்வது நல்லது.
மாலை 6 மணிக்கு ஓட்டுப்பதிவு நிறைவடைந்தாலும், அதற்கு முன்பாக வாக்குப்பதிவு மையத்துக்குள் வாக்காளர்கள் வந்துவிட்டால், அவர்கள் ஓட்டுப் போட அனுமதிக்கப்படுவார்கள். கடைசி நேரத்தில் கூட்டம் அதிகமாக இருந்தால், டோக்கன் கொடுத்து வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள்.
காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு முதல் 2 மணி நேர இடைவெளியில் பதிவான வாக்கு சதவீத விவரங்கள் வெளியிடப்படும்.
ஓட்டுப்பதிவு முடிவடைந்ததும், வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக பெட்டியில் வைத்து அடைக்கப்பட்டு ‘சீல்’ செய்யப்படும். பின்னர், போலீஸ் பாதுகாப்புடன் ஓட்டு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்படும்.
அடுத்த மாதம் (மே) 19-ந் தேதி, தமிழகத்தில் மீதமுள்ள அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம், சூலூர் ஆகிய 4 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட இருக்கிறது. நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறும் பாராளுமன்ற தேர்தல் அன்றுடன் முடிவடைகிறது.
மே மாதம் 23-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.
தமிழகத்தில் இன்று வாக்குப்பதிவை சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் கமிஷன் செய்து இருக்கிறது. மாநில போலீசாருடன், துணை ராணுவப்படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.
63,951 போலீசார், 27,400 துணை ராணுவ படை வீரர்கள், 13,882 ஊர்க்காவல் படையினர், 14 ஆயிரம் தேசிய மாணவர் படையினர், 20 ஆயிரம் ஓய்வு பெற்ற போலீசார் மற்றும் ராணுவத்தினர் என மொத்தம் 1 லட்சத்து 39 ஆயிரத்து 233 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். பதற்றமான வாக்குச்சாவடி என்று கண்டறியப்பட்ட 8,293 ஓட்டுச்சாவடிகளில் துணை ராணுவ படையினர் நிறுத்தப்படுகிறார்கள்.
இவர்கள் தவிர மாநிலம் முழுவதும் 1,500 வாகனங்களில் அதிவிரைவு படையினர் ரோந்து சுற்றி வருவார்கள்.
மேலும், கண்காணிப்பு கேமரா மூலம் வாக்குப்பதிவு கண்காணிக்கப்படுவதுடன் வீடியோ பதிவும் மேற்கொள்ளப்பட இருக்கிறது.
தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 39 பாராளுமன்ற தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது. இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சுமார் 1½ லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். #LokSabhaElection2019 #Tamilnadu #Puducherry #Polling
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
இந்த புதுச்சேரிக்கு நான் புதிதானவன் அல்ல. புதுச்சேரியும் எனக்கு புதிதல்ல. நான் இங்கு வாக்கு கேட்க மட்டும் வரவில்லை. இந்த மாநிலத்தில் புரட்சி முதல்வராக இருக்கும், இங்கு வந்திருக்கும் முதல்வர் நாராயணசாமிக்கு நன்றி கூறவும் தான் வந்தேன். கழக தலைவர் கலைஞர் மறைவிற்கு பின்னர், அவரை கவுரவிக்கும் வகையில் பல அறிவிப்புகளை அவர் வெளியிட்டார்.
கலைஞருக்கு வெண்கல சிலை, காரைக்காலில் முக்கிய சாலைக்கு கலைஞர் பெயர், மற்றும் பட்டமேற்படிப்பு மையத்திற்கு கலைஞர் பெயர் என கூறினார். எனவே அவருக்கு என் நன்றியை இந்த மாபெரும் பொதுக்கூட்டத்தின் முன் தெரிவித்துக் கொள்கிறேன். புதுவை மாநில உரிமைகளுக்கு குரல் கொடுத்தவர் கலைஞர்.
ஆனால், அதிமுக - பாஜக கூட்டணியால் புதுச்சேரி மக்களுக்கு எதுவும் கிடைக்கப்போவதில்லை. பாஜக தேர்தல் அறிக்கை பொய்யானது. எனவே தான், பிரசாரத்திற்கு செல்லும் இடமெல்லாம் மோடியை மோசடி என்றே கூப்பிடுங்கள் என கூறி வருகிறேன். வெளிநாடு பிரதமர் போல் மோடி செயல்படுகிறார். மக்கள் விருப்பப்படி நீங்கள் நடக்க விரும்புவதாக கூறுகிறீர்கள். அப்படி செய்யவேண்டுமென்றால் ஆட்சியை விட்டு விலகுங்கள். அதுவே மக்கள் விருப்பம்.
நாட்டுக்கு மோடி, தமிழகத்திற்கு எடப்பாடி, புதுச்சேரிக்கு கிரண் பேடி ஆகிய 3 ‘டி’ யினால் மக்கள் பெரும் தொல்லைக்கு ஆளாகியுள்ளனர் என்பதே உண்மை.
இவ்வாறு அவர் பேசினார். #MKStalin #DMK #LoksabhaElections2019
நடிகர் கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி, தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளிலும் போட்டியிட உள்ளது. இதற்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை கமல், கடந்த 20ம் தேதி வெளியிட்டார். இதில் புதுச்சேரி தொகுதியில் டாக்டர். எம்.ஏ.எஸ். சுப்ரமணியன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
இந்நிலையில், புதுச்சேரி தொகுதி வேட்பாளர் டாக்டர். எம்.ஏ.எஸ். சுப்பிரமணியன் இன்று செய்தியாளர்களிடம் பேசியதாவது:
மேலும் எனது தேர்தல் பிரச்சாரத்தினை மார்ச் 27 அன்று கலாபேட்டிலிருந்து துவங்க உள்ளேன். மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசன் ஏஎப்டி மைதானத்தில் நடக்கவிருக்கும் பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொள்வார்.
இவ்வாறு அவர் பேசினார். #makkalneedhimaiamparty #PuducherryCandidate
சென்னை:
உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி தலைமையில் கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் நடந்தது. இதில் தமிழக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கலந்து கொண்டார்.
அவரிடம் தமிழகம்- புதுவையில் உள்ள 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவதாகவும். 40 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்துமாறும் மாயாவதி கேட்டுக் கொண்டார்.
மேலும் தமிழகத்தில் போட்டியிடும் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அடுத்த மாதம் (ஏப்ரல்) 10-ந்தேதி தமிழகத்ல் பிரசாரத்தில் ஈடுபடுவதாகவும் ஆம்ஸ்ட்ராங்கிடம் உறுதி அளித்தார்.
இதையடுத்து தேர்தலில் போட்டியிட விரும்பும் பகுஜன் சமாஜ் கட்சியினர் பெரம்பூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் விருப்ப மனு கொடுத்தனர். விருப்ப மனு கொடுத்தவர்களிடம் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங், துணை தலைவர் மணிவண்ணன், பொருளாளர் கல்யாணசுந்தரம் ஆகியோர் நேர்காணல் நடத்தினர். #BSP
சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
சென்னையை பொறுத்தமட்டில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார். #Rain #MeteorologicalCentre
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்