search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94356"

    சியோமி நிறுவனத்தின் 4-ம் வருட Mi ஆண்டுவிழா விற்பனை அறிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு விற்பனை தேதி மற்றும் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



    சியோமி நிறுவனத்தின் 4-ம் வருட Mi ஆண்டு விழா சிறப்பு விற்பனை அறிவிக்கப்ப்டடு இருக்கிறது. இந்த ஆண்டு ஜுலை 10-ம் தேதி துவங்கி 12-ம் தேதி வரை சிறப்பு விற்பனை நடைபெற இருக்கிறது. 

    சியோமி ஆண்டு விழா சிறப்பு விற்பனையில் ரூ.4 ஃபிளாஷ் விற்பனை, குறைந்த விலையில் இரண்டு சாதனங்கள், தள்ளுபடி கூப்பன்கள் மற்றும் சிறப்பு போட்டி உள்ளிட்டவை நடைபெறுகிறது. போட்டிகளில் கலந்து கொள்வோர் Mi மிக்ஸ் 2, ரெட்மி வை2 மற்றும் பல்வேறு சலுகைகளை பெற முடியும். 

    ஒவ்வொரு நாளும் மாலை 4.00 மணிக்கு ஃபிளாஷ் விற்பனை நடைபெற இருக்கிறது. இந்த விற்பனையில் ரெட்மி வை1, Mi எல்இடி ஸ்மார்ட் டிவி 4 55 இன்ச், Mi பாடி கம்போசிஷன் ஸ்கேல், ரெட்மி நோட் 5 ப்ரோ, ரெட்மி வை2 மற்றும் Mi பேன்ட் 2 உள்ளிட்டவற்றை ரூ.4 விலையில் பெற முடியும். இதேபோன்று Mi ப்ரோடெக்ட் ரூ.300 வரை தள்ளுபடி வழங்கப்பட இருக்கிறது.

    ஜூலை 9-ம் தேதி இரவு 11.59 மணி வரை ரெட்மி Mi பயனர்கள் தங்களது எஃப்-கோடுகளை பிரத்யேகமாக பெற முடியும். கூப்பன்களுக்கான வேலிடிட்டி மற்றும் எஃப் கோடுகள் ஜூலை 10-ம் தேதி காலை 10.00 மணிக்கு துவங்கி ஜுலை 12-ம் தேதி இரவு 11.59 வரை செல்லுபடியாகும்.

    சிறப்பு விற்பனையின் போது ரூ.7500 வரை பொருட்களை வாங்கும் ஸ்டேட் பேங் பயனர்கள் ரூ.500 வரை உடனடி தள்ளுபடி பெற முடியும். இதேபோன்று ரூ.8,999 வரை பொருட்களை வாங்குவோர் பேடிஎம் வாலெட் மூலம் பணத்தை செலுத்தும் போது ரூ.500 கேஷ்பேக் பெற முடியும். இத்துடன் மொபிக்விக் மூலம் பணத்தை செலுத்தும் போது 25% தள்ளுபடி (அதிகபட்சம் ரூ.3000) வரை சூப்பர்கேஷ் பெற முடியும்.
    சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 5 சீரிஸ் ஐம்பது லட்சம் யூனிட்கள் விற்பனை செய்திருப்பதாக சியோமி அறிவித்துள்ளது.




    இந்தியாவில் சியோமி ஸ்மார்ட்போன்களை வாங்க முடியவில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக இருந்து வரும் நிலையில், குற்றம் சுமத்துவோரை சோதிக்கும் வகையில் சியோமியின் புதிய அறிவிப்பு அமைந்திருக்கிறது.

    ரெட்மி நோட் 5 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் விற்பனை நான்கே மாதங்களில் 50 லட்சம் யூனிட்களை கடந்து இருப்பதாக சியோமி தெரிவித்திருக்கிறது. இந்தியாவில் இந்த ஆண்டு பிப்ரவரி மாத வாக்கில் ரெட்மி நோட் 5 மற்றும் ரெட்மி நோட் 5 ப்ரோ ஸ்மார்ட்போன்களை சியோமி அறிமுகம் செய்தது.

    சியோமி ரெட்மி நோட் 5 விலை ரூ.9,999, ரெட்மி நோட் 5 ப்ரோ விலை ரூ.13,999 என நிர்ணயம் செய்யப்பட்டது. பின் இறக்குமதி வரி உயர்த்தப்பட்டதும், ரெட்மி நோட் 5 ப்ரோ விலை ரூ.1,000 அதிகரிக்கப்பட்டது. இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் மெல்லிய பெசல்கள், 18:9 ரக டிஸ்ப்ளே, செல்ஃபி லைட் மாட்யூல், 4,000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.

    புதிய விற்பனை சாதனையின் மூலம் ரெட்மி நோட் 5 சீரிஸ் இந்தியாவின் அனைத்து வித தளங்களிலும் அதிவேகமாக ஐம்பது லட்சம் யூனிட்கள் விற்பனையை கடந்த மொபைல் போன் சீரிஸ் என்ற பெருமையை பெற்றிருக்கிறது. 



    "ரெட்மி நோட் 5 மற்றும் ரெட்மி நோட் 5 ப்ரோ மாடல்களின் அனைத்து வேரியன்ட்களும் சியோமி ப்ரியர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ரெட்மி நோட் 5 மற்றும் ரெட்மி நோட் 5 ப்ரோ மாடல்களை அனைவருக்கும் கிடைக்கச் செய்யும் வகையில் உற்பத்தியை அதிகரிக்க கடினமாக பணியாற்றி வருகிறோம்," என சியோமி வெளியிட்டிருக்கும் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ரெட்மி நோட் 5 சீரிஸ் அறிமுகம் செய்யப்பட்டு ஒரு வாரம் கழித்தே முதல் ஃபிளாஷ் விற்பனை துவங்கியது. மூன்று நிமிடங்கள் நடைபெற்ற முதல் ஃபிளாஷ் விற்பனையில் சுமார் 3,00,000 அதிக ரெட்மி நோட் 5 மற்றும் ரெட்மி நோட் 5 ப்ரோ யூனிட்களை விற்பனை செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரெட்மி நோட் 5 ஸ்மார்ட்போன் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் தளங்களில் விற்பனையாகி வரும் நிலையில், ரெட்மி நோட் 5 ப்ரோ ஸ்மார்ட்போன் தொடர்ந்து ஃபிளாஷ் முறையில் விற்பனை செய்யப்படுகிறது.

    முன்னதாக சியோமி அறிமுகம் செய்த ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஸ்மார்ட்போனாக உருவெடுத்தது. அறிமுகமான ஒரே வருடத்தில் ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்போன்கள் சுமார் பத்து லட்சத்திற்கும் அதிக யூனிட்கள் விற்பனையானதாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
    சியோமி நிறுவனத்தின் ரெட்மி 6 ப்ரோ ஸ்மார்ட்போன் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. விரைவில் வெளியாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போனின் விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.





    சியோமி நிறுவனத்தின் ரெட்மி 6 ப்ரோ ஸ்மார்ட்போன் ஜூன் 25-ம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. ஸ்மார்ட்போனின் பல்வேறு டீசர்கள் வெளியிடப்பட்டு வருகிறது.

    இதுவரை கிடைத்திருக்கும் தகவல்களின் படி ரெட்மி 6 ப்ரோ ஸ்மார்ட்போனில் 12 எம்பி பிரைமரி கேமரா, சோனி IMX486 செனசார், 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, சாம்சங் S5K5E8 சென்சார் வழங்கப்படுகிறது. இதனால் ரெட்மி 6 போன்றே புதிய ஸ்மார்ட்போனிலும் ஏஐ சார்ந்த போர்டிரெயிட் புகைப்படங்களை எடுக்க முடியும்.

    இத்துடன் ஸ்னாப்டிராகன் 625 சிப்செட், 4000 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுவது சமீபத்திய டீசரில் தெரியவந்தது. ரோஸ் கோல்டு, கோல்டு, புளு, பிளாக் மற்றும் ரெட் என ஐந்து நிறங்களில் கிடைக்கும் என்றும் ஸ்மார்ட்போனின் மேல்புறம் இன்ஃப்ராரெட் சென்சார் வழங்கப்படுகிறது. 

    பிரத்யேக டூயல் சிம் ஸ்லாட், மைக்ரோ எஸ்டி ஸ்லாட் வழங்கப்படும் என கூறப்படுகிறது. மெமரி அம்சங்களை பொருத்த வரை ரெட்மி 6 போன்றே 4 ஜிபி ரேம், 64 ஜிபி இன்டெர்னல் மெமரி மற்றும் 3 ஜிபி ரேம், 32 ஜிபி இன்டெர்னல் மெமரி என இருவித மாடல்களில் வெளியிடப்படுகிறது.



    சியோமி ரெட்மி 6 ப்ரோ சிறப்பம்சங்கள்:

    - 5.84 இன்ச் 2280x1080 பிக்சல் ஃபுல் ஹெச்டி பிளஸ் 19:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - 2.0 ஜிகாஹெர்டஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 625 14nm சிப்செட்
    - அட்ரினோ 506 GPU
    - 3 ஜிபி / 4 ஜிபி ரேம்
    - 32 ஜிபி / 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் MIUI 10
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 12 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், சோனி IMX486 சென்சார், 1.25um, PDAF, f/2.2
    - 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, சாம்சங் S5K5E8 சென்சார், 1.12um, f/2.2
    - 5 எம்பி செல்ஃபி கேமரா
    - கைரேகை சென்சார், இன்ஃப்ராரெட் சென்சார்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 4000 எம்ஏஹெச் பேட்டரி

    சியோமி ரெட்மி 6 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை 999 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.10,520) வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் டாப் என்ட் மாடல் விலை மற்றும் Mi பேட் 4 சாதனத்தின் இதர விவரங்கள் அறிமுக தினத்தன்று தெரியவரும்.
    இந்திய ஸ்மார்ட்போன் விற்பனையில் சியோமி நிறுவனம் முதலிடத்தில் இருந்தாலும், சாம்சங் நிறுவனம் தான் 'இதில்' முதலிடம் வகிக்கிறது.





    சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமி காலாண்டு வரையிலான விற்பனையில் இந்தியாவில் முதலிடம் பிடித்திருக்கும் நிலையில், இன்ஸ்டால் பேஸ் அடிப்படையில் சாம்சங் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

    இந்தியாவை சேர்ந்த சைபர் மீடியா ரிசர்ச் (சி.எம்.ஆர்.) எனும் ஆய்வு நிறுவனம் வெளியிட்டிருக்கும் தகவல்களின் படி இந்திய சந்தையில் பயன்படுத்தப்படும் சாதனங்களில் சாம்சங் நிறுவன சாதனங்கள் மட்டும் 30.8% ஆக இருக்கிறது. கடந்த இரண்டு காலாண்டுகளில் சியோமி, விவோ மற்றும் ஒப்போ போன்ற நிறுவனங்கள் விற்பனையில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.

    சியோமி, விவோ மற்றும் விவோ நிறுவன சாதனங்களை முறையே 8.53%, 5.63% மற்றும் 5.02% பேர் பயன்படுத்தி வருகின்றனர். அதிகம் பேர் பயன்படுத்தும் நிறுவனங்களில் ஒற்றை இந்திய நிறுவனமாக மைக்ரோமேக்ஸ் இருக்கிறது. மைக்ரோமேக்ஸ் நிறுவன மொபைல்போன்களை 8.63% பேர் பயன்படுத்துகின்றனர்.


    கோப்பு படம்

    சி.எம்.ஆர். பிக் டேட்டா அனாலடிக்ஸ் திட்டமான மொபைலிஸ்டிக்ஸ் நடத்திய மற்றொரு ஆய்வில் இந்தியாவின் ஏழு மாநிலங்களில் மட்டுமே ஸ்மார்ட்போன் சந்தை 50%-க்கும் அதிகமாக இருக்கிறது. இந்த ஆய்வில் மொபைல் போன்கள், ஸ்மார்ட்போன் மற்றும் ஃபீச்சர் போன்களின் மார்ச் மாதம் வரையிலான எண்ணிக்கை கணக்கிடப்பட்டன.

    மொத்தம் 41.5 கோடி மொபைல் போன் இன்ஸ்டாலேஷன்களில், ஸ்மார்ட்போன் மட்டும் 45.7% மொபைல் சந்தையை ஆக்கிரமித்து இருக்கும் நிலையில் இந்தியாவில் தொடர்ந்து ஃபீச்சர்போன் விற்பனை அமோகமாக இருந்து வருகிறது.

    ஸ்மார்ட்போன் விற்பனையில் கேரளா மாநிலம் 64.7% விற்பனையை பெற்று முதலிடம் பிடித்திருக்கிறது. இதில் அசாம் மாநிலம் 26.8% விற்பனையுடன் பட்டியலில் இறுதி இடத்தில் இருக்கிறது. கேரளாவை தொடர்ந்து பாதிக்கும் அதிக ஸ்மார்ட்போன் விற்பனையை பதிவு செய்த மாநிலங்களின் பட்டியலில் டெல்லி (54.3%), குஜராத் (58.3%), இமாச்சல் பிரதேசம் (53.6%), மகாராஷ்ட்ரா (55.4%), பஞ்சாப் (57.4%) மற்றும் தமிழ் நாடு (53.8%) இருக்கின்றன.

    அசாம், மத்திய பிரதேசம், பீகார், சட்டீஸ்கர் மற்றும் மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் மொபைல் பயன்படுத்துவோரில் மூன்றில் ஒருவருக்கும் குறைவானோர் மட்டுமே ஸ்மார்ட்போன் பயன்படுத்தி வருவது இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
    சியோமி நிறுவனத்தின் ரெட்மி 6 மற்றும் ரெட்மி 6ஏ ஸ்மார்ட்போன்கள் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இவற்றின் விலை மற்றும் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
    பீஜிங்:

    சியோமி நிறுவனத்தின் ரெட்மி 6 மற்றும் ரெட்மி 6ஏ ஸ்மார்ட்போன்கள் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இவை கடந்த ஆண்டு சியோமி அறிமுகம் செய்திருந்த ரெட்மி 5 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் மேம்படுத்தப்பட்ட மாடல்கள் ஆகும்.

    புதிய ரெட்மி 6 ஸ்மார்ட்போனில் 5.45 இன்ச் ஹெச்டி பிளஸ் 18:9 ரக டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ P22 12என்எம் சிப்செட், ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் சார்ந்த MIUI9 வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 12 எம்பி பிரைமி கேமரா, எல்இடி ஃபிளாஷ், 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா மற்றும் 5 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

    ரெட்மி 6ஏ ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியோ A22 12என்எம் குவாட்கோர் சிப்செட், 13 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இரண்டு கேமராக்களிலும் போர்டிரெயிட் மோட் அம்சம் வழங்கப்பட்டுள்ளது. பாலிகார்பனைடே மூலம் உருவாக்கப்பட்டு இருக்கும் ரெட்மி 6ஏ பிரஷ் செய்யப்பட்ட மெட்டல் சர்ஃபேஸ் கொண்டுள்ளது.



    சியோமி ரெட்மி 6 சிறப்பம்சங்கள்:

    - 5.45 இன்ச் 1440x720 பிக்சல் ஹெச்டி பிளஸ் 18:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - 2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ P22 சிப்செட்
    - பவர் விஆர் GE8320 GPU
    - 3ஜிபி / 4ஜிபி ரேம் 
    - 32 ஜிபி / 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆன்ட்ராய்டு 8.1 (ஓரியோ) மற்றும் MIUI 9
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 12 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், 1.25μm பிக்சல்
    - 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா
    - 5 எம்பி செல்ஃபி கேமரா
    - கைரேகை சென்சார், இன்ஃப்ராரெட் சென்சார்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 3000 எம்ஏஹெச் பேட்டரி



    சியோமி ரெட்மி 6ஏ சிறப்பம்சங்கள்:

    - 5.45 இன்ச் 1440x720 பிக்சல் ஹெச்டி பிளஸ் 18:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - 2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ P22 சிப்செட்
    - 2 ஜிபி ரேம் 
    - 16 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆன்ட்ராய்டு 8.1 (ஓரியோ) மற்றும் MIUI 9
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ்
    - 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா
    - இன்ஃப்ராரெட் சென்சார்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 3000 எம்ஏஹெச் பேட்டரி

    சியோமி ரெட்மி 6 மற்றும் ரெட்மி 6ஏ ஸ்மார்ட்போன்கள் கிரெ, புளு, கோல்டு மற்றும் ரோஸ் கோல்டு உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. இரண்டு ஸ்மார்ட்போன்களும் ஜூன் 15-ம் தேதி முதல் சீனாவில் விற்பனைக்கு வருகிறது.

    சீனாவில் ரெட்மி 6 (3 ஜிபி) விலை 799 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.8,410) என்றும், 4 ஜிபி ரேம் கொண்ட ரெட்மி 6 ஸ்மார்ட்போன் 999 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.10,520) என்றும் ரெட்மி 6ஏ ஸ்மார்ட்போன் விலை 599 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.6,307) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    சர்வதேச சந்தையில் ஏப்ரல் 2018 ஸ்மார்ட்போன் விற்பனை குறித்த சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
    கலிஃபோர்னியா:

    ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் X அறிமுகம் செய்யப்பட்டது முதல் சர்வதேச சந்தையில் அதிகம் விற்பனையாகி வந்தது. இந்நிலையில், ஐபோன் X ஸ்மார்ட்போனுக்கு மாற்றாக புதிய ஸ்மார்ட்போன் விற்பனையில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    சாம்சங் சமீபத்தில் அறிமுகம் செய்த கேலக்ஸி எஸ்9 பிளஸ் ஏப்ரல் 2018-இல் அதிகம் விற்பனையாக ஸ்மார்ட்போனாக இருக்கிறது. கவுன்ட்டர்பாயின்ட் வெளியிட்டிருக்கும் சமீபத்திய அறிக்கையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

    கேலக்ஸி எஸ்9 மற்றும் எஸ்9 பிளஸ் ஸ்மார்ட்போன்களின் விற்பனை ஆசியா பசிபிக் மற்றும் வட அமெரிக்கா உள்ளிட்ட பகுதிகளில்அதிகரித்து இருக்கிறது. இவை முறையே முதல் மற்றும் இரண்டாவது இடங்களை பிடித்திருக்கிறது. 



    ஏப்ரல் 2018 ஸ்மார்ட்போன் விற்பனையின் முன்னணி இடங்களில் சியோமி இடம்பெற்றிருக்கிறது. அந்நிறுவனத்தின் ரெட்மி 5ஏ, ரெட்மி 5 பிளஸ்/நோட் 5 ஸ்மார்ட்போன்கள் முறையே ஆறு மற்றும் எட்டாவது இடங்களை பிடித்துள்ளது.

    சீனா மற்றும் இந்தியாவில் தொடர்ந்து அபார வளர்ச்சியை சியோமி பதிவு செய்து வருகிறது. ஆப்பிள் நிறுவனத்தை பொருத்த வரை அந்நிறுவனம் தொடர்ந்து இரண்டாவது மாதமாக விற்பனையில் சரிவை சந்தித்து வருகிறது. எனினும் சர்வதேச அளவில் அதிகம் விற்பனையாகும் ஸ்மார்ட்போன்களில் டாப் 5 இடங்களை ஆக்கிரமித்து இருக்கிறது.

    அறிமுகம் செய்யப்பட்டு ஒரு ஆண்டுகள் நிறைவுற்ற நிலையிலும் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 7 ஆசிய பசிபிக் மற்றும் வட அமெரிக்க பகுதிகளில் அதிகம் விற்பனையாகி வருகின்றன. விற்பனை தொடர்ந்து அதிகரிக்க விலை குறைப்பு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
    சியோமி நிறுவனத்தின் MIUI 10 குளோபல் வெளீயீடு இந்தியாவில் நேற்று நடைபெற்றது. இதில் MIUI 10 தளத்துக்கான இந்திய அம்சங்கள் அறிவிக்கப்பட்டன.
    புதுடெல்லி:

    சியோமி நிறுவனத்தின் MIUI 10 குளோபல் வெளியீடு ரெட்மி வை2 ஸ்மார்ட்போனுடன் நேற்று நடைபெற்ற விழாவில் வெளியிடப்பட்டது. புதிய MIUI 10 தளத்தில் செயல்திறன் மேம்படுத்தப்பட்டு, ஜெஸ்ட்யூர்கள் கொண்ட ஃபுல் ஸ்கிரீன் அனுபவம், இயற்கை ஒலி, ஆம்பியன்ட் நாய்ஸ், செயற்கை நுண்ணறிவு மோட் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

    வழக்கம்போல இம்முறையும் புதிய MIUI 10 தளத்தில் இந்திய பயனர்களுக்கென விசேஷ அம்சங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் பயனர்கள் நேரடியாக கேமரா ஆப் மூலம் பேடிஎம் கியூஆர் கோடுகளை ஸ்கேன் செய்ய முடியும், அதிநவீன இணைய வசதி, மெசேஜிங் சேவையில் க்விக் மெனுக்கள், Mi மியூசிக் மற்றும் Mi வீடியோ செயலிகளில் பாடல்கள் மற்றும் வீடியோக்களை பிராந்திய மொழிகளில் பயன்படுத்தும் வசதி உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.

    புதிய MIUI 10 தளத்தில் கேமரா ஆப் பேடிஎம் கியூஆர் கோடுகளை ஸ்கேன் செய்து நேரடியாக பேடிஎம் ஆப் மூலம் செக்-அவுட் செய்யும் வசதியை வழங்குகிறது. 



    மெசேஜிங் க்விக் மெனு

    எஸ்எம்எஸ் சென்டர் ஐடி மற்றும் காலர் ஐடி அம்சங்கள் ஏற்கனவே MIUI தளத்தில் கிடைக்கிறது. எஸ்எம்எஸ் சென்டர் ஐடி தற்சமயம் 65% ஐடென்டிஃபை ரேட் கொண்டுள்ளது. MIUI 10 தளத்தில் வங்கிகளில் இருந்து வரும் மெசேஜ்களுக்கு ரிப்ளை பட்டன்கள் நீக்கப்பட்டு க்விக் மெனு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இவற்றை க்ளிக் செய்யும் போது குறிப்பிட்ட வலைத்தளங்கள், செயலிகள் அல்லது அருகாமையில் உள்ள ஏடிஎம் மையங்களை கூகுள் மேப்ஸ் மூலம் பார்க்க முடியும்.

    இந்த அம்சம் உங்களுக்கு வரும் குறுந்தகவலை யார் அனுப்புகின்றார்கள் என்பதன் அடிப்படையில் வேறுபடும். தற்சமயம் க்விக் மெனு இந்தியாவில் 100-க்கும் அதிக சேவைகளுக்கு கிடைக்கிறது. 

    MIUI 10 தளத்தில் உங்களுக்கு வரும் ரயில் டிக்கெட் எஸ்எம்எஸ்-களை தானாக அறிந்து கொண்டு, அவற்றில் உள்ள தகவல்களை சிறப்பான முறையில் கார்டுகளாக மாற்றிவிடும். 



    பிரவுசர்களில் வெப் ஆப்

    ப்ரோகிரெசிவ் வெப் ஆப் சப்போர்ட் ப்ளிப்கார்ட், ஓலா, ஓயோ மற்றும் இதர சேவைகளை செயலிகளை பயன்படுத்துவதை போன்றே இயக்க முடியும். இதற்கு நீங்கள் கூடுதலாக எதையும் டவுன்லோடு மற்றும் இன்ஸ்டால் செய்ய வேண்டிய அவசியம் கிடையாது. இந்த அம்சம் இந்தோனேஷியாவிலும் வழங்கப்படுகிறது.

    சியோமி நேற்று (ஜூன் 7, 2018) அறிமுகம் செய்த MIUI 10 பீட்டா ஜூன் 14-ம் தேதி முதல் வெளியிடப்படுகிறது. இதன் ஸ்டேபிள் வெளியீடு செப்டம்பர் மாத வாக்கில் துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    சியோமி நிறுவனத்தின் ரெட்மி வை2 ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. அசத்தல் அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போனின் விலை குறைவாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    சியோமி நிறுவனத்தின் ரெட்மி வை2 ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியிடப்பட்டது. கடந்த மாதம் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி எஸ் 2 ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. 

    5.99 இன்ச் ஹெச்டி பிளஸ் 18:9 ரக டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 625 சிப்செட், 3 ஜிபி ரேம், ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ, MIUI 9, 12 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது.

    இத்துடன் 16 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி ஃபிளாஷ். ஏஐ பியூட்டி அம்சம், ஆட்டோ ஹெச்டிஆர், பிக்சல் பின்னிங் தொழில்நுட்பம், ஃபேஸ் அன்லாக், டூயல் சிம் ஸ்லாட், 3080 எம்ஏஹெச் பேட்டரி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.



    சியோமி ரெட்மி வை2 சிறப்பம்சங்கள்:

    - 5.99 இன்ச் 1440x720 பிக்சல் ஹெச்டி பிளஸ் 18:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - 2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 625 சிப்செட்
    - அட்ரினோ 506 GPU
    - 3 ஜிபி / 4 ஜிபி ரேம்
    - 32 ஜிபி / 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆன்ட்ராய்டு 8.1 மற்றும் MIUI 9
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 12 எம்பி பிரைமரி, 1.25μm பிக்சல், PDAF, f/2.2
    - 5 எம்பி பிரைமரி கேமரா
    - 16 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி ஃபிளாஷ்
    - கைரேகை சென்சார், இன்ஃப்ராரெட் சென்சார்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 3080 எம்ஏஹெச் பேட்டரி



    அறிமுக சலுகைகள்

    சியோமி ரெட்மி வை2 ஸ்மார்ட்போன் எலிகன்ட் கோல்டு, ரோஸ் கோல்டு மற்றும் டார்க் கிரெ நிறங்களில் கிடைக்கிறது. இதன் 3 ஜிபி ரேம் மாடல் விலை ரூ.9,999 மற்றும் 4 ஜிபி ரேம் மாடல் விலை ரூ.12,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய ரெட்மி வை2 ஸ்மார்ட்போன் அமேசான், Mi அதிகாரப்பூர்வ வலைத்தளம் மற்றும் Mi ஹோம் ஸ்டோர்களில் விற்பனை செய்யப்படுகிறது.

    இந்தியாவில் ரெட்மி வை2 ஸ்மார்ட்போன் வாங்குவோருக்கு ரூ.1800 உடனடி தள்ளுபடி, ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு 240 ஜிபி கூடுதல் டேட்டா, தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு அறிமுக தினத்தில் வாங்கும் போது ரூ.500 தள்ளுபடி வழங்கப்படுகிறது.
    சியோமி நிறுவனத்தின் ரெட்மி 6 ஸ்மார்ட்போன் சீன வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
    பீஜிங்:

    சியோமி நிறுவனத்தின் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் சீன வெளியீட்டு தேதியை அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி சியோமி ரெட்மி 6 ஸ்மார்ட்போன் ஜூன் 12-ம் தேதி சீனாவில் வெளியிடப்படுகிறது.

    கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியிடப்பட்ட ரெட்மி 5 ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட மாடலாக ரெட்மி 6 இருக்கிறது. கடந்த மாதம் M1804C3CC, M1804C3DE மற்றும் M1804C3CE மாடல் எண்களை கொண்ட சியோமி ஸ்மார்ட்போன்கள் சீன வலைத்தளமான TENAA-வில் கசிந்திருந்தது. அந்த வகையில் இவை ரெட்மி 6 சீரிஸ் ஆக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஆக்டா கோர் சிப்செட், டூயல் பிரைமரி மற்றொரு மாடலில் குவாட்-கோர் சிப்செட் மற்றும் ஒற்றை பிரைமரி கேமரா என இரண்டு வேரியன்ட்களில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.



    சியோமி ரெட்மி 6 எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:

    - 5.45 இன்ச் 1440x720 பிக்சல் ஹெச்டி பிளஸ் 18:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - 2.0 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் / ஆக்டா-கோர் பிராசஸர்
    - 2 ஜிபி / 3 ஜிபி / 4 ஜிபி ரேம்
    - 16 ஜிபி / 32 ஜிபி / 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ சார்ந்த MIUI 9
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 12 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ்
    - உயர் ரக மாடலில் இரண்டாவது பிரைமரி கேமரா
    - 5 எம்பி செல்ஃபி கேமரா
    - கைரேகை சென்சார், இன்ஃப்ராரெட் சென்சார்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 3000 எம்ஏஹெச் பேட்டரி

    ரெட்மி 6 ஸ்மார்ட்போன் புளு, பிளாக், சில்வர், வைட், கோல்டு, ரோஸ் கோல்டு, பர்ப்பிள் மற்றும் ரெட் உள்ளிட்ட நிறங்களில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. இத்துடன் சியோமி நிறுவனம் விரைவில் Mi A2 லைட் ஸ்மார்ட்போனினை சிங்கப்பூரில் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    சியோமி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் ரெட்மி வை2 ஸ்மார்ட்போனுடன் MIUI 10 ஜூன் 7-ம் தேதி நடைபெற இருக்கும் விழாவில் வெளியிடப்படுகிறது.
    புதுடெல்லி:

    சியோமி நிறுவனத்தின் ரெட்மி வை2 ஸ்மார்ட்போன் ஜூன் 7-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்சமயம் வெளியாகி இருக்கும் புதிய டீசரில் அந்நிறுவனம் MIUI 10 குளோபல் ரோம் வெளியீடும் இதே தேதியில் நடைபெறும் என தெரியவந்துள்ளது.

    முன்னதாக சீனாவில் நடைபெற்ற Mi8 நிகழ்வில் சியோமி நிறுவனம் MIUI 10 அறிமுகம் செய்தது. அந்த வகையில் இம்முறை MIUI 10 குளோபல் ரோம் வெளியிடப்படலாம் என சியோமி வெளியிட்டிருக்கும் டீசரில் தெரியவந்துள்ளது. அடுத்த வாரம் நடைபெற இருக்கும் விழாவில் வெளியீட்டு விவரங்களுடன் இவை சப்போர்ட் செய்யும் சாதனங்களின் பட்டியல் அறிவிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

    சியோமி கம்யூனிட்டி ஃபோரமில் பதிவேற்றம் செய்யப்பட்டு இருக்கும் டீசரை சியோமி இந்தியா துணை தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் மனு ஜெயின் பகிர்ந்துள்ளார். கடந்த ஆண்டு ரெட்மி வை1 அறிமுக நிகழ்விலேயே MIUI 9 அறிவிக்கப்பட்ட நிலையில், இதே ஆண்டும் முந்தைய வழக்கத்தை பின்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.



    ஆன்ட்ராய்டு சார்ந்து இயங்கும் MIUI 10 செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் சக்தியூட்டப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய யூசர் இன்டர்ஃபேஸ் மிகமுக்கிய அம்சங்களில் ஒன்றாக அதன் செயற்கை நுண்ணறிவு போர்டிரெயிட் அம்சம் இருக்கிறது. இந்த அம்சம் புதிய இயங்குதளம் கொண்டிருக்கும் அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் போக்கெ எஃபெக்ட் புகைப்படங்களை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    அந்த வகையில் ஒற்றை அல்லது இரட்டை கேமரா கொண்டிருக்கும் எவ்வித ஸ்மார்ட்போன்களிலும் போக்கெ எஃபெக்ட் பெற முடியும். இத்துடன் விட்ஜெட், ஏஐ பிரீலோடு மற்றும் இன்டகிரேட் செய்யப்பட்ட ஸ்மார்ட் ஹோம் டிவைஸ் சப்போர்ட் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

    சியோமியின் MIUI 10 சீனா டெவலப்பர் ரோம் மற்றும் இதை சப்போர்ட் செய்யுயம் சாதனங்களின் பட்டியல் Mi8 நிகழ்வில் அறிவிக்கப்பட்ட நிலையில், MIUI 10 குளோபல் ரோம் வெளியீட்டு விவரம் மற்றும் இதனை சப்போர்ட் செய்யும் சாதனங்களின் பட்டியல் ஜூன் 7-ம் தேதி தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    சியோமி நிறுவனத்தின் Mi பேன்ட் 3 Mi8 நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
    பீஜிங்:

    சியோமி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட Mi பேன்ட் 3 சீனாவில் நடைபெற்ற Mi8 விழாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 0.78 இன்ச் OLED டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருப்பதால் வாட்ஸ்அப், ஃபேஸ்புக் அல்லது எஸ்எம்எஸ் மெசேஜ்களில் அதிக எழுத்துக்களை டிஸ்ப்ளே செய்யும்.

    முந்தைய Mi பேன்ட் 2 சாதனத்தில் 0.42 இன்ச் டிஸ்ப்ளே வழங்கப்பட்டது. புதிய Mi பேன்ட் சாதனத்தில் 5ATM வாட்டர் ப்ரூஃப் வசதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் நீருக்கு அடியில் 50 மீட்டர் ஆழத்திலும் பேன்ட் பயன்படுத்த முடியும்.

    புதிய Mi பேன்ட் 3 சாதனத்தில் மேம்படுத்தப்பட்ட ஆக்டிவிட்டி டிராக்கிங் வழங்கப்பட்டு இருப்பதாக சியோமி தெரிவித்துள்ளது. மேலும் ஓட்டப்பயிற்சி, மிதிவண்டி, நடைபயிற்சி மற்றும் இதர நடவடிக்கைகள் குறித்த ரியல்-டைம் டேட்டாவை வழங்குகிறது. முன்பக்கம் பட்டன் புதிய பேன்ட்-லும் வழங்கப்பட்டு இருககிறது. 

    மேலும் இன்கமிங் அழைப்புகளின் பெயரை பேன்ட்-இல் பார்க்கவும், பட்டனை அழுத்திப்பிடித்து அழைப்புகளை நிராகரிக்கவும் முடியும். சியோமி Mi பேன்ட் 3 சாதனம் 20 நாட்கள் ஸ்டான்ட்-பை வழங்கும் 110 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.



    சியோமி Mi பேன்ட் 3 சிறப்பம்சங்கள்:

    - 0.78 இன்ச் OLED 128x80 பிக்சல் டிஸ்ப்ளே
    - கீறல் விழாத கிளாஸ், ஆன்டி-ஃபிங்கர்ப்ரின்ட் கோட்டிங்
    - போட்டோப்லெதிஸ்மோகிராஃபி (Photoplethysmography - PPG)
    - இதய துடிப்பு சென்சார்
    - உறக்கத்தை டிராக் செய்து, உடற்திறனை மானிட்டர் செய்கிறது
    - செடன்ட்டரி ரிமைன்டர்
    - 8.5 கிராம் அல்ட்ரா லைட் பாடி
    - 5ATM (50 மீட்டர்) வாட்டர் ரெசிஸ்டன்ட்
    - ப்ளூடூத் 4.2 LE, என்எஃப்சி (ஆப்ஷன்)
    - 110 எம்ஏஹெச் லி-ஐயன் பாலிமர் பேட்டரி

    சியோமி Mi பேன்ட் 3 பிளாக் நிறம் மற்றும் பேன்ட்கள் கிராஃபைட் பிளாக், ஹாட் ஆரஞ்சு மற்றும் டீப் புளு நிறங்களில் கிடைக்கிறது. Mi பேன்ட் 3 சீனாவில் 169 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.1,7890) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சீனாவில் ஜூன் 5-ம் தேதி முதல் Mi பேன்ட் 3 விற்பனை செய்யப்படுகிறது. 

    Mi பேன்ட் 3 என்எஃப்சி வேரியன்ட் 199 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.2,095) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை செப்டம்பர் மாதம் துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    சியோமி நிறுவனத்தின் Mi டிவி4 மாடல் Mi8 நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
    பீஜிங்:

    சியோமி நிறுவனத்தின் Mi8 நிகழ்வில் 75-இன்ச் திரை கொண்ட Mi டிவி4 மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய சியோமி ஸ்மார்ட் டிவி 11.4 மில்லிமீட்டர் மெல்லிய மெட்டல் பாடி மற்றும் அலுமினியம் ஃபிரேம் கொண்டிருக்கிறது. சியோமி இதுவரை அறிமுகம் செய்ததில் மிகப்பெரிய எல்இடி டிவி மாடலாக புதிய Mi டிவி4 இருக்கிறது.

    கடந்த ஆண்டு சியோமி நிறுவனம் 49-இன்ச், 55-இன்ச் மற்றும் 65-இன்ச் Mi டிவி மாடல்களை அறிமுகம் செய்தது. புதி்ய Mi டிவி4 சியோ ஏஐ குரல் அங்கீகார வசதி, ஆன்ட்ராய்டு இயங்குதளம் சார்ந்து இயங்கும் பேட்ச்வால் யூசர் இன்டர்ஃபேஸ் கொண்டிருக்கிறது. இத்துடன் டால்பி மற்றும் டிடிஎஸ் ஆடியோ வசதி வழங்கப்பட்டுள்ளது.

    ப்ளூடூத் மற்றும் இன்ஃப்ராரெட் மூலம் இயங்கும் Mi ரிமோட் கன்ட்ரோல் வழங்கப்படுகிறது. இது Miடிவி மட்டுமின்றி, வீட்டு உபயோக சாதனங்கள் மற்றும் செட் டாப் பாக்ஸ் போன்ற சாதனங்களை இயக்கும் வசதி கொண்டிருக்கிறது.



    சியோமி Mi டிவி 4 75-இன்ச் சிறப்பம்சங்கள்:

    - 75-இன்ச் 3840x2160 பிக்சல் 4K டிஸ்ப்ளே
    - 1.8 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் அம்லாஜிக் T966 கார்டெக்ஸ்-A53 பிராசஸர்
    - மாலி-T830 MP2 GPU
    - 2 ஜிபி DDR4 டூயல்-சேனல் ரேம்
    - 32 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - MIUI டிவி மற்றும் பேட்ச்வால் 
    - சியோ ஏஐ குரல் அங்கீகார வசதி
    - வைபை, ப்ளூடூத், Mi போர்ட், 3 x HDMI 2.0, AV, 2 x யுஎஸ்பி,  1 x ஈத்தர்நெட்
    - 2x 8W ஸ்பீக்கர், டால்பி ஆடியோ, டிடிஎஸ்-ஹெச்டி

    சியோமி Mi டிவி4 75 இன்ச் ஹெச்டிஆர் டிவி விலை 8999 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.94,790) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சீனாவில் புதிய Mi டிவி4 மாடல் ஜூன் 6-ம் தேதி முதல் விற்பனை செய்யப்பட இருக்கிறது.
    ×