search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94356"

    சியோமி இந்தியா நிறுவனம் வெளியிட்டிருக்கும் புதிய டீசரில் அந்நிறுவனம் புதிய ஸ்மார்ட் டி.வி. ஒன்றை அறிமுகம் செய்ய இருப்பது தெரியவந்துள்ளது. #Xiaomi #SmartTV



    சியோமி இந்தியா புதிதாக ஸ்மார்ட் டி.வி. ஒன்றை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதை புதிய டீசர் மூலம் தெரியப்படுத்தியுள்ளது. அந்த வகையில் சியோமியின் புதிய ஸ்மார்ட் டி.வி. ஜனவரி 10 ஆம் தேதி அறிமுகமாக இருக்கிறது. 

    புதிய ஸ்மார்ட் டி.வி. சிறப்பம்சங்கள் மற்றும் இதர விவரங்கள் எதுவும் வெளியாகாத நிலையில், அந்நிறுவனம் 65 இன்ச் அளவில் 4K தரத்தில் ஹெச்.டி.ஆர். வசதி கொண்ட ஸ்மார்ட் டி.வி.யினை அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    சியோமி நிறுவனம் 55-இன்ச் மற்றும் 65-இன்ச் என இருவித அளவுகளில் 4K ஸ்மார்ட் டி.வி. மாடல்களை ஏற்கனவே அறிமுகம் செய்திருக்கும் நிலையில், புதிய ஸ்மார்ட் டி.வி. சியோமியின் விலை உயர்ந்த மாடலாக இருக்கும். புதிய ஸ்மார்ட் டி.வி.க்கான டீசருடன் #TheBiggerPicture எனும் ஹேஷ்டேக் இடம்பெற்றிருக்கிறது. 



    இதுவே பெரிய டி.வி. மாடல் ஒன்று வெளியாக இருப்பதை தெரியப்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது. சியோமி நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கும் Mi டி.வி. 4 65-இன்ச் மாடல் ஏற்கனவே சீனாவில் விற்பனை செய்யப்படுகிறது. சீனாவில் இந்த டி.வி. விலை 5999 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.62,000) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    அந்த வகையில் இந்தியாவில் சியோமியின் புதிய டி.வி. விலை ரூ.70,000 வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் அறிமுகமான Mi டி.வி. 4 ப்ரோ சீரிஸ் போன்று சியோமியின் புதிய Mi டி.வி. மாடல்களும் ஆண்ட்ராய்டு டி.வி. இயங்குதளம், ஸ்மார்ட் ரிமோட் மற்றும் வாய்ஸ் சர்ச் போன்ற வசதிகளை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
    சியோமி நிறுவனத்தின் புதிய ரெட்மி ஸ்மார்ட்போனின் விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. புதிய ரெட்மி ஸ்மார்ட்போனில் 48 எம்.பி. கேமரா, 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படுவது தெரியவந்துள்ளது. #Redmi #Smartphone



    சியோமி நிறுவனம் ஜனவரி 10 ஆம் தேதி வெளியிட இருக்கும் புதிய ஸ்மார்ட்போனின் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது.

    ரெட்மி சீரிசில் அறிமுகாக இருக்கும் புதிய ஸ்மார்ட்போனில் 48 எம்.பி. பிரைமரி கேமரா கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. சீன வலைத்தளத்தில் புதிய ரெட்மி ஸ்மார்ட்போன்கள் M1901F7C, M1901F7T மற்றும் M1901F7E மாடல் நம்பர்களை கொண்டிருக்கிறது. இதில் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் வெளியாகியுள்ளது.

    அதன்படி புதிய ரெட்மி ஸ்மார்ட்போனில் 6.3 இன்ச் வாட்டர்டிராப் நாட்ச் கொண்ட ஸ்கிரீன், மெல்லிய பெசல்கள், பின்புறம் கைரேகை சென்சார் மற்றும் கிரேடியன்ட் வடிவமைப்பு கொண்டிருக்கிறது. இத்துடன் ஸ்மார்ட்போனின் பின்புறம் ரெட்மி பை சியோமி பிராண்டிங் செய்யப்பட்டுள்ளது.


    புகைப்படம் நன்றி: Tenaa

    அந்த வகையில் போகோ போன்று ரெட்மி தனி பிராண்டாக இருக்கும் என தெரிகிறது. பின்புறம் டூயல் பிரைமரி கேமரா கொண்டிருக்கும் ரெட்மி ஸ்மார்ட்போனில், ஒரு கேமராவில் 48 எம்.பி. சென்சார் வழங்கப்படுகிறது. இத்துடன் புதிய ஸ்மார்ட்போன் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. 

    ரெட்மி ஸ்மார்ட்போனில் சோனியின் IMX586 1/2-டைப் (8.0 எம்.எம். டயகோனல்) சென்சார் மற்றும் ஸ்னாப்டிராகன் 675 11 என்.எம். பிராசஸர் கொண்டிருக்கும். இதனை சியோமி ஏற்கனவே அறிவித்திருக்கிறது. அந்த வகையில் புதிய ஸ்மார்ட்போன் ரெட்மி 7 என அழைக்கப்படலாம்.

    புதிய ரெட்மி 7 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் மற்றும் இதர விவரங்கள் வரும் நாட்களில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    சியோமி நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் புதிய வீடியோ இணையத்தில் வெளியாகியிருக்கிறது. #Xiaomi #smartphone



    சாம்சங் நிறுவனம் மடிக்ககூடிய ஸ்மார்ட்போனினை விரைவில் வெளியிடலாம் என அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது. சாம்சங் ஏற்கனவே தனது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் எவ்வாறு காட்சியளிக்கும் என்பதை கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் அறிமுகம் செய்தது.

    இந்நிலையில் சாம்சங் போன்றே சியோமி நிறுவனமும் தனது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருவது தெரியவந்துள்ளது. பிரபல ஸ்மார்ட்போன் டிப்ஸ்டரான எவான் பிளாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் சியோமியின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் வீடியோவை பகிர்ந்துள்ளார். 



    இதில் சியோமியின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் இருவிதங்களிலும் மடிக்கக்கூடியதாக காட்சியளிக்கிறது. ஸ்மார்ட்போன் திறக்கப்பட்ட நிலையில் டேப்லெட் போன்று காட்சியளிக்கிறது. இம்முறை கிடைத்திருக்கும் தகவல்கள் உண்மையாகும் பட்சத்தில் இரு புறங்களிலும் மடிக்கக்கூடிய உலகின் முதல் ஸ்மார்ட்போனாக இது இருக்கும்.

    புதிய ஸ்மார்ட்போன் MIUI 10 சார்ந்த இயங்குதளம் கொண்டிருக்கிறது, ஸ்கிரீன் அளவு மாற்றப்படும் போது யு.ஐ. சீராக மாறிக் கொள்கிறது. இதைத் தொடர்ந்து சீனாவில் இருந்து வெளியாகும் தகவல்களில் இந்த ஸ்மார்ட்போன் ஜனவரி 10 ஆம் தேதி நடைபெற இருக்கும் விழாவில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

    எனினும், இந்த ஸ்மார்ட்போனின் விற்பனைக்கு வாடிக்கையாளர்கள் சில காலம் வரை காத்திருக்க நேரிடும் என தெரிகிறது. புதிய ஸ்மார்ட்போனின் கூடுதல் விவரங்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    சியோமி நிறுவன Mi எல்.இ.டி. ஸ்மார்ட் டி.வி. மாடல்களின் விலை இந்தியாவில் குறைக்கப்பட்டுள்ளது. #Xiaomi #GST



    சியோமி நிறுவன சாதனங்களின் விலை சமீப மாதங்களில் அடிக்கடி மாற்றப்பட்டு வருகிறது. அந்த வகையில் Mi எல்.இ.டி. டி.வி. மாடல்களின் விலை நவம்பர் மாதம் அதிகரிக்கப்பட்டது. இந்திய ரூபாய் மதிப்பு சரிவு காரணமாக விலை அதிகரிக்கப்பதாக சியோமி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இந்நிலையில் புதிய ஆண்டு துவக்க தினமான இன்று, சியோமி தனது Mi எல்.இ.டி. டி.வி. மாடல்களின் விலையை குறைப்பதாக அறிவித்துள்ளது.



    விலை குறைப்புக்கு பின் ஸ்மார்ட் டி.வி.க்களின் புதிய விலை:

    சியோமி Mi எல்.இ.டி. ஸ்மார்ட் டி.வி. 4ஏ விலை ரூ.12,499 (ரூ.1,500 குறைப்பு)
    சியோமி Mi எல்.இ.டி. டி.வி. 4சி விலை ரூ.13,999 (ரூ.2,000 குறைப்பு)
    சியோமி Mi எல்.இ.டி. டி.வி. 4ஏ ப்ரோ 49 விலை ரூ.30,999 (ரூ.1,000 குறைப்பு)

    இந்தியாவில் மின்சாதன பொருட்களுக்கான சரக்கு மற்றும் சேவை வரி 28% இல் இருந்து 18% ஆக குறைக்கப்பட்டுள்ளதால், ஸ்மார்ட் டி.வி. மாடல்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது. 

    புதிய விலை குறைப்பு காரணமாக சியோமி ஸ்மார்ட் டி.வி.க்களின் விற்பனை புத்தாண்டு மற்றும் பண்டிகை காலக்கட்டத்தில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய Mi எல்.இ.டி. மாடல்களின் புதிய விலை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் தளங்களில் விற்பனை செய்யப்படுகிறது.
    சியோமி நிறுவனத்தின் இரண்டு ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் மாடல்களின் சிறப்பம்சங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. #Xiaomi #smartphones



    சியோமி நிறுவனத்தின் Mi 9 மற்றும் Mi மிக்ஸ் 4 ஸ்மார்ட்போன்களில் அந்நிறுவனம் மூன்று பிரைமரி கேமரா லென்ஸ் வழங்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

    Mi 9 ஸ்மார்ட்போன் சியோமியின் அடுத்த ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனாக இருக்கும். இதைத் தொடர்ந்து Mi மிக்ஸ் 4 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என தெரிகிறது. அந்த வகையில் Mi 9 ஸ்மார்ட்போன் இந்த ஆண்டின் முதல் அரையாண்டு காலக்கட்டத்திலும், Mi மிக்ஸ் 4 ஸ்மார்ட்போன் இரண்டாவது அரையாண்டு காலக்கட்டத்திலும் அறிமுகமாகலாம்.

    புதிய ஸ்மார்ட்போன்கள் குறித்து சீன வலைத்தளத்தில் வெளியாகியிருக்கும் தகவல்களில் புதிய Mi 9 மூன்று பிரைமரி கேமரா கொண்ட சியோமியின் முதல் ஸ்மார்ட்போனாக இருக்கும் என கூறப்படுகிறது. பல்வேறு நிறுவனங்களும் தங்களது ஸ்மார்ட்போன்களில் மூன்று அல்லது நான்கு கேமரா செட்டப் வழங்க துவங்கிவிட்ட நிலையில், சியோமி இதுவரை டூயல் கேமராவை வழங்கி வருகிறது.



    Mi மிக்ஸ் 4 ஸ்மார்ட்போனில் வழங்கப்படும் மூன்று கேமராக்களில் ஒன்று, பெரிஸ்கோப் லென்ஸ் கொண்டிருக்கும் என தெரிகிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் ஒப்போ இதேபோன்ற தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஒப்போ நிறுவனம் இதேபோன்ற தொழில்நுட்பத்தை தனது இரு ஸ்மார்ட்போன்களில் வழங்க இருப்பதாக கூறப்படுகிறது. 

    இந்த ஸ்மார்ட்போன்களில் ஒப்போ அதிகபட்சம் 10X வரையிலான ஹைப்ரிட் சூம் வசதியை வழங்கலாம். அந்த வகையில் சியோமி ஸ்மார்ட்போனிலும் இதே போன்ற வசதியை எதிர்பார்க்கலாம். மற்ற அம்சங்களை பொருத்த வரை சியோமி Mi 9 மற்றும் Mi மிக்ஸ் 4 ஸ்மார்ட்போன்களில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 சிப்செட் வழங்கப்படலாம் என தெரிகிறது.

    சியோமி நிறுவனம் சமீபத்தில் Mi பிளே ஸ்மார்ட்போனினை சீன சந்தையில் அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போனில் 5.84 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் ஸ்கிரீன், வாட்டர் டிராப் வடிவம் கொண்ட நாட்ச், ஆக்டா-கோர் பிராசஸர், அதிகபட்சம் 6 ஜி.பி. ரேம் வழங்கப்பட்டுள்ளது.
    சியோமி நிறுவனம் 12.5 இன்ச் டிஸ்ப்ளே, இன்டெல் கோர் ஐ5 பிராசஸர் கொண்ட Mi நோச்புக் ஏர் மாடலை அறிமுகம் செய்துள்ளது. #Xiaomi #notebook



    சியோமி நிறுவனம் 12.5 இன்ச் டிஸ்ப்ளே கொண்ட Mi நோட்புக் ஏர் மாடலை அறிமுகம் செய்துள்ளது. புதிய நோட்புக் மாடல் இன்டெல் கோர் ஐ5 பிராசஸர் கொண்டுள்ளது. சியோமியின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் மற்றும் ஜெ.டி. வலைத்தளங்களில் புதிய Mi நோட்புக் முன்பதிவு செய்யப்படுகிறது.

    பிராசஸர் தவிர புதிய Mi நோட்புக் மாடலில் 4 ஜி.பி. ரேம், 4ஜி கனெக்டிவிட்டி மற்றும் அதிகபட்சம் 256 ஜி.பி. மெமரி கொண்டுள்ளது. இதன் விலை CNY 3,999 (இந்திய மதிப்பில் ரூ.40,500) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

    சியோமி Mi நோட்புக் ஏர் ஜஸ்ட் சில்வர் நிற வேரியன்ட் தற்சமயம் முன்பதிவு செய்யப்படுகிறது. முதற்கட்டமாக CNY 100 செலுத்தி பயனர்கள் தங்களுக்கான நோட்புக் மாடலை முன்பதிவு செய்யலாம்.



    சியோமி Mi நோட்புக் ஏர் சிறப்பம்சங்கள்:

    - 12.5 இன்ச் 920x1080 பிக்சல் டிஸ்ப்ளே
    - விண்டோஸ் 10 ஹோம் எடிஷன்
    - இன்டெல் கோர் ஐ5 பிராசஸர்
    - இன்டெல் ஹெச்.டி. கிராஃபிக்ஸ் 615
    - 4 ஜி.பி. ரேம்
    - 256 ஜி.பி. எஸ்.எஸ்.டி.
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - 1 எம்.பி. வெப் கேமரா
    - 8 மணி நேர வீடியோ பிளேபேக்
    - 1சி ஃபாஸ்ட் சார்ஜ் வசதி
    - யு.எஸ்.பி. டைப்-சி போர்ட்
    - யு.எஸ்.பி. 3.0 போர்ட்
    - 3.5 எம்.எம். ஆடியோ ஜாக்
    - ப்ளூடூத் 4.1, வைபை 802.11ac
    சியோமி நிறுவனத்தின் போகோ எஃப்1 ஆர்மர்டு எடிஷன் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி கொண்ட ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியானது. #POCOF1 #smartphone



    சியோமியின் போகோ எஃப்1 ஆர்மர்டு எடிஷன் வேரியன்ட் இந்தியாவில் வெளியிடப்பட்டது. புதிய ஸ்மார்ட்போனில் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி வழங்கப்பட்டுள்ளது. இதன் விற்பனை நாளை (டிசம்பர் 26 ஆம் தேதி) துவங்குகிறது. போகோ எஃப்1 ஆர்மர்டு எடிஷன் ஸ்மார்ட்போனில் முன்னதாக 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி வழங்கப்பட்டிருந்தது. 

    போகோ எஃப்1 ஆர்மர்டு எடிஷனின் பின்புறம் கெவ்லர் பேக் பேனல் மற்றும் மேட் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் போகோ எஃப்1 ஸ்மார்ட்போனின் விலை குறைக்கப்பட்டு, விரைவில் புதிய அறிவிப்பு வெளியாகும் என சியோமி தெரிவித்திருந்தது. அந்த வகையில் புதிய ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியிடப்பட்டது.



    போகோ எஃப்1 சிறப்பம்சங்கள்:

    - 6.18 இன்ச் 2246x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் 
    - அட்ரினோ 630 GPU
    - 4 ஜிபி / 6 ஜிபி / 8 ஜிபி ரேம்
    - 64 ஜிபி / 128 ஜிபி / 256 ஜிபி (UFS 2.1) மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் MIUI 9
    - ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
    - 12 எம்பி பிரைமரி கேமரா, டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ், 1.4μm பிக்சல், சோனி IMX363 சென்சார்
    - 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, சாம்சங் சென்சார்
    - 20 எம்பி செல்ஃபி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்
    - கைரேகை சென்சார், ஐ.ஆர். ஃபேஸ் அன்லாக்
    - 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், டிராக் ஹெச்.டி., டூயல் ஸ்மார்ட் PA
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி
    - 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - குவால்காம் க்விக் சார்ஜ் 3.0 ஃபாஸ்ட் சார்ஜிங்

    போகோ எஃப்1 ஆர்மர்டு எடிஷன் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடலின் விலை ரூ.23,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. போகோ எஃப்1 ஆர்மர்டு எடிஷன் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் ஏற்கனவே ரூ.29,999 விலையில் வெளியிடப்பட்டது. 

    போகோ இந்தியா அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தின் படி புதிய ஆர்மர்டு எடிஷன் போகோ எஃப்1 விற்பனை டிசம்பர் 26 ஆம் தேதி அதிகாலை 00.01 மணிக்கு நடைபெறும் என துவங்கப்பட்டுள்ளது.
    சியோமி நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி Mi பிளே ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. புதிய Mi பிளே ஸ்மார்ட்போனில் டூயல் ஏ.ஐ. கேமரா, வாட்டர் டிராப் நாட்ச் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. #MiPlay #smartphone



    சியோமி நிறுவனத்தின் Mi பிளே ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ஸ்மார்ட்போனில் 5.84 இன்ச் FHD பிளஸ் டிஸ்ப்ளே, வாட்டர் டிராப் நாட்ச், மீடியாடெக் ஹீலியோ P35 12 என்.எம். பிராசஸர், 4 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது.

    புகைப்படங்களை எடுக்க 12 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, ஏ.ஐ. சீன் டிடெக்ஷன், 8 எம்.பி. செல்ஃபி கேமரா, ஏ.ஐ. பியூட்டிஃபை மற்றும் ஏ.ஐ. போர்டிரெயிட் மோட் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. 

    ஸ்மார்ட்போனின் பின்புறம் மிளிரும் கிளாஸ் மற்றும் கிரேடியன்ட் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. பின்புறம் கைரேகை சென்சார் கொண்டிருக்கும் Mi பிளே ஸ்மார்ட்போனில் டூயல் சிம் ஸ்லாட், மைக்ரோ எஸ்.டி. கார்டு ஸ்லாட் மற்றும் 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.



    சியோமி Mi பிளே சிறப்பம்சங்கள்

    - 5.84 இன்ச் 2280x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
    - 2.3 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ P35 12 என்.எம். பிராசஸர்
    - IMG பவர் வி.ஆர். GE8320 GPU
    - 4 ஜி.பி. ரேம்
    - 64 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் MIUI 10
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 12 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/2.2, 1.25μm பிக்சல், PDAF, EIS
    - 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா
    - 8 எம்.பி. செல்ஃபி கேமரா
    - கைரேகை சென்சார்
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி
    - 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    சியோமி Mi பிளே ஸ்மார்ட்போன் பிளாக், டிரீம் புளு மற்றும் ட்விலைட் கோல்டு என மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 1099 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.11,155) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    சியோமி நிறுவனத்தின் ரெட்மி சீரிஸ் புதிய ஸ்மார்ட்போன்கள் விரைவில் வெளியாக இருப்பதை உணர்த்தும் வகையில், மூன்று ஸ்மார்ட்போன்கள் சீனாவில் சான்று பெற்றுள்ளன. #Redmi7 #Smartphones



    சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 6 ஸ்மார்ட்போன் வெளியாகி ஒருமாதம் நிறைவுறாத நிலையில், அந்நிறுவனம் தனது அடுத்த ஸ்மார்ட்போனினை வெளியிட் தயாராகி வருகிறது. 

    நேஷ்வில் சேட்டர் வெளியிட்டிருக்கும் சமீபத்திய தகவல்களில் சீனாவின் கம்பல்சரி சர்டிஃபிகேட் வலைதளத்தில் M1901F7C, M1901F7E, மற்றும் M1901F7T என்ற மாடல் நம்பர்களுடன் மூன்று சியோமி ஸ்மார்ட்போன்கள் சான்று பெற்று இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இந்த ஸ்மார்ட்போன்களில் 5V/2A சார்ஜிங் வசதி வழங்குவதற்கான அனுமதியளிக்கப்பட்டுள்ளது. ரெட்மி ஸ்மார்ட்போன்களில் 5V/2A சார்ஜிங் வசதி பிரபலமாக இருக்கும் நிலையில், மூன்று ஸ்மார்ட்போன்களும் ரெட்மி சீரிஸ் ஆக இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    சியோமி நிறுவனம் இந்த ஆண்டு அறிமுகம் செய்த ஸ்மார்ட்போன்களில் M18 என்ற மாடல் நம்பர் கொண்டிருந்த நிலையில், தற்போதைய ஸ்மார்ட்போன்கள் M19 என துவங்குவதை வைத்து பார்க்கும் போது மூன்று புதிய ஸ்மார்ட்போன்களும் 2019 ஆண்டில் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது.
    சியோமி நிறுவன ஸ்மார்ட்போன் மாடல்களின் விலை கடந்த மாதம் அதிகரிக்கப்பட்ட நிலையில், தற்சமயம் ரெட்மி 6ஏ ஸ்மார்ட்போனின் விலை குறைக்கப்பட்டுள்ளது. #Redmi6A



    இந்திய ரூபாய் மதிப்பு சரிவு காரணமாக சியோமி நிறுவன ஸ்மார்ட்போன் மாடல்களின் விலை கடந்த மாதம் அதிகரிக்கப்பட்டது. அந்த வகையில் சியோமி ரெட்மி 6 மற்றும் ரெட்மி 6ஏ ஸ்மார்ட்போன்களின் விலை ரூ.600 வரை அதிகரிக்கப்பட்டு இரண்டு ஸ்மார்ட்போன்களும் முறையே ரூ.8,499 மற்றும் ரூ.6,592 விலையில் விற்பனை செய்யப்பட்டன. 

    எனினும், ரெட்மி 6 3 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி வேரியன்ட் விலை மட்டும் மாற்றப்படாமல் இருந்தது. இந்நிலையில் ரெட்மி 6ஏ ஸ்மார்ட்போனின் விலை குறைக்கப்பட்டு, தற்சமயம் பழைய விலையிலேயே விற்பனை செய்யப்படும் என சியோமி தெரிவித்துள்ளது. 



    சமீபத்தில் சியோமியின் துணை பிரான்டு போகோவின் எஃப்1 ஸ்மார்ட்போன் விலை ரூ.1,000 குறைக்கப்பட்டது. அந்த வகையில், போகோ எஃப்1 ஸ்மார்ட்போன் தற்சமயம் ரூ.19,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. 

    புதிய விலை குறைப்பை தொடர்ந்து ரெட்மி 6ஏ ஸ்மார்ட்போனின் 2 ஜி.பி. ரேம், 16 ஜி.பி. மெமரி விலை ரூ.5,999 என்றும் 2 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி மாடல் ரூ.6,999க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன்கள் அமேசான் மற்றும் சியோமியின் அதிகாரப்பூர்வ வலைதளங்களில் விற்பனை செய்யப்படுகிறது. புதிய விலை குறைப்பு இன்று (டிசம்பர் 13) மதியம் 12.00 மணி முதல் அமலாகிறது.



    சியோமி ரெட்மி 6ஏ சிறப்பம்சங்கள்:

    - 5.45 இன்ச் 1440x720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் 18:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - 2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ P22 சிப்செட்
    - 2 ஜி.பி. ரேம் 
    - 16 ஜி.பி. / 32 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 8.1 (ஓரியோ) மற்றும் MIUI 9
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ்
    - 5 எம்.பி. செல்ஃபி கேமரா
    - இன்ஃப்ராரெட் சென்சார்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    சியோமி ரெட்மி 6 போன்றே ரெட்மி 6ஏ ஸ்மார்ட்போனும் பிளாக், கோல்டு, ரோஸ் கோல்டு மற்றும் புளு உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. #Redmi6A #smartphone
    சியோமியின் போகோ எஃப்1 ஸ்மார்ட்போனின் விலை இந்தியாவில் நிரந்தரமாக குறைக்கப்பட்டள்ளது. #POCOF1

     

    சியோமியின் துணை பிரான்டு போகோ தனது முதல் ஸ்மார்ட்போனினை இந்தியாவில் ஆகஸ்டு மாதத்தில் அறிமுகம் செய்தது. இந்தியாவில் ரூ.20,999 எனும் துவக்க விலையில் போகோ எஃப்1 ஸ்மார்ட்போன் அறிமுகமானது. 

    ஆன்லைன் சிறப்பு விற்பனைகளில் பல்வேறு சலுகைகளில் விலை குறைக்கப்பட்ட நிலையில், தற்சமயம் போகோ எஃப்1 ஸ்மார்ட்போனிற்கு நிரந்தர விலை குறைப்பை போகோ அறிவித்துள்ளது.

    சர்வதேச சந்தையில் ஏழு லட்சம் யூனிட்கள் விற்பனையை கொண்டாடும் வகையில் போகோ எஃப்1 ஸ்மார்ட்போனின் பேஸ் வேரியன்ட் தற்சமயம் ரூ.19,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. போகோ எஃப்1 ஸ்மார்ட்போன் புது விலையில் பிளிப்கார்ட் மற்றும் சியோமி அதிகாரப்பூர்வ வலைதளங்களில் கிடைக்கிறது.



    போகோ எஃப்1 புது விலை பட்டியல்:

    போகோ எஃப்1 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ.19,999 (ரூ.1,000 தள்ளுபடி)
    போகோ எஃப்1 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ.22,999 (ரூ.1,000 தள்ளுபடி)
    போகோ எஃப்1 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ.27,999 (ரூ.1,000 தள்ளுபடி)
    போகோ எஃப்1 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி கெவ்லர் ஆர்மர்டு எடிஷன் விலை ரூ.28,999 (ரூ.1,000 தள்ளுபடி)



    போகோ எஃப்1 சிறப்பம்சங்கள்:

    - 6.18 இன்ச் 2246x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் 
    - அட்ரினோ 630 GPU
    - 4 ஜி.பி. / 6 ஜி.பி. / 8 ஜி.பி. ரேம்
    - 64 ஜி.பி. / 128 ஜி.பி. / 256 ஜி.பி. (UFS 2.1) மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் MIUI 9
    - ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
    - 12 எம்.பி. பிரைமரி கேமரா, டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ், 1.4μm பிக்சல், சோனி IMX363 சென்சார்
    - 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, சாம்சங் சென்சார்
    - 20 எம்.பி. செல்ஃபி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்
    - கைரேகை சென்சார், ஐ.ஆர். ஃபேஸ் அன்லாக்
    - 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், டிராக் ஹெச்.டி., டூயல் ஸ்மார்ட் PA
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி
    - 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - குவால்காம் க்விக் சார்ஜ் 3.0 ஃபாஸ்ட் சார்ஜிங்

    போகோ எஃப்1 ஸ்மார்ட்போனிற்கு சமீபத்தில் ஆன்ட்ராய்டு 9.0 பை ஓபன் பீட்டா அப்டேட் வழங்கப்பட்டது. மற்றொரு அப்டேட் இந்த ஸ்மார்ட்போனில் 960fps ஸ்லோ-மோஷன் வீடியோ பதிவு செய்யும் வசதியை வழங்கியது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போனில்  120fps மற்றும் 240fps ஸ்லோ-மோஷன் வீடியோ பதிவு செய்யும் வசதி வழங்கப்பட்டு இருந்தது. #POCOF1 #smartphone
    சியோமி துணை பிரான்டு போகோவின் எஃப்1 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமான மூன்று மாதங்களில் ஏழு லட்சம் யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. #POCOF1



    சியோமியின் துணை பிரான்டு போகோ தனது எஃப்1 ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்தியாவில் அறிமுகமாகி விற்பனை துவங்கிய மூன்றே மாதங்களில் போகோ எஃப்1 ஸ்மார்ட்போன் ஏழு லட்சம் யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. 

    போகோ இந்தியா அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இத்தகவலை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. புது விற்பனை சாதனையை கொண்டாடும் வகையில் போகோ எஃப்1 ஸ்மார்ட்போனுக்கு சிறப்பு தள்ளுபடி மற்றும் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.



    அந்த வகையில் பிளிப்கார்ட் மற்றும் Mi அதிகாரப்பூர்வ வலைதளங்களில் போகோ எஃப்1 ஸ்மார்ட்போன் ஸ்மார்ட்போன் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி கெவ்லர் ஆர்மர்டு எடிஷன் விலை ரூ.3,000 குறைக்கப்பட்டு ரூ.25,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதனுடன் பழைய ஸ்மார்ட்போனை எக்சேஞ்ச் செய்யும் போது ரூ.14,900 வரை கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    போகோ எஃப்1 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி கொண்ட மாடல் ரூ.25,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இது ஸ்மார்ட்போனின் முந்தைய விலையில் இருந்து ரூ.3,000 வரை குறைவு ஆகும். இதனுடன் பழைய ஸ்மார்ட்போனை எக்சேஞ்ச் செய்யும் போது ரூ.14,900 வரை கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது.



    போகோ எஃப்1 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் ரூ.3,000 வரை குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ.20,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. போகோ எஃப்1 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ.1,000 குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ.19,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. 

    போகோ எஃப்1 ஸ்மார்ட்போனில் 6.18 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே மற்றும் நாட்ச் கொண்டிருக்கும் போகோ எஃப்1 மாடலில் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட், 8 ஜி.பி. ரேம் மற்றும் லிக்விட்-கூல் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது.

    புகைப்படங்களை எடுக்க 12 எம்பி பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, ஏ.ஐ. அம்சங்கள், 20 எம்.பி. செல்ஃபி கேமரா மற்றும், ஏ.ஐ. அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. ஐ.ஆர். ஃபேஸ் அன்லாக் வசதி கொண்டிருக்கும் போகோ எஃப்1 மாடல் இருள் நிறைந்த இடங்களிலும் 0.4 நொடிகளில் அன்லாக் செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



    போகோ எஃப்1 சிறப்பம்சங்கள்:

    - 6.18 இன்ச் 2246x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் 
    - அட்ரினோ 630 GPU
    - 4 ஜிபி / 6 ஜிபி / 8 ஜிபி ரேம்
    - 64 ஜிபி / 128 ஜிபி / 256 ஜிபி (UFS 2.1) மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் MIUI 9
    - ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
    - 12 எம்பி பிரைமரி கேமரா, டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ், 1.4μm பிக்சல், சோனி IMX363 சென்சார்
    - 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, சாம்சங் சென்சார்
    - 20 எம்பி செல்ஃபி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்
    - கைரேகை சென்சார், ஐ.ஆர். ஃபேஸ் அன்லாக்
    - 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், டிராக் ஹெச்.டி., டூயல் ஸ்மார்ட் PA
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி
    - 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - குவால்காம் க்விக் சார்ஜ் 3.0 ஃபாஸ்ட் சார்ஜிங்

    போகோ எஃப்1 ஸ்மார்ட்போன் பிளாக், ஸ்டீல் புளு மற்றும் ரோஸோ ரெட் போன்ற நிறங்களில் கிடைக்கிறது. #POCOF1 #smartphone
    ×