search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    48 எம்.பி. கேமரா, 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரியுடன் உருவாகும் ரெட்மி ஸ்மார்ட்போன்
    X

    48 எம்.பி. கேமரா, 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரியுடன் உருவாகும் ரெட்மி ஸ்மார்ட்போன்

    சியோமி நிறுவனத்தின் புதிய ரெட்மி ஸ்மார்ட்போனின் விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. புதிய ரெட்மி ஸ்மார்ட்போனில் 48 எம்.பி. கேமரா, 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படுவது தெரியவந்துள்ளது. #Redmi #Smartphone



    சியோமி நிறுவனம் ஜனவரி 10 ஆம் தேதி வெளியிட இருக்கும் புதிய ஸ்மார்ட்போனின் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது.

    ரெட்மி சீரிசில் அறிமுகாக இருக்கும் புதிய ஸ்மார்ட்போனில் 48 எம்.பி. பிரைமரி கேமரா கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. சீன வலைத்தளத்தில் புதிய ரெட்மி ஸ்மார்ட்போன்கள் M1901F7C, M1901F7T மற்றும் M1901F7E மாடல் நம்பர்களை கொண்டிருக்கிறது. இதில் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் வெளியாகியுள்ளது.

    அதன்படி புதிய ரெட்மி ஸ்மார்ட்போனில் 6.3 இன்ச் வாட்டர்டிராப் நாட்ச் கொண்ட ஸ்கிரீன், மெல்லிய பெசல்கள், பின்புறம் கைரேகை சென்சார் மற்றும் கிரேடியன்ட் வடிவமைப்பு கொண்டிருக்கிறது. இத்துடன் ஸ்மார்ட்போனின் பின்புறம் ரெட்மி பை சியோமி பிராண்டிங் செய்யப்பட்டுள்ளது.


    புகைப்படம் நன்றி: Tenaa

    அந்த வகையில் போகோ போன்று ரெட்மி தனி பிராண்டாக இருக்கும் என தெரிகிறது. பின்புறம் டூயல் பிரைமரி கேமரா கொண்டிருக்கும் ரெட்மி ஸ்மார்ட்போனில், ஒரு கேமராவில் 48 எம்.பி. சென்சார் வழங்கப்படுகிறது. இத்துடன் புதிய ஸ்மார்ட்போன் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. 

    ரெட்மி ஸ்மார்ட்போனில் சோனியின் IMX586 1/2-டைப் (8.0 எம்.எம். டயகோனல்) சென்சார் மற்றும் ஸ்னாப்டிராகன் 675 11 என்.எம். பிராசஸர் கொண்டிருக்கும். இதனை சியோமி ஏற்கனவே அறிவித்திருக்கிறது. அந்த வகையில் புதிய ஸ்மார்ட்போன் ரெட்மி 7 என அழைக்கப்படலாம்.

    புதிய ரெட்மி 7 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் மற்றும் இதர விவரங்கள் வரும் நாட்களில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×