search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுசுகி"

    சுசுகி நிறுவனம் முற்றிலும் புதிய எஸ் கிராஸ் மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்து இருக்கிறது.


    சுசுகி நிறுவனத்தின் புதிய எஸ் கிராஸ் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மாடல் மேம்பட்ட குளோபல் சி பிளாட்பார்மில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இது முந்தைய மாடலை விட அதிகளவு எஸ்.யு.வி. போன்ற தோற்றம் கொண்டிருக்கிறது.

    இந்த காரின் முன்புறம் கிளாஸ்-பிளாக் கிரில் மற்றும் எல்.இ.டி. ஹெட்லைட்கள் உள்ளன. இவை காரின் தோற்றத்தை பிரம்மாண்டமாக வெளிப்படுத்துகின்றன. பக்கவாட்டில் இந்த கார் முந்தைய மாடலை விட பெரிதாக காட்சியளிக்கிறது. பின்புறம் ராப்-அரவுண்ட் டெயில் லேம்ப்கள், இண்டகிரேட் செய்யப்பட்ட ரூப் ஸ்பாயிலர் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. 

     சுசுகி எஸ் கிராஸ்

    புதிய சுசுகி எஸ் கிராஸ் மாடலில் 1.4 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட என்ஜின் மற்றும் மைல்டு-ஹைப்ரிட் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 125.2 பி.ஹெச்.பி. திறன், 235 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. 

    இந்த காரில் 360 டிகிரி சரவுண்ட்-வியூ கேமரா, 9 இன்ச் இன்போடெயின்மெண்ட் யூனிட், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, முன்புறம் ஹீட்டெட் சீட்கள், ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல் மற்றும் பல்வேறு இதர அம்சங்கள் உள்ளன. 

    இத்துடன் அட்வான்ஸ்டு டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம், டிரைவர் அசிஸ்டன்ஸ், அடாப்டிவ் குரூயிஸ் கண்ட்ரோல், லேன் கீப் அசிஸ்ட், கிராஸ்-டிராபிக் அலெர்ட், எமர்ஜென்சி ஆட்டோனோமஸ் பிரேக்கிங் போன்ற வசதிகள் வழங்கப்பட்டு இருக்கின்றன.
    சுசுகி நிறுவனம் இந்திய சந்தையில் புதிய அவெனிஸ் 125 ஸ்கூட்டர் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது.


    சுசுகி நிறுவனம் அவெனிஸ் 125 மாடலினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. இந்தியாவில் புதிய சுசுகி அவெனிஸ் 125 விலை ரூ. 86,700 (எக்ஸ்-ஷோரூம்) என துவங்குகிறது. இந்த ஸ்கூட்டர் டி.வி.எஸ். என்டார்க் 125, ஹோண்டா கிரேசியா, ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 மற்றும் அப்ரிலியா எஸ்.ஆர். 125 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

    இந்த மாடலில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், ப்ளூடூத் கனெக்டிவிட்டி, டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன், யு.எஸ்.பி. சார்ஜர், சைடு ஸ்டாண்டு இண்டர்லாக் போன்ற அம்சங்கள் உள்ளன. சுசுகி அவெனிஸ் மாடலில் 125சிசி, பியூவல் இன்ஜெக்ட் செய்யப்பட்ட என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. 

     சுசுகி அவெனிஸ் 125

    புதிய சுசுகி அவெனிஸ் மாடல் கிரே, ஆரஞ்சு, வைட் மற்றும் புளூ போன்ற நிறங்களில் கிடைக்கிறது. இதன் மோட்டோ ஜிபி எடிஷன் விலை ரூ. 87,600 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
    சுசுகி நிறுவனம் விரைவில் அறிமுகம் செய்ய இருக்கும் மோட்டார்சைக்கிளின் என்ஜின் விவரங்கள் வெளியாகி இருக்கிறது.



    இரு சக்கர வாகன உற்பத்தியில் முன்னணியில் உள்ள சுசுகி நிறுவனத்தின் புதிய வரவாக ஜிக்சர் 250 சந்தைக்கு வர இருக்கிறது. இப்புதிய மாடல் மோட்டார்சைக்கிளை இம்மாதம் 20-ந் தேதி இந்நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளது. இந்த ஆண்டின் மிகப் பெரிய, மறக்கமுடியாத அறிமுகமாக ஜிக்சர் 250 இருக்கும் என்று நிறுவனம் உறுதிபட நம்புகிறது.

    இந்நிறுவனம் மிகப் பெரிய எழுச்சியை பார்த்து ரசிக்க தயாராகுங்கள் என்கிற ரீதியில் விளம்பர வாசகம் மூலம் வாடிக்கையாளர்களைக் கவரும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக புதிய மோட்டார்சைக்கிளை சுசுகி அறிமுகம் செய்யப் போகிறது என்ற செய்திகள் பரவலாக வெளிவந்துள்ளன.

    ஆனால் கடந்த ஆண்டுதான் 250 சி.சி. பிரிவில் ஒரு மோட்டார்சைக்கிளை இந்நிறுவனம் அறிமுகம் செய்யப் போவது உறுதியானது. இந்தியாவில் சுசுகி தயாரிப்புகளில் ஜிக்சர் பிராண்ட் மிகவும் பிரபலமாகிவிட்டது. இதனால் இந்தியாவில் ஜிக்சர் 250 என்ற பெயரில் இதை அறிமுகப்படுத்த இந்நிறுவனம் திட்டமிட்டு அதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.



    உறுதியான மோட்டார்சைக்கிளுக்குரிய அனைத்து வடிவமைப்புகளும் கொண்டதாக இது உள்ளது. இதில் 249 சி.சி., சிங்கிள் சிலிண்டர் என்ஜினைக் வழங்கப்படும் என தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த என்ஜின் 26.5 பி.எஸ் மற்றும் 22.6 என்.எம். டார்க் செயல்திறன் வழங்கும் திறன் கொண்டிருக்கிறது. 

    4-வால்வ் கொண்ட இந்த என்ஜின் 6 கியர்களை உடையதாகவும் இது பி.எஸ்.6 புகைவிதிகளுக்கு உட்பட்டு இருக்கும். யமஹா பேஸர் மாடலுக்கு போட்டியாக இது இருக்கும் என்று கருதப்படுகிறது. இந்தியாவில் இதன் விலை ரூ.1.35 லட்சம் முதல் ரூ.1.45 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என தெரிகிறது.
    ஜப்பான் நாட்டு மோட்டார்சைக்கிள் நிறுவனமான சுசுகி இந்தியாவில் 2019 இன்ட்ரூடர் 150 மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. #SuzukiIntruder



    சுசுகி நிறுவனம் இந்தியாவில் 2019 இன்ட்ரூடர் 150 மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. 2019 சுசுகி இன்ட்ரூடர் 150 விலை ரூ.1,08,162 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 2019 சுசுகி இன்ட்ரூடர் 150 முந்தைய மாடலை விட சிறிதளவு மேம்படுத்தப்பட்டுள்ளது.

    அந்த வகையில் 2019 இன்ட்ரூடர் மாடல் புதிதாக மெட்டாலிக் மேட் டைட்டானியம் சில்வர் நிறத்தில் கிடைக்கிறது. இத்துடன் கியர் ஷிஃப்ட் பேட்டன் மற்றும் பிரேக் பெடல் உள்ளிட்டவை மேம்படுத்தப்பட்டுள்ளது. இது வாகனத்தை ஓட்டுவோருக்கு சவுகரியத்தை வழங்குகிறது.

    புதிய 2019 இன்ட்ரூடர் மாடலின் பின் இருக்கையில் அமர்ந்து செல்வோருக்கு பேக்ரெஸ்ட் வழங்கப்பட்டுள்ளது. இவை தவிர சுசுகி இன்ட்ரூடர் 150 மாடலில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. என்ட்ரி-லெவல் குரூஸ் மோட்டார்சைக்கிளில் 154.9சிசி சிங்கிள் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது.



    இந்த என்ஜின் 14.6 பி.ஹெச்.பி. @8000 ஆர்.பி.எம் மற்றும் 14 என்.எம். டார்க் @6000 ஆர்.பி.எம். செயல்திறன் வழங்குகிறது. இந்த என்ஜினுடன் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. புதிய இன்ட்ரூடர் 150 மாடல் லிட்டருக்கு 44 கிலோமீட்டர் வரை செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சுசுகி இன்ட்ரூடர் 150 மாடலின் முன்புறம் டெலிஸ்கோபிக் ஃபோர்க், பின்புறம் மோனோஷாக் சஸ்பென்ஷன் வழங்கப்பட்டுள்ளது. பிரேக்கிங்கை பொருத்தவரை முன்புறம் 266 எம்.எம். டிஸ்க் பின்புறம் 220 எம்.எம். பிரேக் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஏ.பி.எஸ். வசதி சேர்க்கப்பட்டுள்ளது.
    சுசுகி நிறுவனத்தின் புதிய டி.ஆர். இசட்50 மோட்டார்சைக்கிளின் இந்திய விற்பனை துவங்கியுள்ளது. #Suzuki



    சுசுகி நிறுவனம் அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற வகையிலான வாகனங்களை தயாரிப்பதில் முன்னணி நிறுவனமாக உள்ளது. இந்நிறுவனம் கடந்த ஆண்டிலேயே 3 மோட்டார்சைக்கிள்ளை காட்சிப்படுத்தியிருந்தது. 

    இவற்றில் முதலாவது மாடலாக டி.ஆர். இசட்50 இந்திய விற்பனை துவங்கியுள்ளது. இந்திய சந்தையில் 50 சி.சி. பிரிவில் அறிமுகமாகி இருக்கும் இந்த மோட்டார்சைக்கிள் சாகசப் பிரியர்களுக்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

    கரடு, முரடான சாலைகளில் பயணிப்பதற்கேற்ப இதன் டயர்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. வெறுமனே சாகசப் பயணத்துக்கென வடிவமைக்கப்பட்டுள்ளதால் இதில் முகப்பு விளக்கு கிடையாது. இதனால் இதை சாதாரண சாலைகளில் இரவில் பயன்படுத்த முடியாது. 

    இந்த மோட்டார்சைக்கிளில் 49 சி.சி. திறனுடன் ஒற்றை சிலிண்டர் என்ஜினைக் கொண்டிருக்கிறது.  இந்த என்ஜின் 3 கியர்களுடன் ஆட்டோமேடிக் கிளட்ச் வசதியுடன் வழங்கப்பட்டுள்ளது. குறைந்த சி.சி. திறன் கொண்டிருக்கும் டி.ஆர். இசட் 50 மாடலில் டிரம் பிரேக் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

    சிறியவர்களும் ஓட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதால் இதன் எடையும் 58 கிலோவாக உள்ளது. பெட்ரோல் டேங்க் 3 லிட்டர் கொள்ளளவு கொண்டிருக்கிறது. வண்ணங்களை தேர்வு செய்ய வாய்ப்பு தராமல் ஒரே மஞ்சள் நிறத்தில் மட்டுமே இந்த மோட்டார்சைக்கிளை சுசுகி அறிமுகம் செய்துள்ளது.
    சுசுகி நிறுவனம் இந்தியாவில் தனது புதிய அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. #SUZUKI



    சுசுகி நிறுவனம் ஒருவழியாக தனது மிடில்வெயிட் அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிளை இந்தியாவில் அறிமுகம் செய்தது. 

    சுசுகி வி-ஸ்டாம் 650 XT மோட்டார்சைக்கிள் செப்டம்பர் மாதத்தில் வெளியிடப்படலாம் என கூறப்பட்ட நிலையில், இதன் வெளியீடு சற்றே தாமதமாகி இருக்கிறது. இந்தியாவில் புதிய வி ஸ்டாம் XT விலை ரூ.7.46 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

    வி ஸ்டாம் தோற்றம் பார்க்க முந்தைய வி ஸ்டாம் 1000 மாடலை போன்றே காட்சியளிக்கிறது. வி ஸ்டாம் 1000 மாடலில் இருப்பதை போன்றே அட்வென்ச்சர் ஃபேரிங் மற்றும் ஹெட்லைட்கள் செங்குத்தாக பொருத்தப்பட்டுள்ளன. இத்துடன் பயனர் விருப்பப்படி மாற்றிக் கொள்ளக்கூடிய வின்ட்ஷீல்டு வழங்கப்பட்டுள்ளது.

    சுசுகி வி ஸ்டாம் 650 XT மாடலில் அலுமினியம் ஸ்போக் சக்கரங்கள், டியூப்லெஸ் பேட்லேக்ஸ் அட்வென்ச்சர் ஏ40 டியூப்லெஸ் டையர்கள், ஹேன்ட் கார்டுகள் மற்றும் இன்ஜின் கவுல் வழங்கப்பட்டுள்ளது. புதிய அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் 12 வாட் டிசி சார்ஜிங் போர்ட் ஸ்டான்டர்டு அம்சமாக கொண்டுள்ளது.



    இந்த மோட்டார்சைக்கிள் 650சிசி லிக்விட்-கூல்டு வி-ட்வின் இன்ஜின் கொண்டுள்ளது. இந்த இன்ஜின் 71 பி.ஹெச்.பி. @8800 ஆர்.பி.எம். செயல்திறன், 62 என்.எம். டார்கியூ @6500 ஆர்.பி.எம். மற்றும் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் வருகிறது. இதில் மூன்று வகையில் மாற்றிக் கொள்ளக்கூடிய டிராக்ஷன் கன்ட்ரோல் சிஸ்டம் மற்றும் ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது.

    இத்துடன் முன்பக்கம் 43எம்.எம். டெலிஸ்கோபிக் ஃபோர்க், மாற்றக்கூடி ரீபவுன்ட் உடனும் பின்புறம் பிரீலோடு வழங்கப்பட்டுள்ளது. இதன் பிரேக்கிங் அம்சங்கள் பின்புறம் 260 எம்.எம். டிஸ்க், முன்பக்கம் 310 எம்.எம். டூயல் டிஸ்க் வழங்கப்பட்டுள்ளது. இதில் ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் (ஏ.பி.எஸ்.) ஸ்டான்டர்டு அம்சமாக இருக்கிறது.

    சுசுகி வி ஸ்டாம் 650 XT சேம்பியன் எல்லோ மற்றும் பியல் வைட் கிளேசியர் என இரண்டு வித நிறங்களில் கிடைக்கிறது. இதன் முன்பதிவு ஏற்கனவே துவங்கப்பட்டு இருக்கும் நிலையில், விநியோகம் சில வாரங்களில் துவங்கும் என தெரிகிறது.
    இந்தியாவில் சுசுகி நிறுவனத்தின் வி ஸ்டாம் 650 மோட்டார்சைக்கிளுக்கான முன்பதிவு துவங்கப்பட்டது. இதுகுறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #Suzuki



    சுசுகி நிறுவனத்தின் புதிய வி ஸ்டாம் 650 அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிளின் முன்பதிவுகள் இந்தியாவில் துவங்கப்பட்டுள்ளன. இதுகுறித்து வெளியாகி இருக்கும் தகவல்களில் புதிய வி ஸ்டாம் 650 வெளியீடு அடுத்த மாதம் நடைபெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    சுசுகி விற்பனை மையங்களில் புதிய அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிளுக்கான முன்பதிவுகள் துவங்கப்பட்டுள்ள நிலையில், முன்பதிவு கட்டணமாக ரூ.50,000 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் புதிய சுசுகி வி ஸ்டாம் 650 விலை ரூ.7.0 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்தியாவில் சுசுகி வி-ஸ்டாம் 650 XT மாடல் கவாசகி வெர்சிஸ் 650 மற்றும் பென்லி TNT 600 GT உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.



    இந்தியாவிலேயே கட்டமைக்கப்பட்டதால் சுசுகி GSX-S750 விலை வெகுவாக குறைக்க முடிந்தது. இதே வழிமுறையை சுசுகி தனது 650 XT மாடலுக்கும் பின்பற்ற இருக்கிறது. ஹயபூசா மற்றும் GSX-S750 மாடல்களைத் தொடர்ந்து உள்நாட்டிலேயே கட்டமைக்கப்படும் மூன்றாவது மோட்டார்சைக்கிளாக சுசுகி வி-ஸ்டாம் 650 இருக்கிறது. 

    முதற்கட்டமாக இன்டர்மோட் 2016 விழாவில் அறிமுகம் செய்யப்பட்ட சுசுகி வி-ஸ்டாம் 650 XT இந்தியாவில் 2018 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகமானது. வி-ஸ்டாம் 650 மாடலின் முன்பக்கம் 19 இன்ச் மற்றும் பின்புறம் 17 இன்ச் ஸ்போக் வீல் கொண்டிருக்கிறது. 

    சுசுகி வி-ஸ்டாம் 650 XT மாடலில் 650சிசி வி-ட்வின் இன்ஜின் வழங்கப்படுகிறது. இதே இன்ஜின் சர்வதேச சந்தையில் விற்பனையாகும் வி-ஸ்டாம் 650 XT மாடலிலும் வழங்கப்பட்டுள்ளது. புதிய மாடலின் ஸ்டைலிங் பெரிய வி-ஸ்டாம் 1000 மாடலைத் தழுவி உருவாக்கப்பட்டிருக்கிறது. #SUZUKI #motorcycle
    சுசுகி நிறுவனம் புதிய சிட்டி கார் கான்செப்ட்-ஐ ஆகஸ்டு மாத வாக்கில் அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்திருக்கிறது. இது குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.




    கைகின்டோ இந்தோனேஷிய ஆட்டோ விழாவில் சுசுகி நிறுவனம் வித்தியாச அறிவிப்புகளை வழங்கி வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளது. 

    அந்த வகையில் இந்த ஆண்டு ஆட்டோ விழா ஆகஸ்டு 2-ம் தேதி துவங்க இருக்கிறது. இவ்விழாவில் சுசுகி விரைவில் உற்பத்தி செய்ய இருக்கும் கான்செப்ட் கார் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

    சுசுகியின் புதிய கான்செப்ட் சிட்டி கார் என்றும், இது இந்தோனேஷியாவில் மட்டும் விற்பனை செய்யப்பட இறுக்கும் புதிய சப்-பிரான்டு வாகனமாக இருக்கும் என இந்தோனேஷிய செய்தி நிறுவனத்துக்கு வழங்கிய பேட்டியில் உற்பத்தி மற்றும் விளம்பர ஆராய்ச்சி பிரிவு தலைவர் ஹரோல்டு டொனெல் தெரிவித்தார்.   

    இளம் தலைமுறையினரை குறிவைத்து இந்த சிட்டி கார் எதிர்காலத்தில் அதிகளவில் உற்பத்தி செய்யப்படும் என்றும் அவர் தெரிவி்த்தார். இந்தோனேஷிய சந்தையில் இந்த கார் சுசுகி நிறுவனத்துக்கு புதிய அடையாளத்தை பெற்று தரும் என அவர் மேலும் தெரிவித்தார்.
    ×