search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94368"

    மும்பை - அகமதாபாத் புல்லட் ரெயில் திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்துவதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், திட்டத்துக்கான நிதியுதவியை ஜப்பான் நிறுவனம் நிறுத்தியுள்ளது. #BulletTrain #Japan
    அகமதாபாத்:

    குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து மகாராஷ்டிரா மாநிலம் மும்பைக்கு புல்லட் ரெயில் திட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி, ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, ஆகிய இருவரும் கடந்த மே அடிக்கல் நாட்டினார். ஜப்பான் நாட்டின் நிதி உதவியுடன் தயாராகும் இந்த திட்டம் 2023-ம் ஆண்டு நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டது.

    சுமார் 1 லட்சம் கோடி ரூபாய் செலவில் மதிப்பிடப்பட்ட இந்த திட்டத்தின் தொடக்க கட்டமான நிலம் கையகப்படுத்துவதிலேயே பல சிக்கல்கள் எழுந்தன. இரு மாநிலங்களிலும் உள்ள விவசாயிகள் நிலம் கையகப்படுத்துவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். ‘குஜராத் மாநில சட்டப்படி, வளமான நிலத்துக்கு குறைவான நஷ்டஈடு தந்தால் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். எனவே மத்திய அரசின் சட்டப்படி நிலம் கையகப்படுத்துவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்’ என பல விவசாயிகள் தெரிவித்தனர்.

    இந்நிலையில், விவசாயிகள் எதிர்ப்பால் தொய்வடைந்துள்ள புல்லட் ரெயில் கட்டுமானப்பணிகளுக்கான நிதியுதவியை ஜப்பான் நிறுவனம் நிறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜப்பான் சர்வதேச கூட்டமைப்பு முகமை (JICA) என்ற ஜப்பான் அரசு நிறுவனமானது விவசாயிகள் பிரச்சனை குறித்தும், அரசு எடுத்துவரும் நவடிக்கை குறித்தும் மத்திய அரசிடம் விளக்கம் கேட்டுள்ளது.
    விண்கல்லில் 2 ஆளில்லா ரோவர்களை தரையிறக்கி வராலாற்று சாதனை படைத்துள்ளதாக ஜப்பானின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ஜாக்ஸா அறிவித்துள்ளது. #JAXA #asteroid
    டோக்கியோ:

    ஜப்பானின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ஜாக்ஸா கடந்த 2014 ஆண்டு,  பூமிக்கு அருகே உள்ள ர்யுகு (Rygu) என்னும் விண்கல்லின் மாதிரிகளை சேகரிப்பதற்காக,  ஹயபுஸா 2 ( Hayabusa 2) என்னும் ஆளில்லா விண்கலத்தை விண்ணிற்கு அனுப்பியது. இந்த விண்கலம் கடந்த ஜீன் மாதம் 27ம் தேதி ர்யுகுவைச் சென்றடைந்தது.

    இந்நிலையில்,  ஹயபுஸாவில் பொருத்தபட்டிருந்த MINERVA-II 1 என்று  அழைக்கப்படும் 2 ஆளில்லா ரோவர் வின்கல் மீது கடந்த சனிக்கிழமை அன்று வெற்றிகரமாக தரையிரக்கிக்கியதாக ஜாக்ஸா அறிவித்துள்ளது. விண்கல்லில் ஆளில்லா ரோவர்களை தரையிரக்கியது இதவே முதல் முறையாகும்.

    இதன் விண்கல் மீது மூலம் முதல் முறையாக ஆளில்லா ரோவர்களை தரையிறக்கிய நாடு எனும் வரலாற்று சாதனையை ஜப்பான் தனதாக்கி கொண்டது.

    விண்கல்லில் தரையிரங்கிய ரோவர்கள், அங்கு எடுத்த புகைப்படங்களை ஜாக்ஸா அதன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
    மேலும் இது தொடர்பாக  ஜாக்ஸா குறிப்பிட்டுள்ளதாவது, ‘ இந்த விண்கல்லானது, சுமார் 1 கி.மீட்டர் அகலத்தில், தண்ணீர் மற்றும் கரிம பொருட்கள் நிறைந்துள்ளது. வைர வடிவத்தில் காட்சியளிக்கிறது. மேலும், இந்த உலகத்தின் உருவாக்கம் மற்றும் இயக்கம் குறித்து, இந்த விண்கல் மூலம் தெரியவரும்’ என தெரிவித்துள்ளது.

    கடந்த 2003ம் ஆண்டு , இதை போன்று ஜாக்ஸா ஹயபுஸா ( Hayabusa) என்ற விண்கலத்தை விண்ணில் அணுப்பி அந்த முயற்சி தொல்வியில் முடிந்தது குறிப்பிடத்தக்கது. #JAXA #asteroid
    இரண்டாம் உலகப்போரின் போது பசிபிக் பெருங்கடல் பகுதியில் ரஷியா கைப்பற்றிய தீவுகள் விவகாரத்தில் அந்நாட்டுடன் சமாதான உடன்படிக்கை செய்துகொள்ள ஜப்பான் முன்வந்துள்ளது. #ShinzoAbe #JapanRussiapeace
    டோக்கியோ:

    இரண்டாம் உலகப்போரின் போது பசிபிக் பெருங்கடல் பகுதியில் உள்ள சில தீவு கூட்டங்களை ரஷியா கைப்பற்றி தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.

    குரிலே தீவுகள் என்றழைக்கப்படும் இந்த தீவு கூட்டத்தை தங்கள் நாட்டு வடக்கு எல்லை என்று ஜப்பான் சொந்தம் கொண்டாடி வருகிறது. இதனால், பல ஆண்டுகளாக ரஷியா - ஜப்பான் இடையே சுமூக உறவுகள் பாதிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையில், சமீபத்தில் ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே ரஷியா சென்றிருந்தார். அங்குள்ள விளாடிவோஸ்ட்டோக் நகரில் ஜப்பான் பிரதமருடன் செய்தியாளர்களை சந்தித்த ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், சர்ச்சைக்குரிய தீவுகள் பிரச்சனையில் எவ்வித முன்நிபந்தனைகளுமின்றி சமாதான உடன்படிக்கை ஏற்படுத்திகொள்ள இருநாடுகளும் முன்வர வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

    இந்த கருத்துக்கு அப்போது பதில் தெரிவிக்காத ஷின்ஸோ அபே,  தாய்நாடு திரும்பியதும் இதுதொடர்பாக  இன்று கருத்து தெரிவித்துள்ளார்.


    வரும் 20-ம் தேதி ஜப்பான் நாட்டின் ஆளும்கட்சி தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெறுகிறது. தன்னுடன் இந்த பதவிக்கு மோதும் வேட்பாளருடன் விவாத நிகழ்ச்சியில் பங்கேற்ற ஷின்ஸோ அபே, ‘ரஷியா அதிபர் தெரிவித்துள்ள கருத்துகளை நாம் சரியாக புரிந்துகொள்ள வேண்டும். முதலில் எல்லை பிரச்சனைக்கு தீர்வுகண்ட பின்னர் சமாதான உடன்படிக்கை செய்துகொள்ள ஜப்பான் தயாராக இருக்கிறது’ என குறிப்பிட்டார்.

    இந்த விவகாரம் தொடர்பான பேச்சுவார்த்தை நிலுவையில் உள்ளதால் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் இருதரப்பு கூட்டத்தில் சுமூகமான தீர்வு காணப்படலாம் என ரஷிய அதிபரிடம் நான் நம்பிக்கை தெரிவித்தேன் என்றும் அவர் தெரிவித்தார்.  #ShinzoAbe #JapanRussiapeace 
    ஜப்பானில் கொக்கைடோ மலைப்பகுதி தீவில் இன்று அதிகாலை நிலநடுக்கம் மற்றும் அதனால் ஏற்பட்ட நிலச்சரிவால் 2 பேர் உயிரிழந்தனர். மேலும், 40 பேரை காணவில்லை. #earthquakejapan
    டோக்கியோ:

    ஜப்பானில் கொக்கைடோ என்ற தீவு உள்ளது. அங்கு இன்று அதிகாலை 3 மணிக்கு திடீரென பயங்கர நில நடுக்கம் ஏற்பட்டது. இதனால் அங்குள்ள அத்சுமா நகரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. ஆயிரக்கணக்கான வீடுகள் இடிந்து விழுந்தன. நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதி மலைகளை கொண்டதாகும்.

    அதனால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. அதிலும் பல வீடுகள் இடிந்து விழுந்தன. நிலநடுக்கம் மற்றும் அதனால் ஏற்பட்ட நிலச்சரிவுக்கு 2 பேர் பலியாகி உள்ளனர். 40 பேர் மாயமாகி உள்ளனர். அவர்களும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.


    140 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்கள் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர். அங்கு தற்போது 4 ஆயிரம் ராணுவத்தினர் மற்றும் மீட்பு படையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மேலும் 20 ஆயிரம் பேரை அனுப்புவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    நில நடுக்கத்தின் அளவு 6.7 ரிக்டர் ஸ்கேல் ஆக பதிவாகி இருக்கிறது. இதன் தாக்கம் அதிகமாக இருந்தாலும் ஜப்பானில் நில நடுக்கத்தால் அதிக பாதிப்பு இல்லாத வகையிலான வீடுகளே அதிகம் கட்டப்படுகிறது. இதனால் உயிரிழப்புகள் அதிகம் இல்லை.

    நிலநடுக்கம் மின் இணைப்புகளையும் கடுமையாக பாதித்தது. இதனால் அந்த தீவில் உள்ள 30 லட்சம் வீடுகளுக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. சாலைகளும் பல இடங்களில் துண்டிக்கப்பட்டுள்ளன. #earthquakejapan
    ஜப்பானிடம் இருந்து ரூ.7 ஆயிரம் கோடிக்கு 18 புல்லட் ரெயில்களை இந்தியா வாங்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #India #Railways #BulletTrain #Japan
    டோக்கியோ:

    மும்பைக்கும்- அகமதாபாத்துக்கும் இடையே அதிவேக புல்லட் ரெயில் 2022-ம் ஆண்டு இறுதியில் இயக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

    மணிக்கு 508 கி.மீ. வேகத்தில் இயங்கும் இந்த ரெயில் கட்டுமான பணிகள் ஜப்பான் உதவியுடன் அமல்படுத்தப்பட உள்ளது. அதற்காக ஜப்பானிடம் இருந்து 18 ரெயில்கள் வாங்கப்படுகின்றன.

    ஒவ்வொரு ரெயிலிலும் தலா 10 பெட்டிகள் இருக்கும். அவற்றை மணிக்கு 350 கி.மீ. வேகத்தில் இயக்க முடியும். இதற்கான டெண்டர் விரைவில் அறிவிக்கப்படும். அதில் ஜப்பான் நிறுவனங்கள் பங்கேற்கிறது.

    புல்லட் ரெயில்கள் ரூ.7 ஆயிரம் கோடிக்கு வாங்கப்படுகிறது. ஜப்பானில் இயங்கும் புல்லட் ரெயில்கள் மிகவும் பாதுகாப்பானவை. எனவே ஜப்பான் உதவியுடன் இந்த திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.



    புல்லட் ரெயில் மூலம் மும்பை- அகமதாபாத்துக்கு தினமும் 18 ஆயிரம் பேர் பயணம் செய்ய முடியும். அதற்கான கட்டணம் ரூ.3 ஆயிரத்துக்கும் கீழ் நிர்ணயிக்கப்படும். விமானத்தில் இருப்பது போன்று புல்லட் ரெயிலிலும் முதல் வகுப்பு வசதி இருக்கும். #India #Railways #BulletTrain #Japan
    ஜப்பான் நாட்டில் ஏற்பட்ட புயல் தாக்குதலில் இதுவரை 9 பேர் பலியாகி உள்ளனர். சர்வதேச விமான நிலையத்தில் வெள்ளம் சூழ்ந்ததால் 3 ஆயிரம் பயணிகள் வெளியேற முடியாமல் சிக்கி தவிக்கின்றனர். #Japan #typhon
    டோக்கியோ:

    ஜப்பானில் மேற்கு கடற்கரை பகுதியில் ‘ஜெபி’ என பெயரிடப்பட்டுள்ள புயல் கடுமையாக தாக்கியது. இதனால் மணிக்கு 216 கி.மீ வேகத்தில் சூறாவளியுடன் கூடிய காற்று வீசியது. பலத்த மழையும் கொட்டியது.

    இதன்காரணமாக மத்திய இஷிகவா, ஒசாகா, நகோயா உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. பலத்த காற்று காரணமாக மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன.

    மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் இருளில் தவித்தனர். காற்று பலமாக வீசியதால் ரோடுகளில் சென்று கொண்டிருந்த மற்றும் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் தலைகீழாக புரட்டி போடப்பட்டு கவிழ்ந்தன.

    ஒசாகா வளைகுடாவில் பாலத்தின் மீது சென்று கொண்டிருந்த ஒரு லாரி தூக்கி வீசப்பட்டது. கயோடோ ரெயில் நிலையத்தில் மேற்கூரை சரிந்தது.

    ஒசாகாவில் கான்சாய் என்ற தீவு செயற்கையாக உருவாக்கப்பட்டது. அங்குள்ள சர்வதேச விமான நிலையத்தில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. ஓடுதளம் செயல்படாததால் அந்த விமானநிலையம் மூடப்பட்டது. இதன் வழியாக தினமும் 400 விமானங்கள் இயக்கப்படுகின்றன. விமான நிலையம் மூடப்பட்டதால் பயணிகள் கடும் சிரமத்துக்குள்ளாகினர்.



    விமான நிலையத்தில் இருந்து வெளியேறும் வழியில் உள்ள பாலம் உடைந்துவிட்டது. இதனால் அங்கிருந்து 3 ஆயிரம் பயணிகள் வெளியேற முடியாமல் சிக்கி தவிக்கின்றனர். இதேபோன்று ஜப்பானில் உள்ள பல விமான நிலையங்களும் பாதிக்கப்பட்டு விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.

    புல்லட் ரெயில் சேவையும், பஸ் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. கடலில் ராட்சத அலைகள் எழும்புவதால் படகு மற்றும் கப்பல் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது.

    வெள்ளப்பெருக்கு அதிகரித்துள்ளதால் 25 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    நாட்டின் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மேலும் பலர் குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றப்படுகின்றனர். நிலைமையை சமாளிக்கும் பணியில் போலீசார் ராணுவம் மற்றும் தீயணைப்பு படையினர் அடங்கிய மீட்பு குழு ஈடுபட்டுள்ளது.



    பிரதமர் ஷின்சோ அபே அவசர கூட்டம் கூட்டி விரைவான மீட்பு நடவடிக்கை குறித்து ஆலோசித்தார். பொதுமக்களின் உயிரை காப்பாற்றும் நடவடிக்கையில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபடும்படி அறிவுறுத்தினார்.

    இதற்கிடையே புயல் மழைக்கு இதுவரை 9 பேர் பலியாகி உள்ளனர். 200 பேர் காயம் அடைந்துள்ளனர். ஜப்பானில் 25 ஆண்டுகளுக்கு பிறகு இத்தகைய கடும் புயல் தாக்கியுள்ளதாக வானிலை ஆய்வுமைய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். #Japan #typhon
    ஜப்பான் நாட்டில் மணிக்கு 216 கிலோமீட்டர் வேகத்தில் வீசிய ’ஜெபி’ புயலுக்கு 6 பேர் உயிரிழந்தனர்.
    டோக்கியோ:

    ஜப்பானின் மேற்கு பகுதியில் உள்ள இஷிகாவா பகுதியில் இன்று கடந்த 25 ஆண்டுகால வரலாறு காணாத அதிவேக ‘ஜெபி’ புயல் வீசியது. மணிக்கு 216 கிலோமீட்டர் வேகத்தில் பல பகுதிகளை துவம்சம் செய்த இந்த புயலால் பல வீடுகளின் மேற்கூரை நெடுந்தூரத்துக்கு பறந்து சென்று விழுந்தன.

    பாலங்களின் மீது சென்ற வாகனங்களை தலைகுப்புற கவிழ்த்துப்போட்ட இந்த பெரும்புயல், ஓசாகா கடற்கரையில் நங்கூரம் பாய்ச்சி இருந்த எண்ணெய் கப்பலையும் நிலைகுலையச் செய்தது.

    அந்த கப்பல் நகர்ந்து சென்று பாலத்தின் அடிப்பக்கத்தில் மோதியதால் இசுமிஸானோ நகரில் இருந்து கன்சாய் நகர விமான நிலையத்துக்கு செல்லும் சாலை துண்டிக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்துக்குள் கடல்நீர் புகுந்து ஆறுபோல் காட்சி அளிக்கிறது.

    தற்போது ஜப்பான் நாட்டின் மத்திய பகுதியை நோக்கி நகரும் புயலின் எதிரொலியாக பல பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.


    புயல் கடந்து செல்லும் பாதையில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஓசாகா நகரில் உள்ள பிரபல படப்பிடிப்புகள் நடைபெறும் யூனிவர்சல் ஸ்டுடியோ, தொழிற்சாலைகள், கடைகள், அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன.

    நகோயா மற்றும் ஓசாகா நகரில் விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. சுமார் 800 விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதேபோல், புல்லட் ரெயில், எக்ஸ்பிரஸ் ரெயில் மற்றும் படகு போக்குவரத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் சுமார் 10 லட்சம் வீடுகள் இருளில் மூழ்கி கிடக்கின்றன.

    வீரியத்துடன் நகர்ந்துவரும் புயலால் மரத்திலான வீடுகள் மற்றும் விளக்கு கம்பங்கள் சாய்ந்து விழக்கூடும் என்பதால் ஆபத்தான பகுதிகளில் வசிக்கும் சுமார் 12 லட்சம் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

    மழை வெள்ளத்தால் பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்படும் என அஞ்சப்படுவதால் மக்கள் தங்களது உயிரை காத்துகொள்ள பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே வலியுறுத்தியுள்ளார்.

    இதற்கிடையில், புயல் சார்ந்த விபத்து மற்றும் இடிபாடுகளில் சிக்கி 6 பேர் உயிரிழந்ததாகவும், 150-க்கும் அதிகமானவர்கள் காயமடைந்ததாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
    சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையை சர்வதேச தரத்துக்கு உயர்த்த ஜப்பான் உதவி செய்வதாக அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார். #TNMinister #Vijayabaskar #Egmorechildrenhealthhospital
    சென்னை:

    ஜப்பான் தூதரகத்தின் முதன்மை செயலாளர் கென்ஜி அயா தலைமையிலான குழுவினர் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை, கே.கே. நகர் அரசு புனர்வாழ்வு மருத்துவமனை மற்றும் எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை ஆகியவற்றை பார்வையிட்டனர்.

    இக்குழுவில் சர்வதேச பல்கலைகழகத்தைச் சார்ந்த இணைப் பேராசிரியர் மெகுமி கொடைரா, யசுனோரி யவாட்டா உள்ளிட்டோர் இடம் பெற்றிருந்தனர்.

    பின்னர், அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட ஜப்பான் குழுவினர் பேசுகையில், “அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் செயல்படுத்தப்பட்டு வரும் தாய்ப்பால் வங்கித் திட்டம் ஒரு புரட்சிகரமான திட்டமாகும். மேலும், தமிழக அரசின் சீரிய திட்டங்களால் அதிக அளவில் ஏழை எளிய மக்கள் எவ்வித கட்டணமும் இல்லாமல் தரமான சிகிச்சை பெற்றுவருவது பாராட்டுக்குரியது. ஜப்பான் அரசு, தமிழகத்தில் மேலும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த எல்லாவிதமான ஒத்துழைப்பையும் நல்கும். எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையை சர்வதேச தரத்துக்கு உயர்த்த உதவி செய்வோம்’ என்றனர்.

    இதற்கு அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர், தமிழக அரசு ஜப்பான் அரசின் திட்டங்களுக்கு முழு ஒத்துழைப்பை அளிக்கும் என்று உறுதியளித்தார்.

    நிகழ்ச்சியில் முதன்மைச்செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணன் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். #TNMinister #Vijayabaskar #Egmorechildrenhealthhospital
    ஆசிய விளையாட்டு இன்று நடக்கும் பெண்கள் ஹாக்கி போட்டியில் இந்தியா- ஜப்பான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. #AsianGames #WomensHockey
    ஜகார்தா:

    18-வது ஆசிய விளையாட்டு போட்டி இந்தோனேஷியாவின் ஜகார்தா மற்றும் பாலெம்பேங் நகரங்களில் நடந்து வருகிறது.

    இதில் பெண்கள் ஹாக்கி இறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதி பெற்றது. ராணி ராம்பால் தலைமையிலான இந்திய அணி லீக் ஆட்டத்தில் நான்கு போட்டியிலும் வெற்றி பெற்றது.

    இந்தோனேஷியா (8-0), கஜகஸ்தான் (21-0), தென்கொரியா (4-1), தாய்லாந்து (5-0) ஆகிய அணிகளை வீழ்த்தியது.

    அரை இறுதியில் சீனாவை 1-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

    தங்கப்பதக்கத்துக்கான இறுதிப் போட்டி இன்று மாலை 6.30 மணிக்கு நடக்கிறது. இதில் இந்தியா- ஜப்பான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    ஆசிய விளையாட்டில் பெண்கள் ஹாக்கியில் இந்தியா கடைசியாக 1982-ம் ஆண்டு தங்கம் வென்றது.

    1998-ம் ஆண்டு இறுதிப் போட்டியில் தென்கொரியாவிடம் தோற்று வெள்ளி பதக்கம் பெற்றது. 2006, 2014-ம் ஆண்டுகளில் வெண் கல பதக்கம் வென்றது.

    தோல்வியே சந்திக்காமல் இந்தியா இறுதிப்போட்டியில் முன்னேறி இருக்கிறது. இதுவரை 39 கோல்கள் அடித்து இருக்கிறது.

    ஒரே ஒரு கோல் மட்டுமே விட்டு கொடுத்து இருக்கிறது. நவ்ஜோத், நவனீத்கவுர், எக்சா, குருஜித் கவுர், மாலிக், தீபிகா, ரீனா போன்ற வீராங்கனைகள் நல்ல நிலையில் உள்ளனர்.

    ஜப்பான் அணியும் தோல்வியே சந்திக்காமல் இறுதிப்போட்டிக்கு வந்து உள்ளது. சமபலம் வாய்ந்த இரு அணிகள் மோதுவதால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும். 36 ஆண்டுக்கு பிறகு இந்தியா தங்கம் வென்று சாதனை படைக்குமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    ஆண்கள் ஹாக்கி அரை இறுதியில் இந்தியா தோற்றது. மலேசியாவிடம் ஷிட்- அவுட்டில் 6-7 என்ற கோல் கணக்கில் தோற்று இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்தது.

    இதையடுத்து நாளை வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

    குத்துச்சண்டை போட்டியில் இன்று மாலை நடக்கும் ஆண்களுக்கான 49 கிலோ எடை பிரிவில் அரைஇறுதியில் இந்திய வீரர் அமித்பன்ஹால் பிலிப்பைன்ஸ் வீரர் கார்லோவை சந்திக்கிறது.

    இதேபோல் ஆண்களுக்கான 75 கிலோ எடை பிரிவு அரைஇறுதியில் இந்திய வீரர் விகாஸ் கிருஷ்ணன்- கஜகஸ்தானின் அபில்கான் அமன்குல் பலப்பரீட்சை நடத்துகிறார்கள்.

    இன்று நடந்த ஜூடோ பெண்களுக்கான 78 கிலோ பிரிவில் இந்திய வீராங்கனை ராஜ்விந்தர் கவுர் சீனதைபே வீராங்கனையிடம் தோல்வி அடைந்தார். #AsianGames #WomensHockey
    ஆசிய போட்டியில் பங்கேற்க இந்தோனேஷியாவுக்கு சென்றிருந்த ஜப்பான் கூடைப்பந்து வீரர்கள் ஓட்டலில் உல்லாசம் அனுபவித்தது தொடர்பாக 4 பேருக்கு ஒரு ஆண்டு விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. #AsianGame #Japanese
    டோக்கியோ:

    ஆசிய போட்டியில் பங்கேற்க இந்தோனேஷியாவுக்கு சென்றிருந்த ஜப்பான் கூடைப்பந்து வீரர்கள் ஹசி மோட்டா, கெய்டா இமாமுரா, நகாயோஷி, தகுமோ சாட்டோ ஆகியோர் ஜகர்தாவில் உள்ள பாருக்கு சென்று மது அருந்தியதுடன், 4 பெண்களை அழைத்து கொண்டு அங்குள்ள ஓட்டலில் உல்லாசம் அனுபவித்ததாக புகார் எழுந்தது.

    இதைத் தொடர்ந்து அவர்கள் உடனடியாக தங்கள் நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். இது குறித்து விசாரணை நடத்திய ஜப்பான் கூடைப்பந்து சம்மேளன ஒழுங்கு நடவடிக்கை குழு 4 வீரர்களுக்கும் தலா ஒரு ஆண்டு தடை விதித்துள்ளது. அத்துடன் 3 மாதங்கள் அவர்களது சம்பளத்தில் 10 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.
    ஆசிய விளையாட்டு போட்டிக்காக இந்தோனேசியா சென்றுள்ள ஜப்பான் அணியில் 4 வீரர்கள், இரவு விடுதி ஒன்றில் பெண்களுடன் உல்லாசமாக இருந்ததால் தொடரில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். #AsianGames #AsianGame2018 #Japan
    ஜகார்த்தா:

    இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில் ஆசிய விளையாட்டு போட்டிகள் நடந்து வருகிறது. ஆசிய கண்டத்தில் உள்ள நாடுகள் அனைத்தும் இந்த தொடரில் பங்கேற்றுள்ளன. இந்நிலையில், ஜப்பான் நாட்டின் கூடைப்பந்தாட்ட அணியை சேர்ந்த 4 வீரர்கள் போட்டி நன்னடத்தை விதிகளை மீறியதற்காக போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டு ஜப்பானுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

    கடந்த வியாழன் அன்று கத்தாருக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் விளையாடிய பின்னர், ஓட்டல் ஒன்றுக்கு அணியின் சீருடையுடன் சென்றுள்ள அந்த 4 வீரர்களும் மது அருந்தியுள்ளனர். அப்போது, ஜப்பானை சேர்ந்த உள்ளூர் பெண் அவர்களுக்கு அறிமுகமாகியுள்ளார். 

    இதனை அடுத்து, 4 பெண்களுடன் ஓட்டல் அறைக்குள் நுழைந்த 4 வீரர்களும் மறுநாள் காலை வரை அங்கு இருந்துள்ளனர். விளையாட்டு கிராமத்தை விட்டு வெளியேறி போட்டி விதிமுறைகளை மீறிய அந்த 4 வீரர்கள் மீதும் ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணையை தொடங்கியுள்ளது.

    அதற்கு முன்னதாக அவர்கள் தொடரை விட்டு வெளியேற்றப்பட்டு ஜப்பானுக்கு திரும்ப அனுப்பிவைக்கப்பட்டனர். இவர்கள் மீதான விசாரணை முடிந்த பின்னர், தண்டனை அறிவிக்கப்படும் என ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் கூறியுள்ளது.

    கடந்த 2014-ம் ஆண்டு தென்கொரியாவில் நடந்த ஆசிய போட்டியின் போது, பத்திரிகையாளர் ஒருவரின் உடமையை திருடி ஜப்பானை சேர்ந்த நீச்சல் வீரர் தோமிடா 18 மாத தடைக்கு உள்ளானார் என்பது குறிப்பிடத்தக்கது. 
    ஜப்பானில் உள்ள அடர்ந்த காட்டுக்குள் தண்ணீரை மட்டும் குடித்து 3 நாளாக தவித்த 2 வயது குழந்தையை சமூக ஆர்வலர் மீட்டார். #YoshikiFujimoto #westernJapan
    டோக்கியோ:

    ஜப்பானில் உள்ள யமாகுச்சி பிராந்தியத்தை சேர்ந்த முதியவர் ஒருவர் தனது பேரக்குழந்தைகளை அழைத்துக் கொண்டு அங்குள்ள காட்டு பகுதிக்கு சென்றார்.

    அங்கு சுற்றிப்பார்த்து கொண்டிருந்தபோது 2 வயது பேரக்குழந்தையான யோஷிகி புஜிமோட்டோ காணாமல் போய்விட்டான். அவனை எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுபற்றி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் தேடினார்கள். 3 நாட்கள் ஆகியும் குழந்தையை கண்டு பிடிக்கவில்லை.

    இந்த நிலையில் 78 வயது சமூக ஆர்வலர் ஒருவர் அந்த குழந்தை காட்டுக்குள் இருப்பதை கண்டுபிடித்தார். அருகில் தண்ணீர் குட்டை ஒன்று இருக்க அதன் அருகில் உள்ள பாறையில் அந்த குழந்தை அமர்ந்திருந்தது. குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டது.

    அந்த குழந்தை 3 நாட்களும் அருகில் இருந்த குட்டையில் தண்ணீரை குடித்து உயிர்வாழ்ந்துள்ளது. ஜப்பானில் தற்போது கடுமையான வெயில் தாக்கம் உள்ளது. இந்த நிலையிலும் காட்டுக்குள் தாக்குபிடித்து 3 நாட்களாக இருந்துள்ளான்.

    வெயில் காரணமாக அவனது உடலில் நீர்சத்து குறைந்து இருந்தது. காட்டுக்குள் சுற்றி திரிந்ததால் ஆங்காங்கே அவனது உடலில் கீறல்கள் ஏற்பட்டு இருந்தன. அவனை மீட்டது குறித்து சமூக ஆர்வலர் கூறியதாவது:-

    நான் காட்டுக்குள் சென்று கொண்டிருந்தபோது ஒரு பாறையில் யாரோ ஒரு குழந்தை அமர்ந்து இருப்பது போல் தெரிந்தது. இந்த பகுதியில் மனிதர்கள் யாரும் நடமாடுவது இல்லை. எனவே எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அருகில் சென்று பார்த்தபோது அது குழந்தை என்று தெரிந்தது. அதை பார்த்ததும் என் இதயமே நின்றுவிடுவது போல் இருந்தது. உடனே நான் அந்த குழந்தையை பத்திரமாக மீட்டு வந்தேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தற்போது குழந்தைக்கு ஆஸ்பத்திரியில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. #YoshikiFujimoto #westernJapan
    ×