search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94372"

    ஜோதிடரை கத்தியால் குத்திய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ராயக்கோட்டை:

    கெலமங்கலம் கணேசா காலனியை சேர்ந்தவர் மீனாட்சிசுந்தரம் (வயது59). ஜோதிடர். இவரது மகன் கோபிநாத் அப்பகுதியில் ஓட்டல் நடத்தி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓட்டலுக்கு சென்ற கெலமங்கலம் ஆஞ்சநேயர் கோவில் தெருவை சேர்ந்த வினய்குமார் (21) என்பவர் மீனாட்சிசுந்தரத்திடம் பணம் கேட்டு மிரட்டினார். ஆனால் மீனாட்சிசுந்தரம் பணம் கொடுக்காததால் அவரை மிரட்டி விட்டு சென்றார். இந்நிலையில் நேற்று முன்தினம் கெலமங்கலம் பேரூராட்சிக்கு சொந்தமான சந்தை கடை அருகே மீனாட்சிசுந்தரம் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வினய்குமார் அவரது கழுத்தில் கத்தியால் குத்தினார். இது தொடர்பான புகாரின் பேரில் கெலமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வினய்குமாரை கைது செய்தனர்.
    மொரப்பூர் அருகே மது விற்ற 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மொரப்பூர்:

    மொரப்பூர் போலீசார் ஆர்.கோபிநாதம்பட்டி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து விற்ற அருள் (வயது35), என்பவரை போலீசார் கைது செய்தனர். அதேபோல், மோட்டூரில் மது விற்ற தில்லைக்கரசி (41) மற்றும் கம்பைநல்லூர் போலீஸ் நிலைய பகுதிக்குட்பட்ட நவலையில் மது விற்ற மாதேஸ்வரன் (45), ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 77 மதுபாட்டில்களை பறிமுதல் செய்யப்பட்டன.
    பரமத்திவேலூர் அருகே பணம் வைத்து சூதாடிய 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பரமத்திவேலூர்:

    பரமத்திவேலூர் அருகே உள்ள பொத்தனூர் காவிரியாறு நீரேற்று பாசன நிலைய பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக வேலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் வேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சூதாட்டத்தில் ஈடுபட்டவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டது பொத்தனூரை சேர்ந்த பிரகாஷ் (வயது 44), பாலசுப்ரமணி (57), குணசேகரன் (60), வெங்கமேடு பகுதியை சேர்ந்த மதியழகன் (52) என்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் 4 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து ரூ.1,230-ஐ பறிமுதல் செய்தனர்.
    உவரி அருகே மீன்பெட்டிகளுக்கு அடியில் மறைத்து கடத்த முயன்ற 6 டன் ரே‌ஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார் லாரி டிரைவர், கிளீனரை கைது செய்தனர்.
    திசையன்விளை:

    உவரி கடலோர பாதுகாப்பு குழும சப்- இன்ஸ்பெக்டர் கோபி மற்றும் போலீசார் இன்று அதிகாலை கூடுதாழை விலக்கில் வாகன சோதனை நடத்தினர்.

    அப்போது அந்த வழியாக வந்த கேரள பதிவு எண் கொண்ட லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் மீன்பெட்டிகளுக்கு அடியில் ஏராளமான ரே‌ஷன் அரிசி பைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    தலா 50 கிலோ எடை கொண்ட 120 பைகளில் சுமார் 6 டன் எடை கொண்ட ரே‌ஷன் அரிசி கேரளாவுக்கு கடத்தி கொண்டு செல்லப்படுவது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து லாரியையும், ரே‌ஷன்அரிசி பைகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    மேலும், லாரி டிரைவரான குமரி மாவட்டம் பரக்குன்று பகுதியை சேர்ந்த அஜூ (வயது 41), படந்தாலுமூடு பகுதியை சேர்ந்த கிளீனர் ரவீந்திரன் (47) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    கைதானவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் கூடுதாழையை சேர்நத ஒரு பெண்ணிடம் இருந்து வாங்கிய ரே‌ஷன் அரிசியை கேரளாவுக்கு கொண்டு சென்றதாகவும் அந்த பெண் ரே‌ஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி விற்பனை செய்ததும் தெரிய வந்தது.

    இதுதொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வரும் போலீசார், பறிமுதல் செய்யப்பட்ட ரே‌ஷன் அரிசியை மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்புபிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
    வேப்பந்தட்டை அருகே சாராயம் விற்ற வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேப்பந்தட்டை:

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள கள்ளப்பட்டியில் சாராயம் விற்கப்படுவதாக மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சரவணக்குமார் தலைமையிலான போலீசார் கள்ளப்பட்டி பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பொது குடிநீர் கிணறு அருகே கள்ளப்பட்டியை சேர்ந்த ராமகிருஷ்ணன் (வயது 35) என்பவர் சாராயம் விற்றது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் இருந்து 7 லிட்டர் சாராயம் மற்றும் மொபட் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
    வேலகவுண்டம்பட்டி அருகே மின்மோட்டார் திருடிய லாரி டிரைவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பரமத்திவேலூர்:

    வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள அத்தியப்பன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 40). விவசாயி. இவர் தனது வீட்டின் அருகே தண்ணீர் இரைப்பதற்காக கம்பரசர் மின்மோட்டார் வைத்திருந்தார். இந்த நிலையில் சதீஷ்குமார் வெளியூர் சென்றுவிட்டு கடந்த 15-ந் தேதி வீட்டிற்கு வந்தபோது கம்பரசர் மின் மோட்டார் காணாமல் போனதை கண்டு திடுக்கிட்டார். பின்னர் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் மின்மோட்டார் கிடைக்காததால் இதுகுறித்து வேலகவுண்டம்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் மின்மோட்டாரை திருடிய நபரை தேடி வந்தனர். இந்த நிலையில் நாமக்கல் மேட்டுத்தெருவில் உள்ள ஒரு கடையில் கம்பரசர் மின் மோட்டாரை விற்பனை செய்வதற்காக ஒருவர் கொண்டு வந்தது குறித்து வேலகவுண்டம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரியவந்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் மின்மோட்டாரை விற்பனை செய்வதற்காக கொண்டு வந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    அதில் அவர் வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள தத்தாதிரிபுரம் பப்புல் நாய்க்கன்காடு பகுதியை சேர்ந்த முத்துசாமி மகன் லாரி டிரைவர் பொன்மணி (32) என்பதும், இவர் அத்தியப்பன்பாளையத்தில் சதீஷ்குமார் வீட்டில் கம்பரசர் மின் மோட்டார் திருடியதும் தெரியவந்தது. பின்னர் லாரி டிரைவர் பொன்மணியை போலீசார் கைது செய்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    குளித்தலை அருகே புகையிலை பொருட்களை விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    குளித்தலை:

    குளித்தலை அருகே அய்யர்மலை பகுதியில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்ற குழந்தைபட்டியை சேர்ந்த தங்கராஜ் (வயது 52) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
    தேன்கனிக்கோட்டை அருகே பணம் வைத்து சூதாடிய 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தேன்கனிக்கோட்டை:

    தேன்கனிக்கோட்டை போலீசார் சந்தப்பள்ளி அருகில் ரோந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாடிய அந்த ஊரை சேர்ந்த ஆனந்தகுமார் (வயது 26) குருப்பட்டி மோகன் (32), எருதுகோட்டை சிவலிங்கம் (26), திருமூர்த்தி (26) ஆகிய 4 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
    மதுரை அருகே கத்தியை காட்டி பணம் பறித்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மேலூர்:

    மதுரை அருகிலுள்ள மாத்தூரை சேர்ந்தவர் சிலம்பரசன்(வயது 30) ஜே.சி.பி. டிரைவர். இவர் சிங்கம்புணரிக்கு சென்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் திரும்பியுள்ளார். அப்போது கீழவளவு அருகே கொன்னைபட்டி என்ற இடத்தில் வந்தபோது, வாலிபர் ஒருவர் அவரை வழிமறித்து கத்தி முனையில் ரூ.5 ஆயிரத்தை பறித்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த கீழவளவு போலீசார் சாலக்கிபட்டியை சேர்ந்த தினகரன்(30) என்பவரை கைது செய்தனர்.
    செம்பனார்கோவில் அருகே சாராயம் விற்ற வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பொறையாறு:

    செம்பனார்கோவில் அருகே மேமாத்தூர் பகுதியில் சாராயம் விற்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் செம்பனார்கோவில் போலீசார் அங்கு சென்று கண்காணித்தனர். அப்போது அங்கு ஒரு வீட்டின் அருகே சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், மேமாத்தூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த செல்வராஜ் மகன் செல்வகுமார் (வயது 29) என்பதும், வீட்டின் அருகே சாராயம் விற்றதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, செல்வகுமாரை கைது செய்து, அவரிடம் இருந்து 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
    வீட்டுமனைகளாக பிரித்து அனுமதி வழங்க ரூ.35 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பேரூராட்சி ஊழியர் கைது செய்யப்பட்டார்.
    பூந்தமல்லி:

    சென்னையை சேர்ந்த நபர் ஒருவர் குன்றத்தூரில் உள்ள தனக்கு சொந்தமான நிலத்தை வீட்டுமனைகளாக பிரித்து அனுமதி வழங்க குன்றத்தூர் பேரூராட்சி அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். சம்பந்தப்பட்ட நபரின் நிலத்தை வீட்டுமனைகளாக பிரித்து அனுமதி வழங்குவதற்கு பேரூராட்சி செயல் அலுவலர் தன்ராஜ்க்கு ரூ.25 ஆயிரமும், தனக்கு ரூ.10 ஆயிரமும் லஞ்சமாக தர வேண்டும் என பேரூராட்சி கிளார்க் செல்வராஜ் கேட்டதாக தெரிகிறது.

    தான் தொடர்ந்து அலக்கழிக்கப்பட்டதால் இதுகுறித்து ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை சென்னை - 3 பிரிவு அலுவலகத்தில் புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்து அனுப்பினார்கள். பூந்தமல்லியில் உள்ள அரசு கருவூலம் அருகே வைத்து பேரூராட்சி கிளார்க் செல்வராஜ் பணத்தை வாங்கியபோது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும், களவுமாக அவரை கைது செய்து அவரிடம் இருந்த பணத்தை பறிமுதல் செய்தனர்.

    மேலும் செங்கல்பட்டு அடுத்த கருங்குழியில் உள்ள அவரது வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
    நாகூரில் ரூ.10 ஆயிரம் மதிப்பிலான கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் வாலிபரை கைது செய்தனர்.
    நாகூர்:

    நாகூர் பாலத்தடி அருகில் நேற்று முன்தினம் இரவு நாகூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சந்தேகம்படும் வகையில் வந்த ஒரு வாலிபரை நிறுத்தி விசாரணை நடத்தினர். அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியதால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தனர். இதில் 1 கிலோ கஞ்சா இருந்தது.

    இதை தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், அவர் நாகூர் ஆரிய நாட்டு தெருவை சேர்ந்த மகேந்திரன் மகன் வேந்தன் (வயது 30) என்பதும், கஞ்சாவை விற்பனைக்கு கொண்டு சென்றதும் தெரிய வந்தது.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வேந்தனை கைது செய்து அவரிடம் இருந்து ரூ.10 ஆயிரம் மதிப்பிலான 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
    ×