search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94389"

    • 3 தினங்களுக்கு முன்பு காந்திமதி தனது 5 வயது மகளை அழைத்துக் கொண்டு, கணவர் கதிர்வேலிடம் வெளியில் சென்று வருவதாக கூறி விட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை.
    • 2 நாட்களாக அக்கம் பக்கம் தேடி பார்த்தும் கிடைக்காததால், காந்திமதியின் தாய் வெள்ளகோவில் போலீசில் புகார்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில், முத்தூர் ரோடு பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மனைவி ஈஸ்வரி ( வயது 43). இவருக்கு 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். மூத்த மகள் காந்திமதி (வயது 21) . இவருக்கு திருமணம் ஆகி ஒரு மகள் உள்ளார்.

    இந்நிலையில் கடந்த 3 தினங்களுக்கு முன்பு ஜூலை 6ந்தேதி காந்திமதி தனது 5 வயது மகளை அழைத்துக் கொண்டு, கணவர் கதிர்வேலிடம் வெளியில் சென்று வருவதாக கூறி விட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. காந்திமதி தனது தாய் ஈஸ்வரியிடம் போன் மூலம் தகவல் கூறியுள்ளார். இதனையடுத்து அவரது போன் சுவிட்ச் ஆப் ஆனது. இதையடுத்து 2 நாட்களாக அக்கம் பக்கம் தேடி பார்த்தும் கிடைக்காததால்,காந்திமதியின் தாய் ஈஸ்வரி வெள்ளகோவில் போலீசில் புகார் அளித்தார்.

    அதன் பேரில் வெள்ளகோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமாதேவி, சப் இன்ஸ்பெக்டர் கே.முத்துக்குமார் ஆகியோர் வழக்கு பதிவு செய்து காணாமல் போன தாய் மற்றும் மகளை தேடி வருகின்றனர்.

    • கால்நடை மருத்துவருக்கு தகவல் கொடுத்து காயம் பட்ட ஆடுகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
    • ஆடு வளர்ப்பதையே நம்பி இருக்கும் விவசாயிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் அருகே உள்ள காடையூரான்வலசு என்ற பகுதியில் கனகராஜ் ( வயது 65) என்பவர் தனது தோட்டத்தில் செம்மறி ஆடுகளை வளர்த்து வருகின்றார்.நேற்று முன்தினம் 5 ந்தேதி இரவு வழக்கம்போல் ஆடுகளை தோட்டத்து பட்டியில் அடைத்து வைத்திருந்தார். மீண்டும் காலையில் சென்று பார்த்தபோது 8 ஆடுகள் இறந்து கிடந்தன. 2 ஆடுகள் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தன, அதன் பின் விசாரித்த போது நாய்கள் வாயில் ரத்த கரையுடன் சுற்றிக்கொண்டு இருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து கால்நடை மருத்துவருக்கு தகவல் கொடுத்து காயம் பட்ட ஆடுகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இறந்த ஆடுகளின் மதிப்பு ரூ. 50 ஆயிரம் ஆகும். சில மாதங்களுக்கு முன்பு இவரது தோட்டத்தில் இருந்த ஆடுகளை நாய் கடித்துள்ளது. அதேபோல் பக்கத்து தோட்டத்திலும் நாய்கள் ஆடுகளை கடித்துள்ளது.கடந்த சில மாதங்களுக்கு முன்பு நாச்சிபாளையம், சொரியங்கிணத்துபாளையம், கச்சேரி வலசு, சேனாபதிபாளையம் ஆகிய பகுதிகளில் நாய்கடித்து 100க்கும் மேற்பட்ட ஆடுகள் இறந்துள்ளன, ஆடு வளர்ப்பதையே நம்பி இருக்கும் விவசாயிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டுமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • வெள்ளகோவில் சுற்றுவட்டார பகுதியில் போலீசார் குற்றச்சம்பவங்களை கண்காணித்து வாகன தணிக்கையிலும், ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
    • நாச்சிப்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் நூல் மில் பின்புறம் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த 3 பேரை கைது செய்தனர்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் சுற்றுவட்டார பகுதியில் போலீசார் புகையிலை, கஞ்சா, பணம் வைத்து சூதாட்டம்,சேவல் சண்டை, அனுமதியின்றி மது விற்பனை போன்ற குற்றச்சம்பவங்களை கண்காணித்து வாகன தணிக்கையிலும், ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து குற்ற சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது வழக்கு பதிவு செய்து வருகின்றனர்.

    நேற்று வெள்ளகோவில் அருகே உள்ள நாச்சிபாளையம் என்ற பகுதியில் வெள்ளகோவில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் அர்ஜுனன் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தபோது நாச்சிப்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் நூல் மில் பின்புறம் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த முத்துசாமி (53), நல்லசிவம் (35), ரவிக்குமார் (42) ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்து ரூ.230 ரொக்கத்தை கைப்பற்றினர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • வேலாயுதகவுண்டர்புதூர் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில் நன்கொடையாக பெறப்பட்ட காலணிகளை பள்ளி மாணவ மாணவிகளுக்கு வழங்கினார்.
    • ஓலப்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் தன்னார்வலர்கள் மூலம் பெறப்பட்ட கம்ப்யூட்டரை பள்ளிக்கு அமைச்சர் வழங்கினார்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் ஒன்றியம் பகுதியில் தமிழக செய்தி துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் ரூ. 91 லட்சம் மதிப்பிலான திட்ட பணிகளை துவக்கி வைத்தார்.

    மேலும் வெள்ளகோவில் அருகே உள்ள வேலாயுதகவுண்டர்புதூர் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில் நன்கொடையாக பெறப்பட்ட காலணிகளை பள்ளி மாணவ மாணவிகளுக்கு வழங்கினார்.வேலப்பநாயக்கன்வலசு ஊராட்சியில் கள்ளமடை என்ற இடத்தில் ரூ.51 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பிலான தார் சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார்.

    வெள்ளகோவில் ஆர்.பி.எஸ். மஹாலில் நடைபெறும் புத்தக கண்காட்சிக்கு சென்று புத்தகக் கடைகளை பார்வையிட்டு ஒரு சில புத்தகங்களை வாங்கினார்.வெள்ளகோவிலில் ரூ.40 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய கால்நடை மருந்தக கட்டிடம் கட்டும் பணியை துவக்கி வைத்தார். ஓலப்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் தன்னார்வலர்கள் மூலம் பெறப்பட்ட கம்ப்யூட்டரை பள்ளிக்கு வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் திருப்பூர் மாவட்ட திட்ட இயக்குனர் ஏ.லட்சுமணன். திமுக. பொதுக்குழு உறுப்பினர் எம்.எஸ்.மோகன செல்வம், வெள்ளகோவில் ஒன்றிய பொறுப்பாளர் மோளகவுண்டன்வலசு கே. சந்திரசேகரன், நகரச் செயலாளர் கே. ஆர். முத்துக்குமார், துணைச் செயலாளர் சபரி.எஸ்.முருகானந்தன். வேலப்பநாயக்கன்வலசு கிராம ஊராட்சி மன்ற தலைவர் தனலட்சுமி துரைசாமி, ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் கே.சோமசுந்தரம், வட்டார வளர்ச்சி அலுவலர் எத்திராஜ், கால்நடை மருத்துவ இணை இயக்குனர் பாரிவேந்தன், மருத்துவர்கள் பிரகாசம், பகலவன் உட்பட தி.மு.க. பிரமுகர்கள், கால்நடை துறை மருத்துவர்கள், வருவாய்த்துறையினர் கலந்து கொண்டனர்.

    • அலுவலர் ஒருவர் 6 அடி நீளமுள்ள சாரை பாம்பு இருந்ததை பார்த்துள்ளார்.
    • சாரை பாம்பை உயிருடன் பிடித்த தீயணைப்பு படையினர் பாம்பை வனப்பகுதியில் விட்டனர்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவிலில் கரூர் ரோட்டில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் உள்ளது. அருகிலேயே வேளாண்மை துறை அலுவலகம்,கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம், நில வருவாய் அலுவலர் அலுவலகம், சட்டமன்றத் தொகுதி அலுவலகம்,பயணியர் விடுதி, நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் உள்ளன.

    நேற்று காலை 10 மணி அளவில் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடத்தின் அருகே 6 அடி நீளமுள்ள சாரை பாம்பு ஒன்று இருந்தது. அந்த வழியாக சென்ற அலுவலர் ஒருவர் பார்த்துள்ளார். உடனே வெள்ளகோவில் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து 6 அடி நீளம் உள்ள சாரை பாம்பை உயிருடன் பிடித்து வனப்பகுதியில் விட்டனர்.

    • ஒரு கிலோ செடிமுருங்கை ரூ.20 க்கும், மரம் முருங்கை ரூ.15 க்கும், கரும்புமுருங்கை ரூ.30 க்கும் கொள்முதல் செய்தனர்.
    • 45 விவசாயிகள் 5 டன் முருங்கைகாய் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவிலில் வாரச்சந்தையையொட்டி ஞாயிறுதோறும் முருங்கைக்காய் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது, இந்த முருங்கைக்காய் கொள்முதல் நிலையத்திற்கு வெள்ளகோவில் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் முருங்கைக்காய்களை விற்பனைக்கு கொண்டு வருவார்கள்.

    நேற்று 45 விவசாயிகள் 5 டன் முருங்கைகாய் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில் முத்தூர், வெள்ளகோவில், காங்கேயம் பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் கலந்துகொண்டு ஒரு கிலோ செடிமுருங்கை ரூ .20 க்கும், மரம் முருங்கை ரூ.15 க்கும், கரும்புமுருங்கை ரூ.30க்கும் கொள்முதல் செய்தனர். நேற்று கொள்முதல் செய்த முருங்கைக்காய்களை வியாபாரிகள் சென்னை, மதுரை, கோவை, ஒட்டன்சத்திரம், பெங்களூர் ஆகிய பகுதியில் உள்ள ஹோட்டல் மற்றும் மார்கெட்டுகளுக்கு அனுப்பி வைத்ததாக வெள்ளகோவிலைச் சேர்ந்த முருங்கைக்காய் வியாபாரி எம்.பி.முருகேசன் கூறினார்.

    • 25 விவசாயிகள் கலந்து கொண்டு 10 ஆயிரத்து 260 கிலோ சூரியகாந்தி விதை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
    • விவசாயிகள் சூரியகாந்தி விதைகளை புதன்கிழமை காலை 6 மணி முதல் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு கொண்டு வரலாம்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரம்தோறும் செவ்வாய், வியாழன் ஆகிய இரு தினங்களில் தேங்காய் பருப்பும், சூரியகாந்தி விதையும் ஏலம் நடைபெற்று வருகிறது.

    நேற்று ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு 25 விவசாயிகள் கலந்து கொண்டு 10 ஆயிரத்து 260 கிலோ சூரியகாந்தி விதை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில் முத்தூர், வெள்ளகோவில், காங்கேயம், ஈரோடு பகுதியைச் சேர்ந்த வியாபாரிகள் கலந்து கொண்டு ஒரு கிலோ சூரியகாந்தி விதை அதிகபட்சமாக ரூ.72.09க்கும், குறைந்தபட்சம் ரூ.55.16க்கும் கொள்முதல் செய்தனர். நேற்று மொத்தம் ரூ.6லட்சத்து 55ஆயிரத்து22 க்கு வணிகம் நடைபெற்றது.

    விவசாயிகள் சூரியகாந்தி விதைகளை புதன்கிழமை காலை 6 மணி முதல் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு கொண்டு வரலாம் என வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் சி. மகுடேஸ்வரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

    • 10,12ம் வகுப்புகளில் தேர்வு எழுதிய அனைவரும் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
    • வெற்றி பெற்ற மாணவ மாணவிகளை பள்ளி நிர்வாகம் பாராட்டி பரிசுகளை வழங்கியது.

    வெள்ளகோவில் :

    நடந்து முடிந்த 12ம் வகுப்பு பொது தேர்வில் வெள்ளகோவில் கொங்கு பள்ளி மாணவி பி. அருணா 600க்கு 588 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடத்தையும், என். சுருதிகா 586 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் இரண்டாம் இடத்தையும், பி.பவ்யாஸ்ரீ 580 மதிப்பெண்கள் பெற்று மூன்றாவது இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளனர்.

    10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் டி. காவியா 500க்கு483 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதல் இடத்தையும், சி. பிருந்தா 482 மதிப்பெண் பெற்று பள்ளியில் இரண்டாம் இடமும், தர்ஷினி 478 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் மூன்றாம் இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளனர். தேர்வு எழுதியதில் 16 மாணவ மாணவிகள் 100 க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

    10, 12ம் வகுப்புகளில் தேர்வு எழுதிய அனைவரும் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். வெற்றி பெற்ற மாணவ மாணவிகளை பள்ளியின் தாளாளர் எஸ்.ரவீந்திரன், பள்ளி செயலாளர் வி.சி. கருணாகரன், பள்ளியின் பொருளாளர் ஆர். பழனிசாமி, நிர்வாக அறங்காவலர் கே.திருநாவுக்கரசு, அறக்கட்டளை உறுப்பினர் எஸ்.ஜெகநாதன், எஸ். சங்கீதா, ஆர்.கே.செல்வகுமார், எஸ்.பழனிசாமி ஆகியோர் பாராட்டி பரிசுகளை வழங்கினர்.

    • திருப்பூர், ஈரோடு மாவட்ட விவசாயிகள் கலந்து கொண்டு தேங்காய் பருப்பு மற்றும் சூரியகாந்தி விதை விற்பனைக்கு கொண்டு வருவார்கள்.
    • ஒரு கிலோ தேங்காய் பருப்பு அதிகபட்சமாக ரூ. 86.05க்கும், குறைந்தபட்சம் ரூ.69.70க்கும் கொள்முதல் செய்தனர்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரம்தோறும் செவ்வாயன்று தேங்காய் பருப்பும், வியாழனன்று சூரியகாந்தி விதையும் ஏலம் நடைபெறும்.

    இந்த ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு கரூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை. திருப்பூர், ஈரோடு மாவட்ட விவசாயிகள் கலந்து கொண்டு தேங்காய் பருப்பு மற்றும் சூரியகாந்தி விதை விற்பனைக்கு கொண்டு வருவார்கள். செவ்வாய்கிழமை 158விவசாயிகள் கலந்து கொண்டு 85 ஆயிரத்து 727கிலோ தேங்காய் பருப்பு விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில் முத்தூர், வெள்ளகோவில், காங்கேயம், கொடுமுடி, ஈரோடு பகுதியைச் சேர்ந்த 5 வியாபாரிகள் கலந்து கொண்டு ஒரு கிலோ தேங்காய் பருப்பு அதிகபட்சமாக ரூ. 86.05க்கும், குறைந்தபட்சம் ரூ.69.70க்கும் கொள்முதல் செய்தனர்.

    மொத்த ரூ .68லட்சத்து 60ஆயிரத்து 252க்கு வணிகம் நடைபெற்றது. இத்தகவலை வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் சி. மகுடேஸ்வரன் தெரிவித்தார்.

    • வீரக்குமார் கோவில் திடலில் தற்காலிக வாரச்சந்தை நடைபெறும்.
    • வணிக அங்காடி கடைகள் கட்டுவதற்கு அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அடிக்கல் நாட்டினார்.

    வெள்ளகோவில்,

    வெள்ளகோவிலில் ஞாயிறுதோறும் நடைபெறும் வாரச்சந்தை வழக்கம் போல் நேற்று வாரச்சந்தை வளாகத்தில் நடைபெற்றது. இந்தநிலையில் தினசரி வணிக அங்காடி கட்டட பணி துவங்கப்பட உள்ளதால், வரும் 19ந்தேதி முதல் கோவை ரோட்டில் உள்ள வீரக்குமார் கோவில் திடலில் தற்காலிக வாரச்சந்தை நடைபெறும் என வெள்ளகோவில் நகராட்சி கமிஷனர் மோகன் குமார் அறிவித்துள்ளார்.

    வாரச்சந்தை வளாகத்தில் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 3 கோடியே 81 லட்சம் செலவில் 130 வணிக அங்காடி கடைகள் கட்டுவதற்கு அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அடிக்கல் நாட்டினார். மேலும் 85 கடைகள் கூடுதலாக கட்டுவதற்கு தமிழக அரசுக்கு நகராட்சி சார்பில் பரிந்துரைக்கப்படும் என்றார் அமைச்சர்.

    அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
    வெள்ளகோவில்:

    வெள்ளகோவில் சோழீஸ்வரர் கோவிலில் சோழீஸ்வரர், தெய்வநாயகி அம்மன், முருகன், விநாயகர், 63 நாயன்மார்கள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அலங்கார அபிஷேகங்கள் நடைபெற்றன. சுந்தரர் தேவாரம் முற்றோதல் செய்யப்பட்டது. 

    இதையடுத்து யாக பூஜையுடன் தொடங்கி மாகாளி அம்மன் கோவிலில் இருந்து பெண் வீட்டு சீர்தட்டு கொண்டுவரப்பட்டு சோழீஸ்வரர் -தெய்வநாயகி அம்மன் திருக்கல்யாணம் நடைபெற்றது. 

    இந்நிகழ்ச்சியில் ஈரோடு, திருப்பூர், நாமக்கல், கோயம்புத்தூர், வேலூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த சிவனடியார்கள் கலந்துகொண்டனர். அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
    பூங்கொடி அருகிலுள்ள நூல் மில்லுக்கு வேலைக்கு சென்று வந்தார். சம்பவத்தன்று வேலைக்கு சென்றுவிட்டு மாலை வீட்டிற்கு திரும்பியுள்ளார்.
    வெள்ளகோவில்:

    திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே உள்ள நடுபாளையத்தை சேர்ந்தவர் குருநாதன் (வயது 62). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி பூங்கொடி (55). இவர்களுக்கு சாந்தி, ரேவதி என்ற 2 மகள்கள், விநாயகன் என்ற மகன் உள்ளனர்.   

    ரேவதி கடந்த 2019-ம் ஆண்டு நோய்வாய்பட்டு இறந்து விட்டார். குருநாதன் உடல்நிலை சரியில்லாததால் வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தார். சற்று மனநிலை பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. 

    பூங்கொடி அருகிலுள்ள நூல் மில்லுக்கு வேலைக்கு சென்று வந்தார். சம்பவத்தன்று வேலைக்கு சென்றுவிட்டு மாலை வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது திடீரென பூங்கொடியின் வீட்டில் அலறல் சத்தம் கேட்டுள்ளது. 

    இதையடுத்து அருகில் இருந்தவர்கள் சென்று பார்த்த போது குருநாதன் கடப்பாரையால் பூங்கொடியின் பின் தலையில் அடித்து விட்டு தப்பி ஓடியது தெரியவந்தது. இதுகுறித்து வெள்ளகோவில் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    அதன்பேரில் வெள்ளகோவில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் பூங்கொடி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காங்கயம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். குருநாதன் மனைவியை எதற்காக கொலை செய்தார் என்று விசாரணை நடத்தி தப்பி ஓடிய குருநாதனை தேடி வந்தனர்.

    இந்தநிலையில் வெள்ளகோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) விஜயலட்சுமி தலைமையிலான போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது நாட்ராயன் கோவில் அருகே நின்றுகொண்டிருந்த குருநாதனை பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரை காங்கயம் கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.  
    ×