search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94389"

    வெள்ளகோவில் போலீஸ் நிலையத்தில் வழக்கமான பணிகளும், ரோந்து பணிகளும் சுணக்கம் அடைந்து விட்டது.
    வெள்ளகோவில்:

    வெள்ளகோவில் நகராட்சி பகுதியில் 200க்கும் மேற்பட்ட ஓ.இ., ஸ்பின்னிங் மில், எண்ணெய் மில்களில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புலம் பெயர்ந்து வந்துள்ள தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இப்பகுதியில் அடிக்கடி சாலை விபத்து ஏற்படுகிறது. 

    வாகன விபத்தில் இறப்பு மற்றும் கொலை, கொள்ளை, நகை திருட்டு, வாகனங்கள் காணாமல்போவது என குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. போலீஸ் நிலையத்தில்  இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்த பார்த்திபன் கடந்த 6 மாதங்களுக்கு முன் எஸ்.பி., அலுவலகத்துக்கு மாற்றப்பட்டார். 

    சப்-இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர், தாராபுரம் போலீஸ் நிலையத்திற்கு மாறுதலாகி சென்று விட்டார். அதிகாரிகள் இல்லாததால் வெள்ளகோவில் போலீஸ் நிலையத்தில் வழக்கமான பணிகளும், ரோந்து பணிகளும் சுணக்கம் அடைந்து விட்டது.

    எனவே பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் குற்றச்சம்பவங்கள் தடுப்பு பணி ரோந்து ஆகியவற்றை கண்காணித்து நிர்வகிக்க உடனே இன்ஸ்பெக்டர் பணியிடத்தை நிரப்ப வேண்டுமென பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
    முகாமை தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.
    வெள்ளகோவில்:

    திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் வட்டாரம் கம்பளியம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட லக்மநாயக்கன்பட்டி ஊராட்சி அரசு பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட முகாம் நடைபெற்றது.

    முகாமை தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். மேலும் கர்ப்பிணி பெண்களுக்கு ஆரோக்கிய பெட்டகத்தை வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன், வட்டார மருத்துவ அலுவலர் ராஜலட்சுமி, முத்தூர் மருத்துவ அலுவலர் பிரசாத் தாமரைக்கண்ணன், கம்பளியம்படடி நிலைய  மருத்துவ அலுவலர் செந்தில்குமார் உள்பட மருத்துவ அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.  
    குருநாதன் மனைவியை எதற்காக கொலை செய்தார் என்று தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி தப்பி ஓடிய குருநாதனை தேடி வருகின்றனர்.
    வெள்ளகோவில்:

    வெள்ளகோவில் அருகே உள்ள நடுபாளையத்தை சேர்ந்தவர் குருநாதன் (வயது 62). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி பூங்கொடி (55). இவர்களுக்கு சாந்தி, ரேவதி என்ற 2 மகள்கள், விநாயகன் என்ற மகன் உள்ளனர்.  

    ரேவதி கடந்த 2019-ம் ஆண்டு நோய்வாய்பட்டு இறந்து விட்டார். குருநாதன் உடல் நிலை சரியில்லாததால் வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தார். சற்று மனநிலை பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. 

    பூங்கொடி அருகிலுள்ள நூல் மில்லுக்கு வேலைக்கு சென்று வந்தார். நேற்று  வேலைக்கு சென்றுவிட்டு மாலை வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது திடீரென பூங்கொடியின் வீட்டில் அலறல் சத்தம் கேட்டுள்ளது.

    இதையடுத்து அருகில் இருந்தவர்கள் சென்று பார்த்த போது குருநாதன் கடப்பாரையால் பூங்கொடியின் பின் தலையில் அடித்து விட்டு தப்பி ஓடியது தெரியவந்தது. 

    இதுகுறித்து வெள்ளகோவில் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    அதன்பேரில் வெள்ளகோவில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். 

    பின்னர் பூங்கொடி உடலை  மீட்டு பிரேத பரிசோதனைக்காக காங்கயம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். குருநாதன் மனைவியை எதற்காக கொலை செய்தார் என்று தெரியவில்லை. 

    இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி தப்பி ஓடிய குருநாதனை தேடி வருகின்றனர்.
    வெள்ளகோவில் நகர்ப்பகுதியில் சாலை விரிவாக்க பணி முடிந்து சாலையின் நடுவே தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளது.
    வெள்ளகோவில்:

    வெள்ளகோவில் நகராட்சி திருச்சி-கோவை நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. தற்போது வெள்ளகோவில் நகர்ப்பகுதியில் சாலை விரிவாக்க பணி முடிந்து சாலையின் நடுவே தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளது. இதனால் வெள்ளகோவில் நகர்ப்பகுதியில் அவ்வப்போது சிறுசிறு விபத்துகள் நடைபெற்று வருகிறது.

    உயிர் சேதமும் நடந்து வருகிறது.இந்த சாலை போக்குவரத்து அதிகம் உள்ள சாலை ஆகும். இந்த சாலை வழியாக தான் கேரள மாநிலம் பாலக்காடு, திருச்சூர், எர்ணாகுளம், திருப்பூர்,கோவை, ஊட்டி, கிழக்கு மார்க்கமாக கரூர், திருச்சி, தஞ்சை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, சிதம்பரம் ஆகிய ஊர்களுக்கு செல்லும் சாலை ஆகும்.

    அதனால் நகர் பகுதியில் விபத்துகளை தவிர்க்க நகரின் இருபுற எல்லைகளில் சாலையின் குறுக்கே வேக தடுப்பான் (பேரி காடு)அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அணை பாசன விவசாயிகள், தன்னார்வலர்கள், பொதுமக்கள் அணையில் 10 ஆயிரத்து 8 விளக்குகளை ஏற்றினர்.
    வெள்ளகோவில்:

    வெள்ளக்கோவில் உத்தமபாளையத்தில் வட்டமலை அணை உள்ளது. போதிய நீராதாரம் இல்லாத இடத்தில் அணை கட்டப்பட்டதால் கடந்த 42 ஆண்டுகளில் இதுவரை ஒரே ஒரு முறை மட்டுமே அணையிலிருந்து பாசனத்துக்காகத் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 

    அணைக்கு அருகிலுள்ள அமராவதி ஆற்றிலிருந்து உபரிநீர் மற்றும் பரம்பிக்குளம் ஆழியாறு பாசன வாய்க்காலில் இருந்து அணைக்கு தண்ணீர் கொண்டு வந்து நிரப்ப வேண்டுமென விவசாயிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.

    இந்த திட்டங்கள் அரசின் பரிசீலனையில் இருந்தபோதும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. இந்நிலையில் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அணை பாசன விவசாயிகள், தன்னார்வலர்கள், பொதுமக்கள் அணையில் 10 ஆயிரத்து 8 விளக்குகளை ஏற்றினர்.
    ஜெகன் குடும்ப பிரச்சினை காரணமாக? தற்கொலை செய்தாரா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வெள்ளகோவில்:

    திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் முத்தூர் அருகே உள்ள துத்திக்குளம் பகுதியை சேர்ந்தவர் ஜெகன் (வயது 29). இவரது மனைவி காயத்ரி (27). இவர்களது மகள்கள் தேஜஸ்வி (4), சுவஸ்வி (2). ஜெகன் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே உள்ள காசிப்பாளையத்தில் குடும்பத்துடன் தங்கியிருந்து ஆடுகள் வியாபாரம் செய்து வந்தார். 
     
    நேற்று அவர், தனது 2 மகள்களையும் அழைத்து கொண்டு சொந்த ஊரான  வெள்ளகோவில் துத்திக்குளத்திற்கு சென்றார். அங்கு சென்றதும் உறவினர்களிடம் குழந்தைகளுடன் வெளியே சென்று வருவதாக கூறி விட்டு சென்றார். 

    அதன்பிறகு இரவு ஆகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து உறவினர்கள் 3 பேரையும் தேடும் பணியில் ஈடுபட்டனர். பல்வேறு இடங்களில் தேடியும்  கண்டுபிடிக்க முடியவில்லை.

    இந்தநிலையில் நள்ளிரவு வீட்டின் அருகில் உள்ள கிணற்றில் ஜெகன் மற்றும்  அவரது குழந்தைகள் தேஜஸ்வி, சுவஸ்வி பிணமாக கிடந்தனர். இதைப்பார்த்த உறவினர்கள் அதிர்ச்சியடைந்ததுடன், உடனடியாக வெள்ள கோவில் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். 

    இதையடுத்து போலீசார் மற்றும் வெள்ளகோவில் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் 3 பேரின் உடல்களையும் மீட்கும் பணியில் ஈடுபட்டனர். 

    பல மணிநேர போராட்டத்திற்கு பிறகு இன்று காலை ஜெகன்,தேஜஸ்வி, சுவஸ்வி உடல்களை மீட்டனர். பின்னர் 3 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக  காங்கேயம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்தில் காங்கேயம் டி.எஸ்.பி., குமரேசன் விசாரணை நடத்தினார். 
     
    ஜெகன் தனது 2 குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துள்ளது போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 

    ஆனால் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்று தெரியவில்லை. 

    ஜெகனுக்கு கடன் பிரச்சினை இருந்துள்ளது. இதனால் தற்கொலை செய்தாரா? அல்லது குடும்ப பிரச்சினை காரணமாக? தற்கொலை செய்தாரா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 2 குழந்தைகளுடன் வியாபாரி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    பொதுமக்கள் ரங்கராஜை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் காங்கயம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
    வெள்ளகோவில்:

    திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் வட்டம், கால கவுண்டன்புதூர் பகுதியை சேர்ந்த கன்னியப்பன் மகன் ரங்கராஜ் (வயது 45). இவர் வெள்ளகோவில் நகராட்சி மின் மயானத்தில் தங்கி எரியூட்டும் வேலை செய்து வந்தார். நேற்று பூச்சிக்கொல்லி மருந்தை சாப்பிட்டு விட்டார். 

    உடனே அருகில் இருந்தவர்கள் ரங்கராஜை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் காங்கயம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர் ரங்கராஜ் இறந்து விட்டதாக கூறியுள்ளார்.

    இது குறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்குப் பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
    119 விவசாயிகள் கலந்து கொண்டு 57 ஆயிரத்து 253 கிலோ தேங்காய் பருப்பு விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
    வெள்ளகோவில்:

    வெள்ளகோவில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் பருப்பு மற்றும் சூரியகாந்தி விதை ஏலம் நடைபெற்றது. இந்த விற்பனை கூடத்திற்கு கரூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, திருப்பூர், ஈரோடு மாவட்ட விவசாயிகள் கலந்து கொண்டு தேங்காய் பருப்பு மற்றும் சூரியகாந்தி விதைகளை விற்பனைக்கு கொண்டு வருவார்கள். 

    இதில் 119 விவசாயிகள் கலந்து கொண்டு 57ஆயிரத்து 253 கிலோ தேங்காய் பருப்பு விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில் முத்தூர், வெள்ளகோவில், காங்கேயம், கொடுமுடி, ஈரோடு பகுதியைச் சேர்ந்த 12 வியாபாரிகள் கலந்து கொண்டு ஒரு கிலோ தேங்காய் பருப்பு அதிகபட்சமாக ரூ.102.05-க்கும், குறைந்தபட்சம் ரூ.71-க்கும் கொள்முதல் செய்தனர். 

    மொத்தம் ரூ.49 லட்சத்து 80 ஆயிரத்து 575-க்கு வணிகம் நடைபெற்றது. 
    10-க்கும் மேற்பட்டோர் கடுமையான காய்ச்சலால் தற்போது பாதிக்கப்பட்டுள்ளனர்.
    வெள்ளகோவில்:

    வெள்ளகோவில் காவல் நிலையம் அருகே காவலர்கள் குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பில் தலைமை காவலர்கள், காவலர்கள் என மொத்தம் 16 குடும்பங்கள் குடியிருந்து காவல் நிலையத்தில் பணியாற்றி வருகின்றனர். 

    இதில் மொத்தம் 100 பேர் வசித்து வருகின்றனர். இந்த குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் தேங்கி நோய் தொற்று ஏற்படும் சூழல் உள்ளது. இதனால் 10-க்கும் மேற்பட்டோர் கடுமையான காய்ச்சலால் தற்போது பாதிக்கப்பட்டுள்ளனர். 

    எனவே இது சம்பந்தமாக அதிகாரிகள் உடனே நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.
    வெள்ளகோவில் திருவள்ளுவர் நகர் பகுதியில் சோழீஸ்வரர் ஆலயம் கோவிலுக்கு சொந்தமான சந்தை மதிப்பில் ரூ.10 கோடி மதிப்பிலான 0.79 ஹெக்டேர் காலியிடம் உள்ளது.
    வெள்ளகோவில்:

    வெள்ளகோவில் பகுதியில் உள்ள கோவில்களுக்கு பாத்தியப்பட்ட சொத்துக்களை கண்டறிந்து அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டு வருகின்றனர். 

    வெள்ளகோவில் சோழீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான சொத்துக்கள் பல்வேறு பகுதியில் உள்ளன. வெள்ளகோவில் திருவள்ளுவர் நகர் பகுதியில் சோழீஸ்வரர் ஆலயம் கோவிலுக்கு சொந்தமான சந்தை மதிப்பில் ரூ.10 கோடி மதிப்பிலான 0.79 ஹெக்டேர் காலியிடம் உள்ளது. இந்த காலி இடத்தின் ஒரு பகுதியை தனியார் ஆக்கிரமிப்பு செய்ய முற்பட்டனர். 

    இதை அறிந்த கோவில் செயல் அலுவலர் ராமநாதன் மற்றும் கோவில் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து ஆக்கிரமிப்பு செய்ய முற்பட்டதை தடுத்து நிறுத்தி விட்டனர். 
    பிரதோஷத்தை முன்னிட்டு சிவபெருமானுக்கும், நந்திக்கும் சிறப்பு அலங்காரம், தேன், பஞ்சாமிர்தம், கனி, விபூதி, மஞ்சள், சந்தனம், மலர், பன்னீரால் அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றது.
    வெள்ளகோவில்:

    வெள்ளகோவிலில் சோழீஸ்வரர் ஆலயம், கண்ணபுரம் விக்ரமசோழீஸ்வரர் ஆலயம், மயில்ரங்கம் வைத்தியநாத சுவாமி கோவில், மாந்தபுரம் மாந்தீஸ்வரர் கோவில், உத்தமபாளையம் காசிவிசுவநாதர் கோவில், வெள்ளகோவில், எல்.கே.சி நகர், புற்றிடம் கொண்டீஸ்வரர் ஆகிய கோவில்களில் பிரதோஷத்தை முன்னிட்டு சிவபெருமானுக்கும், நந்திக்கும் சிறப்பு அலங்காரம், தேன், பஞ்சாமிர்தம், கனி, விபூதி, மஞ்சள், சந்தனம், மலர், பன்னீரால் அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றது. 

    இதில் பக்தர்கள் கலந்து சாமி தரிசனம் செய்தனர்.
    மாநிலச் செயலாளர் செந்தில்நாதன் மற்றும் தாராபுரம் பகுதிகளை சேர்ந்த சாலை பணியாளர்கள் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
    வெள்ளகோவில்:

    தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளின் விரோத போக்கை கண்டித்து வெள்ளகோவில் நெடுஞ்சாலை துறை அலுவலகம் முன்பு சாலை பணியாளர் சங்க தாராபுரம் கோட்ட தலைவர் வெங்கடசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

    இதில் சாலை பணியாளர் சங்க கோட்ட செயலாளர் தில்லையப்பன் விளக்கவுரையாற்றினார். மாநில தலைவர் பாலசுப்பிரமணியன் கண்டன உரையாற்றினார். 

    மாநில பொதுச்செயலாளர் அம்சராஜ் நிறைவுரையாற்றினார். இதில் மாநிலச் செயலாளர் செந்தில்நாதன் மற்றும் தாராபுரம் பகுதிகளை சேர்ந்த சாலை பணியாளர்கள் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். 

    முடிவில் கோட்ட பொருளாளர் முருகேசன் நன்றி கூறினார். போராட்டத்தில் பங்கேற்றவர்கள் சமையல் செய்து சாப்பிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 
    ×