search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கைது"

    ஆலங்குடி அருகே அனுமதியின்றி மணல் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆலங்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள இசுகு பட்டியில் அனுமதியின்றி மணல் கடத்தப்படுவதாக வல்லத்திராகோட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து இசுகுபட்டி கோவில் வாசல் அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுப்பட்டனர்.

    அப்போது அந்த பகுதியில் அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த லாரியை மடக்கி பிடித்து பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஆலங்குடி கோவில்பட்டியை சேர்ந்த பிரவீன் மற்றும் இசுகு பட்டியை சேர்ந்த பாண்டியன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

    இது குறித்து வல்லத்திராகோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    சோழவந்தானில் மது போதையில் தொழிலாளி குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சோழவந்தான்:

    மதுரை மாவட்டம், சோழவந்தான் சப்பாணி கோவில் தெருவைச் சேர்ந்தவர் இப்ராகிம் ஷா. இவரது மகன் கருப்புராஜா (வயது 35). தேங்காய் கடையில் ஊழியராக வேலை பார்த்தார்.

    இவரும், அதே பகுதியைச் சேர்ந்த ஜாங்கீர் (32) என்பவரும் நண்பர்களுடன் நேற்று வீட்டின் அருகில் தீபாவளியை கொண்டாடி விட்டு மது அருந்திக் கொண்டிருந்தனர்.

    அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அது முற்றி கைகலப்பானது. ஆத்திர மடைந்த ஜாங்கீர், கருப்பு ராஜாவை கத்தியால் குத்தினார்.

    ரத்தம் சொட்ட சொட்ட படுகாயம் அடைந்த கருப்புராஜா, மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இந்த சம்பவம் குறித்து சோழவந்தான் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவபாலன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். தேங்காய் கடை தொழிலாளியை கொன்ற ஜாங்கீரை போலீசார் கைது செய்தனர். இறந்த கருப்பு ராஜாவுக்கு மனைவியும், 11 வயது மகனும் உள்ளனர்.

    கோவையில் இருந்து கேரளாவுக்கு ரூ.21.35 லட்சம் ஹவாலா பணம் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    கேரள கலால் பிரிவு ஆய்வாளர் ராகேஷ் தலைமையிலான தனிப்படையினர் பொள்ளாச்சி-கொச்சி தேசிய நெடுஞ்சாலையில் வாளையார் சுங்கச்சாவடி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது ஒரு கார் கோவையில் இருந்து பாலக்காடு நோக்கி வேகமாக சென்று கொண்டிருந்தது. அதனை அதிகாரிகள் மறித்த போதும் நிற்காமல் தொடர்ந்து சென்று கொண்டிருந்தது. இதனால் சந்தேகமடைந்த கலால் பிரிவு அதிகாரிகள் காரினை பின் தொடர்ந்து சென்றனர்.

    பின்னர் குருடிக்காடு என்ற இடத்தில் காரினை மடக்கினர். தொடர்ந்து அதிகாரிகள் காரில் சோதனை நடத்தினர். அப்போது காரில் ரகசிய அறை அமைக்கப்பட்டு அதனுள் கட்டுக்கட்டாக ரூ.21.35 லட்சம் ஹவாலா பணத்தினை பதுக்கி வைத்தி ருந்தது கண்டுபிடிக்கப்பட் டது.

    இந்த சோதனை நடைபெற்றுக் கொண்டிருந்த போது, காரில் வந்த நபர் தனது செல்போனை உடைத்து ஆவணங்களை அழிக்க முயன்றார். அதனை தடுத்து அதிகாரிகள் செல்போனை பறிமுதல் செய்து ஆய்வு செய்தனர். அந்த செல்போனில் தங்க பிஸ்கட்டுகள், தங்க ஆயில் ஆகியவற்றின் போட்டோக்கள் இருப்பது தெரிய வந்தது. பின்னர் காரில் வந்த பாஜீவ்ராவ் (வயது 19). சுமித் ஜாவீர் (21) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

    அவர்களிடம் நடத்திய விசாரணையில், இருவரும் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதும், அவர்கள் கேரள மாநிலம் மலப்புரம் பகுதியில் தங்க ஆபரணங்கள் தயாரித்து விற்பனை செய்து வருவதும் தெரிய வந்தது.

    மேலும் துபாயில் இருந்து கோழிக்கோட்டிற்கு விமானத்தில் தங்க கட்டிகளை கடத்தி வந்து, அதனை கோவையில் உள்ள பிரபல நகை கடையில் விற்றுள்ளனர். நகை விற்ற பணத்தினை காரில் கடத்தி சென்றபோது தான் கலால் துறை அதிகாரிகளிடம் இருவரும் சிக்கியுள்ளனர்.

    திருப்பதி அருகே செம்மரம் வெட்ட சென்ற கல்லூரி மாணவர் ராம்குமாரை மண்டல வருவாய்த்துறை அதிகாரி எச்சரிக்கை செய்து விடுதலை செய்தார். #semmaram #arrest

    திருப்பதி:

    திருப்பதி செம்மரக் கடத்தல் தடுப்பு அதிரடிப்படை போலீசாருக்கு வேலூரில் இருந்து தமிழக அரசு பஸ்சில் திருப்பதியை நோக்கி செம்மரம் வெட்டும் கும்பல் வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது.

    போலீசார் திருப்பதியை அடுத்த சந்திரகிரி மண்டலம் ஐதேப்பள்ளி அருகே தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த தமிழக அரசு பஸ் ஒன்றை நிறுத்தி, அதில் ஏறி போலீசார் சோதனைச் செய்தனர்.

    அந்தப் பஸ்சில் 4 பேர் சந்தேகப்படும் படியாக வந்தனர். அவர்களை பிடித்து விசாரித்ததில், அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனர். அவர்கள் கொண்டு வந்த மூட்டை முடிச்சுகளை போலீசார் சோதனைச் செய்தனர். அதில் அரிசி, பீடி கட்டுகள், புகையிலைப் பொருட்கள், மரம் வெட்டும் கோடரிகள், அரிவாள் ஆகியவைகள் இருந்தன. அந்த 4 பேரும், செம்மரம் வெட்டுவதற்கு தினக்கூலி ரூ.600-க்கு ஆசைப்பட்டு வந்ததாக ஒப்பு கொண்டனர்.


    செம்மரம் வெட்ட வந்து கைதானவர்களை படத்தில் காணலாம். 

    அவர்கள் விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் தாலுகா புடிபெலா கிராமத்தை சேர்ந்த ராஜா (வயது 50), முனுசாமி (49), துரைராஜ் (39), ராம்குமார் (29) எனத் தெரிய வந்தது. அதில் ராம்குமார், பி.எஸ்சி. படித்து வரும் மாணவர் எனத் தெரிந்தது. இதையடுத்து 4 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    கல்லூரி மாணவர் ராம்குமாரை, செம்மரக்கடத்தல் தடுப்பு அதிரடிப்படை போலீசார் திருப்பதி மண்டல வருவாய்த்துறை அதிகாரியிடம் ஒப்படைத்தனர். அவர், எச்சரிக்கை விடுத்து, மாணவர் ராம்குமாரை விடுதலை செய்தார்.  #semmaram #arrest

    டெல்லி விமான நிலையத்தில் துப்பாக்கி தோட்டாவுடன் வந்த லாலு கட்சி எம்எல்ஏவை போலீசார் கைது செய்தனர். #MLAarrest

    புதுடெல்லி:

    பீகார் மாநிலத்தை சேர்ந்த ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி எம்.எல்.ஏ. சந்திரசேகர்.

    டெல்லியில் தங்கி இருந்த இவர் இன்று காலை விமானத்தில் பயணம் செய்வதற்காக விமான நிலையம் சென்றார்.

    அப்போது பாதுகாப்பு அதிகாரிகள் அவரிடம் சோதனை நடத்தினார்கள். எம்.எல்.ஏ. வைத்திருந்த பையில் 10 துப்பாக்கி தோட்டாக்கள் இருந்தன. அதை வைத்திருப்பதற்கு அவரிடம் உரிமம் இல்லை.

    மேலும் விமான பயணத்தில் துப்பாக்கி தோட்டா கொண்டு செல்லவும் தடை உள்ளது. எம்.எல்.ஏ. சந்திரசேகர் பலத்த பாதுகாப்பையும் மீறி  விமான நிலையத்துக்குள் நுழைந்ததால் அவர் கைது செய்யப்பட்டார்.

    விமான நிலைய போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். #MLAarrest

    திருவள்ளூரில் மினிலாரியில் 2 டன் ரேசன் அரிசி கடத்திய 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவள்ளூர்:

    தமிழகத்தில் ரேசன் கடைகளில் இலவசமாக வழங்கப்படும் ரேசன் அரிசி திருவள்ளூர் மாவட்டம் வழியாக ஆந்திராவுக்கு பஸ், ரெயில் மற்றும் வாகனங்கள் மூலம் கடத்தப்படும் சம்பவம் அதிகரித்து உள்ளது. அதிகாரிகள் அடிக்கடி சோதனை நடத்தி ரேசன் அரிசி கடத்தல் கும்பலை கைது செய்து வருகின்றனர். எனினும் ரேசன் அரிசி கடத்தல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள ரேசன் கடைகளிலிருந்து பெறப்பட்ட அரிசி கடத்தப்படுவதாக மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதிகாரிகள் அப்பகுதிகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது கவரப்பேட்டை வழியாக ஆந்திரா நோக்கி சென்ற மினி லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 2 டன் ரேசன் அரிசி கடத்தி வந்தது தெரிந்தது.

    இதையடுத்து ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட ஆந்திர மாநிலம் நெல்லூரை சேர்ந்த சிரஞ்சீவி, மணி, தடா பகுதியை சேர்ந்த மதன் அனுப்பப்பட்டு பகுதியை சேர்ந்த அரிகிருஷ்ணன் ஆகிய 4 பேரை கைது செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய மினி லாரியையும் பறிமுதல் செய்தனர்.

    டெல்லியில் ஊபர் கால் டாக்சி டிரைவரை கொலை செய்து, உடலை கழிவுநீர் கால்வாயில் வீசிவிட்டு அவரது காரிலேயே ஊர் சுற்றிய லிவ் இன் ஜோடியை போலீசார் கைது செய்துள்ளனர்.#Delhi #Uberdriverdead
    புதுடெல்லி:

    டெல்லியில் கடந்த ஜனவரி மாதம் 29ம் தேதி ஊபர் கால் டாக்சி டிரைவர் ராம் கோவிந்த் என்பவரின் மனைவி, தன் கணவரைக் காணவில்லை என காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில், ஊபர் வாகனம் கடைசியாக மாதங்கீர் - கபாஷேரா வழித்தடத்தில் பயணம் செய்வதற்காக பதிவு செய்யப்பட்டிருந்ததும், அதன்பின்னர் ஜிபிஎஸ் செயலிழந்திருப்பதும் தெரியவந்தது.

    இதனையடுத்து சிசிடிவி காட்சிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்களின் உதவியோடு, டிரைவரின் செல்போன் மெஹ்ராலி-குருகிராமம் சாலையில் சென்று கொண்டிருப்பதை போலீசார் கண்டறிந்தனர். இதனையடுத்து அங்கு விரைந்த போலீசார், காணாமல் போன டிரைவரின் காரை மடக்கினர். காரில் இருந்த ஒரு ஆண் மற்றும் ஒரு பெண்ணை கைது செய்தனர். அவர்களிடமிருந்து கார் மற்றும் டிரைவரின் செல்போனை பறிமுதல் செய்தனர்.

    விசாரணையில் அவர்கள் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த ஃபர்கத் அலி(40) மற்றும் சீமா ஷர்மா(30) என்பதும், அவர்கள் திருமணம் செய்துகொள்ளாமல் சேர்ந்து வாழும் லிவ் இன் ஜோடி என்பதும் தெரியவந்தது.

    இவர்கள், டெல்லி எம்ஜி சாலையில் இருந்து காஸியாபாத்தில் உள்ள தங்கள் வீட்டிற்கு செல்வதற்காக கோவிந்தின் காரை புக் செய்துள்ளனர். காரில் ஏறியதும், கோவிந்தின் கார் மற்றும் செல்போன்களை பறிக்க திட்டம் தீட்டியுள்ளனர். அதன்படி கோவிந்தை வீட்டின் உள்ளே வரவைத்து, மயக்க மருந்து கலந்த டீயை கொடுத்துள்ளனர். கோவிந்த் மயங்கியதும் அவரது கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். மறுநாள், உடலை துண்டுதுண்டாக நறுக்கி மூன்று பைகளில் வைத்து நொய்டாவில் உள்ள கழிவுநீர் கால்வாயில் போட்டுள்ளனர் என போலீஸ் துணை கமிஷனர் ஆர்யா தெரிவித்துள்ளார். #Delhi #Uberdriverdead

    ஆந்திர மாநிலம் சித்தூரில் பள்ளிக்கு தாமதமாக வந்த மாணவர்கள் நிர்வாணமாக வெயிலில் நிற்க வைத்த விவகாரத்தில் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியை கைது செய்தனர்.
    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் புங்கனூரில் தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக நாகராஜ் நாயுடு என்பவரும் ஆசிரியையாக புவனேஸ்வரியும் உள்ளனர்.

    இந்த நிலையில் கடந்த புதன்கிழமை காலை அதே பள்ளியில் 3ம் வகுப்பு படிக்கும் 6 மாணவர்கள் பள்ளிக்கு தாமதமாக வந்து உள்ளனர். மேலும் வீட்டு பாடம் எழுதவில்லை என தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்து வகுப்பு ஆசிரியை 6 மாணவர்களின் ஆடைகளை கழற்றி பள்ளி திடலில் நிர்வாணமாக வெயிலில் சுமார் 2 மணி நேரம் நிற்க வைத்தார்.

    அந்த வழியாக சென்றவர்கள் மாணவர்களை செல்போனில் படம் பிடித்து வாட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இந்த செய்தி ஆந்திரா முழுவதும் வைரலாக பரவியது.

    இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட கல்வி அதிகாரி பாண்டு ரெங்கசாமி அந்த பள்ளியில் விசாரணை நடத்த மண்டல அலுவலருக்கு உத்தரவிட்டார்.

    இதையடுத்து மண்டல அலுவலர் லீலா ராணி அந்த பள்ளிக்கு சென்று சம்பவம் நடந்தது உண்மை என மாவட்ட கல்வி அதிகாரிக்கும் கலெக்டர் பிரதிம்னாவுக்கு அறிக்கை அனுப்பினர். இதையடுத்து கலெக்டரின் உத்தரவின் பேரில் புங்கனூர் சென்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜ் மற்றும் போலீசார் பள்ளி தலைமை ஆசிரியர் நாகராஜ் நாயுடு ஆசிரியை புவனேஸ்வரியை கைது செய்து விசாரணை நடத்தினர்.

    மேலும் பள்ளி முன்பு மாணவர்களின் உறவினர்கள் மற்றும் பாஜக-வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    மேலும் இந்த பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய கலெக்டர் பிரதிம்னா உத்தரவிட்டுள்ளார்.
    தெலுங்கானா தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டியை போலீசார் கைது செய்தனர். #TelanganaElection #RevanthReddyarrested

    கோதண்கல்:

    தெலுங்கானா மாநில சட்டசபை தேர்தல் வருகிற 7-ந்தேதி நடக்கிறது. இதையடுத்து அங்கு பிரசார களம் சூடு பிடித்துள்ளது.

    தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சி தலைவரும், முதல்-மந்திரியுமான சந்திரசேகர ராவ் சூறாவளி பயணம் மேற்கொண்டு பொதுக் கூட்டங்களில் பேசி வருகிறார்.

    இன்று மாலை கோதண்கல் தொகுதியில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் சந்திரசேகர ராவ் பங்கேற்று பேசுகிறார்.

    கோதண்கல் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் செயல் தலைவர் ரேவந்த் ரெட்டி போட்டியிடுகிறார்.

     


    இதற்கிடையே கோதண்கல் தொகுதிக்கு வருகை தரும் சந்திரசேகரராவுக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என்று ரேவந்த் ரெட்டி அறிவித்தார். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

    இந்த நிலையில் இன்று அதிகாலை ரேவந்த் ரெட்டியை அவரது வீட்டில் வைத்து போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர். மேலும் அவரது சகோதரர், பாதுகாவலர், வீட்டு காவலாளி ஆகியோரையும் அழைத்து சென்றனர்.

    இதுபற்றி ரேவந்த் ரெட்டி மனைவி கீதா ரெட்டி கூறியதாவது:-

    அதிகாலை 3 மணிக்கு சிலர் எங்களது வீட்டு கதவை உடைத்து அத்துமீறி உள்ளே நுழைந்தனர். ஒரு அறையில் நான், கணவர், மகளுடன் தூங்கி கொண்டிருந்தோம். அவர்கள் எனது கணவரை அங்கிருந்து அழைத்து சென்றனர்.

    நாங்கள் என்ன பயங்கரவாதிகளா? அதுபோன்று எங்களை நடத்துவதா?

    இவ்வாறு அவர் ஆவேசமாக கூறினார்.

    சந்திரசேகர ராவ் ஊர் வலத்தையும், பொதுக் கூட்டத்தையும் தடுத்து நிறுத்த ரேவந்த் ரெட்டியும் அவரது ஆதரவாளர்களும் முயற்சி செய்வார்கள் என்பதால் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டார்கள்.

    கைது செய்யப்பட்ட ரேவந்த் ரெட்டியை கோதண்கல் தொகுதியில் இருந்து 90 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஜெத்சேர்லா என்ற இடத்துக்கு கொண்டு சென்றனர். அவரது பாதுகாவலர், வீட்டு காவலாளியை நடு வழியில் விடுவிடுத்தனர். #TelanganaElection #RevanthReddyarrested

    மதுரையில் விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது பொதுமக்களுக்கு இடையூறு செய்த 19 பேரை போலீசார் கைது செய்தனர். #arrest

    மதுரை:

    விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது பொதுமக்களுக்கு இடையூறு செய்த 19 பேரை போலீசார் கைது செய்தனர்.

    கடந்த 13-ந் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி மதுரை நகரில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் விளக்குத் தூண், மாசி வீதிகள் வழியாக கொண்டு செல்லப் பட்டு வைகை யாற்றில் கரைக்கப்பட்டன.

    ஊர்வலத்தின் போது அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் இருக்க 500-க்கும் மேற்பட்ட போலீ சார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    எனினும் ஊர்வலத்தில் பங்கேற்றவர்கள் போலீசாரின் விதிமுறை களை மீறி பொதுமக்க ளுக்கும், பொது சொத்துக் களுக்கும் பங்கம் விளை விக்கும் வகையில் நடந்து கொண்டனர்.

    அதன் அடிப்படையில் இந்து முன்னணி கட்சியைச் சேர்ந்த அழகர்சாமி, மாணிக்கமூர்த்தி, சுப்பையா ஆகிய 3 பேரை தெற்குவாசல் போலீசார் கைது செய்தனர்.

    இதேபோல் சோலையழகு புரத்ைச் சேர்ந்த இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் ரவிச்சந்திரன், கணேசன் மற்றும் பாக்கியராஜ், முருகன், சுந்தரபாண்டி, சிங்கம்பெருமாள், மணிகண்டன், சரவணன், காளீஸ்வரன், ரவிச்சந்திரன், திருமுருகன், அருண்பாண்டி, செல்வகுமார், பாண்டி, ராஜமுத்து, கார்த்திக் ஆகியோரை ஜெய்ஹிந்து புரம் போலீசார் கைது செய்தனர்.

    புதுவையில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    புதுச்சேரி:

    புதுவையில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை தாராளமாக நடந்து வருகிறது. எனவே இதில் ஈடுபடுபவர்களை கண்டுபிடிக்க போலீசார் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் மேட்டுப்பாளையம் அருகே சிலர் கஞ்சாவை பதுக்கி வைத்து பொட்டலம் மிட்டுக் கொண்டிருப்பதாக அதிரடிபடை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன், சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் கோரிமேடு போலீசார் அந்த இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்குள்ள கே.வி.கே. பண்ணை அருகே சிலர் அமர்ந்து இருந்து கஞ்சா பொட்டலம் போட்டுக் கொண்டு இருந்தனர். அவர்களை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

    கைதானவர்கள் தட்டாஞ்சாவடியை சேர்ந்த முகமது ரபிக் (வயது 19), ஜீவானந்த புரத்தை சேர்ந்த தமிழ்ச்செல்வன் (19), சண்முகாரத்தை சேர்ந்த அய்யனார் (18), முத்திரையர் பாளையத்தை சேர்ந்த சந்தோஷ் (21) மற்றும் வில்லியனூரை சேர்ந்த 17 வயது சிறுவன் என்று தெரியவந்தது.

    சிறுவனைத் தவிர மற்ற அனைவரும் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர். அவர்கள் திருவண்ணாமலை மற்றும் ஆந்திராவுக்கு சென்று கஞ்சாவை வாங்கி வந்ததாகவும், பின்னர் அவற்றை பொட்டலமாக தயாரித்து கல்லூரி, பள்ளி மாணவர்களுக்கு விற்றதாகவும் கூறினார்கள்.

    சீனாவில் மொபைல் ஆப் மூலம் உடலுறவு காட்சிகளை லைவ் ஆக ஒளிபரப்பி வந்த கும்பலை கம்போடியா நாட்டில் போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர். #China
    பீஜிங்:

    மாசே துங் வடிவமைத்த சித்தாந்தங்களின்படி கம்யூனிஸ்ட் ஆட்சி நடைபெற்றுவரும் சீனாவில் ஆபாசப் படங்கள் தடை செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில், ஆண்-பெண்களை உடலுறவில் ஈடுபட வைத்து ‘மேக்ஸ்’ என்னும் மொபைல் ஆப் மூலம் உடலுறவு காட்சிகளை சிலர் லைவ் ஆக ஒளிபரப்பி வந்தது அந்நாட்டின் சைபர் கிரைம் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

    110 இடங்களில் இருந்து நேரடியாக உடலுறவு காட்சிகளை ஒளிபரப்புவதுடன் பல்லாயிரக்கணக்கான ஆபாச வீடியோக்களையும் தொகுப்பாக வைத்திருந்ததால் சுமார் 35 லட்சம் நிரந்தர வாடிக்கையாளர்களை கொண்ட இந்த ஆப்மூலம் சுமார் மூன்றரை கோடி அமெரிக்க டாலர்கள் வரை பணப் பறிமாற்றம் நடைபெற்றதும் தெரியவந்தது.

    மேலும், புதிய வாடிக்கையாளர்களை இழுப்பதற்காக சுமார் 16 ஆயிரம் தரகர்களும் நியமிக்கப்பட்டுள்ளதை அறிந்த சைபர் கிரைம் போலீசார் கடந்த ஏப்ரல் மாதத்தில் இதில் தொடர்புடைய சுமார் 200 பேரை கைது செய்தனர்.

    இருப்பினும், இந்த ஆப் மூலம் தொடர்ந்து சமூக வலைத்தளங்களின் வழியாக ஆபாச காட்சிகள் ஒளிபரப்பானதை கண்டு அதிர்ச்சி அடைந்த சீன அதிகாரிகள் மேற்கொண்டு நடத்திய விசாரணையில் கம்போடியா நாட்டில் உள்ள ‘சர்வர்’ மூலம் இவை பதிவேற்றம் செய்யப்படுவதை கண்டுபிடித்தனர்.

    இதை தொடர்ந்து கம்போடியா அரசின் உதவியுடன் அந்த ‘சர்வர்’ முடக்கப்பட்டு, இதில் தொடர்புடைய 18 பேர் கடந்த மாதம் கைது செய்யப்பட்டதாக சீனாவின் கிழக்கு பகுதியில் உள்ள செஜியாங் மாகாண போலீசார் இன்று தெரிவித்துள்ளனர்.  #livestream #pornappgang 
    ×