search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கைது"

    துரைப்பாக்கம் சூப்பர் மார்க்கெட்டில் போலி பே.டி.எம். செயலி மூலம் பொருட்கள் வாங்கி மோசடி செய்த 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #Arrest #FakePaytmCheating

    சென்னை:

    கிரெடிட் கார்டு, டெபிட் கார்டுகளை பயன்படுத்தி சூப்பர் மார்க்கெட் உள்ளிட்ட வணிக நிறுவனங்களில் பொருட்களை வாங்குவது வழக்கம்.

    இப்போது பே.டி.எம். செயலி மூலமாகவும் பொருட்கள் வாங்குவது அதிகரித்துள்ளது. சிறிய வணிக நிறுவனங்களில் தொடங்கி பெரிய வர்த்தக நிறுவனங்கள் வரையில் பே.டி.எம். செயலி பயன் பாட்டில் உள்ளது. பொருட்களை வாங்கிய பின்னர் செல்போனில் உள்ள பே.டி.எம். செயலியை பயன் படுத்தி வியாபாரிகளின் வங்கி கணக்கில் நேரடியாக பணத்தை செலுத்தலாம்.

    இந்த டிஜிட்டல் பரிவர்த் தணையில் மோசடி செய்யப்பட்டுள்ளது. பே.டி.எம்.செயலியை போலியாக உருவாக்கி அதன் முலம் பொருட்களை வாங்கி ரூ.30 ஆயிரம் அளவுக்கு மோசடி செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    சென்னை துரைப்பாக்கத்தில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருபவர் வேல்ராஜ். இவரது கடையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் 3 வாலிபர்கள் சென்று பொருட்கள் வாங்கினர். இதற்காக பே.டி.எம். செயலியை பயன்படுத்தி ரூ.30 ஆயிரம் பணமும் செலுத்தினர்.

    ஆனால் பணம் வாங்கிய 3 வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் இருந்து உரிமையாளர் வேல்ராஜின் வங்கி கணக்குக்கு பணம் போய் சேரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இதுபற்றி துரைப்பாக்கம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

    இதனைத் தொடர்ந்து மோசடியில் ஈடுபட்ட 3 வாலிபர்களை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். சூப்பர் மார்க் கெட்டுக்கு மீண்டும் பொருட்கள் வாங்க வந்த போதே பிடிபட்டனர். அவர்களது பெயர் யசாங், கிரண்குமார், செல்லி.

    இதில் கிரண்குமாரும், யசங்கும் கல்லூரி மாணவர்கள். பெங்களூரைச் சேர்ந்த இவர்கள் சென்னையில் தங்கி இருந்து தனியார் கல்லூரியில் படித்து வருகிறார்கள். இன்னொரு வாலிபரான செல்லி கேரளாவை சேர்ந்தவர். பி.டெக் முடித்துள்ள இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர்தான் வேலை தேடி சென்னைக்கு வந்துள்ளார். 3 பேரையும் கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர். #Arrest #FakePaytmCheating

    புதுவைக்கு சுற்றுலா வந்த வடமாநில பெண் தனது நண்பர்களுடன் ஓட்டலில் நடனம் ஆடியபோது செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்ட டாக்டர், மருத்துவ மாணவர் இருவரை போலீசார் கைது செய்தனர்.
    புதுச்சேரி:

    புதுவைக்கு வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சென்னை, பெங்களூர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அவர்கள் ஓட்டல்களில் தங்கி புதுவையில் பல்வேறு சுற்றுலா பகுதிகளுக்கு சென்று கண்டுகளிப்பது வழக்கம். மேலும் ஓட்டல்களில் நடக்கும் நடன நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று ஆடிப்பாடி மகிழ்வார்கள்.

    அதுபோல் நேற்று முன்தினம் இரவு வடமாநிலத்தை சேர்ந்த ஒரு பெண் தனது ஆண் நண்பர்களுடன் புதுவை கடற்கரையையொட்டி உள்ள ஒரு ஓட்டலில் நடந்த நடன நிகழ்ச்சியில் நடனமாடி கொண்டு இருந்தார்.

    அப்போது சில வாலிபர்கள் அந்த பெண்ணின் ஆடைகளை கிழித்து செக்ஸ் அத்துமீறலில் ஈடுபட்டனர். இதனை அந்த பெண்ணுடன் வந்த ஆண் நண்பர்கள் தட்டிக்கேட்ட போது அவர்களை அந்த வாலிபர்கள் தாக்கி விரட்டியடித்தனர். மேலும் அந்த பெண்ணுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்தனர்.

    இதுபற்றி அந்த பெண் ஒதியஞ்சாலை போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ நடந்த ஓட்டலுக்கு விரைந்து செல்வதற்குள் அந்த வாலிபர்கள் ஓட்டலில் இருந்து தப்பி சென்றுவிட்டனர்.

    இதையடுத்து போலீசார் ஓட்டலில் பொறுத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அப்போது பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 2 பேர் அடையாளம் தெரிந்தது. அதில் புதுவையில் ஒரு தனியார் மருத்துவ கல்லூரியில் இறுதி ஆண்டு படித்துவரும் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ராம்குமார் (வயது25) என்பதும், மற்றொருவர் ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் டாக்டராக பணியாற்றி வரும் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த எழிலரசு (27) என்பது தெரியவந்தது.

    இதையடுத்து புதுவையில் மற்றொரு ஓட்டலில் தங்கி இருந்த அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    மதுரை அருகே கத்தியை காட்டி மிரட்டி பணம் மற்றும் செல்போனை பறித்து சென்றது தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
    மதுரை:

    மதுரை அருகே உள்ள துவரிமான் கணேசபுரம் மேற்கு தெருவைச் சேர்ந்தவர் ஸ்ரீமன். இவர் பெரியார் பஸ் நிலையம் பாலம் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 2 மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி செல்போனை பறித்துக்கொண்டு தப்ப முயன்றனர்.

    உடனே ஸ்ரீமன் கூச்சலிட்டதால் பொதுமக்கள் விரட்டிச்சென்று 2 பேரையும் பிடித்தனர். பின்னர் அவர்கள் திடீர்நகர் போலீசில் ஒப்படைத்தனர்.

    போலீசார் விசாரணை நடத்தியதில் திடீர்நகரைச் சேர்ந்த முபாரக்அலி (51), ஒத்தப்பட்டி வைத்திய நாதபுரத்தைச் சேர்ந்த அபிஷேக் (20) என தெரிய வந்தது. இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

    கோரிப்பாளையம் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் நடராஜன் (51). இவர் பள்ளிவாசல் தெருவில் நடந்து சென்றபோது கே.புதூரைச் சேர்ந்த நாகவேலு (28), கோரிப்பாளையம் இப்ராகிம் (32) ஆகியோர் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு கைது செய்தனர். #tamilnews
    ஆவடி அருகே 8-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
    திருநின்றவூர்:

    ஆவடியை அடுத்த கோவில் பதாகையை சேர்ந்தவர் இன்பநேசன். அம்பத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

    இவருக்கும் உடன் வேலை பார்க்கும் அதே பகுதியை சேர்ந்த விதவை பெண் ஒருவருக்கும் காதல் ஏற்பட்டது. இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் வசித்து வருகிறார்கள். அவர்களுடன் விதவை பெண்ணின் 13 வயது மகளும் தங்கி இருந்தார். அவர் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    கடந்த சில நாட்களாக மாணவியின் உடல் பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவரை அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். மாணவி பாலியல் தொல்லைக்கு ஆளாகி இருப்பது தெரிந்தது.

    இதுகுறித்து ஆவடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து இன்பநேசனை கைது செய்தனர்.
    ஸ்ரீநகரில் உள்ள ஓட்டல் ஒன்றில் இளம்பெண்ணுடன் நுழைந்து தகராறு செய்த ராணுவ மேஜர் லீதுல் கோகோய் மீதான குற்றம் ராணுவ கோர்ட்டில் உறுதியாகியுள்ளதால், அவர் தண்டனையை எதிர்நோக்கியுள்ளார். #MajorGogoi #MajorGogoiGuilty #Army
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் தொகுதிக்கு கடந்தாண்டு நடந்த இடைத்தேர்தலின் போது, பொதுமக்கள் பாதுகாப்பு படையினர் மீது கல்வீச்சில் ஈடுபட்டனர். அப்போது, ராணுவ மேஜர் லீதுல் கோகோய் அங்குள்ள இளைஞர் ஒருவரை பிடித்து தனது ஜீப்பில் கட்டி ஊர்வலமாக சென்றார். இந்த சம்பவம் கடும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    கடந்த மே மாதம் ஸ்ரீநகரில் உள்ள ஒரு ஓட்டலுக்கு இளம்பெண்ணுடன் லீதுல் கோகோய் நுழைந்து தகராறு செய்தார். இதனை அடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவர் மீதான விசாரணை ராணுவ கோர்ட்டில் நடந்து வந்த நிலையில், கோகோய் மீதான குற்றச்சாட்டு உறுதியாகியுள்ளது.

    இதன் காரணமாக அவர் தண்டனையை எதிர்நோக்கியுள்ளார். ராணுவ கோர்ட் தனது விசாரணை அறிக்கையை ராணுவ தலைமையகத்திடம் கொடுத்துள்ளதாகவும், விரைவில் அவருக்கு தண்டனை அறிவிக்கப்படும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
    பாபநாசம் அருகே மோட்டார்சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் 2 கட்டிட தொழிலாளர்கள் பலியாயினர். விபத்து குறித்து டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
    பாபநாசம்:

    பாபநாசம் அருகே பண்டாரவாடை பார்வதிபுரம் கிராமத்தில் வசித்து வந்தவர்கள் சந்தானதாஸ் (வயது 27), ஆனந்தராஜ் (22), லெட்சுமிபுரத்தை சேர்ந்தவர் காணிக்கைராஜ் (50) இவர்கள் 3 பேரும் கொத்தனார் வேலை செய்து வந்தனர். இந்நிலையில் நேற்று மாலை 6.30 மணியளவில் பாபநாசம் அருகே கோவில் தேவராயன் பேட்டை மெயின்ரோட்டில் 3 பேரும் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது கும்பகோணத்தில் இருந்து தஞ்சை நோக்கி சென்ற ஒரு வேன் அதிவேகமாக வந்து மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சந்தானதாஸ், ஆனந்தராஜ் படுகாயம் அடைந்து சம்பவயிடத்திலேயே இறந்து விட்டனர். காணிக்கைராஜ் கை, கால்களில் பலத்த காயங்களுடன் உயிர் தப்பினார். அவரை மீட்டு பாபநாசம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பலியான சந்தானதாஸ், ஆனந்தராஜ் ஆகியோரின் உடல்கள் பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டது.

    இதுகுறித்து பாபநாசம் இன்ஸ்பெக்டர் நாகரத்தினம், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செந்தில், ஏட்டு சிவராஜ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து மீன் வண்டி வேன் டிரைவர் கொத்தங்குடி சபரி (22) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    தாரமங்கலம் அருகே 2-வது திருமணத்துக்கு பெண் கொடுக்க மறுப்பு தெரிவித்த தந்தையை செருப்பால் அடித்ததால் விவசாயி கைது செய்யப்பட்டார்.
    சேலம்:

    சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள பள்ளிகொண்டான் பாறை பகுதியை சேர்ந்தவர் வைரமணி (வயது 33). கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்த இவருக்கு குழந்தை இல்லை.

    இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த மாரியப்பன் மகள் ரம்யா (வயது 23) என்பவரை 2-வதாக திருமணம் செய்ய பெண் கேட்டார். அப்போது மாரியப்பன் தனது மகளை 2-வதாக திருமணம் செய்து கொடுக்க விருப்பம் இல்லை என்று கூறினார்.

    உடனே வைரமணி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு உங்களது மகளை திருமணம் செய்து தருமாறு கேட்டதற்கு வயது குறைவாக இருப்பதால் திருமணம் செய்து தர முடியாது என்று கூறினீர்கள், தற்போது 2-வது திருமணத்திற்கு பெண் தர முடியாது என்று செல்கிறீர்கள் என்று ஆவேசமாக கூறினார்.

    இதனால் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றியதும் ஆத்திரம் அடைந்த வைரமணி, மாரியப்பனை செருப்பால் அடித்தார். மேலும் ரம்யாவிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளாவிட்டால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டல் விடுத்தார்.

    இது குறித்து ரம்யா தாரமங்கலம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் வைரமணியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    திருப்பூரில் பங்களா வீட்டில் கொள்ளையடிக்க சதி திட்டம் தீட்டிய 6 பேர் கும்பல் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டனர்.
    திருப்பூர்:

    திருப்பூர் மத்திய போலீஸ் இன்ஸ்பெக்டர் சாலைராம் சக்திவேல், சப்-இன்ஸ்பெக்டர் மனோகர் மற்றும் போலீசார் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அவர்கள் திருப்பூர் கே.வி.ஆர். நகர் பகுதியில் உள்ள ஓடைக்காடு என்ற இடத்தில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு 6 பேர் கும்பல் பதுங்கி இருந்தது. அவர்கள் மீது சந்தேகமடைந்த போலீசார் அவர்களை நோக்கி சென்றனர். போலீசாரை பார்த்ததும் அக்கும்பல் ஓட்டம் பிடித்தது.

    போலீசார் அவர்களை விரட்டி சென்று மடக்கி பிடித்தனர். பின்னர் அவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர்.

    அப்போது அவர்களது பெயர் சண்முகம், வல்லரசு, கோகுல் ராஜ், வினித், வெற்றி செல்வன், சதிஷ்வரன் என்பது தெரிய வந்தது. இவர்கள் திருவண்ணாமலை மாவட்டம் மற்றும் உள்ளூரை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

    அவர்களிடம் விசாரித்த போது ஓடைக்காடு பகுதியில் ஒரு பங்களா வீட்டை நோட்டமிட்டு கொள்ளையடிக்க திட்டம் தீட்டியதாக தெரிவித்தனர். அந்த பங்களா வீட்டில் 3 பேர் இருப்பதாகவும் அவர்களது வீட்டில் நேற்று இரவு கொள்ளையடிக்க திட்டம் தீட்டி இருந்ததாகவும், கொள்ளையை தடுத்தால் கொலை செய்யவும் தயாராக இருந்ததாகவும் கூறினர். கடந்த 2 நாட்களாக இந்த பங்களா வீட்டை நோட்டமிட்டதாகவும் தெரிவித்தனர்.

    இதற்காக மிளகாய் பொடி, அரிவாள், இரும்பு ராடு, உளி மற்றும் முகமூடி தயார் செய்து வைத்து இருந்ததும் தெரிய வந்தது. இந்த ஆயுதங்களை அப்பகுதியில் உள்ள முள் காட்டில் பதுங்கி வைத்து இருப்பதாக தெரிவித்தனர்.

    அவர்களை முள் காட்டுக்கு அழைத்து சென்ற போலீசார் அங்கு பதுக்கி வைத்திருந்த ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். சரியான நேரத்தில் கொள்ளை கும்பலை போலீசார் பிடித்ததால் கொள்ளை தடுக்கப்பட்டு உள்ளது. கைதான 6 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு காவலில் வைக்கப்பட்டனர்.
    திருப்பூர் அருகே குடும்பம் நடத்த வரமறுத்த கள்ளக்காதலியை அடித்து கொன்றதால் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    வெள்ளகோவில்:

    திருப்பூர் மாவட்டம் மூலனூர் எரிசனாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் நடராஜன். இவரது மனைவி சந்திரா (வயது 45). நடராஜன் இறந்துவிட்டார். தனியே வசித்து வந்த சந்திரா அங்குள்ள மில்லில் வேலை செய்து வந்தார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று சொரியன் கிணற்றுபாளையம் அருகே உள்ள ஒரு காட்டுப்பகுதியில் சந்திரா அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். இது குறித்து வெள்ளகோவில் போலீசாருக்கு தகவல் கிடைத்ததும் அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    சந்திரா குறித்து விசாரணை நடத்தியபோது அவருக்கும் ஒரு வாலிபருக்கும் இடையே பழக்கம் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் வேலூர் அரக்கோணம் மாறன்கண்டிகை கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணியனின் மகன் விஸ்வநாதன் (29) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் காங்கயத்தில் தங்கியிருந்தபோது சந்திராவுடன் பழக்கம் ஏற்பட்டது. அதுவே கள்ளக்காதலாக மாறியது. என்னுடன் சேர்ந்து வாழ வரும்படி சந்திராவை அழைத்தேன். ஆனால் அவர் வரமறுத்து விட்டார். இதனால் ஆத்திரமடைந்த நான் குறிப்பிட்ட இடத்திற்கு வரவழைத்து கொலை செய்தேன் என்று கூறினார். இதனையடுத்து விஸ்வநாதனை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.
    மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு மெரீனாவில் அடக்கம் செய்ய இடம் தரக்கோரி முதல்-அமைச்சருக்கு மிரட்டல் விடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    திருப்பூர்:

    தி.மு.க. தலைவர் கருணாநிதி கடந்த 7-ந்தேதி காலமானார். அவரது உடலை அடக்கம் செய்ய மெரீனா கடற்கரை அண்ணா சமாதி அருகே அனுமதி மறுக்கப்பட்டது. பின்னர் கோர்ட்டு மூலம் கருணாநிதி உடல் மெரினாவில் அடக்கம் செய்ய அனுமதி பெறப்பட்டது.

    இந்நிலையில் திருப்பூர் தென்னம்பாளையம் காலனியை சேர்ந்த கனகசுந்தரம் (வயது 35) என்ற வாலிபர் பேஸ்புக்கில் ஒரு பதிவு வெளியிட்டார். அதில் முன்னாள் முதல்-அமைச்சர்கள் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா பற்றி அவதூறு பரப்பும் வகையில் தகவல்களை பதிவு செய்திருந்தார். மேலும் அதில் கருணாநிதிக்கு அண்ணா சமாதி அருகே இடம் தராவிட்டால் கொங்கு மண்டலத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆகியோர் நுழைய முடியாது என்றும் பதிவு செய்திருந்தார்.

    இதைப்பார்த்த அதே பகுதியை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் கணேசன் (58) என்பவர் திருப்பூர் தெற்கு போலீசில் கனகசுந்தரம் பரப்பிய அவதூறு மற்றும் மிரட்டல் குறித்து புகார் செய்தார்.

    இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் முதல்-அமைச்சருக்கு மிரட்டல் விடுத்த கனகசுந்தரத்தை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
    மதுரை அருகே நிதி நிறுவன ஊழியரை தாக்கி ரூ.1.87 லட்சத்தை பறித்து சென்ற வழிப்பறி கொள்ளையர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    மதுரை:

    மதுரை அருகே உள்ள ஒத்தக்கடை இந்திரா காலனியை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் அசோக்குமார் (வயது24). இவர் மதுரையில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

    அசோக்குமார் நேற்று மோட்டார் சைக்கிளில் பட்டணம், ஜோதியபட்டி, பஞ்சாங்கிபட்டி, கட்ட முத்துப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வசூல் செய்துவிட்டு ஒத்தக்கடை நோக்கி வந்து கொண்டிருந்தார்.

    அவர் கண்டமுத்துபட்டி- சின்னமங்கலம் சந்திப்பு பகுதியில் வந்தபோது மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த 2 மர்ம நபர்கள் அவரை வழிமறித்தனர்.

    அப்போது அந்த நபர்கள் அவசரமாக பேச வேண்டும் உன் செல்போனை கொடு என்று மிரட்டினர். ஆனால் அசோக்குமார் செல்போனை கொடுக்க மறுத்தார்.

    அப்போது 2 பேரும் அசோக்குமாரை தாக்கி பணப்பை மற்றும் செல்போனை பறித்துக்கொண்டு தப்பினர். அந்த பையில் வசூல் பணம் ரூ. 1 லட்சத்து 87 ஆயிரத்து 100 இருந்தது.

    பணம் மற்றும் செல்போனை மர்ம நபர்கள் பறித்து சென்றதால் அசோக்குமார் பரிதவித்தார். பின்னர் ஒத்தக்கடை போலீசில் புகார் செய்யப்பட்டது.

    ஒத்தக்கடை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமரகுரு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

    வழிப்பறி சம்பவத்தில் தொடர்புடைய கடச்சனேந்தல் பகுதியை சேர்ந்த பிரவீன் (20), முருகானந்தம் (19) ஆகியோரை கைது செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இவர்களுக்கு வேறு எந்த கொள்ளை சம்பவங்களிலும் தொடர்பு இருக்கிறதா? என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.
    திருமங்கலம் அருகே பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீஸ்காரரை தாக்கிய ரெயில்வே ஊழியர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
    திருமங்கலம்:

    திருமங்கலம் அருகேயுள்ள வில்லூரைச் சேர்ந்தவர் கார்த்திக் செல்வம் (வயது 30). இவர் கள்ளிக்குடி போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். தி.மு.க. தலைவர் கருணாநிதி மரணமடைந்ததையொட்டி சிவரக்கோட்டை பகுதியில் கார்த்திக் செல்வம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார்.

    அப்போது அதே பகுதியைச் சேர்ந்த நாகேஸ்வரன் (34), அவரது மைத்துனர் மச்சவேல் (45) மற்றும் முத்துவேல் (45) ஆகியோர் அங்கு வந்தனர்.

    போதையில் இருந்த அவர்கள் பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர் கார்த்திக் செல்வத்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    திடீரென்று அவர்கள் 3 பேரும் சேர்ந்து போலீஸ்காரரின் சீருடையை கிழித்ததோடு சரமாரியாக தாக்கினர். பின்னர் அவரது இருசக்கர வாகனத்தையும் சேதப்படுத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.

    3 பேரும் சேர்ந்து தாக்கியதில் போலீஸ்காரர் கார்த்திக் செல்வம் படுகாயமடைந்தார். அந்த வழியாக வந்தவர்கள் அவரை திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    போலீஸ்காரர் தாக்கப்பட்டது குறித்து கிராம நிர்வாக அதிகாரி முருகாண்டி கள்ளிக்குடி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நாகேஸ்வரன், மச்சவேல், முத்துவேல் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

    கைதான நாகேஸ்வரன் மத்திய ரிசர்வ் போலீசில் போலீஸ்காரராகவும் முத்துவேல் ரெயில்வேயில் கேட் கீப்பராகவும் பணியாற்றி வருவது தெரிய வந்துள்ளது.
    ×