என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 94418
நீங்கள் தேடியது "slug 94418"
ராயல் என்பீல்டு நிறுவனத்தின் புதிய ஸ்கிராம் 411 மோட்டார்சைக்கிள் வெளியீட்டு விவரங்களை பார்ப்போம்.
ராயல் என்பீல்டு நிறுவனம் அடுத்த சில மாதங்களில் பல்வேறு புது மோட்டார்சைக்கிள் மாடல்களை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. ராயல் என்பீல்டு நிறுவனத்தின் அடுத்த மாடல் ஹிமாலயன் அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிளை தழுவி உருவாகி இருக்கும் சற்றே குறைந்த விலை/ரோடு சார்ந்த வேரியண்ட் என கூறப்படுகிறது.
புதிய ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிள் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாத வாக்கில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த மாடல் ஸ்கிராம் 411 எனும் பெயரில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது.
ஸ்கிராம் 411 மாடலை தொடர்ந்து மேலும் சில புதிய மாடல்களை 2022 ஆண்டில் அறிமுகம் செய்ய ராயல் என்பீல்டு நிறுவனம் திட்டமிட்டு இருக்கிறது. தோற்றத்தில் ஸ்கிராம் 411 மாடல் ஹிமாலயன் அட்வென்ச்சர் மாடலை போன்றே காட்சியளிக்கும் என தெரிகிறது.
ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் புதிய மோட்டார்சைக்கிள் மாடலின் இந்திய வெளியீட்டு விவரங்களை பார்ப்போம்.
ஹார்லி டேவிட்சன் இந்தியா நிறுவனம் புதிய ஸ்போர்ட்ஸ்டர் எஸ் மோட்டார்சைக்கிள் இந்தியாவில் அடுத்த மாதம் அறிமுகமாகும் என அறிவித்து இருக்கிறது. டிசம்பர் 4-5 தேதிகளில் நடைபெற இருக்கும் இந்தியா பைக் வார நிகழ்வில் புதிய ஹார்லி டேவிட்சன் மோட்டார்சைக்கிள் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
ஏற்கனவே இந்த மோட்டார்சைக்கிள் மாடலுக்கான முன்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது. புதிய ஸ்போர்ட்ஸ்டர் எஸ் மாடலில் ஆப்லங்-வடிவ ஹெட்லேம்ப், காம்பேக்ட் முன்புற பெண்டர், 11.8 லிட்டர் பியூவல் டேன்க், டால்-சீட் எக்சாஸ்ட்கள் உள்ளன.
இந்தியாவில் புதிய ஹார்லி டேவிட்சன் ஸ்போர்ட்ஸ்டர் எஸ் மோட்டார்சைக்கிள் விவிட் பிளாக், மிட்நைட் க்ரிம்சன் மற்றும் ஸ்டோன் வாஷ்டு வைட் பியல் போன்ற நிறங்களில் கிடைக்கிறது. இந்த மாடலில் 1250சிசி, லிக்விட் கூல்டு, 60-டிகிரி, வி ட்வின் என்ஜின் வழங்கப்படுகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
இந்த என்ஜின் 119.3 பி.ஹெச்.பி. திறன், 127.4 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த மாடலில் ஐந்து ரைடிங் மோட்கள், கார்னெரிங் ஏ.பி.எஸ்., லீன்-சென்சிடிவ் டிராக்ஷன் கண்ட்ரோல் போன்ற அம்சங்கள் உள்ளன.
டுகாட்டி நிறுவனத்தின் புதிய பணிகல் வி4 எஸ்.பி. மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
டுகாட்டி நிறுவனம் பணிகேல் வி4 எஸ்.பி. மோட்டார்சைக்கிளை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இது பணிகேல் வி4 எஸ் மாடலின் டாப் எண்ட் வேரியண்ட் ஆகும். இந்தியாவில் டுகாட்டி பணிகேல் வி4எஸ் விலை ரூ. 28.40 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
ஒட்டுமொத்த தோற்றத்தில் பணிகேல் வி4எஸ்.பி. மாடல் பணிகேல் வி4எஸ் போன்றே காட்சியளிக்கிறது. எனினும், புதிய வி4 எஸ்.பி. மாடலில் விண்டர் டெஸ்ட் லிவெரி கொண்டிருக்கிறது. பணிகேல் வி4 எஸ்.பி. மாடலில் மார்ஷெஸ்னி போர்ஜ் செய்யப்பட்ட அலுமினியம் வீல்கள் மற்றும் பைரெளி டையப்ளோ சூப்பர்கோசா எஸ்.பி. டையர்கள் வழங்கப்படுகிறது.
புதிய டுகாட்டி பணிகேல் வி4 எஸ்.பி. மாடலிலும் 1103சிசி, டெஸ்மோடிசி ஸ்டிரேடேல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 214 பி.ஹெச்.பி. திறன், 124 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த மாடலில் ஓலின்ஸ் மற்றும் பிரெம்போ சஸ்பென்ஷன் மற்றும் பிரேக்கிங் வழங்கப்பட்டு இருக்கிறது.
புதிய எஸ்.பி. மாடலில் குவிக்ஷிப்டர், ரைடிங் மற்றும் பவர் மோட்கள், டிராக்ஷன் கண்ட்ரோல், வீலி கண்ட்ரோல், என்ஜின் பிரேக் கண்ட்ரோல் மற்றும் லான்ச் கண்ட்ரோல் போன்ற எலெக்ட்ரிக் அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த பல்சர் 250 சீரிஸ் மாடல்கள் வினியோகம் துவங்கி நடைபெற்று வருகிறது.
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தனது புதிய பல்சர் 250 சீரிஸ் மாடல்களின் வினியோகத்தை இந்தியாவில் துவங்கி இருக்கிறது. புதிய பல்சர் 250 முதல் யூனிட் நவம்பர் 15 ஆம் தேதி வினியோகம் செய்யப்பட்டது. புதிய பல்சர் என்250 மற்றும் எப்250 மாடல்கள் கடந்த மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டன. இவற்றின் விலை முறையே ரூ. 1.38 லட்சம் மற்றும் ரூ. 1.40 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.
புதிய பல்சர் மாடல்களில் ஒரே மாதிரியான அம்சங்களே வழங்கப்பட்டு இருக்கின்றன. இவற்றில் 249.07சிசி, சிங்கில் சிலிண்டர், ஏர்/ஆயில் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 24 பி.ஹெச்.பி. திறன், 21.5 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.
இந்திய சந்தையில் பஜாஜ் பல்சர் என்250 சுசுகி ஜிக்சர் 250 மற்றும் யமஹா எப்.இசட்.250 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. புதிய பஜாஜ் பல்சர் எப்250 மாடல் சுசுகி ஜிக்சர் 250 எஸ்.எப். மற்றும் யமஹா பேசர் 250 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
யமஹா நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ஆர்15எஸ் வி3 மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்து இருக்கிறது.
யமஹா நிறுவனத்தின் வை.இசட்.எப். ஆர்15எஸ் வி3 மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மோட்டார்சைக்கிள் யுனிபாடி சீட் கொண்டிருக்கிறது. புதிய மாடல் யமஹா ஆர்15 வி4 மோட்டார்சைக்கிளுடன் சேர்ந்து நாட்டின் முன்னணி விற்பனை மையங்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.
இந்தியாவில் புதிய யமஹா ஆர்15எஸ் வி3 யுனிபாடி சீட் கொண்ட மாடல் விலை ரூ. 1,57,600 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த மோட்டார்சைக்கிள் ரேசிங் புளூ நிறத்தில் கிடைக்கிறது. ஆர்15எஸ் வி3 மாடலில் 155சிசி, 4 ஸ்டிரோக், லிக்விட் கூல்டு, 4 வால்வுகள் கொண்ட என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்த என்ஜின் 18.6 பி.எஸ். திறன், 14.1 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இந்த மாடலில் மல்டி-பன்ஷன் எல்.சி.டி. இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், டூயல் சேனல் ஏ.பி.எஸ்., அசிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச், சைடு ஸ்டாண்டு என்ஜின் கட்-ஆப் போன்ற அம்சங்கள் உள்ளன.
டுகாட்டி நிறுவனத்தின் ஹைப்பர்மோட்டார்ட் 950 பி.எஸ்.6 மாடல் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
டுகாட்டி இந்தியா நிறுவனம் தனது புதிய மோட்டார்சைக்கிள் மாடலின் இந்திய வெளியீட்டை அறிவிக்கும் டீசரை வெளியிட்டு இருக்கிறது. டீசரின்படி டுகாட்டி நிறுவனம் விரைவில் பி.எஸ்.6 புகை விதிகளுக்கு பொருந்தும் ஹைப்பர்மோட்டார்ட் 950 மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்யும் என தெரிகிறது.
ஏற்கனவே யூரோ 5 புகை விதிகளுக்கு பொருந்தும் ஹைப்பர்மோட்டார்ட் 950 மோட்டார்சைக்கிள் சில சர்வதேச நாடுகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த மாடலில் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ், யூரோ 5 புகை விதிகளுக்கு பொருந்தும் 937சிசி டுகாட்டி டெஸ்டாஸ்டிரெட்டா 11 டிகிரி, வி ட்வின் சிலிண்டர், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்த என்ஜின் 112.4 பி.ஹெச்.பி. திறன், 96 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இதன் பி.எஸ்.6 வெர்ஷனும் இதேபோன்ற செயல்திறன் வழங்கும் என எதிர்பார்க்கலாம். சர்வதேச சந்தையில் ஹைப்பர்மோட்டார்ட் 950- ஹைப்பர்மோட்டார்ட் 950, ஹைப்பர்மோட்டார்ட் 950 ஆர்.வி.இ. மற்றும் ஹைப்பர்மோட்டார்ட் 950 எஸ்.பி. என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது.
டுகாட்டி நிறுவனத்தின் ஸ்கிராம்ப்ளர் சீரிஸ் லிமிடெட் எடிஷன் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
டுகாட்டி இந்தியா நிறுவனம் லிமிடெட் எடிஷன் ஸ்கிராம்ப்ளர் டெசர்ட் ஸ்லெட் மோட்டார்சைக்கிள் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இதன் விலை ரூ. 10.99 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது.
உலகம் முழுக்க டுகாட்டி ஸ்கிராம்ப்ளர் டெசர்ட் ஸ்லெட் மாடல் மொத்தத்தில் 800 யூனிட்களே உற்பத்தி செய்யப்பட இருக்கின்றன. பாஸ்ட்-ஹவுஸ் மற்றும் டுகாட்டி நிறுவனங்களின் கூட்டணியை கொண்டாடும் வகையில் லிமிடெட் எடிஷன் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
இந்த மாடலில் 803சிசி, ட்வின் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த மாடலில் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய கயபா சஸ்பென்ஷன், ஆப்-ரோடு சார்ந்த பூட் பெக், கழற்றக்கூடிய ரப்பர் பேட்கள், பிளாக் நிற ஸ்போக் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன.
கவாசகி நிறுவனம் நின்ஜா 300 மோட்டார்சைக்கிளை இரண்டு புதிய நிறங்களில் அறிமுகம் செய்ய இருக்கிறது.
கவாசகி நிறுவனம் தனது நின்ஜா 300 மோட்டார்சைக்கிளை மெட்டாலிக் மூன் டஸ்ட் கிரே மற்றும் லைம் கிரீன் என இருவித நிறங்களில் அறிமுகம் செய்ய இருக்கிறது.
இரண்டு புதிய நிறங்கள் தவிர புளு மற்றும் கிரீன் என இருவித நிறங்களில் இந்த மோட்டார்சைக்கிள் விற்பனை செய்யப்படுகிறது. அந்த வகையில் கவாசகி நின்ஜா 300 மாடல் தற்சமயம் நான்கு நிறங்களில் கிடைக்கிறது. எனினும், இதன் விலை 2.98 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என்றே நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
2019 கவாசகி நின்ஜா மாடலில் 296 சிசி, 4-ஸ்டிரோக், 8-வால்வ், DOHC, பேரலெல் ட்வின் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 38 பி.ஹெச்.பி. @11,000 ஆர்.பி.எம். பவர் மற்றும் 27 என்.எம். டார்க் @ 10,000 ஆர்.பி.எம். செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் வசதி வழங்கப்படுகிறது.
நின்ஜா 300 மோட்டார்சைக்கிளின் முன்புறம் 37 எம்.எம். டெலிஸ்கோபிக் ஃபோர்க்களும், பின்புறம் மோனோஷாக் சஸ்பென்ஷனும் வழங்கப்படுகிறது. இவற்றுடன் முன்புறம் 290 எம்.எம். டிஸ்க் பிரேக், பின்புறம் 220 எம்.எம். டிஸ்க் வழங்கப்படுகிறது. இத்துடன் ஏ.பி.எஸ். வசதி வழங்கப்படுகிறது.
இந்தியாவில் ரூ.3 லட்சம் விலை பிரிவில் கவாசகி நின்ஜா 300 மோட்டார்சைக்கிள் கே.டி.எம். ஆர்.சி. 390, டி.வி.எஸ். ஆர்.ஆர். 310, பெனலி 302 ஆர், யமஹா YZF-R3, பி.எம்.டபுள்யூ. ஜி 310 ஆர் உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
கே.டி.எம். நிறுவனத்தின் 390 அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் புகைப்படம் இணையத்தில் லீக் ஆகியுள்ளது.
கே.டி.எம். 390 அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் உற்பத்திக்கு தயாரான நிலையில் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது.
புதிய 390 அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் சக்கன் ஆலையில் உற்பத்தி செய்யப்படுகிறது. இது ஏற்கனவே விற்பனை செய்யப்படும் கே.டி.எம். தளத்திலேயே உருவாகிறது. புதிய மோட்டார்சைக்கிளின் ப்ரோடோடைப் புகைப்படங்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
புதிய அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிளில் 373சிசி, சிங்கிள் சிலண்டர் யூனிட் வழங்கப்பட்டுள்ளது. இதே என்ஜின் கே.டி.எம். 390 டியூக் மற்றும் கே.டி.எம். ஆர்.சி. 390 மாடல்களிலும் வழங்கப்பட்டுள்ளது. 390 டியூக் மாடலில் 373சிசி, சிங்கிள் சிலிண்டர், DOHC, லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டுள்ளது.
இந்த என்ஜின் 43 பி.ஹெச்.பி. @9500 ஆர்.பி.எம். மற்றும் 35 என்.எம். டார்க் @7000 ஆர்.பி.எம். செயல்திறன் வழங்குகிறது. இதே என்ஜின் கே.டி.எம். 390 அட்வென்ச்சர் மாடலில் ஆஃப்-ரோடிங் பயன்பாட்டிற்காக மேம்படுத்தப்படலாம் என கூறப்படுகிறது.
புதிய புகைப்படங்களில் புதிய எக்சாஸ்ட் மற்றும் கேடலிடிக் கன்வெர்டர் வழங்கப்படுவது உறுதியாகிறது. இதனால் இந்த மோட்டார்சைக்கிள் பாரத் புகை விதி VI மற்றும் யூரோ 5 உள்ளிட்டவற்றுக்கு பொருந்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புகைப்படங்களின் படி கே.டி.எம். 390 அட்வென்ச்சர் மாடலின் முன்புறம் 19-இன்ச் சக்கரமும், பின்புறம் 17-இன்ச் சக்கரமும் வழங்கப்படும் என தெரிகிறது. இதன் டாப்-எண்ட் ஆர் வெர்ஷனின் முன்புறம் 21-இன்ச் சக்கரமும், பின்புறம் 18-இன்ச் சக்கரமும் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
கே.டி.எம். 390 அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிளில் ஃபுல் கலர் டி.எஃப்.டி. ஸ்கிரீன், ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் மற்றும் மின்சாதன உபகரணங்கள் வழங்கப்படுகிறது.
புகைப்படம் நன்றி: MCN
டி.வி.எஸ். மோட்டார்ஸ் நிறுவனம் ஸ்லிப்பர் கிளட்ச் கொண்ட அபாச்சி ஆர்.ஆர். 310 மோட்டார்சைக்கிளை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
டி.வி.எஸ். மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் மேம்பட்ட அபாச்சி ஆர்.ஆர். 310 மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. புதிய 2019 அபாச்சி ஆர்.ஆர். 310 மாடலின் விலை ரூ.2.27 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
புதிய அப்டேட் தவிர 2019 அபாச்சி ஆர்.ஆர். 310 மாடலில் ரேஸ் டியூன் செய்யப்பட்ட ஸ்லிப்பர் கிளட்ச் சேர்க்கப்படுகிறது. 2019 அபாச்சி ஆர்.ஆர். 310 மாடல் இம்முறை பதிதாக ஃபேண்டம் பிளாக் நிறத்தில் கிடைக்கிறது. இதில் சேர்க்கபப்ட்டு இருக்கும் ஸ்லிப்பர் கிளட்ச் மாடலில் சிறப்பான டவுன்ஷிஃப்ட்களை மேற்கொள்ள வழி செய்கிறது.
ஸ்லிப்பர் கிளட்ச் உடடன் அசிஸ்ட் அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது. இது கிளட்ச் இயக்கத்தை இலகுவாக்குகிறது. புதிய ஆர்.டி. ஸ்லிப்பர் கிளட்ச் தொழில்நுட்பம் தற்சமயம் கிடைக்கும் மாடல்களிலும் ஆர்.ஆர். 310 ரேசிங் அக்சஸரியாக சேர்த்துக் கொள்ளலாம். ஏற்கனவே ஆர்.ஆர். 310 மாடலை பயன்படுத்துவோர் இந்தியா முழுக்க இயங்கி வரும் டி.வி.எஸ். சர்வீஸ் சென்டரில் புதிய ஸ்லிப்பர் கிளட்ச்-ஐ சேர்த்துக் கொள்ளலாம்.
ரேஸ் டியூன் செய்யப்பட்ட ஸ்லிப்பர் கிளட்ச் கொண்ட முதல் அபாச்சி ஆர்.ஆர். 310 மோட்டார்சைக்கிளை டி.வி.எஸ். மோட்டார்ஸ் நிறுவனம் அதன் விளம்பர தூதரான மகேந்திரசிங் டோனிக்கு வழங்கி இருக்கிறது. புதிய மோட்டார்சைக்கிளில் முந்தைய மாடலில் உள்ளதை போன்றே 312.2 சிசி லிக்விட் கூல்டு சிங்கிள் சிலிண்டபர் ரிவர்ஸ் இன்க்லைன்டு DOHC என்ஜின் வழங்கப்பட்டுள்ளது.
இந்த என்ஜின் 34 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 28 என்.எம். டார்க் செயல்திறன் மற்றும் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் பை-எல்.இ.டி. ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், டூயல்-சேனல் ஏ.பி.எஸ். சிஸ்டம், செங்குத்தான ஸ்பீடோமீட்டர் மற்றும் மெஷிலின் பைலட் ஸ்டிரீட் டையர்கள் இதன் சிறப்பம்சங்களாக இருக்கின்றன.
ஹோன்டா மோட்டார்சைக்கிள்ஸ் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் ஆக்டிவா 5ஜி லிமிட்டெட் எடிஷன் மற்றும் சி.பி. ஷைன் லிமிட்டெட் எடிஷன் வாகனங்களை அறிமுகம் செய்துள்ளது.
ஹோன்டா மோட்டார் நிறுவனம் இந்தியாவில் ஆக்டிவா 5ஜி லிமிட்டெட் எடிஷன் மற்றும் சி.பி. ஷைன் லிமிட்டெட் எடிஷன் மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
இரண்டு லிமிட்டெட் எடிஷன் மாடல்கள் ஆக்டிவா 5ஜி லிமிட்டெட் எடிஷன் விலை ரூ.55,032 (எக்ஸ்-ஷோரூம்) என்றும் சி.பி. ஷைன் லிமிட்டெட் எடிஷன் விலை ரூ.59,083 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஹோன்டா ஆக்டிவா 5ஜி லிமிட்டெட் எடிஷன் மாடலில் பல்வேறு புதிய அம்சங்கள் மற்றும் காஸ்மெடிக் அப்டேட்கள் செய்யப்பட்டுள்ளது. இதில் பத்து புதுவித பிரீமியம் ஸ்டைல்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதில் அழகிய பாடி கிராஃபிக்ஸ், பிளாக்டு-அவுட் ரிம்கள், க்ரோம் மஃப்ளர் கவர் மற்றும் பிளாக்-அவுட் என்ஜின் உள்ளிட்டவை முக்கியமானவைகளாக இருக்கின்றன.
இத்துடன் டூயல்-டோன் சீட் கவர்கள், புதிய டூயல்-டோன் பெயின்ட் ஸ்கீம்கள் - பியல் பிரெசியஸ் வைட் / மேட் செலின் சில்வர் மற்றும் ஸ்டிரான்டியம் சில்வர் மெட்டாலிக் / பியல் இக்னியஸ் பிளாக் கிடைக்கிறது.
ஹோன்டா ஆக்டிவா 5ஜி லிமிட்டெட் எடிஷன் மாடலில் முந்தைய மாடலில் வழங்கப்பட்டு இருக்கும் அதே என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது 110சிசி ஏர்-கூல்டு சிங்கிள் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 8 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 9 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது.
ஹோன்டா சி.பி. ஷைன் லிமிட்டெட் எடிஷன் மாடலில் ஐந்து புதுவித ஸ்டைலிங்கில் கிடைக்கிறது. இதில் புதிய பாடி கிராஃபிக்ஸ், டைனமிக் நிற கிராப் ரெயில்கள், சைடு கவுல் மற்றும் டூயல்-டோன் ஃபியூயல் டேன்க் உள்ளிட்டவை முக்கிய அம்சங்களாக இருக்கின்றன.
ஹோன்டா சி.பி. ஷைன் லிமிட்டெட் எடிஷன் மாடல் பிளாக் / இம்பீரியல் ரெட் மெட்டாலிக் மற்றும் பிளாக் / ஸ்பியர் சில்வர் மெட்டாலிக் என இரண்டு புதுவித நிறங்களில் கிடைக்கிறது. புதிய லிமிட்டெட் எடிஷன் மாடலில் மெக்கானிக்கல் அம்சங்களில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.
இதனால் புதிய மாடலிலும் 124.6சிசி ஏர்-கூல்டு சிங்கிள் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 10.16 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 10.3 எம்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 4-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
ராயல் என்ஃபீல்டு நிறுவன ஒரே மாதத்தில் 2000 650 ட்வின் மோட்டார்சைக்கிள்களை இந்தியாவில் விற்பனை செய்துள்ளது.
ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் 650 ட்வின் மோட்டார்சைக்கிள்களின் விற்பனை இந்தியாவில் ஒரே மாதத்தில் 2000 யூனிட்களை கடந்துள்ளது. மார்ச் 2019 இல் ராயல் என்ஃபீல்டு 1700 யூனிட்களை விற்பனை செய்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் கடந்த ஆறு மாதங்களாக ராயல் என்ஃபீல்டு நிறுவனம் விற்பனையில் சரிவை சந்தித்து வந்தது. ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் ஜி.டி. 650 மாடல்களில் 648 சி.சி. ட்வின்-சிலிண்டர் ஃபியூயல் இன்ஜெக்ட்டெட் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது.
இந்த என்ஜின் 47 பி.ஹெச்.பி. பவர் @7250 ஆர்.பி.எம். மற்றும் 52 என்.எம். டார்க் @5250 ஆர்.பி.எம். செயல்திறன் வழங்குகிறது. இந்த என்ஜின் 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் யூனிட் உடன் வருகிறது. ஸ்லிப்பர் கிளட்ச் கொண்டு அறிமுகமாகி இருக்கும் முதல் ராயல் என்ஃபீல்டு மாடல்களாக 650 ட்வின் மாடல்கள் இருக்கின்றன.
பிரேக்கிங்கிற்கு முன்புறம் 320 எம்.எம். ட்வின் பிஸ்டன் பைபர் கேலிப்பர் டிஸ்க்களும், புன்புறம் 240 எம்.எம். டிஸ்க் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் இரு மோட்டார்சைக்கிள்களிலும் டூயல்-சேனல் ஏ.பி.எஸ். வசதி வழங்கப்படுகிறது. சஸ்பென்ஷனை பொருத்தவரை முன்புறம் 41 எம்.எம். டெலிஸ்கோபிக் ஃபோர்க்களும், பின்புறம் டூயல் சஸ்பென்ஷனும் வழங்கப்படுகிறது.
இந்தியாவில் இன்டர்செப்டார் 650 மாடல் - மார்க் த்ரீ, க்ளிட்டர் மற்றும் டஸ்ட், ஆரஞ்சு கிரஷ், ரேவிஷிங் ரெட், சில்வர் ஸ்பெக்டர் மற்றும் பேக்கர் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ.2.5 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கான்டினென்ட்டல் ஜி.டி. 650 மாடல் - டாக்டர் மேஹெம், ஐஸ் குவீன், வென்ச்சுரா புளு, மிஸ்டர் கிரீன் மற்றும் பிளாக் மேஜிக் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ.2.65 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X