என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 94418
நீங்கள் தேடியது "slug 94418"
சுசுகி மோட்டார்சைக்கிள்ஸ் இந்தியா நிறுவனம் புதிய ஜிக்சர் எஸ்.எஃப். 250 மோட்டார்சைக்கிளை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
சுசுகி மோட்டார்சைக்கிள்ஸ் இந்தியா நிறுவனம் புதிய ஜிக்சர் எஸ்.எஃப். 250 மோட்டார்சைக்கிளை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய ஜிக்சர் எஸ்.எஃப். 250 மாடலின் விலை ரூ.1.70 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஜிக்சர் எஸ்.எஃப். 250 அந்நிறுவனத்தின் முதல் குவாட்டர்-லிட்டர் வாகனம் ஆகும். சுசுகி ஜிக்சர் எஸ்.எஃப். 250 மாடலில் முற்றிலும் புதிய வடிவமைப்பு பெரிய ஜி.எஸ்.எக்ஸ்.-ஆர். மாடலை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. இதில் ஐரோப்பிய வடிவமைப்பு மற்றும் பிரீமியம் தரம், அழகிய ஸ்டைலிங் உள்ளிட்டவை ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.
ஃபுல்லி ஃபேர்டு ஜிக்சர் எஸ்.எஃப். 250 மாடலில் பெரிய டேன்க் வழங்கப்பட்டுள்ளது. அசத்தலான டூயல் எக்சாஸ்ட் மஃப்ளர் இந்த மாடலின் குறிப்பிடத்தக்க அம்சங்களில் ஒன்றாக இருக்கிறது. இத்துடன் தங்க நிற என்ஜின் கவர், ஹேன்டிள்பார் க்ளிப்கள், எல்.இ.டி. ஹெட்லேம்ப் மற்றும் எல்.இ.டி. டெயில் லைட் யூனிட்கள் வழங்கப்பட்டுள்ளன.
சுசுகி ஜிக்சல் 250 மாடலில் புதிதாக உருவாக்கப்பட்ட 249 சிசி ஆயில் கூல்டு சிங்கிள் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 26.5 பி.ஹெச்.பி. பவர் @9000 ஆர்.பி.எம். மற்றும் 22.6 என்.எம். டார்க் @7500 ஆர்.பி.எம். செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
சுசுகி ஜிக்சர் 250 மோட்டார்சைக்கிள் லிட்டருக்கு 38.5 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் என சுசுகி தெரிவித்துள்ளது. இத்துடன் மோட்டார்சைக்கிளின் முன்புறம் டெலிஸ்கோபிக் ஃபோர்க், பின்புறம் மோனோஷாக் சஸ்பென்ஷன் வழங்கப்படுகிறது.
ஹோன்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் தனது புதிய சி.பி.ஆர்.650ஆர் மோட்டார்சைக்கிளை வினியோகம் செய்ய துவங்கியுள்ளது.
ஹோன்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் தனது புதிய சி.பி.ஆர்.650ஆர் மோட்டார்சைக்கிளை வினியோகம் செய்ய துவங்கியுள்ளது. ஹோன்டா சி.பி.ஆர்.650ஆர் மாடல் குர்கிராமில் வினியோகம் செய்யப்படுகிறது.
இந்தியாவில் உதிரிபாகங்கள் இறக்குமதி செய்யப்பட்டு அசெம்பிள் செய்யப்படும் ஹோன்டா சி.பி.ஆர்.650ஆர் மாடலின் துவக்க விலை ரூ.7.70 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
புதிய மோட்டார்சைக்கிள் சி.பி.ஆர்.650எஃப் மாடலுக்கு மாற்றாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய சி.பி.ஆர்.650ஆர் மாடலில் 649சி.சி. இன்-லைன் 4-சிலிண்டர், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 87 பி.ஹெச்.பி. பவர் @11,500 ஆர்.பி.எம். மற்றும் 601 என்.எம். டார்க் @8000 ஆர்.பி.எம். செயல்திறன் வழங்குகிறது.
ஹோன்டா சி.பி.ஆர்.650ஆர் மாடலில் டூயல்-ஹெட்லேம்ப் வடிவமைப்பு, எக்ஸ்போஸ்டு என்ஜின் மற்றும் டெயில் பகுதி உள்ளிட்டவை மேம்படுத்தப்பட்டுள்ளது. இத்துடன் க்ளிப்-ஆன் ஹேன்டிள்பார்கள், 30எம்.எம். அளவில் குறைக்கப்பட்டுள்ளது.
இத்துடன் எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், டிஜிட்டல் எல்.சி.டி. இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், செலக்டபிள் டார்க் கண்ட்ரோல், ஸ்லிப்பர் கிளட்ச் மற்றும் க்விக் ஷிஃப்டர் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. 2019 ஹோன்டா சி.பி.ஆர்.650ஆர் மாடலின் முன்புறம் யு.எஸ்.டி. ஃபோர்க், பின்புறம் மோனோ ஷாக் சஸ்பென்ஷன் வழங்கப்பட்டுள்ளது.
பிரேக்கிங்கை பொருத்தவரை முன்புறம் டூயல் டிஸ்க் செட்டப், பின்புறம் ஒற்றை டிஸ்க் பிரேக் மற்றும் டூயல்-சேனல் ஏ.பி.எஸ். வழங்கப்படுகிறது. புதிய ஹோன்டா சி.பி.ஆர்.650ஆர் மாடல் மேட் கன்பவுடர் பிளாக் மெட்டாலிக் மற்றும் கிராண்ட் ப்ரிக்ஸ் ரெட் என இருவித நிறங்களில் கிடைக்கிறது.
யமஹா மோட்டார் இந்தியா நிறுவனம் உற்பத்தியில் புதிய மைல்கல் கடந்து இருப்பதை அறிவித்துள்ளது.
யமஹா மோட்டார் இந்தியா நிறுவனம் ஒரு கோடி மோட்டார்சைக்கிள்களை உற்பத்தி செய்திருக்கிறது. இந்தியாவில் யமஹா நிறுவனம் 1985 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. யமஹா நிறுவனம் இந்தியாவில் சென்னை, சுர்ஜாபூர் மற்றும் ஃபரிதாபாத் என மூன்று இடங்களில் உற்பத்தி ஆலைகளை இயக்கி வருகிறது.
ஒரு கோடி யூனிட்டாக எஃப்.இசட். எஸ். எஃப்.ஐ. வெர்ஷன் 3.0 வெளியிடப்பட்டது. இது யமஹாவின் சென்னை ஆலையில் இருந்து வெளியானது. புதிய மைல்கல் நிகழ்வில் யமஹா மோட்டார் கம்பெனி நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
யமஹா மோட்டார் நிறுவனம் உற்பத்தி செய்திருக்கும் ஒரு யூனிட்களில் 80 சதவிகிதம் வாகனங்கள் யமஹாவின் சர்ஜாபூர் மற்றும் ஃபரிதாபாத் ஆலைகளில் இருந்து வெளியானவை ஆகும். மற்ற வாகனங்கள் சென்னை ஆலையில் உற்பத்தி செய்யப்பட்டவை ஆகும்.
"யமஹா நிறுவனம் இத்தனை ஆண்டுகள் கடந்த வந்த பாதை மிகவும் சுவாரஸ்யமானது ஆகும். நாடு முழுக்க வாடிக்கையாளர்களிடம் இருந்து எங்களுக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. அழகு, கவர்ச்சி என எங்களது வாகனங்களுக்கு இருக்கும் தட்டுப்பாடு மற்றும் யமஹா பிரபலத்தன்மையின் தொடர் வளர்ச்சிக்கு இந்த மைல்கல் சான்றாக அமைந்திருக்கிறது" என்று யமஹா மோட்டார்ஸ் இந்தியா குழும நிறுவனங்களின் தலைவர் மோடோஃபுமி ஷிதாரா தெரிவித்தார்.
1985 முதல் 2019 வரை 34 ஆண்டு கால பயணத்தில் யமஹா நிறுவனம் பல்வேறு மைல்கல்களை கடந்து இருக்கிறது. 1999 ஆண்டில் யமஹா பத்து லட்சம் யூனிட்கள் உற்பத்தியை கடந்தது. பின் 13 ஆண்டுகள் கழித்து 2012 ஆம் ஆண்டு ஐம்பது லட்சம் யூனிட்கள் உற்பத்தியை பதிவு செய்தது.
அந்த வகையில் தற்சமயம் ஒரு கோடி யூனிட்கள் உற்பத்தி மைல்கல் கடந்துள்ளது. யமஹாவின் சென்னை ஆலை இதன் உற்பத்தி திட்டங்களில் முக்கிய பங்கு வகிக்கிறது.
பியாஜியோ நிறுவனம் தனது அப்ரிலியா 150 சிசி மோட்டார்சைக்கிள்களை ஏற்கனவே அறிமுகம் செய்து விட்ட நிலையில், இதன் வெளியீட்டு விவரங்களை பார்ப்போம்.
இத்தாலியை சேர்ந்த ஆட்டோமொபைல் நிறுவனமான பியாஜியோ இந்திய சந்தையில் 150சிசி மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் அடுத்த 18 மாதங்களுக்குள் பியாஜியோ அப்ரிலியா 150சிசி மோட்டார்சைக்கிளை இந்தியாவில் அறிமுகம் செய்யும் என தெரிகிறது.
இந்திய சந்தைக்கென பிரத்யேக 150சிசி ஸ்கூட்டரை உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக பியாஜியோ நிறுவன நிர்வாக இயக்குனர் டெய்கோ கிராஃபி தெரிவித்தார். இந்த அப்ரிலியா ஸ்கூட்டர் 150சிசி - 200சிசியில் உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் 150சிசி மோட்டார்சைக்கிள் பற்றியும் அவர் தகவல் வழங்கி இருக்கிறார்.
"அப்ரிலியா போன்ற பிராண்டு இருக்கும் போது மோட்டார்சைக்கிள் சந்தையில் விளையாடாமல் இருக்க முடியாது. இதன் மூலம் எங்களது மோட்டார்சைக்கிள் பிரிவில் புதிய வாகனங்களை சேர்க்க முடியும். இதனால் அப்ரிலியாவில் முதலீடு செய்வது அவசியமாகும்" என அவர் தெரிவித்தார்.
2018 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் பியாஜியோ அப்ரிலியா ஆர்.எஸ். 150 மற்றும் அப்ரிலியா டியோனோ 150 போன்ற மாடல்களை அறிமுகம் செய்தது. இவை சந்தையில் நிலவும் போட்டியை புரிந்து கொள்ளும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளதாக டெய்கோ கிராஃபி தெரிவித்தார்.
அப்ரிலியா ஆர்.எஸ். 150 மற்றும் அப்ரிலியா டியோனோ 150 மாடல்கள் அலுமினியம் பெரிமீட்டர் ஃபிரேமில் உருவாக்கப்பட்டுள்ளது. இரு மாடல்களிலும் 150சிசி சிங்கிள் சிலிண்டர், லிக்விட் கூல்டு, 4-வால்வ், ஃபியூயல் இன்ஜெக்ட்டெட் என்ஜின் கொண்டிருக்கிறது. இந்த என்ஜின் 18 பி.ஹெச்.பி. பவர் @10,000 ஆர்.பி.எம். மற்றும் 14 என்.எம். டார்க் @7500 ஆர்.பி.எம். செயல்திறன் வழங்குகிறது.
பி.எம்.டபுள்யூ. நிறுவனத்தின் புதிய அட்வன்ச்சர் மோட்டார்சைக்கிள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
பி.எம்.டபுள்யூ. நிறுவனம் இந்தியாவில் எஃப் 850 ஜி.எஸ். அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. புதிய பி.எம்.டபுள்யூ. எஃப் 850 ஜி.எஸ். மாடலின் விலை ரூ.15.40 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
புதிய பி.எம்.டபுள்யூ. எஃப் 850 ஜி.எஸ். அட்வென்ச்சர் டூரர் மோட்டார்சைக்கிள் கூர்மையான வடிவமைப்பு மற்றும் முந்தைய மாடல்களை விட சிறப்பான ஆஃப்-ரோடிங் வசதிகளுடன் கிடைக்கிறது. புதிய அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் உதிரிபாகங்கள் இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டு அசெம்பிள் செய்யப்படுகிறது.
இந்தியாவில் பி.எம்.டபுள்யூ. எஃப் 850 ஜி.எஸ். முன்பதிவு ஏற்கனவே துவங்கிவிட்டது. இந்த மோட்டார்சைக்கிள் ஸ்டான்டர்டு மாடலை தழுவியே உருவாக்கப்பட்டுள்ளது. எனினும், இதன் வடிவமைப்பில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எஃப் 850 ஜி.எஸ். அட்வென்ச்சர் மாடலில் பெரிய விண்ட்-ஷீல்டு, முன்புறம் அகலமான பீக், புதிய வடிவமைப்பு கொண்ட ரேடியோட்டர் ஷிரவுட், பெரிய லக்கேஜ் ரேக் மற்றும் என்ஜின் கார்டு உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
இவற்றுடன் பி.எம்.டபுள்யூ. எஃப் 850 ஜி.எஸ். மாடலில் 23-லிட்டர் பெட்ரோல் டேன்க் வழங்கப்பட்டுள்ளது. இதன் ஸ்டான்டர்டு மாடலில் 15 லிட்டர் டேன்க் வழங்கப்பட்டிருக்கிறது. புதிய பி.எம்.டபுள்யூ. எஃப் 850 ஜி.எஸ். மாடலில் 853 சிசி வாட்டர்-கூல்டு பேரலெல் ட்வின் சிலிண்டர் என்ஜின் வழங்கபப்ட்டுள்ளது.
இந்த என்ஜின் 90 பி.ஹெச்.பி. பவர் @8000 ஆர்.பி.எம். மற்றும் 86 என்.எம். டார்க் @6250 ஆர்.பி.எம். செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இந்த மோட்டார்சைக்கிளின் முன்புறம் 21-இன்ச் மற்றும் பின்புறம் 17-இன்ச் ஸ்போக் சக்கரங்களை கொண்டிருக்கிறது.
சஸ்பென்ஷனை பொருத்தவரை முன்புறம் இன்வெர்ட்டெட் போர்க்ஸ், பின்புறம் மோனோஷாக் வழங்கப்பட்டுள்ளது. பிரேக்கிங்கிற்கு முன்புறம் டூயல் 305 எம்.எம். டிஸ்க் பிரேக், பின்புறம் 265 எம்.எம். டிஸ்க் வழங்கப்பட்டுள்ளது. இவற்றுடன் டூயல்-சேனல் ஸ்விட்ச் செய்யக்கூடிய ஏ.பி.எஸ். வழங்கப்பட்டுள்ளது.
மற்ற அம்சங்களை பொருத்தவரை பி.எம்.டபுள்யூ. எஃப் 850 ஜி.எஸ். மாடலில் எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், டெயில் லைட்கள், எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள், டைனமிக் டிராக்ஷன் கண்ட்ரோல், ஸ்விட்ச் செய்யக்கூடிய ஏ.பி.எஸ்., குரூஸ் கண்ட்ரோல், டைனமிக் இ.எஸ்.ஏ., கியர் ஷிஃப்ட் அசிஸ்ட், இரண்டு டிரைவிங் மோட்கள் மற்றும் 6.5 இன்ச் டி.எஃப்.டி. டிஸ்ப்ளே, ப்ளூடூத் கனெக்டிவிட்டி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.
சுசுகி நிறுவனம் விரைவில் அறிமுகம் செய்ய இருக்கும் மோட்டார்சைக்கிளின் என்ஜின் விவரங்கள் வெளியாகி இருக்கிறது.
இரு சக்கர வாகன உற்பத்தியில் முன்னணியில் உள்ள சுசுகி நிறுவனத்தின் புதிய வரவாக ஜிக்சர் 250 சந்தைக்கு வர இருக்கிறது. இப்புதிய மாடல் மோட்டார்சைக்கிளை இம்மாதம் 20-ந் தேதி இந்நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளது. இந்த ஆண்டின் மிகப் பெரிய, மறக்கமுடியாத அறிமுகமாக ஜிக்சர் 250 இருக்கும் என்று நிறுவனம் உறுதிபட நம்புகிறது.
இந்நிறுவனம் மிகப் பெரிய எழுச்சியை பார்த்து ரசிக்க தயாராகுங்கள் என்கிற ரீதியில் விளம்பர வாசகம் மூலம் வாடிக்கையாளர்களைக் கவரும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக புதிய மோட்டார்சைக்கிளை சுசுகி அறிமுகம் செய்யப் போகிறது என்ற செய்திகள் பரவலாக வெளிவந்துள்ளன.
ஆனால் கடந்த ஆண்டுதான் 250 சி.சி. பிரிவில் ஒரு மோட்டார்சைக்கிளை இந்நிறுவனம் அறிமுகம் செய்யப் போவது உறுதியானது. இந்தியாவில் சுசுகி தயாரிப்புகளில் ஜிக்சர் பிராண்ட் மிகவும் பிரபலமாகிவிட்டது. இதனால் இந்தியாவில் ஜிக்சர் 250 என்ற பெயரில் இதை அறிமுகப்படுத்த இந்நிறுவனம் திட்டமிட்டு அதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
உறுதியான மோட்டார்சைக்கிளுக்குரிய அனைத்து வடிவமைப்புகளும் கொண்டதாக இது உள்ளது. இதில் 249 சி.சி., சிங்கிள் சிலிண்டர் என்ஜினைக் வழங்கப்படும் என தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த என்ஜின் 26.5 பி.எஸ் மற்றும் 22.6 என்.எம். டார்க் செயல்திறன் வழங்கும் திறன் கொண்டிருக்கிறது.
4-வால்வ் கொண்ட இந்த என்ஜின் 6 கியர்களை உடையதாகவும் இது பி.எஸ்.6 புகைவிதிகளுக்கு உட்பட்டு இருக்கும். யமஹா பேஸர் மாடலுக்கு போட்டியாக இது இருக்கும் என்று கருதப்படுகிறது. இந்தியாவில் இதன் விலை ரூ.1.35 லட்சம் முதல் ரூ.1.45 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என தெரிகிறது.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் அசத்தல் அம்சங்களுடன் இரண்டு புதிய மோட்டார்சைக்கிள்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இம்பல்ஸ் மோட்டார்சைக்கிளுக்குப் பதிலாக இரண்டு புதிய ரக மோட்டார்சைக்கிள்களை அறிமுகம் செய்துள்ளது. சாகசப் பிரியர்களுக்கு ஏற்ற வகையில் ‘எக்ஸ்பல்ஸ் 200டி’ மாடல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இரு மோட்டார்சைக்கிள்களுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கிவிட்டது. அந்த வகையில் இதன் விநியோகம் ஜூன் மாத வாக்கில் துவங்கும் என தெரிகிறது.
இந்த இரண்டு மாடல் மோட்டார்சைக்கிள்களிலும் 199.6 சி.சி. திறன் கொண்டிருக்கின்றன. ஒற்றை சிலிண்டர், ஏர் கூல்டு என்ஜினைக் கொண்டவை. இவை இரண்டிலும் கார்புரேட்டர் மாடலுக்குப் பதிலாக ஃபியூயல் இன்ஜெக்ஷன் மாடலைக் கொண்டதாக என்ஜின் உள்ளது. ஏ.பி.எஸ்., எல்.இ.டி. விளக்கு, டிஜிட்டல் இன்ஸ்ட்ருமென்ட் கிளஸ்டர், புளூடூத் இணைப்பு வசதி ஆகியவற்றைக் கொண்டது.
இதில் சாகசப் பயணத்துக்கான எக்ஸ்பல்ஸ் 200டி மாடலின் எக்ஸாஸ்ட் பைப் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதேசமயம் எக்ஸ்பல்ஸ் 200 மாடலின் சக்கரங்கள் வயர் ஸ்போக்ஸ் மாடலாகும். முன் சக்கரம் 21 அங்குலம் கொண்டதாகவும், பின் சக்கரம் 18 அங்குலம் கொண்டதாகவும் உள்ளது.
சஸ்பென்ஷனை பொருத்தவரை முன்பறம் டெலஸ்கோப்பிக் போர்க், பின்புறம் மோனோ ஷாக் அப்சார்பர் வழங்கப்பட்டுள்ளது. வழக்கமான மோட்டார் சைக்கிளை விட இதன் உயரம் அதிகம். எக்ஸ்பல்ஸ் 200 மாடலைக் காட்டிலும் 30 மி.மீ. உயரம் குறைவு. இதில் 17 அங்குல அலாய் சக்கரம் எம்.ஆர்.எப். நைலோகிரிப் டயர் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இம்பல்ஸ் மாடல் எதிர்பார்த்த அளவுக்கு விற்பனையாகவில்லை. இதனால் ஒரு கட்டத்தில் இதன் உற்பத்தியை நிறுத்த வேண்டியதாயிற்று. ஆனால் தற்போது அறிமுகமாக உள்ள இரண்டு மாடல்களுமே வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த பிரிவில் இது எடை குறைந்த வாகனமாக இருக்கும்.
ஏற்கனவே சாகச மோட்டார்சைக்கிள் பிரிவில் ராயல் என்பீல்டு ஹிமாலயன், பி.எம்.டபிள்யூ. ஜி 310 ஜி.எஸ். ஆகியன உள்ளன. எடை குறைவு, சிறப்பான பிக்கப் ஆகியன இதற்கு பெருமளவு வரவேற்பைப் பெற்றுத் தரும் என்று நிறுவனம் உறுதியாக நம்புகிறது. ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200ஆர் மாடல் தயாரான அதே பிளாட்பார்மில் இது தயாரிக்கப்படுகிறது. இருப்பினும் இதன் வடிவமைப்பு, செயல்பாடு முற்றிலும் மாறுபட்டதாக உள்ளது. இதுபோல மேலும் பல மாடலை இதே பிளாட்பார்மில் உருவாக்கவும் ஹீரோ திட்டமிட்டு உள்ளது.
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தனது அவெஞ்சர் 160 ஸ்டிரீட் மோட்டார்சைக்கிளை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் இந்தியாவில் அவெஞ்சர் 160 ஸ்டிரீட் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில் புதிய அவெஞ்சர் 160 ஸ்டிரீட் விலை ரூ.82,253 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
புதிய அவெஞ்சர் 160 ஸ்டிரீட் தற்போதைய அவெஞ்சர் 180 குரூசர் மாடலுக்கு மாற்றாக அறிமுகமாகி இருக்கிறது. பழைய 180 சிசி அவெஞ்சர் மோட்டார்சைக்கிள் ரூ.6000 வரை விலை அதிகம் ஆகும். மேலும் இந்த மோட்டார்சைக்கிள் புதிய பாதுகாப்பு விதிகளுக்கு பொருந்தும் வகையில் அப்டேட் செய்யப்படவில்லை.
புதிய அவெஞ்சர் 160 ஸ்டிரீட் மோட்டார்சைக்கிள்: எபோனி பிளாக் மற்றும் ஸ்பைசி ரெட் என இருவித நிறங்களில் கிடைக்கிறது. அவெஞ்சர் 160 ஸ்டிரீட் மாடலில் 160.4சிசி சிங்கிள் சிலிண்டர், ஏர்-கூல்டு என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இதே என்ஜின் பலசர் 160 என்.எஸ். மாடலிலும் வழங்கப்பட்டிருக்கிறது. எனினும், இதன் செயல்திறன் சற்று வித்தியாசமாக டியூன் செய்யப்பட்டுள்ளது.
பஜாஜ் அவெஞ்சர் 160 ஸ்டிரீட் மாடலில் இந்த என்ஜின் 15 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 13.5 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இது 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் வருகிறது. என்ஜின் மாற்றம் தவிர அவெஞ்சர் 160 ஸ்டிரீட் மாடலின் மற்ற அம்சங்களில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.
பிரேக்கிங்கை பொருத்தவரை அவெஞ்சர் 160 ஸ்டிரீட் மாடலின் முன்புறம் 260 எம்.எம். டிஸ்க் பிரேக், பின்புறம் 130 எம்.எம். டிரம் பிரேக் வழங்கப்பட்டுள்ளது. பிரேக்குகளுடன் சிங்கிள் சேனல் ஏ.பி.எஸ். சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. மற்ற அம்சங்களை பொருத்தவரை எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள் வழங்கப்பட்டுள்ளன.
ஹோன்டா மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த சி.பி.ஆர்.650ஆர் மோட்டார்சைக்கிளின் விநியோக விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
இந்தியாவில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஹோன்டா சி.பி.ஆர்.650ஆர் மோட்டார்சைக்கிள் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. ஹோன்டா நிறுவனம் புதிய மோட்டார்சக்கிளுக்கான முன்பதிவுகளை பிப்ரவரி மாதத்தில் துவங்கியது. மூன்று மாத கால காத்திருப்புக்கு பின் மோட்டார்சைக்கிள் விநியோக பணிகள் துவங்கி இருக்கின்றன.
புதிய சி.பி.ஆர்.650ஆர் மாடலில் டூயல்-ஹெட்லேம்ப் வடிவமைப்பு, எக்ஸ்போஸ்டு என்ஜின் மற்றும் டெயில் பகுதி உள்ளிட்டவை மேம்படுத்தப்பட்டுள்ளது. இத்துடன் க்ளிப்-ஆன் ஹேன்டிள்பார்கள், 30எம்.எம். அளவில் குறைக்கப்பட்டுள்ளது. இத்துடன் எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், டிஜிட்டல் எல்.சி.டி. இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், செலக்டபிள் டார்க் கண்ட்ரோல், ஸ்லிப்பர் கிளட்ச் மற்றும் க்விக் ஷிஃப்டர் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.
ஹோன்டா சி.பி.ஆர்.650ஆர் மாடலில் 649சிசி, லிக்விட் கூல்டு இன்லைன் 4-சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 95 பி.ஹெச்.பி. பவர் @12,000 ஆர்.பி.எம். செயல்திறன், 64 என்.எம். டார்க் @8500 ஆர்.பி.எம். வழங்குகிறது. 2019 ஹோன்டா சி.பி.ஆர்.650ஆர் மாடலின் முன்புறம் யு.எஸ்.டி. ஃபோர்க், பின்புறம் மோனோ ஷாக் சஸ்பென்ஷன் வழங்கப்பட்டுள்ளது.
பிரேக்கிங்கை பொருத்தவரை முன்புறம் டூயல் டிஸ்க் செட்டப், பின்புறம் ஒற்றை டிஸ்க் பிரேக் மற்றும் டூயல்-சேனல் ஏ.பி.எஸ். வழங்கப்படுகிறது. புதிய ஹோன்டா சி.பி.ஆர்.650ஆர் மாடல் மேட் கன்பவுடர் பிளாக் மெட்டாலிக் மற்றும் கிராண்ட் ப்ரிக்ஸ் ரெட் என இருவித நிறங்களில் கிடைக்கிறது.
இந்தியாவில் ஹோன்டா சி.பி.ஆர்.650ஆர் விலை ரூ.7.70 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த மோட்டார்சைக்கிள் கவாசகி இசட்900 மற்றும் சுசுகி GSX 750 போன்ற மோட்டார்சைக்கிள்களுக்கு போட்டியாக அமைகிறது.
டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி நிறுவனம் இந்தியாவில் தனது ரேடியான் 110சிசி மோட்டார்சைக்கிளை இரண்டு புதிய நிறங்களில் அறிமுகம் செய்துள்ளது. #TVSMotors
டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி நிறுவனம் தனது ரேடியான் 110சிசி மோட்டார்சைக்கிளை இரண்டு புதிய நிறங்களில் அறிமுகம் செய்திருக்கிறது. அந்தவகையில் தற்சமயம் டி.வி.எஸ். ரேடியான் 110 மோட்டார்சைக்கிள் டைட்டானியம் கிரே மற்றும் வொல்கானோ ரெட் என இரண்டு புதிய நிறங்களில் கிடைக்கிறது.
டி.வி.எஸ். ரேடியான் 110 புதிய நிற மாடல்களின் விலை ரூ.50,070 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது மற்ற நிற வேரியண்ட்களை விட ரூ.1,200 அதிகம் ஆகும். ஏற்கனவே ரேடியான் 110 மாடல் மெட்டல் பிளாக், பியல் வைட், ராயல் பர்ப்பிள் மற்றும் கோல்டன் பெய்க் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது.
தற்சமயம் ரேடியான் 110 மோட்டார்சைக்கிள் புதிய நிறம் தவிர மெக்கானிக்கல் அம்சம் மற்றும் தோற்றத்தில் எவ்வித மாற்றமும் செய்யப்பட்டவில்லை. அந்த வகையில் முந்தைய வேரியண்ட்களை போன்றே புதிய மாடலிலும் குரோம் கார்னிஷ், ரப்பர் டேன்க் பேட்கள், 3டி டி.வி.எஸ். லோகோ உள்ளிட்டவை இடம்பெற்றிருக்கிறது.
ரேடியான் மோட்டார்சைக்கிள் சின்க்ரோனைஸ் செய்யப்பட்ட பிரேக்கிங் தொழில்நுட்பம் கொண்டுள்ளது, இது இந்த பிரிவு மோட்டார்சைக்கிளில்களில் முதல் முறையாக வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் இது சிறப்பான பிரேக்கிங் கண்ட்ரோல் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மோட்டார்சைக்கிள் ஸ்கிட் ஆகாமல் இருக்கும்.
டி.வி.எஸ். ரேடியான் 110 சிசி மோட்டார்சைக்கிளில் 109.7சிசி, சிங்கிள் சிலிண்டர், 3-வால்வ், ஏர்-கூல்டு என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 8.3 பி.ஹெச்.பி. பவர் @7000 ஆர்.பி.எம். மற்றும் 8.7 என்.எம். @5000 ஆர்.பி.எம். செயல்திறன் வழங்குகிறது. ரேடியான் 110 சிசி மோட்டார்சைக்கிள் லிட்டருக்கு 69.3 கிலோமீட்டர் வரை செல்லும் என டி.வி.எஸ். நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
இந்தியாவில் அறிமுகமானது முதல் டி.வி.எஸ். ரேடியான் மாடல் சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிக யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது.
கே.டி.எம். நிறுவனத்தின் புதிய ஆர்.சி.125 சிசி மோட்டார்சைக்கிள் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #KTM
ஆஸ்த்ரியா நாட்டு மோட்டார்சைக்கிள் உற்பத்தியாளரான கே.டி.எம். தனது ஆர்.சி.125 மோட்டார்சைக்கிளை இந்தியாவில் இந்த ஆண்டு ஜூன் மாதம் அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய கே.டி.எம். ஆர்.சி.125 மற்றும் கே.டி.எம். டியூக் 125 மாடல்களில் 124.7சிசி லிக்விட் கூல்டு என்ஜின் கொண்டிருக்கிறது.
இந்தியாவில் அறிமுகமானதும் கே.டி.எம். ஆர்.சி.125 விலை குறைந்த ஆர்.சி. மாடலாக இருக்கும். தற்சமயம் வெளியாகியிருக்கும் தகவல்களில் கே.டி.எம். ஆர்.சி.125 ஜூன் மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. கே.டி.எம். ஆர்.சி.125 பூனேவில் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
கே.டி.எம். ஆர்.சி.125 மாடலில் டியூக் 125 மாடலில் உள்ளதை போன்று 124.7சிசி சிங்கிள் சிலிண்டர், லிக்விட் கூல்டு பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 14.3 பி.ஹெச்.பி. @9250 ஆர்.பி.எம். மற்றும் 12 என்.எம். டார்க் @8000 ஆர்.பி.எம். செயல்திறன் மற்றும் 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கிறது.
கே.டி.எம். ஆர்.சி.125 மாடலில் முன்புறம் WP அப்சைடு-டவுன் ஃபோர்க், பின்புறம் மோனோஷாக் சஸ்பென்ஷன் வழங்கப்பட்டுள்ளது. பிரேக்கிங்கை பொருத்தவரை முன்புறம் 300 எம்.எம். டிஸ்க் பிரேக், பின்புறம் 230 எம்.எம். டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டுள்ளது. இந்த மோட்டார்சைக்கிளில் சிங்கிள் சேனல் ஏ.பி.எஸ். வழங்கப்படும் நிலையில், கார்னெரிங் ஏ.பி.எஸ். வழங்கப்படலாம் என தெரிகிறது.
இந்த மோட்டார்சைக்கிளில் 17-இன்ச் அலாய் வீல்கள் வழங்கப்படுகிறது. இந்தியாவில் கே.டி.எம். ஆர்.சி.125 விலை ரூ.1.4 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என தெரிகிறது. இது யமஹா ஆர்.15 வி3 மாடலுக்கு போட்டியாக அமைகிறது.
புகைப்படம் நன்றி: Bike dekho
இந்தியாவில் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் புதிய புகை விதிகளுக்கு பொருந்தும் வாகனங்களை டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் அறிமுகம் செய்ய இருக்கிறது. #Triumph
டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் இந்தியாவில் பி.எஸ். 6 புகை விதிகளுக்கு பொருந்தும் வகையிலான புதிய மோட்டார்சைக்கிள்களை இந்த ஆண்டு இறுதியில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் இந்தியாவுக்கான பொது மேளாலர் ஷோயப் ஃபரூக் உறுதி செய்திருக்கிறார்.
தற்சமயம் டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் 14 பிரீமியம் மோட்டார்சைக்கிள்களை இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது. அடுத்த மாதத்தில் மேலும் ஒரு புதிய மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்ய இருக்கிறது. 2019 டிரையம்ப் ஸ்கிராம்ப்ளர் 1200 மாடல் வரும் வாரங்களில் அறிமுகமாகலாம் என தெரிகிறது.
பி.எஸ். 4 இல் இருந்து பி.எஸ். 6-க்கு மாறும் வழிமுறை அதிக சிக்கல் நிறைந்தது. இதற்கு வாகன உற்பத்தியாளர்களிடம் இருந்து அதிகளவு முதலீடு அத்தியாவசியமானதாகும். எனினும் அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் மோட்டார்சைக்கிள்களில் பி.எஸ். 6 புகை விதி கட்டாயமாகிறது.
இதன் காரணமாக பெரும்பாலான இந்திய உற்பத்தியாளர்கள் அதிகம் விற்பனையாகும் தங்களது மாடல்களை பி.எஸ்.6 விதிகளுக்கு அப்டேட் செய்துவிட்டு, விற்பனையாகாத மாடல்களின் விற்பனையை அடுத்த ஆண்டு வாக்கில் குறைக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்த ஆண்டு இதுவரை மட்டும் சுமார் நான்கு மோட்டார்சைக்கிள்களை டிரையம்ப் இந்தியா அறிமுகம் செய்துள்ளது. 2019 ஸ்டிரீட் ட்வின், 2019 ஸ்டிரீட் ஸ்கிராம்ப்ளர், டைகர் 800 எக்ஸ்.சி.ஏ. உள்ளிட்டவை இதுவரை இந்தியாவில் அறிமுகாகி இருக்கிறது. இந்த வரிசையில் விரைவில் 2019 டிரையம்ப் ஸ்கிராம்ப்ளர் 1200 இணையும் என எதிர்பார்க்கலாம்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X