search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94452"

    • நாளை முதல் வி.ஐ.பி. பிரேக் தரிசன நேரம் காலை 8 மணியாக மாற்றப்படும்.
    • இந்த தகவலை திருமலை, திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று (புதன்கிழமை) முதல் ஸ்ரீவாணி அறக்கட்டளையின் நன்கொடையாளர்களுக்கான டிக்கெட் கவுண்ட்டர் திருப்பதி மாதவம் ஓய்வு இல்லத்தில் தொடங்கப்படுகிறது. நாளை (வியாழக்கிழமை) முதல் வி.ஐ.பி. பிரேக் தரிசன நேரம் காலை 8 மணியாக மாற்றப்படும்.

    வைகுந்தம் கியூ காம்ப்ளக்ஸ்சில் இரவில் காத்திருக்கும் பக்தர்கள், காலையில் விரைவாக தரிசனம் செய்ய இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதனால் திருப்பதியில் இருந்து தினமும் பக்தர்கள் திருமலைக்கு வந்து வி.ஐ.பி. பிரேக் தரிசனம் செய்ய வாய்ப்பு உள்ளது.

    மேலும் திருமலையில் உள்ள அறைகள் வாங்கும் நெருக்கடி குறைய வாய்ப்பு உள்ளது.

    இந்த தகவலை திருமலை, திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

    • 4-ந்தேதி கீதா ஜெயந்தி விழா நடக்கிறது.
    • 5-ந்தேதி சக்கரத்தீர்த்த முக்கோடி உற்சவம் நடக்கிறது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அடுத்த மாதம் (டிசம்பர்) நடக்கும் விழாக்களை தேவஸ்தானம் அறிவித்துள்ளது. அதன் விவரம் வருமாறு:-

    4-ந்தேதி கீதா ஜெயந்தி, 5-ந்தேதி சக்கரத்தீர்த்த முக்கோடி உற்சவம், 7-ந்தேதி கார்த்திகை தீபத்திருவிழா, 8-ந்தேதி திருப்பாணாழ்வார் வருட திருநட்சத்திரம், 16-ந்தேதி மாலை 6.12 மணிக்கு மார்கழி மாதம் (தனுர் மாதம்) தொடக்கம், 19-ந்தேதி சர்வ ஏகாதசி, 22-ந்தேதி ஆத்யாயன உற்சவம் தொடக்கம், தொண்டரடிபொடியாழ்வார் வருட திருநட்சத்திரம்.

    மேற்கண்டவாறு கூறப்பட்டுள்ளது.

    • பக்தா்களின் எண்ணிக்கை வார இறுதி நாட்களில் அதிகரித்து காணப்படுகிறது.
    • பக்தர்கள் காத்திருக்கும் வைகுண்ட காம்ப்ளக்ஸ்கள் நிரம்பி வரிசையில் காத்திருக்கின்றனர்.

    திருப்பதியில் தரிசனத்துக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை வார இறுதி நாட்களில் அதிகரித்து காணப்படுகிறது.

    ஞாயிற்றுக்கிழமை தரிசனத்துக்கு வரும் பக்தர்கள் திங்கட்கிழமை வரை காத்திருந்து தரிசனம் செய்து செல்கின்றனர். கடந்த சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் திருப்பதிக்கு வந்த பக்தர்கள் இன்னும் தரிசனம் கிடைக்காமல் இன்று வரை தரிசனத்திற்கு காத்திருக்கின்றனர்.

    பக்தர்கள் காத்திருக்கும் வைகுண்ட காம்ப்ளக்ஸ்கள் நிரம்பி வரிசையில் காத்திருக்கின்றனர்.

    இலவச தரிசனத்துக்கு டோக்கன்கள் பெறாதவா்கள் 30 மணி நேரமும், ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணி நேரமும், இலவச தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்கள் 3 முதல் 4 மணி நேரமும் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    திருப்பதியில் உள்ள பூதேவி காம்ப்ளக்ஸ், சீனிவாசம், கோவிந்தராஜ ஸ்வாமி சத்திரம் உள்ளிட்ட இடங்களில் இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகிறது.

    அங்கு டோக்கன் வாங்க ஏராளமான பக்தர்கள் வரிசையில் காத்திருக்கின்றனர்.

    திருப்பதியில் நேற்று 73,831 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 34,443 பேர் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.5.2 கோடி உண்டியல் காணிக்கை வசூலாகியுள்ளது.

    • இன்று காலை 10 மணியளவில் தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.
    • பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்து ஏழுமலையானை தரிசனம் செய்யலாம்.

    திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருப்பதி ஏழுமலையானை டிசம்பர் மாதத்தில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அங்கப்பிரதட்சண டோக்கன் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில் திருமலை-திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.

    இதை, பக்தர்கள் கவனத்தில் கொண்டு ஆன்லைனில் அங்கப்பிரதட்சண டோக்கன் முன்பதிவு செய்து, குறிப்பிட்ட நாளில் திருமலைக்கு வந்து ஏழுமலையானை தரிசனம் செய்யலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நாளை காலை 10 மணியளவில் தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.
    • பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்து ஏழுமலையானை தரிசனம் செய்யலாம்.

    திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருப்பதி ஏழுமலையானை டிசம்பர் மாதத்தில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அங்கப்பிரதட்சண டோக்கன் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில் திருமலை-திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.

    இதை, பக்தர்கள் கவனத்தில் கொண்டு ஆன்லைனில் அங்கப்பிரதட்சண டோக்கன் முன்பதிவு செய்து, குறிப்பிட்ட நாளில் திருமலைக்கு வந்து ஏழுமலையானை தரிசனம் செய்யலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இலவச சிறப்பு தரிசன டிக்கெட் நாளை காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது.
    • இலவச தரிசன டிக்கெட்டுகளை ஆன்லைனில் முன்பதிவு செய்துகொள்ளுமாறு தேவஸ்தானம் கேட்டுக்கொண்டுள்ளது.

    முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் தீராத நோயால் பாதிக்கப்பட்டவர்கள் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க டிசம்பர் மாதத்திற்கான இலவச சிறப்பு தரிசன டிக்கெட் நாளை (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது.

    முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் தீராத நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இலவச தரிசன டிக்கெட்டுகளை ஆன்லைனில் முன்பதிவு செய்துகொள்ளுமாறு திருமலை, திருப்பதி தேவஸ்தானம் கேட்டுக்கொண்டுள்ளது.

    • திருப்பதியில் கார்த்திகை தீப மகா உற்சவம்: 10 ஆயிரம் பேர் ஒரே நேரத்தில் தீபம் ஏற்றி வழிபாடு
    • அனைவருக்கும் திருப்பதி தேவஸ்தானம் சார்பில் விளக்குகள் வழங்கப்பட்டன.

    திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கார்த்திகை மாத அமாவாசையையொட்டி நேற்று இரவு மகா கார்த்திகை தீப உற்சவம் நடந்தது.

    திருப்பதி தேவஸ்தான செயல் அலுவலர் தர்மாரெட்டி தலைமை தாங்கினார். தீப உற்சவத்தையொட்டி ஸ்ரீ மகாலட்சுமி, ஏழுமலையான் சமேத ஸ்ரீதேவி பூதேவி, உற்சவ மூர்த்திகள் அலங்கரிக்கப்பட்டு மலர் அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடந்தது.

    திருப்பதி தேவஸ்தான இணை செயல் அலுவலர் சதா பார்கவி, வீர பிரம்மம் மற்றும் திருப்பதி மேயர் திரிஷா, கமிஷனர் அனுபமா அஞ்சலி, தேவஸ்தான ஊழியர்கள், மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    தீபத் திருவிழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் திருப்பதி தேவஸ்தானம் சார்பில் விளக்குகள் வழங்கப்பட்டன. வேத பாடசாலையை சேர்ந்த பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு வேத மந்திரங்களை ஓதினர்.

    தேவஸ்தான பிரதான அர்ச்சகர்கள் வேணுகோபால தீச்சிதர், கிருஷ்ண சேஷாசல தீச்சிதர்கள் கலந்து கொண்டு ஆகம விதிப்படி சாமிக்கு நட்சத்திர ஆர்த்தி கும்ப ஆர்த்தி மற்றும் தீபாரதனை செய்தனர். பூஜையில் கலந்து கொண்ட 10 ஆயிரம் பேரும் ஒரே நேரத்தில் சாமிக்கு தீபம் காட்டி பரவசத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.

    இதையடுத்து எஸ்.வி இசை கல்லூரியை சேர்ந்த மாணவிகள் பக்தி பாடல்களுக்கு ஏற்றவாறு நடனமாடி பக்தர்களை பரவசமூட்டினர்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று 60,861 பேர் தரிசனம் செய்தனர். 28 519 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 4.53 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    • அந்தந்தக் கோவில்களில் பாரம்பரிய பூஜை நிகழ்ச்சிகளை நடத்தலாம்.
    • பக்தர்களின் கூட்டத்துக்கு ஏற்றவாறு மற்ற ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலின் துணைக் கோவில்களான திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில், திருப்பதி கோவிந்தராஜசாமி, கோதண்டராமசாமி கோவில், சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரசாமி கோவில், அப்பலாயகுண்டா பிரசன்னவெங்கடேஸ்வரர் கோவில், கார்வேட்டிநகரம் வேணுகோபாலசாமி கோவில், நாகலாபுரம் வேதநாராயணசாமி கோவில் உள்பட பல்வேறு கோவில்களில் வரும் ஜனவரி மாதம் வைகுண்ட ஏகாதசி விழா நடக்கிறது.

    அதற்கான ஏற்பாடுகளை செய்வது குறித்து திருமலை-திருமலை தேவஸ்தான இணை அதிகாரி வீரபிரம்மன் பல்வேறு துறை அதிகாரிகளுடன் ஆலோசனைக்கூட்டம் நடத்தினார்.

    கூட்டத்தில் இணை அதிகாரி வீரபிரம்மன் பேசியதாவது:-

    வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு அந்தந்தக் கோவில்களில் பக்தர்கள் வழிபட அதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். ஆகம பண்டிதர்கள் கூறி உள்ள நேரத்தை சரியாக பின்பற்ற வேண்டும். கோவில்களை மலர்களாலும், மின் விளக்குகளாலும் அழகாக அலங்கரிக்க வேண்டும்.

    பக்தர்களின் கூட்டத்துக்கு ஏற்றவாறு மற்ற ஏற்பாடுகளை செய்ய வேண்டும். கோவில்களில் தூய்மை மற்றும் சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பக்தர்களுக்கு அன்னதானம், குடிநீர், தங்குமிடம் தட்டுப்பாடு இல்லாமல் வழங்க வேண்டும். பக்தர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். அதற்காக கோவில் அதிகாரிகள் உள்ளூர் போலீசாருடன் இணைந்து பாதுகாப்பு முன்னேற்பாடுகளை செய்து கொள்ளலாம்.

    அந்தந்தக் கோவில்களில் பாரம்பரிய பூஜை நிகழ்ச்சிகளை நடத்தலாம். பக்தர்களின் வசதிக்காக உதவி மையங்கள் மற்றும் வாகனங்கள் நிறுத்துமிடங்களை ஏற்பாடு செய்ய வேண்டும். அதற்காக உள்ளாட்சி அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து தேவையான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். பக்தர்களுக்கு சேவை வழங்க மருத்துவ முகாம்களை அமைத்துக் கொள்ளலாம்.

    சென்னை, பெங்களூரு, ஐதராபாத், மும்பை ஆகிய நகரங்களில் உள்ளாட்சி பிரதிநிதிகளுடன் கலந்து ஆலோசித்து அங்குள்ள கோவில்களில் வைகுண்ட ஏகாதசி விழா ஏற்பாடுகளை முன்கூட்டியே செய்து கொள்ளலாம். பக்தர்களை கவரும் வகையில் ஆன்மிக மற்றும் கலாசார நிகழ்ச்சிகளை நடத்தலாம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • 1800 பக்தர்கள் தரையில் அமர்ந்து தீபம் ஏற்றும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
    • தீபம் ஏற்றும் இடத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    திருமலை-திருப்பதி தேவஸ்தான நிர்வாக அலுவலக கட்டிட மைதானத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) கார்த்திகை தீபத் திருவிழா நடக்கிறது. அதற்காக விரிவான ஏற்பாடுகளை செய்வது தொடர்பாக ஆலோசனைக்கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு திருமலை-திருப்பதி தேவஸ்தான இணை அதிகாரி சதாபார்கவி தலைமை தாங்கி பேசினார்.

    அவர் பேசியதாவது:-

    கார்த்திகை தீபத்திருவிழாவின் மகத்துவத்தைப் பக்தர்களுக்கு உணர்த்தும் வகையிலும், நாட்டு மக்கள் சுபிட்சமாக வாழ வேண்டும் என்பதற்காக வெங்கடாசலபதி, மகாலட்சுமி தாயாரை வேண்டி கார்த்திகை தீபத்திருவிழா நடத்தப்படுகிறது. இந்தத் திருவிழா 18-ந்தேதி மாலை 6 மணியில் இருந்து இரவு 8 மணி வரை நடக்கிறது. அதில் 1800 பக்தர்கள் தரையில் அமர்ந்து தீபம் ஏற்றும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தீபத் திருவிழாவில் பங்கேற்க வரும் பெண் பக்தர்களுக்கு துளசி செடிகளை வழங்க வேண்டும்.

    அதேபோல் அஷ்ட லட்சுமி வைபவம், நடனம், தீபம் ஏற்றுதல் மற்றும் மங்கள ஆரத்தி ஆகியவை நடக்கிறது. பக்தர்களுக்கு சேவை செய்ய ஸ்ரீவாரி சேவா சங்க தொண்டர்களை பயன்படுத்தலாம். என்ஜினீயரிங் துறையில் உள்ளவர்கள் மேடை அமைத்தல், தடுப்புகள் அமைத்தல் பணியை விரைந்து முடிக்க வேண்டும். கார்த்திகை மாதத்தின் சிறப்பை உணர்த்தும் வகையில் மேடையில் அழகிய மலர் அலங்காரம், மின் விளக்குகள் அலங்காரம், அகண்ட ஒளித்திரை ஆகியவற்றை அமைக்க வேண்டும். தீபம் ஏற்றும் இடத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். அதற்காக துப்புரவு பணியாளர்களை கூடுதலாக நியமித்துக் கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    அதைத்தொடர்ந்து தீபம் ஏற்றும் இடத்தை சதாபார்கவி பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

    • திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.
    • 10 மணியளவில் டிக்கெட்டுகள் வெளியீடு.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அடுத்த மாதம் (டிசம்பர்) பக்தர்கள் ஆர்ஜித சேவையில் பங்கேற்று வழிபட நாளை (புதன்கிழமை) காலை 10 மணியளவில் ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.

    பக்தர்கள் தங்களுக்கு தேவையான கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சஹஸ்ர தீபலங்கார சேவைகளுக்கான டிக்கெட்டுகளை ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து, குறிப்பிட்ட தேதியில் திருமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்யலாம்.

    மேற்கண்ட தகவலை திருமலை-திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

    • இலவச தரிசனத்திற்கு 24 மணி நேரமாகிறது.
    • இலவச தரிசனத்திற்கு 24 அறைகளிலும் பக்தர்கள் காத்துள்ளனர்.

    ஏழுமலையான் கோவிலில் கடந்த 3 நாட்களாக பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

    இதனால் வைகுந்தம் காம்ப்ளக்ஸ் முழுவதும் பக்தர்களின் கூட்டம் நிரம்பி வழிந்தது. பக்தர்கள் நீண்ட தூரம் வரிசையில் காத்திருந்து 40 மணி நேரத்திற்கு பிறகு தரிசனம் செய்தனர். இந்த நிலையில் வார இறுதி நாட்கள் முடிந்தும் திருப்பதியில் தொடர்ந்து பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

    இலவச தரிசனத்திற்கு 24 மணி நேரமாகிறது. ‌இன்று காலை தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் அலிப்பிரி அருகே உள்ள பூதேவி காம்ப்ளக்ஸ், பஸ் நிலையம் அருகில் உள்ள ஸ்ரீநிவாசம் கெஸ்ட் ஹவுஸ் மற்றும் ரெயில் நிலையம் அருகில் உள்ள கோவிந்தராஜ சாமி சத்திரம் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள டைம் ஸ்லாட் கவுண்டர்களில் டோக்கன் பெற்று சென்றனர்.

    அவர்களுக்கு 10 மணி நேரத்தில் தரிசன நேரம் ஒதுக்கப்பட்டது.

    இலவச தரிசனத்திற்கு 24 அறைகளிலும் பக்தர்கள் காத்துள்ளனர்.

    திருப்பதியில் பரவலாக மழை பெய்து கடும் குளிர் வீசுகிறது. குளிரை பொருட்படுத்தாமல் பக்தர்கள் தரிசனத்திற்கு சென்று வருகின்றனர்.

    திருப்பதியில் நேற்று 73,323 பேர் தரிசனம் செய்தனர். 29,464 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.85 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    • கார்த்திகை மாதத்தில் வனபோஜனம் நிகழ்ச்சி நடப்பது வழக்கம்.
    • இன்று கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம் ரத்து செய்யப்படுகிறது

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கார்த்திகை மாதத்தில் வனபோஜனம் நிகழ்ச்சி நடப்பது வழக்கம். அதன்படி இன்று (ஞாயிற்றுக்கிழமை) திருமலையில் கோகர்ப்பம் அணை அருகில் உள்ள பார்வேடு மண்டபத்தில் கார்த்திகை வன போஜனம் நிகழ்ச்சி நடக்கிறது.

    அதையொட்டி இன்று காலை 8.30 மணிக்கு உற்சவர் மலையப்பசாமி கோவிலில் இருந்து சிறிய கஜ வாகனத்திலும், உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி தாயார்கள் பல்லக்கிலும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி மேள, தாளம் மங்கள வாத்தியங்கள் இசைக்க கோவிலில் இருந்து ஊர்வலமாக பார்வேடு மண்டபத்துக்குக் கொண்டு செல்லப்படுகிறார்கள்.

    அங்கு பகல் 11 மணியில் இருந்து மதியம் 12 மணிக்குள் மலையப்பசாமி, ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடக்கிறது. மதியம் 1 மணியில் இருந்து மதியம் 2 மணி வரை கார்த்திகை வனபோஜனம் நிகழ்ச்சி நடக்கிறது.

    இதனால் ஏழுமலையான் கோவிலில் இன்று கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவை ரத்து செய்யப்படுகிறது, எனக் கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×