search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94452"

    • திருப்பதியில் தரிசனத்திற்கு 48 மணி நேரம் ஆகிறது.
    • பக்தர்கள் 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு தரிசனத்திற்காக காத்து நிற்கின்றனர்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முதல் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.

    கடந்த வாரம் வார விடுமுறை இறுதிநாளில் 90 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனத்திற்காக குவிந்தனர். பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் அதிகாரிகள் மற்றும் போலீசார் திணறினர்.

    இந்த நிலையில் திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை ஓரளவு பக்தர்கள் கூட்டம் குறைந்து காணப்பட்டது. கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் நேற்று பக்தர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து காணப்பட்டது. திருமலையில் எங்கு பார்த்தாலும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி இருந்தது.

    பக்தர்களை தங்க வைத்து தரிசனத்திற்கு அனுப்பும் வைகுண்டம் காம்ப்ளக்சில் அனைத்து அறைகளும் நிரம்பி பக்தர்கள் 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு தரிசனத்திற்காக காத்து நிற்கின்றனர்.

    பக்தர்களின் சிரமத்தை போக்கும் வகையில் அவர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் உணவு, குடிநீர், பால், காபி உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது.

    வரிசையில் தரிசனத்திற்கு காத்திருக்கும் பக்தர்கள் ஒருவரை ஒருவர் முந்திச் செல்ல முயலும் போது அடிக்கடி பக்தர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்படுகிறது. எனவே அசம்பாவித சம்பவங்களை தவிர்க்க திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் கூடுதல் ஏற்பாடுகளை செய்து தர வேண்டும் என பக்தர்கள் சார்பில் தேவஸ்தானத்திற்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    பக்தர்கள் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் கட்டுப்படுத்த முடியாமல் தேவஸ்தான அதிகாரிகள் திணறி வருகின்றனர்.

    பக்தர்களுக்கு அனைத்து வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.வார இறுதி விடுமுறை நாட்களில் தரிசனத்திற்கு வருவதை பக்தர்கள் தவிர்க்க வேண்டும். மற்ற நாட்களில் தரிசனத்திற்கு வந்தால் சிரமமின்றி ஏழுமலையானை தரிசித்து செல்ல முடியும் என்றனர்.

    திருப்பதியில் நேற்று 87,698 பேர் தரிசனம் செய்தனர். 48,804 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர்.ரூ.3.88 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    • நயன்தாரா- விக்னேஷ் சிவன் திருமணம் ஜூன் 9-ஆம் நடைபெற்றதை அடுத்து நேற்று இருவரும் திருப்பதி சென்றனர்.
    • புதிய சர்ச்சை எழுந்ததை தொடர்ந்து விக்னேஷ் சிவன் மன்னிப்புக் கோரியுள்ளார்.

    நடிகர், பாடலாசிரியர், இயக்குனர் என பன்முகத்திறமை கொண்ட விக்னேஷ் சிவன், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாரா ஆகியோரின் திருமணம் ஜூன் 9-ந் தேதி மகாபலிபுரத்தில் உள்ள ஷேர்டன் ஹோட்டலில் குடும்ப உறவினர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.

    இவர்களது திருமணத்தில் முன்னணி திரைப் பிரபலங்கள் உள்பட பலர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். இதற்கிடையே, நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் திருமணம் முடிந்ததை அடுத்து திருப்பதியில் நடைபெற்ற கல்யாண உற்சவத்தில் நேற்று கலந்து கொண்டனர்.

     அப்போது, திருப்பதியில் சுவாமி தரிசனத்திற்கு பின் புகைப்படம் எடுத்தபோது காலணிகள் அணிந்து வந்ததால் ஏற்பட்ட சர்ச்சையை தொடர்ந்து, நயன்தாரா மீது திருப்பதி திருமலை தேவஸ்தானம் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க முடிவுசெய்துள்ளதாக தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரி தெரிவித்தார்.

    இந்த நிலையில், விக்னேஷ் சிவன் திருப்பதி திருமலை தேவஸ்தானத்திற்கு மன்னிப்பு கடிதம் அனுப்பியுள்ளர். அதில், "புகைப்படம் எடுக்கும் போது காலணியுடன் இருந்ததை கவனிக்கவில்லை. அறியாமல் செய்த தவறுக்காக மன்னிப்பு கோருகிறேன்" என அவர் தெரிவித்துள்ளார்.

    • நீண்ட தூரத்துக்கு பக்தர்கள் வரிசையில் காத்திருந்து 48 மணி நேரத்திற்கு பின்னர் தரிசனம் செய்தனர்.
    • பக்தர்களுக்கு 2 லட்டுகள் மட்டுமே கூடுதலாக வழங்கப்படுகிறது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் நாள்தோறும் அதிகரித்த வண்ணம் உள்ளது. பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் பல்வேறு மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்கள் கூட்டம் குறையாமல் உள்ளது.

    கடந்த வாரம் வரலாறு காணாத அளவிற்கு 90 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனத்திற்கு குவிந்தனர். இதனால் நீண்ட தூரத்துக்கு பக்தர்கள் வரிசையில் காத்திருந்து 48 மணி நேரத்திற்கு பின்னர் தரிசனம் செய்தனர்.

    தொடர்ந்து கூட்டம் அதிகரித்து வருவதால் பக்தர்களுக்கு 2 லட்டுகள் மட்டுமே கூடுதலாக வழங்கப்படுகிறது.

    இந்த நிலையில் சாமானிய பக்தர்களும் ஏழுமலையானை தரிசனம் செய்யும் விதமாக வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வி.ஐ.பி பிரேக் தரிசனத்தை தேவஸ்தானம் ரத்து செய்து இருந்தது.

    பக்தர்களின் கூட்டம் குறையாததால் இம்மாத கடைசிவரை வி.ஐ.பி பிரேக் தரிசனம் தொடர்ந்து ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கோடை விடுமுறை என்பதால் தினமும் ஏராளமான பக்தர்கள் திருப்பதியில் குவிந்து வருகின்றனர்.
    • தற்போது தரிசன டிக்கெட் கிடைக்காமல் பக்தர்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜூலை, ஆகஸ்ட் மாதத்திற்கான ரூ.300 ஆன்லைன் தரிசன டிக்கெட்டுகள் வெளியிடப்பட்ட சிறிது நேரத்தில் தீர்ந்தது.

    தற்போது தரிசன டிக்கெட் கிடைக்காமல் பக்தர்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

    இதனால் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் அனைவரும் இலவச தரிசனத்தில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். கோடை விடுமுறை என்பதால் தினமும் ஏராளமான பக்தர்கள் திருப்பதியில் குவிந்து வருகின்றனர்.

    கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பக்தர்கள் தரிசனம் செய்யாததால் தற்போது ஏராளமானோர் குவிந்து வருகின்றனர். இதற்கு முன்பு சென்னையில் இருந்து ஒரு நாளைக்கு 100 பக்தர்கள் வரை தரிசனத்திற்கு சென்று வந்தனர். ஆனால் தற்போது தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் திருப்பதி சென்று வருகின்றனர்.

    இதேபோல் அனைத்து ஊர்களில் இருந்தும் பக்தர்கள் தரிசனத்திற்கு செல்வதால் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் நீண்ட தூரத்திற்கு பக்தர்கள் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

    எனவே இலவச தரிசனத்தில் நேர ஒதுக்கீடு டோக்கன்கள் வழங்க வேண்டும் என பக்தர்கள் திருப்பதி தேவஸ்தானத்திற்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். தேவஸ்தான அதிகாரிகளும் இலவச தரிசனத்தில் நேர ஒதுக்கீடு டோக்கன் வழங்குவது குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

    திருப்பதியில் நேற்று 76,425 பேர் தரிசனம் செய்தனர். 36,053 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.15 கோடி உண்டியல் காணிக்கையாக வசூலானது.

    இணையதளத்தில் வெளியிட்ட 16 நிமிடத்தில் அனைத்து இலவச தரிசன டிக்கெட்டுகளையும் பக்தர்கள் முன்பதிவு செய்து விட்டதாக, தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    திருப்பதி ஏழுமலையானை இலவச தரிசனத்தில் சென்று வழிபடும் பக்தர்களுக்கு இலவச தரிசன டிக்கெட் நேரில் வழங்குவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு, ஆன்லைன் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் அடுத்த மாதம் (டிசம்பர்) பக்தர்களுக்கு 3 லட்சத்து 10 ஆயிரம் இலவச தரிசன டிக்கெட் நேற்று திருமலை-திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்பட்டது. வெளியிட்ட 16 நிமிடத்தில் அனைத்து இலவச தரிசன டிக்கெட்டுகளையும் பக்தர்கள் முன்பதிவு செய்து விட்டதாக, தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அடுத்த மாதம் (டிசம்பர்) நடக்கும் முக்கிய விழாக்கள் குறித்த தகவல்களை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அடுத்த மாதம் (டிசம்பர்) நடக்கும் விழாக்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன் விவரம் வருமாறு:-

    டிசம்பர் 1-ந்தேதியில் இருந்து பிப்ரவரி மாதம் (2022) 28-ந்தேதி வரை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உள்ள ரெங்கநாயக்கர் மண்டபத்தில் ரிக் வேத பாராயணம், 2-ந்தேதி தன்வந்திரி ஜெயந்தி, 4-ந்தேதி பத்மாவதி தாயார் கோவிலில் நடக்கும் கார்த்திகை பிரம்மோற்சவ விழாவின்போது யானை வாகன சேவையையொட்டி ஏழுமலையான் கோவிலில் இருந்து தங்க காசு மாலையை திருச்சானூருக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்படுகிறது.

    8-ந்தேதி திருச்சானூரில் நடக்கும் பஞ்சமி தீர்த்தத்தையொட்டி ஏழுமலையான் கோவிலில் இருந்து பத்மாவதி தாயார் கோவிலுக்கு மங்கல சீர்வரிசை பொருட்கள் ஊர்வலமாக எடுத்துச் சென்று சமர்ப்பணம் செய்யப்படுகிறது.

    12-ந்தேதி கார்த்திகை மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையையொட்டி திருமலையில் பேடிஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம், 14-ந்தேதி கீதா ஜெயந்தி, 15-ந்தேதி சக்கர தீர்த்த முக்கோடி உற்சவம், 16-ந்தேதியில் இருந்து 2022-ம் ஆண்டு ஜனவரி மாதம் 14-ந்தேதி வரை தனுர் மாத கைங்கர்யம், 18-ந்தேதி தத்தா ஜெயந்தி, 19-ந்தேதி பவுர்ணமி கருட சேவை.

    மேற்கண்ட விழாக்கள் நடக்கிறது.
    திருப்பதியில் அடுத்த மாதத்துக்கான (டிசம்பர்) இலவச தரிசன அனுமதி அட்டை நாளை (சனிக்கிழமை) காலை 9 மணியளவில் திருமலை-திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.
    திருப்பதி ஏழுமலையானை இலவச தரிசனத்தில் சென்று வழிபடும் பக்தர்களுக்கு தரிசன அனுமதி அட்டை (டைம் ஸ்லாட் டோக்கன்) நேரில் வழங்குவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு, ஆன்லைன் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் அடுத்த மாதத்துக்கான (டிசம்பர்) இலவச தரிசன அனுமதி அட்டை நாளை (சனிக்கிழமை) காலை 9 மணியளவில் திருமலை-திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. பக்தர்கள் திருமலையில் தங்குவதற்கான அறைகள் டிசம்பர் மாதத்துக்கான ஒதுக்கீடு நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணியளவில் தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.

    திருமலைக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்து கொள்ளலாம், என திருமலை-திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
    திருப்பதி கோவிலில் கார்த்திகை தீப உற்சவத்தை முன்னிட்டு புதிய பானைகளில் தீபம் ஏற்றி மங்கள வாத்தியங்கள் இசைக்க ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு விமான கோபுரத்தை வலம் வந்து மூல மூர்த்திக்கு ஆரத்தி கொடுக்கப்பட்டது.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று மாலை கார்த்திகை தீப உற்சவம் நடந்தது. புதிய பானைகளில் தீபம் ஏற்றி மங்கள வாத்தியங்கள் இசைக்க ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு விமான கோபுரத்தை வலம் வந்து மூல மூர்த்திக்கு ஆரத்தி கொடுக்கப்பட்டது.

    அதன்பிறகு கருவறையில் அகண்டம், குலசேகரபடி, ராமுலவாரி மேடை, துவார பாலகர்கள், கருடாழ்வார் சன்னதி, வரதராஜசாமி சன்னதி, வகுளமாதா சன்னதி, பங்காருபாவி, கல்யாண மண்டபம், பாஷ்யங்கார்ல சன்னதி, யோக நரசிம்மர் சன்னதி, விஷ்வக்சேனர் சன்னதி, தங்க வாசல், தங்கக் கொடிமரம், பலிபீடம், ரெங்கநாயகர் மண்டபம், பேடி ஆஞ்சநேயர் கோவில், வராஹசாமி கோவில் உள்பட பல இடங்களில் நெய்தீபம் ஏற்றப்பட்டது.

    கார்த்திகை தீப உற்சவத்தில் பெரிய ஜீயர், கோவில் துணை அதிகாரி ரமேஷ்பாபு, பேஷ்கார் ஸ்ரீஹரி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கைசிக துவாதசியை முன்னிட்டு நேற்று தங்க வாயிலில் சுவாமி, தாயாருக்கு கைசிக துவாதசி ஆஸ்தானத்தை சாஸ்திர ரீதியாக அர்ச்சகர்கள் நடத்தினார்கள்.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கைசிக துவாதசியை முன்னிட்டு நேற்று கைசிக துவாதசி ஆஸ்தானம் நடைபெற்றது.

    இதையொட்டி அதிகாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை ஸ்ரீதேவி, பூதேவியுடன் உக்ர சீனிவாசமூர்த்தி திருவீதி உலா நடைபெற்றது.

    தொடர்ந்து காலை 5.30 மணி முதல் 7 மணி வரை தங்க வாயிலில் சுவாமி, தாயாருக்கு கைசிக துவாதசி ஆஸ்தானத்தை சாஸ்திர ரீதியாக அர்ச்சகர்கள் நடத்தினார்கள்.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி தங்கத் திருச்சி வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி தங்கத் திருச்சி வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை (செவ்வாய்க்கிழமை) கைசிக துவாதசி ஆஸ்தானம் நடக்கிறது. அன்று அதிகாலை கோவிலில் சுப்ர பாதம், தோமாலை, அர்ச்சனை சேவைகள் நடக்கிறது.

    அதைத்தொடர்ந்து அதிகாலை 4.30 மணியில் இருந்து 5.30 மணி வரை சூரிய உதயத்துக்கு முன்பாக உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி தங்கத் திருச்சி வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.
    தரிசன டிக்கெட்களை நேரடியாக திருப்பதியில் வழங்குவதா அல்லது ஆன்லைன் மூலம் வெளியிடுவதா என்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி விரைவில் அறிவிக்கப்படும்.
    திருமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையை உயர்த்தவும், நேரடியாக வரும் பக்தர்களுக்கு தரிசன டோக்கன் அளிப்பது அல்லது ஆன்லைனில் டிக்கெட் வழங்குவது குறித்தும் இன்னும் 2, 3 நாட்களில் அறிவிப்பு வெளியிடப்படும் என்று தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

    இதுகுறித்து தேவஸ்தான அறங்காவலர் குழுத்தலைவர் சுப்பாரெட்டி நிருபர்களிடம் கூறியதாவது:-

    நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. திருப்பதியில் பக்தர்களை அதிக அளவில் அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    எனவே விரைவில் தரிசனத்துக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    ஆனால் 30-ந்தேதி வரை ஆன்லைனில் டிக்கெட் வழங்கப்பட்ட நிலையில் தற்போது பக்தர்களின் எண்ணிக்கையை அதிகரித்தால் அதை எவ்வாறு வழங்குவது என்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    தரிசன டிக்கெட்களை நேரடியாக திருப்பதியில் வழங்குவதா அல்லது ஆன்லைன் மூலம் வெளியிடுவதா என்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி விரைவில் அறிவிக்கப்படும்.

    மாநிலத்தில் கொரோனா குறைந்தாலும் சித்தூர் மாவட்டத்தில் எண்ணிக்கை தொடர்ந்து குறையாமல் உள்ளது. இதற்கான காரணத்தை தேவஸ்தானம் ஆராய்ந்து வருகிறது.

    கொரோனா பாதிப்பு எண்ணிகையை வைத்து விரைவில் ஏழுமலையானுக்கு நடக்கும் சுப்பரபாதம், அர்ச்சனை போன்ற ஆர்ஜித் சேவைகளில் பக்தர்களை அனுமதிப்பது குறித்து அதிகாரிகளுடன் பேசி விரைவில் முடிவெடுக்கப்படும் என்றார்.

    திருப்பதியில் தற்போது தினசரி 30 ஆயிரம் பக்தர்கள் வரை தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
    ஏழுமலையானுக்கு நடத்தப்படும் அனைத்து விதமான பூஜைகளில் பயன்படுத்தப்படும் மலர்களின் அடிப்படையில் சம்பங்கி மரம் ஏழுமலையான் கோவில் தல விருட்சமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தலவிருட்சமாக சம்பங்கி மரத்தை தேர்வு செய்து தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

    இது தொடர்பாக திருப்பதி தேவஸ்தானம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஏழுமலையானுக்கு நடத்தப்படும் அனைத்து விதமான பூஜைகளில் பயன்படுத்தப்படும் மலர்களின் அடிப்படையில் சம்பங்கி மரம் ஏழுமலையான் கோவில் தல விருட்சமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    புராணங்களில் கூறப்பட்டுள்ள பல்வேறு வகையான மலர்ச் செடிகளை கொண்ட பூந்தோட்டம் திருமலையில் அமைக்க பணிகள் நடைபெற்று வருகிறது. அவற்றில் ஏழுமலையானுக்கு தினமும் நடத்தப்படும் பூஜைகளில் சம்பங்கி குறிப்பிடத்தக்க இடத்தை பெற்று வருகிறது.

    பவிஷ்யோத்ர புராணம் 13-வது பாகம் 33 மற்றும் 34-வது ஸ்லோகங்களில் அப்போதைய அரசர் தொண்டைமான் சக்கரவர்த்தியிடம் ஏழுமலையான் தனக்கான கோவிலைக் கட்டும் போது கட்டுமானத்திற்காக தேர்வு செய்யப்பட்ட பகுதியில் இருக்கும் சம்பங்கி தோட்டத்தை அகற்ற வேண்டாம் என்று கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஏழுமலையான் கோவிலில் உள்ள ஒரு பகுதி தற்போது சம்பங்கி பிரகாரம் என்று அழைக்கப்படுகிறது. இது போன்ற காரணங்களால் சம்பங்கி மரம் ஏழுமலையானின் தலவிருட்சமாக தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    நேற்று முன்தினம் திருப்பதியில் இருந்து திருமலைக்கு பக்தர்கள் நடந்து செல்லும் நடைபாதையில் மழை வெள்ளம் புகுந்தது. மேலும் மலையில் இருந்து மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன.

    பாறைகள் உருண்டு விழுந்தன. இதனால் பக்தர்கள் நடந்து செல்லும் நடைபாதை கடந்த 2 நாட்களாக மூடப்பட்டது.

    நேற்று இரவு முதல் மழை வெள்ளம் வடிய தொடங்கியது. இதையடுத்து நடைப்பாதையில் விழுந்த மண், மரங்கள் மற்றும் பாறைகள் அகற்றும் பணி நடந்தது. இன்று காலை முதல் நடைபாதையில் தரிசனத்திற்கு செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

    திருப்பதியில் நேற்று 28,851 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 13,705 பேர் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.2.96 கோடி உண்டியலில் காணிக்கை வசூலானது.
    ×