search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94452"

    நாகசதுர்த்தியையொட்டி இன்று இரவு ஸ்ரீதேவி, பூதேவி சமேதரராய் ஏழுமலையான் பெரியசே‌ஷ வாகனத்தில் 4 மாட வீதிகளில் உலாவந்து அருள்பாலிக்கிறார்.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாக சதுர்த்தியையொட்டி ஆண்டுதோறும் ஏழுமலையான் பெரிய சே‌ஷ வாகனத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பது வழக்கம்.

    ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஏழுமலையான் பெரிய சே‌ஷ வாகனத்தில் இன்று இரவு 4 மாட வீதிகளில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    ராம அவதாரத்தில் லட்சுமணனாகவும், கிருஷ்ண அவதாரத்தில் பலராமனாகவும், மகா விஷ்ணுவுக்கு படுக்கையாக ஆதிசே‌ஷன் சேவை செய்து வருகிறார்.

    இதன் காரணமாக ஆண்டுதோறும் நடைபெறும் பிரம்மோற்சவ விழாவின் முதல் நாளில் ஏழுமலையான் பெரியசே‌ஷ வாகனத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

    இந்த நிலையில் நாகசதுர்த்தியையொட்டி இன்று இரவு ஸ்ரீதேவி, பூதேவி சமேதரராய் ஏழுமலையான் பெரியசே‌ஷ வாகனத்தில் 4 மாட வீதிகளில் உலாவந்து அருள்பாலிக்கிறார்.

    திருப்பதியில் நேற்று 34,824 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 15,650 பேர் முடிகாணிக்கை செலுத்தினர். ரூ.3.19 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை (வியாழக்கிழமை) தீபாவளி ஆஸ்தானம் நடக்கிறது. அதனால் வி.ஐ.பி. பிரேக் தரிசனத்துக்கான பரிந்துரை கடிதங்கள் இன்று (புதன்கிழமை) முதல் ஏற்கப்பட மாட்டாது.
    திருமலை

    திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை (வியாழக்கிழமை) தீபாவளி ஆஸ்தானம் நடக்கிறது. எனவே அன்று வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து செய்யப்படுகிறது. வி.ஐ.பி. பிரேக் தரிசனத்துக்கான பரிந்துரை கடிதங்கள் இன்று (புதன்கிழமை) முதல் ஏற்கப்பட மாட்டாது. இதை, பக்தர்கள் கவனத்தில் கொண்டு திருப்பதி தேவஸ்தானத்துக்கு ஒத்துழைக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்த மாதம் (நவம்பர்) நடக்கும் முக்கிய விழாக்கள் குறித்து திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அடுத்த மாதம் (நவம்பர்) நடக்கும் விழாக்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன் விவரம் வருமாறு:-

    1-ந்தேதி மாதத் திரய ஏகாதசி, 4-ந்தேதி தீபாவளி ஆஸ்தானம், 6-ந்தேதி வைணவ ஆச்சாரியார் திருமலைநம்பி சாத்துமுறை, 8-ந்தேதி நாக சதுர்த்தியையொட்டி பெரிய சேஷ வாகன வீதி உலா, வைணவ ஆச்சாரியார் மணவாள மகாமுனிகள் சாத்துமுறை, 10-ந்தேதி புஷ்ப யாகத்தை முன்னிட்டு அங்குரார்ப்பணம், 11-ந்தேதி புஷ்ப யாகம், வைணவ ஆச்சாரியார் வேதாந்த மகாதேசிகன் சாத்துமுறை, 16-ந்தேதி கைசிக துவாதசி ஆஸ்தானம், சதுர்மாச விரதம் நிறைவு, 18-ந்தேதி காத்திகை தீப உற்சவம், 19-ந்தேதி திருமங்கை ஆழ்வார் சாத்துமுைற.

    மேற்கண்ட விழாக்கள் நடக்கிறது.

    இதையும் படிக்கலாம்..ஆதிசங்கர மானஸ பூஜா ஸ்லோகம்
    கோடை விடுமுறையையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. இலவச தரிசன வரிசையில் பக்தர்கள் 20 மணி நேரம் காத்திருந்து சாமியை தரிசித்தனர்.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகம் மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக வருகின்றனர். தற்போது கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது.

    குறிப்பாக கடந்த 2 நாட்களாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. இதன் காரணமாக நேற்று முன்தினம் பக்தர்கள் 1 மணி நேரம் முன்னதாக தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். இலவச தரிசனத்திற்காக செல்லும் பக்தர்கள் வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ் வழியாக அனுப்பி வைக்கப்படுவார்கள். சாதாரண நாட்களில் இலவச தரிசனத்திற்கு காலை 8 மணி முதல் பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். நேற்று முன்தினம் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் இருந்ததால் 1 மணி நேரம் முன்னதாக 7 மணி முதலே அனுமதிக்கப்பட்டனர்.

    இலவச தரிசனத்திற்காக அனுமதிக்கப்படும் 32 கியூ காம்ப்ளக்ஸ், பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. இதனால் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் பக்தர்கள் கூட்டத்தை ஒழுங்கு படுத்தினர். சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் வரை வரிசையில் நின்ற பக்தர்கள் 20 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து விட்டு சென்றனர்.

    இதேபோல் ‘டைம்ஸ்லாட்’ தரிசன பக்தர்கள் 5 மணி நேரமும், ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் பக்தர்கள் 5 மணி நேரமும் காத்திருந்து ஏழுமலையானை தரிசனம் செய்தனர். சாமி தரிசனம் செய்ய வரிசையில் நின்று காத்திருந்த பக்தர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் மோர், பால் மற்றும் அன்னபிரசாதங்கள் வழங்கப்பட்டது.

    கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியதால் தங்கும் விடுதிகளும் நிரம்பியது. மேலும் இடம் கிடைக்காத பக்தர்களை தேவஸ்தான பாதுகாப்பு அதிகாரிகள் கோவில் மைதானத்திலும், அமைனிட்டிஸ் காம்ப்ளக்சிலும் தங்க வைத்தனர். மேலும் இடம் கிடைக்காத பக்தர்கள் தங்கள் வாகனங்களில் படுத்து தூங்கினர்.

    நேற்று முன்தினம் ஒருநாள் மட்டும் 92 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். இதில் ‘டைம்ஸ்லாட்’ முறைப்படி 32 ஆயிரம் பக்தர்கள் ஏழுமலையானை தரிசித்தனர். மேலும் 2 நாட்களுக்கு கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும் என்று தேவஸ்தான அதிகாரிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர வசந்தோற்சவத்தை முன்னிட்டு தங்கத்தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர வசந்தோற்சவம் வெகுவிமரிசையாக நடந்து வருகிறது. விழாவின் 2-வதுநாளான நேற்று காலை 7 மணியில் இருந்து 8 மணிவரை தங்கத்தேரோட்டம் நடந்தது. உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் தங்கத்தேரில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

    திருமலை-திருப்பதி தேவஸ்தான இணை அதிகாரி கே.எஸ்.சீனிவாசராஜு வடம்பிடித்து இழுத்து, தேரோட்டத்தைத் தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து கோவில் ஊழியர்கள், பக்தர்கள் கோவிந்தா... கோவிந்தா... எனப் பக்தி கோஷம் எழுப்பி தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    தங்கத்தேரோட்டம் முடிந்ததும் காலை 9 மணியளவில் கோவிலில் இருந்து உற்சவர்கள் வசந்த மண்டபத்துக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு, பகல் 11 மணியில் இருந்து 12 மணிவரை உற்சவர்களுக்கு ஆஸ்தானம், சிறப்புப்பூஜைகள் நடந்தது.

    வசந்தோற்சவத்தையொட்டி பவுர்ணமி அன்று மாலை நேரத்தில் நடக்கும் கருடசேவை (தங்கக்கருட வாகன வீதிஉலா) மற்றும் திருப்பாவாடை சேவை ஆகியவை ரத்து செய்யப்பட்டன.
    திருப்பதியில் உள்ள வெங்கடாஜலபதி சிலைபோல் உருவாக்கப்பட்டாலும் குமரிமுனையில் உள்ள திருப்பதி வெங்கடாஜலபதி விட அளவு குறைவாகவே வடிவமைக்கப்பட்டுள்ளது.
    திருமலை- திருப்பதியில் உள்ள ஏழுமலையானின் சிலை பிரமாண்டமான அமைப்பு கொண்டதாகும். 9 அடி உயரத்துடன் அழகாக காட்சி அளிக்கும் ஏழுமலையானை எத்தனை தடவை பார்த்தாலும் சலிப்பே வராது. அதிலும் அவருக்கு அனைத்து நகைகளையும் அணிவித்து அலங்காரம் செய்த பிறகு பார்த்தால் பரவசமாக இருக்கும்.

    திருமலை தெய்வம் வெங்கடாஜலபதிக்கு, உச்சி முதல் பாதம் வரை அங்கம் முழுக்க ஆபரணங்கள், தண்டை, பாடகம், சூரிய கடாரி, நாகாபரணம், கர்ணபத்திரம், திருநெற்றிப் பட்டம், காசுமாலை என அங்கமெல்லாம் தங்கம் அணிந்து அழகே உருவாகக் காட்சி அளிக்கிறார்.

    கமல பீடத்தின் மீது பாதம் ஊன்றி, நவரத்னங்களாலான அணிகள் பூண்டு, சுவர்ண மகுடம் தரித்து மகர குண்டலங்கள் செவி அணி ஆக, மகர கண்டி, நாகாபரணம் 108 லட்சுமிகள் பொறித்த மாலை, தங்கப்பூணூல் தரித்து ஏழுமலையான் நமக்கு அருள்பாலிக்கிறார். பத்து ஆழ்வார்களின் மங்களாசாசனம் ஏற்று ஷேத்ரய்யா, தியாகய்யா, புரந்தர தாசர், அன்னமாச்சார்யா சாகித்ய கர்த்தாக்களின் சங்கீதம் கேட்டு மலையே குனிய நின்று கொண்டு இருக்கிறார் வேங்கடவன். கண்களையே மறைத்துவிடும் திருமண் என்ற நாமம் அணிவிக்கப்படுகிறது.

    இதில் முழுப்பங்கு பச்சைக் கற்பூரம். இதைச் சாத்துவது வெள்ளிக்கிழமை, வேங்கடமுடையானுக்கு அபிஷேகமும், வெள்ளிக்கிழமையில்தான் நடத்தப்படுகிறது. இதிலும் ஒரு வினோதம் உள்ளது. அபிஷேகப் பொருட்களில் மஞ்சளும் இடம் பெறும். இத்தகைய சிறப்புகள் கொண்ட ஏழுமலையான் சிலை முதலில் இரண்டு கரத்துடன்தான் இருந்தது என்றும், பின்னர் உடையவர் ராமானுஜர் வேண்டுதல் செய்தபடி பெருமாள் சங்கு சக்கரங்களை ஏந்திய இரண்டு கரங்களுடன் நான்கு கரத்தவராகச் சேவை சாதித்ததாகவும் சொல்கிறார்கள்.

    பெருமாளின் கையிலுள்ள சக்கரம் சுகபோகங்கள் சுழலும் தத்துவத்தை குறிக்கிறது. இந்த சக்கரம் அவரது வலது கையில் இருக்கிறது. இடது கையில் உள்ளது சங்கு. அதர்மத்தை அழித்து எழும் சங்கின் ஒலி இதன் தத்துவமாகும்.

    ஏழுமலையானின் வலது மார்பில் பெரிய பிராட்டியான திருமகள் அமர்ந்த கோலமும், இடது மார்பில் பத்மாவதித்தாயார் அமர்ந்துள்ள கோலமும் இடம் பெற்றுள்ளன. இவ்விரண்டு தாய்மார்களும் தாமரை மலரின் மீது அமர்ந்த கோலத்தில் நான்கு கரங்களுடன் காட்சியளிக்கின்றனர்.

    இவர்கள் தங்களது இரண்டு கரங்களில் தாமரை மொட்டுகளை கையில் ஏந்திய கோலத்துடனும், கீழே நீட்டிய ஒரு கரத்திலிருந்து பொன்னை வாரி வழங்கியபடியும், இன்னொரு கரத்தில் அமுதகலசமும் கொண்டவர்களாகக் காட்சியளிக்கின்றனர்.

    வேங்கடவன் எப்போதுமே தங்க, வைர நகைகள் ஜொலிக்க அற்புதமாகக் காட்சியளிக்கிறார். அழகிய கிரீடம், உடல் முழுக்கத் தங்க நகைகளின் அணிவகுப்பு! உலகிலேயே அதிக அளவு தங்க அணிகலன்களுடன் அபாரமாகக் காட்சியளிக்கும் கடவுள் வேங்கடவன் மாத்திரமே.

    மேரு பச்சை என்னும் மூன்று அங்குல விட்டம் கொண்ட பச்சைக்கல் பதிக்கப்பெற்ற கிரீடம் முதல், வைரமுடி, முதலை வடிவத்தில் காதணிகள், தோளில், வைர தங்க அணிகள், வைரம் பதித்த மகரகண்டி தங்க துளசிமாலை, நூற்று எட்டு லக்குமி உருவம் பதிக்கப்பெற்ற தங்கக்காசு, வேங்கடேஸ்வர சகஸ்ரநாமம் வரையப் பெற்ற தங்கக் கவசம் பூணப்பெற்ற சாளக்கிராம மாலை தங்கத்தால் ஆன பாதகவசம், தசாவதாரம் பதிக்கப்பட்ட இடுப்புப்பட்டை, இடுப்பில் தொங்கும் தங்கத்தால் ஆன ஆயுதம், வங்கியைப் போன்ற காலணித் தண்டை இப்படி பல்வேறு வகையான அணிகலன்கள் இவருக்கு மாத்திரமே உலகில் உள்ளது.

    இத்தகைய கோலத்தில் தினந்தினம் பக்தர்களுக்கு அருட்கடாட்சம் வழங்குகிறார் திருவேங்கடவன். அக்காலத்திய மன்னர்கள் ஏராளமான பொன் நகைகளை வேங்கடவனுக்கு அள்ளித் தந்துள்ளனர். அதையடுத்து பத்மாவதி தாயாரின் திரவுருவம் பதித்த தங்கப் பதக்கத்தை ராமானுஜர் செய்து, ஏழுமலையானின் கழுத்தில் அணிவித்ததாக வேங்கடேச இதிகாச மாலை கூறுகிறது.

    இதே அமைப்பில் இன்னொரு ஏழுமலையான் சிலையை உருவாக்குவது என்பது இயலாத காரியம். திருமலை தேவஸ்தானம் சார்பில் உருவாகும் கிளை ஆலயங்களில் இத்தகைய சிலையை நிறுவது இயலாது. திருப்பதியில் உள்ள வெங்கடாஜலபதி சிலைபோல் உருவாக்கப்பட்டாலும் அளவு குறைவாகவே சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. குமரிமுனையில் உள்ள திருப்பதி வெங்கடாஜலபதி 7 1/2 அடி உயரத்தில் உருவாக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
    இறைவன் பக்தர்களிடம் கேட்பது பணம், பொருள் என்றல்ல. ஏழை எளியவர்களின் தலைமுடி காணிக்கையையும் அவன் மகிழ்வோடு பெற்றுக்கொள்கிறான்.
    திருப்பதிக்குச் செல்பவர்கள் தவறாமல் வேங்கடவனுக்குக் காணிக்கை செலுத்தத் தவறுவதில்லை. பணமும், நகைகளும் இறைவனுக்கு அள்ளித் தருகிறார்கள். இதன்மூலம் அவனது அருட்கடாட்சத்தைப் பெறுகிறார்கள். இதனினும் முக்கியமானது தலைமுடி காணிக்கை. இறைவன் பக்தர்களிடம் கேட்பது பணம், பொருள் என்றல்ல. ஏழை எளியவர்களின் தலைமுடி காணிக்கையையும் அவன் மகிழ்வோடு பெற்றுக்கொள்கிறான். இறைவனுக்கு பக்தர்கள் சமர்ப்பிப்பது தலைமுடி காணிக்கை.

    தங்களது கவலை, தொல்லை, துன்பம், துயரம், இப்படி வேதனைகளை எல்லாம் அவனிடம் சமர்ப்பித்து விட்டு தங்களை மகிழ்ச்சிப்படுத்திக் கொள்ளும் ஒரு நேர்த்திக் கடனே தலைமுடி காணிக்கை. இக்காணிக்கையை பக்தர்கள் கல்யாணக்கட்டம் என்ற இடத்தில் சமர்ப்பிக்கிறார்கள். கன்னியாகுமரி திருப்பதி ஆலயத்தில் இதற்கென இட வசதி செய்யப்பட்டுள்ளது.
    முக்கடல் சங்கமிக்கும் புண்ணிய பூமியான கன்னியாகுமரியில் விவேகானந்த கேந்திரம் அமைந்துள்ள வளாகத்தில் திருப்பதி ஏழுமலையானுக்காக தனி ஆலயம் கட்டப்பட்டுள்ளது.
    திருப்பதி சென்று வந்தால் திருப்பம் வரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதனால்தான் திருப்பதி வெங்கடாஜலபதியைத் தரிசனம் செய்ய தினம், தினம் லட்சக்கணக்கான பக்தர்கள் படையெடுத்தப்படி உள்ளனர்.

    திருப்பதி ஏழுமலையானை நினைத்தவுடன் சென்று, பார்த்து தரிசனம் செய்து விட இயலாது. ஏழுலையான் எப்போது நம்மை அழைக்கிறாரோ, அப்போதுதான் திருப்பதிக்கு சென்று அவரை தரிசனம் செய்ய முடியும் என்று சொல்வார்கள்.

    ஒரு தடவை திருப்பதிக்கு சென்றாலே போதும், மனம் இனம் புரியாத வகையில் ஆனந்தமும், அமைதியும் அடையும். நீண்ட வரிசையில், மணிக்கணக்கில் கால் கடுக்க நின்று கடும் நெரிசல்களுக்கு மத்தியில் “கோவிந்தா.... கோவிந்தா...” என்று உள்ளம் உருக முன் மண்டபத்துக்குள் நுழைந்த அடுத்த ஓரிரு நிமிடங்களில் நம்மை வெளியில் கொண்டு வந்து விடுவார்கள்.

    அழகாக, ஆஜானுபாகுவாக நின்று அருள்பாலிக்கும் ஏழுமலை சில வினாடிகளே கண்குளிர்பாலித்து தரிசிக்க முடியும். சில சமயம் ஓரிரு நிமிடங்கள் ஏழுமலையானை நிதானமாக பார்த்து நம் கோரிக்கைகளை முன் வைத்து விட முடியும். அந்த நேரத்தில் நமக்கு கிடைக்கும் ஆனந்தத்துக்கு அளவே இருக்காது.

    இந்த ஆனந்தத்தை அனுபவிக்கவும், இந்த பிறவியில் எல்லா செல்வங்கள் பெற்று வாழவும், மறுபிறவி வேண்டாம் என்ற முக்திக்காகவும்தான் தினந்தோறும் ஏழுமலையானிடம் சரண் அடைய லட்சக்கணக்கான பக்தர்கள் திருப்பதி நோக்கி அலை, அலையாக வந்த வண்ணம் உள்ளனர்.

    சில பக்தர்கள் வாரம் தோறும் ஏழுமலையானை பார்த்து ஆனந்தம் கொள்வார்கள். சில பக்தர்கள் மாதம் தோறும் ஒரு தடவை சென்று ஏழுமலையானை பார்த்து வருவார்கள். சிலர் ஆண்டுக்கு ஒரு தடவை புரட்டாசி மாதம் மட்டும் திருப்பதிக்கு செல்வதை வழக்கத்தில் வைத்துள்ளனர்.



    ஏழுமலையானை குல தெய்வமாக ஏற்றுக் கொண்டுள்ள வியாபாரிகள், தங்களது கடை வருமானத்தில் குறிப்பிட்ட ஒரு தொகையை ஏழுமலையானுக்கு கொடுத்து விடுவதுண்டு. ஏழுமலையானை அவர்கள் தங்கள் கடையின் ஒரு பங்குதாரர் போல கருதி இந்த கைங்கர்யத்தை செய்து வருகிறார்கள். இப்படி திருப்பதி ஏழுமலையானுக்கு பல தரப்பட்ட மக்கள் இருக்கிறார்கள். திருப்பதி ஏழுமலையானை அடிக்கடி தரிசனம் செய்பவர்களில் பெரும் பாலானவர்கள் ஆந்திராவின் தென் பகுதியையும் தமிழ் நாட்டின் வட மாவட்டங்களையும் சேர்ந்தவர்கள்தான். மற்ற பகுதிகளில் உள்ளவர்களுக்கு திருப்பதி ஏழுமலையானை அடிக்கடி பார்த்து தரிசிக்கும் வாய்ப்பு கிடைப்பதில்லை.

    அத்தகைய பக்தர்கள் “எப்போது திருப்பதிக்கு போவோம்?” என்ற ஏக்கத்துடன் இருப்பார்கள். சில பகுதி மக்களுக்கு திருப்பதி ஏழுமலையானை ஆண்டுக்கு ஒரு தடவை தரிசிப்பது கூட இயலாத காரியமாக இருக்கும்.

    அப்படிப்பட்ட மக்களை திருப்பதி ஏழுமலையானே தேடி வந்து, ஓரிடத்தில் நிலை கொண்டு அருள்பாலித்தால் எப்படி இருக்கும்? “ஏழுமலையானே... வந்து விட்டாரா.... இதை விட வாழ்வில் வேறு என்ன பாக்கியம் வேண்டும்” என்று மனம் குதூகலம் கொள்ள, கண்ணீர் மல்க சொல்வார்கள்.

    அப்படி ஒரு ஆன்மிக குதூகலத்தை தமிழ்நாட்டின் தென் மாவட்ட மக்கள் அனுபவிக்க வாய்ப்பு உருவாகி உள்ளது. ஆம் திருப்பதி ஏழுமலையான் தென் தமிழ்நாட்டுக்கு வந்து விட்டார். முக்கடல் சங்கமிக்கும் புண்ணிய பூமியான கன்னியாகுமரியில் விவேகானந்த கேந்திரம் அமைந்துள்ள வளாகத்தில் திருப்பதி ஏழுமலையானுக்காக தனி ஆலயம் கட்டப்பட்டுள்ளது.

    திருப்பதியில் உள்ள வெங்கடாஜலபதி ஆலயத்தில் எத்தகைய ஆகம விதிகள் கடைபிடிக்கப்படுகிறதோ, அவை அனைத்தும் கன்னியாகுமரியில் கட்டப்பட்டுள்ள திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் ஸ்ரீவெங்கடேஸ்வர சுவாமி, ஸ்ரீதேவி-பூதேவி ஆலயத்திலும் கடைபிடிக்கப்படுகிறது.
    திருப்பதி கோவிலின் இடப்புறம் அமைந்துள்ளது சுவாமி புஷ்கரணி தீர்த்தம். இந்த சுவாமி புஷ்கரணியின் வடகரையில்தான் ஆதிவராக சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது.
    திருப்பதி கோவிலின் இடப்புறம் அமைந்துள்ளது இந்த சுவாமி புஷ்கரணி தீர்த்தம் அமைந்துள்ளது. இந்த சுவாமி புஷ்கரணியின் வடகரையில்தான் ஆதிவராக சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது.

    இந்த திருக்குளத்தில் உள்ள தண்ணீர் மிகவும் தெளிந்த நிலையில் அமுதத்திற்கு நிகரான சுவையுடன் அமைந்திருக்கிறது. வேங்கடமலையின் அடர்ந்த மலையிலிருந்து ஓடிவரும் சுனைநீர் அங்குள்ள அற்புதமான மூலிகைகளின்மேல் பட்டு ஓடிவருவதால் இந்நீர் பல மூலிகைகளின் அற்புதங்களைத் தன்னிடத்தே கொண்ட ஓர் அற்புதத் தீர்த்தமாக திகழ்கிறது.

     நோய் தீர்க்கும் தன்மையுள்ள இத்திருக்குளத்தில் நீராடுவதால், சகல பாவங்களும் நீங்குவதன்றி, உடலின் நோய்களும் நீங்கப்பெறும் தன்மையைப் பெறுகின்றன. இத்தகைய அற்புதமான புஷ்கரணி போன்று கன்னியாகுமரி திருப்பதி ஆலயத்திலும் தீர்த்தக்குளம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக சுமார் 60 லட்சம் ரூபாய் செலவிட திட்டமிட்டுள்ளனர். இன்னும் தீர்த்தக்குளம் பணி தொடங்கப்படவில்லை. புஷ்கரணி அமைக்கப்பட்டுவிட்டால் கன்னியாகுமரி திருப்பதி ஆலயத்தின் அழகு மேலும் அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் கார்த்திகை பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் கார்த்திகை பிரம்மோற்சவ விழா நேற்று தொடங்கியது. காலை 8.30 மணியளவில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றம் நடந்தது. முன்னதாக மஞ்சள் நிறத்திலான கொடியில் சிவப்பு நிறத்தில் யானை உருவம் வரையப்பட்ட கொடியை அதிகாரிகள், ஊழியர்கள், பக்தர்கள் நான்கு மாடவீதிகளில் ஊர்வலமாக எடுத்து வந்து, கோவிலுக்குள் கொண்டு சென்றனர்.

    கொடிமரத்துக்கு அர்ச்சகர்கள் ஸ்நாபன திருமஞ்சனம் செய்தனர். கொடியை கயிற்றில் இணைத்து, வேத பண்டிதர்கள் வேத மந்திரங்களை ஓத, பக்தர்கள் பக்தி கோ‌ஷம் முழங்க, பிரதான அர்ச்சகர்கள் கொடிமரத்தில் பிரம்மோற்சவ விழா கொடியை ஏற்றினர். பின்னர் கொடிமரத்துக்கு கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டது.

    அதில் திருமலை-திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் அனில் குமார் சிங்கால், இணை அதிகாரிகள் கே.எஸ்.சீனிவாசராஜு, போலா.பாஸ்கர், தேவஸ்தான முதன்மைப் பாதுகாப்பு அதிகாரி கோபிநாத்ஜாட்டி, கூடுதல் பாதுகாப்பு அதிகாரி சிவக்குமார்ரெட்டி, உதவி அதிகாரி சுப்பிரமணியம், சூப்பிரண்டுகள் மல்லீஸ்வரி, குமார், கோபாலகிரு‌ஷ்ணா, உதவி பறக்கும்படை அதிகாரி நந்தீஸ்வரராவ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    அதைத்தொடர்ந்து மாலை 6 மணியில் இருந்து இரவு 7 மணி வரை ஆஸ்தான மண்டபத்தில் ஊஞ்சல் சேவை, இரவு 7 மணியில் இருந்து 8 மணிவரை சிறிய சே‌ஷ வாகனத்தில் உற்சவர் பத்மாவதி தாயார் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இரவு 10 மணிக்கு ஏகாந்த சேவை நடந்தது.
    ×