search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94493"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று தொடங்கியது.
    • நமது பயணத்தையும், உயரத்தையும் நிர்ணயம் செய்து தீர்மானம் எடுக்க வேண்டிய நேரம் இதுவாகும்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. இந்த கூட்டத்தில் பங்கேற்க வந்த பிரதமர் நரேந்திர மோடி பாராளுமன்ற வளாகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    இந்த காலக்கட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. சுதந்திர தின விழாவை கொண்டாடும் காலம் இதுவாகும். இந்த ஆகஸ்டு 15-ந் தேதி முக்கியத்துவம் வாய்ந்த நாள். அடுத்த 25 ஆண்டுகளில் நூற்றாண்டு சுதந்திர தின விழாவை கொண்டாட உள்ளோம்.

    நமது பயணத்தையும், உயரத்தையும் நிர்ணயம் செய்து தீர்மானம் எடுக்க வேண்டிய நேரம் இதுவாகும்.

    பாராளுமன்றத்தில் அனைத்து எம்.பி.க்களும் வெளிப்படையாக பேச வேண்டும். தேவைப்பட்டால் விவாதங்கள் நடத்த வேண்டும். அனைத்து எம்.பி.க்களும் சிந்தித்து விவாதங்களை மேற்கொண்டு முடிந்தவரை பயனுள்ளதாக மாற்ற வேண்டும்.

    ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் நடைபெறுவதால் இந்த கூட்டத் தொடர் முக்கியத்துவம் வாய்ந்தது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது.
    • ஜனாதிபதி தேர்தல் முடிவு 21-ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 18-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 12-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தக் கூட்டத் தொடரில் பல்வேறு மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

    மேலும், 17 நாட்கள் நடக்கும் இந்தக் கூட்டத்தின்போது ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது.

    இந்நிலையில், மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இந்தக் கூட்டத்தொடரில் அக்னிபத், மகாராஷ்டிரா அரசியல் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இதனால் பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் அனல் பறக்கும் என தெரிகிறது.

    • பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது.
    • இத்தொடரில் ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி தேர்தலும் நடைபெறுகிறது.

    புதுடெல்ல்லி:

    பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று தொடங்கி ஆகஸ்ட் 12-ம் தேதி வரை நடக்க உள்ளது.

    ஜனாதிபதி தேர்தலுடன் இந்தக் கூட்டத் தொடர் தொடங்குகிறது. ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க. சார்பில் திரவுபதி முர்மு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். எதிர்க்கட்சிகள் சார்பில் முன்னாள் மத்திய மந்திரி யஷ்வந்த் சின்ஹா வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.

    இந்நிலையில், மழைக்கால கூட்டத் தொடரை சுமூகமாக நடத்துவது குறித்து மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா நேற்று அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்தினார்.

    பாராளுமன்ற வளாகத்தில் நடந்த இக்கூட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளின் பாராளுமன்ற குழு தலைவர்கள் பங்கேற்றனர். அப்போது, கூட்டத் தொடரை சுமூகமாக நடத்துவதற்கு ஒத்துழைக்கும்படியும், பிரச்சினைகளை விவாதித்து முடிவு செய்யலாம் என வலியுறுத்தப்பட்டது.

    இதுதொடர்பாக, காங்கிரஸ் பாராளுமன்ற குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறுகையில், அக்னிபத், வேலைவாய்ப்பின்மை, விவசாயிகள் பிரச்சினை உள்ளிட்டவை குறித்து விரிவான விவாதம் நடத்த வேண்டும் என வலியுறுத்தினோம் என தெரிவித்தார்.

    • பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை மறுநாள் தொடங்குகிறது.
    • அன்றைய தினமே ஜனாதிபதி தேர்தலும் நடைபெற உள்ளது.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 18-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 12-ம் தேதி வரை நடைபெறுகிறது.

    இந்தக் கூட்டத் தொடரில் பல்வேறு மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதேவேளையில், அக்னிபத், மகாராஷ்டிரா அரசியல் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இதனால் பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் அனல் பறக்கும் எனத் தெரிகிறது. மேலும், 17 நாட்கள் நடக்கும் இந்தக் கூட்டத்தின்போது ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது.

    இதற்கிடையே, நாளை நடைபெற உள்ள அனைத்துக் கட்சி கூட்டத்துக்கும் வரும்படி மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. கூட்டத் தொடரை சுமூகமாக நடத்த அனைத்துக் கட்சிகளின் ஆதரவை பெறுவதே இந்தக் கூட்டத்தின் நோக்கமாகக் கருதப்படுகிறது.

    இந்நிலையில், எதிர்க்கட்சிகள் சார்பில் நாளை ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இதில் மழைக்கால கூட்டத்தொடர், துணை ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்படலாம் என தெரிகிறது.

    • பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் 18-ந்தேதி தொடங்கி ஆகஸ்டு 12-ந்தேதி முடிவடைகிறது.
    • சமையல் கியாஸ் விலை உயர்வு பிரச்சினையை எழுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.

    புதுடெல்லி :

    பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர், வருகிற 18-ந் தேதி தொடங்குகிறது. அடுத்த மாதம் 12-ந்தேதி முடிவடைகிறது.

    இந்நிலையில், இந்த தொடரில் பின்பற்ற வேண்டிய வியூகத்தை வகுப்பது தொடர்பாக ஆலோசிக்க பாராளுமன்ற காங்கிரஸ் வியூகம் வகுக்கும் குழுவின் கூட்டம் நேற்று டெல்லியில் நடந்தது. காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி தலைமை தாங்கினார். கட்சியின் மூத்த தலைவர்களான மல்லிகார்ஜுன கார்கே, ப.சிதம்பரம், ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, ஜெய்ராம் ரமேஷ், கே.சுரேஷ், மாணிக்கம் தாகூர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    வெளிநாடு சென்றுள்ளதால், ராகுல்காந்தி பங்கேற்கவில்லை. பாராளுமன்ற கூட்டத்தொடரில் என்னென்ன பிரச்சினைகளை எழுப்புவது என்று ஆலோசித்து முடிவு செய்யப்பட்டது. சுமார் ஒரு மணி நேரம் கூட்டம் நடந்தது. கூட்டம் முடிந்த பிறகு, மல்லிகார்ஜுன கார்கே நிருபர்களிடம் கூறுகையில், ''சாதாரண மக்களை பாதிக்கும் சமையல் கியாஸ் விலை உயர்வு, இதர பொருட்களின் விலைவாசி உயர்வு ஆகிய பிரச்சினைகளை எழுப்ப உயர் முன்னுரிமை அளிப்போம். ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பதற்கான 'அக்னிபாத்' திட்டம் பற்றியும் பிரச்சினை எழுப்புவோம்'' என்றார்.

    மேலும், வேலையில்லா திண்டாட்டம், ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, பொருளாதார நிலவரம் ஆகிய பிரச்சினைகளையும் எழுப்ப காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது. கிழக்கு லடாக்கில் சீனப்படைகளின் ஊடுருவல் குறித்து விவாதம் நடத்துமாறு காங்கிரஸ் கேட்டுக்கொள்ளும் என்று தெரிகிறது.

    வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்க குழு அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை எழுப்பி, சம்யுக்த கிசான் மோர்ச்சா போராட்டம் அறிவித்துள்ளது. அந்த கோரிக்கைகளுக்கு மத்திய அரசு பதில் அளிக்குமாறு காங்கிரஸ் கேட்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • பல்வேறு வார்த்தைகள் பாராளுமன்றத்தில் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகள் என கூறப்பட்டிருந்தது
    • எதிர்க்கட்சியினர் சரியாக படித்திருந்தால் தவறான கருத்தை பரப்பியிருக்க மாட்டார்கள் என சபாநாயகர் தகவல்

    புதுடெல்லி:

    பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வருகிற 18-ந்தேதி தொடங்க உள்ள நிலையில் மக்களவையிலும், மாநிலங்களவையிலும் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகள் அடங்கிய புத்தகத்தை மக்களவை செயலகம் வெளியிட்டுள்ளது.

    அதில், வெட்கக்கேடு, திட்டினார், துரோகம் செய்தார், ஊழல், ஒட்டுகேட்பு ஊழல், கொரோனா பரப்புபவர், வாய்ஜாலம் காட்டுபவர், நாடகம், கபட நாடகம், திறமையற்றவர், அராஜகவாதி, சகுனி, சர்வாதிகாரம், சர்வாதிகாரி, அழிவு சக்தி, காலிஸ்தானி, முட்டாள்தனம், குரூரமானவர், கிரிமினல், ரவுடித்தனம் உள்ளிட்ட பல்வேறு வார்த்தைகள் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகள் என கூறப்பட்டிருந்தது. கிட்டத்தட்ட கடுமையாக விமர்சிப்பதற்கு பயன்படுத்தும் அனைத்து வார்த்தைகளும் இதில் சேர்க்கப்பட்டிருந்தன. இந்த வார்த்தைகளை பேசினால் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இதற்கு எதிர்க்கட்சிகளிடம் இருந்து கடும் விமர்சனம் எழுந்தது. பாஜக எவ்வாறு இந்தியாவை அழிக்கிறது என்பதை விவரிக்க பயன்படுத்தும் ஒவ்வொரு வார்த்தையையும் பாராளுமன்றத்தில் பயன்படுத்தக் கூடாதவை என பட்டியலிட்டு தடை செய்திருப்பதாக குற்றம்சாட்டின. இந்த விவகாரம் குறித்து சமூக வலைத்தளங்களிலும் எதிர்க்கட்சியினர் தாறுமாறாக விமர்சனங்களை முன்வைத்தனர்.

    இந்நிலையில், பாராளுமன்றத்தில் பயன்படுத்தக் கூடாத வார்த்தைகள் தொடர்பாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா விளக்கம் அளித்தார். அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்ட வார்த்தைகளின் தொகுப்பை மட்டுமே வெளியிட்டிருப்பதாகவும், எந்த வார்த்தைகளும் தடை செய்யப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

    "இதற்கு முன்பும் இதுபோன்ற அன்பார்லிமென்டரி வார்த்தைகள் அடங்கிய புத்தகம் வெளியிடப்பட்டது. காகிதங்கள் வீணாகாமல் இருக்க இப்போது அதை இணையத்தில் வெளியிட்டோம். எந்த வார்த்தைகளும் தடை செய்யப்படவில்லை. நீக்கப்பட்ட சொற்களின் தொகுப்பை வெளியிட்டுள்ளோம். இது வழக்கமான நடைமுறைதான்.

    1100 பக்கங்கள் கொண்ட இந்த அகராதியை அவர்கள் (எதிர்க்கட்சியினர்) படித்திருப்பார்களா? படித்திருந்தால் இப்படி தவறான கருத்தை பரப்பியிருக்க மாட்டார்கள். இதற்கு முன்னர் 1954, 1986, 1992, 1999, 2004, 2009, 2010 ஆகிய ஆண்டுகளில் வெளியிடப்பட்டது. 2010இல் இருந்து ஆண்டுதோறும் வெளியிடப்படுகிறது.

    உறுப்பினர்கள் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்த சுதந்திரம் உள்ளது. அதே நேரத்தில் அவையின் கண்ணியத்தை பாதுகாக்க வேண்டும். நீக்கப்பட்டிருக்கும் வார்த்தைகள் அனைத்தும் எதிர்க்கட்சிகள் மற்றும் ஆளுங்கட்சியால் பாராளுமன்றத்தில் பேசப்பட்ட மற்றும் பயன்படுத்தப்பட்ட வார்த்தைகள். எதிர்க்கட்சிகள் பயன்படுத்தும் வார்த்தைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து நீக்குவது கிடையாது" என்றார் சபாநாயகர் ஓம் பிர்லா.

    • பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வருகிற 18-ந்தேதி தொடங்குகிறது.
    • இந்த வார்த்தைகளை பயன்படுத்தினால் சபை தலைவர்கள் சபை குறிப்பில் இருந்து நீக்கிவிடுவார்கள்.

    புதுடெல்லி :

    பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வருகிற 18-ந்தேதி தொடங்குகிறது. இந்தநிலையில் மக்களவையிலும், மாநிலங்களவையிலும் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகள் அடங்கிய புத்தகத்தை மக்களவை செயலகம் வெளியிட்டுள்ளது. அதில் ஆங்கில வார்த்தைகளும், இந்தி வார்த்தைகளும் அதிக அளவில் இடம்பெற்றுள்ளன.

    வெட்கக்கேடு, திட்டினார், துரோகம் செய்தார், ஊழல், ஒட்டுகேட்பு ஊழல், கொரோனா பரப்புபவர், வாய்ஜாலம் காட்டுபவர், நாடகம், கபட நாடகம், திறமையற்றவர், அராஜகவாதி, சகுனி, சர்வாதிகாரம், சர்வாதிகாரி, அழிவு சக்தி, காலிஸ்தானி ஆகிய வார்த்தைகள் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகளாக சேர்க்கப்பட்டுள்ளன.

    இரட்டை வேடம், பயனற்றது, நாடகம், ரத்தக்களரி, குரூரமானவர், ஏமாற்றினார், குழந்தைத்தனம், கோழை, கிரிமினல், முதலை கண்ணீர், அவமானம், கழுதை, கண்துடைப்பு, ரவுடித்தனம், போலித்தனம், தவறாக வழிநடத்துதல், பொய், உண்மையல்ல ஆகிய வார்த்தைகளும் இனிமேல் தடை செய்யப்படுகின்றன.

    முட்டாள்தனம், பாலியல் தொல்லை, குண்டர்கள், லாலிபாப், பாப்கட் ஆகிய வார்த்தைகளும் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகள் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

    இவற்றை பயன்படுத்தினால் சபை தலைவர்கள், சபை குறிப்பில் இருந்து நீக்கிவிடுவார்கள்.

    • பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 18-ம் தேதி தொடங்க உள்ளது.
    • ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் 21-ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 18-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 12-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தக் கூட்டத் தொடரில் பல்வேறு மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

    அதேவேளையில், அக்னிபத், மகாராஷ்டிரா அரசியல் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இதனால் பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் அனல் பறக்கும் எனத் தெரிகிறது.

    மேலும், 17 நாட்கள் நடக்கும் இந்தக் கூட்டத்தின்போது ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது.

    இந்நிலையில், வரும் 17ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்துக்கும் வரும் படி மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. கூட்டத்தொடரை சுமூகமாக நடத்த அனைத்துக் கட்சிகளின் ஆதரவை பெறுவதே இந்தக் கூட்டத்தின் நோக்கமாகக் கருதப்படுகிறது.

    • பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 18-ம் தேதி தொடங்க உள்ளது.
    • ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் 21ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 18-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 12-ம் தேதி வரை நடைபெறுகிறது.

    மழைக்கால கூட்டத்தொடரில் பல்வேறு மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதேவேளையில், அக்னிபத், மகாராஷ்டிரா அரசியல் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளது.

    இதனால், பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் அனல் பறக்கும் எனத்தெரிகிறது.

    மேலும், 17 நாட்கள் நடக்கும் இந்தக் கூட்டத்தின்போது ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது.

    தமிழகத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்ட எம்.எம். அப்துல்லா, கனிமொழி ஆகியோர் இன்று பதவி ஏற்றுக் கொண்டனர்.
    அ.தி.மு.க.வைச் சேர்ந்த முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோர் மாநிலங்களவை எம்.பி.யாக இருந்தனர். தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு இருவரும் வெற்றி பெற்றார்கள். இதனால் தங்களது மாநிலங்களவை எம்.பி. பதவியை ராஜினாமா செய்தனர். அந்த பதவிக்கு தி.மு.க. சார்பில் கனிமொழி, கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் போட்டியிட்டு, இவரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    2019 ஜூலையில் அ.தி.மு.க. சார்பில் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்ட அ. முகமது ஜான் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த மார்ச் 23-ம் தேதி காலமானார். இதனால் அவர் வகித்த மாநிலங்களவை உறுப்பினர் பதவி காலியானது. காலியாக இருந்த மாநிலங்களவை இடத்துக்குத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. தமிழக சட்டப்பேரவையில் பெரும்பான்மை பலத்துடன் உள்ள தி.மு.க. சார்பில் எம்.எம். அப்துல்லா வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இவரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    இந்த நிலையில் இன்று பாராளுமன்றம் குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும் எம்.எம். அப்துல்லா, கனிமொழி ஆகியோர் மாநிலங்களவை எம்.பி.யாக பதவி ஏற்றுக்கொண்டனர்.

    குளிர்கால கூட்டத்தொடர் பயனுள்ளதாக அமைய வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
    இந்திய பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன் பிரதமர் மோடி பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    1. இந்த குளிர்கால கூட்டத்தொடர் மிக முக்கியமானது.

    2. நாட்டின் வளர்ச்சிக்கு புதிய பாதை உருவாக்க வேணடும்.

    3. அனைத்து விவகாரங்கள் குறித்து விவாதிக்கவும், பதில் அளிக்கவும் அரசு தயாராக உள்ளது.

    4. குளிர்கால கூட்டத்தொடர் பயனுள்ளதாக அமைய வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர்.

    5. புதிய வகை ஒமிக்ரான் கொரோனா பரவிவரும் நிலையில் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

    இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.
    பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது உறுதி என்று தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறி உள்ளார். #TamilisaiSoundararajan #Parliamentelection
    சென்னை:

    அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வுக்கு 7 தொகுதிகளும், ஒரு மேல் சபை தொகுதியும், பா.ஜனதாவுக்கு 5 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.

    அ.தி.மு.க. கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இடம்பெறும் என்று கூறி வருகிறார்கள். தே.மு.தி.க., புதிய தமிழகம் போன்ற கட்சிகள் இடம்பெறலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இந்த கூட்டணியில் இன்னும் இணையும் கட்சிகள் எவை என்பது உறுதி செய்யப்படவில்லை.

    கூட்டணி கட்சிகள் குறித்து இறுதி முடிவு எடுக்கப்பட்டபிறகு எந்த கட்சிக்கு எந்தெந்த தொகுதி என்பது உறுதி செய்யப்படும். அ.தி.மு.க., பா.ம.க, பா.ஜனதா கட்சிகள் எந்த தொகுதியில் போட்டியிடலாம் என்பது குறித்து ஆலோசித்து வருகின்றன.

    தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவார். தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் அவர் போட்டியிட வாய்ப்பு உள்ளது என்று தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து கேட்டபோது அவர் கூறியதாவது:-

    எங்களுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. எந்தெந்த இடங்களில் போட்டியிடலாம் என்பது குறித்து ஆலோசித்து வருகிறோம். அது முடிவு செய்யப்பட்ட பிறகு அதில் ஒரு தொகுதியில் நான் போட்டியிடுவேன்.

    அதுகுறித்து முடிவு செய்யப்பட்டபிறகு முறையான அறிவிப்பு வெளியிடப்படும். எங்கள் கூட்டணியில் தே.மு.தி.க., புதிய தமிழகம் இடம்பெற வாய்ப்பு உள்ளது.

    பா.ஜனதாவுக்கு எதிராக தி.மு.க.வினர் மதவாத, இனவாத அரசியலை தூண்டி விடுகிறார்கள். அவர்கள் எங்களுக்கு எதிராக இதுபோன்று பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பா.ஜனதா கன்னியாகுமரி, கோவை, நீலகிரி, சிவகங்கை, தூத்துக்குடி அல்லது தென்சென்னை ஆகிய தொகுதிகளில் போட்டியிட விரும்புகிறது.



    இவற்றில் பா.ஜனதாவுக்கு தூத்துக்குடி ஒதுக்கப்படுமா? தென்சென்னை ஒதுக்கப்படுமா? என்பது உறுதி செய்யப்படவில்லை. எனவே தமிழிசை சவுந்தரராஜன் இந்த தொகுதிகளில் ஒன்றில் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக பா.ஜனதா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. #TamilisaiSoundararajan #Parliamentelection
    ×