search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94493"

    • புதிய பாராளுமன்ற கட்டிடத்தை ஜனாதிபதிதான் திறந்து வைக்க வேண்டும், பிரதமர் மோடி திறக்கக்கூடாது என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.
    • மோடியை பொறுத்தவரை, சுய கவுரவம், கேமரா ஆகியவற்றின் மீதான ஆர்வத்தால், நாகரிகத்தையும், விதிமுறைகளையும் புறம் தள்ளுகிறார்.

    புதுடெல்லி:

    தற்போதைய பாராளுமன்ற கட்டிடம் 96 ஆண்டுகள் பழமையானது. எனவே, அதற்கு பதிலாக புதிய பாராளுமன்றம் கட்ட மத்திய அரசு முடிவு செய்தது.

    கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் 10-ந்தேதி, புதிய பாராளுமன்ற கட்டிடம் கட்ட பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். மத்திய பொதுப்பணித்துறை மேற்பார்வையில், டாடா புராஜக்ட்ஸ் நிறுவனம், கட்டுமான பணியை மேற்கொண்டது.

    சுமார் 2 ஆண்டுகளில் புதிய பாராளுமன்ற கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

    மக்களவையில் 888 உறுப்பினர்களும், மாநிலங்களவையில் 300 உறுப்பினர்களும் தாராளமாக அமரும் வகையில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது.

    பாராளுமன்ற கூட்டு கூட்டம் நடக்கும்போது, மக்களவையில் 1,280 உறுப்பினர்கள்வரை அமரலாம்.

    கட்டுமான பணி முடிந்தநிலையில், புதிய பாராளுமன்ற கட்டிடம், வருகிற 28-ந்தேதி திறக்கப்படுகிறது. அதை திறந்து வைக்குமாறு பிரதமர் மோடிக்கு மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா அழைப்பு விடுத்தார். அதை ஏற்று, பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.

    இந்நிலையில், பிரதமர் மோடி திறக்க காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் தனது 'டுவிட்டர்' பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கக்கூடாது. ஜனாதிபதிதான் திறந்து வைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    திறப்பு விழா தேதியான மே 28-ந் தேதி, சுதந்திர போராட்ட வீரர் சாவர்க்கரின் பிறந்தநாள் ஆகும். அந்த தேதியை தேர்ந்தெடுத்ததற்கும் எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

    ''இது, தேசத்தின் முன்னோர்களுக்கு இழைக்கப்படும் அவமானம்'' என்று காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.

    புதிய பாராளுமன்ற கட்டிடத்தை பிரதமர் திறப்பதற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி பொதுச்செயலாளர் டி.ராஜாவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-

    நாட்டின் நிர்வாக பிரிவின் தலைவராக பிரதமர் இருக்கிறார். பாராளுமன்றமோ, சட்டம் இயற்றும் பிரிவாக உள்ளது. எனவே, நாட்டின் தலைவர் என்ற முறையில், ஜனாதிபதி திரவுபதி முர்மு அதை திறந்து வைப்பதுதான் உகந்ததாக இருக்கும்.

    மோடியை பொறுத்தவரை, சுய கவுரவம், கேமரா ஆகியவற்றின் மீதான ஆர்வத்தால், நாகரிகத்தையும், விதிமுறைகளையும் புறம் தள்ளுகிறார்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ராஷ்டிரீய ஜனதாதள மூத்த தலைவர் மனோஜ்குமார் ஜா, ''புதிய பாராளுமன்ற கட்டிடத்தை ஜனாதிபதி திறக்கக்கூடாதா?'' என்று கேட்டுள்ளார்.

    அகில இந்திய மஜ்லிஸ் கட்சி தலைவர் அசாதுதின் ஒவைசி எம்.பி. தனது 'டுவிட்டர்' பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    புதிய கட்டிடத்தை பிரதமர் ஏன் திறக்க வேண்டும்? அவர் நிர்வாக அமைப்பின் தலைவர். சட்டம் இயற்றும் அமைப்பின் தலைவர் அல்ல. மக்களவை சபாநாயகரோ, மாநிலங்களவை தலைவரோ கூட திறந்து வைக்கலாம்.

    அது மக்கள் பணத்தால் கட்டப்பட்டது. பிரதமர் ஏன் தன்னுடைய நண்பர்களின் சொந்த பணத்தால் கட்டப்பட்டதுபோல் நடந்து கொள்கிறார்?

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    காங்கிரஸ் மூத்த தலைவர் ஆனந்த் சர்மாவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

    • பாராளுமன்ற புதிய கட்டிடத்தின் பணிகள் இறுதி கட்டத்தை எட்டி உள்ளன.
    • பாராளுமன்ற புதிய கட்டிடம் வருகிற 28-ந்தேதி திறக்கப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் இன்று தெரிவித்தன.

    புதுடெல்லி:

    தற்போதுள்ள பாராளுமன்ற கட்டிடம் 100 ஆண்டுகள் பழமையானது. எனவே அதற்கு பதிலாக சென்டிரல் விஸ்டா என்ற பெயரில் புதிய கட்டிடம் கட்டுவதற்கு மத்திய அரசு முடிவு செய்தது.

    இதற்காக கடந்த 2020-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். ராஜபாதை (கடமைப் பாதை) சீரமைப்பு பொதுவான மத்திய செயலகம், பிரதமருக்கான புதிய இல்லம் மற்றும் அலுவலகம், துணை ஜனாதிபதிக்கான புதிய மாளிகை ஆகிய புதிய கட்டுமானங்களின் ஓர் அங்கமாக பாராளுமன்றம் கட்டப்பட்டு வருகிறது.

    டாடா புராஜக்ட்ஸ் நிறுவனம் புதிய பாராளுமன்ற கட்டிடத்தை கட்டி வருகிறது.

    பாராளுமன்ற புதிய கட்டிடத்தின் பணிகள் இறுதி கட்டத்தை எட்டி உள்ளன.

    இந்த நிலையில் பாராளுமன்ற புதிய கட்டிடம் வருகிற 28-ந்தேதி திறக்கப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் இன்று தெரிவித்தன. பாராளுமன்ற புதிய கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.

    • மாநிலங்களவை 24 சதவீத நேரம் இயங்கி உள்ளது.
    • மக்களவையில் 8 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

    புதுடெல்லி :

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு நேற்று முடிவடைந்த நிலையில், 2-வது அமர்வின் செயல்பாடு எப்படி இருந்தது என்பது குறித்து ஒரு சிந்தனை அமைப்பு ஆய்வு செய்து தகவல்களை வெளியிட்டுள்ளது.

    அதன்படி, மக்களவை, நிர்ணயிக்கப்பட்ட கால அளவான 133 மணி நேரத்துக்கு பதிலாக, வெறும் 45 மணி நேரம்தான் செயல்பட்டது. மாநிலங்களவை 130 மணி நேரத்துக்கு பதிலாக 31 மணி நேரம்தான் இயங்கியது.

    அதாவது, மக்களவை 34.28 சதவீத நேரமும், மாநிலங்களவை 24 சதவீத நேரமும் இயங்கி உள்ளது.

    இரு அவைகளிலும் அடிக்கடி கேள்வி நேரம் ஒத்திவைக்கப்பட்டது. மக்களவையில் வெறும் 4 மணி 32 நிமிடங்களும், மாநிலங்களவையில் 1 மணி 55 நிமிடங்களும் மட்டும் கேள்வி நேரம் நடந்தது.

    மத்திய பட்ஜெட் மீது மக்களவையில் 14 மணி 45 நிமிடங்கள் விவாதம் நடந்துள்ளது. 145 எம்.பி.க்கள் அதில் பங்கேற்றனர். ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது 13 மணி 44 நிமிட நேரம் விவாதம் நடந்துள்ளது. 143 எம்.பி.க்கள் பங்கேற்றுள்ளனர்.

    மக்களவையில் 8 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றில் 6 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. 29 கேள்விகளுக்கு வாய்மொழியாக பதில் அளிக்கப்பட்டது.

    • அதானி விவகாரத்தை எழுப்பி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கமிட்டனர்.
    • எதிர்க்கட்சிகளின் அமளியால் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் பணிகள் முடங்கின.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு கடந்த மாதம் 13-ம் தேதி தொடங்கியது. அதானி விவகாரம், ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற விவகாரம் மற்றும் ராகுல்காந்தி எம்.பி. பதவி பறிப்பு விவகாரம் ஆகியவற்றால் இரு அவைகளிலும் பணிகள் முடங்கின.

    அதானி விவகாரம் தொடர்பாக பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வலியுறுத்தி காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து முழக்கம் எழுப்பினர். இதேபோல் இந்திய ஜனநாயகம் குறித்து லண்டனில் பேசியதற்கு ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என பா.ஜ.க. உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

    இதற்கிடையே, பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று மக்களவை காலையில் கூடியது. அப்போது அதானி விவகாரத்தை எழுப்பி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கமிட்டனர். இதனால் அமளி நீடித்ததால் மக்களவை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. இதேபோல் மாநிலங்களவையும் மதியம் 2 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது.

    இந்நிலையில், காலை அமர்வின் ஒத்திவைப்புக்குப் பிறகு மதியம் 2 மணிக்கு மாநிலங்களவை கூடியது.

    சபை நடவடிக்கைகளை படமாக்கியதற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்ட காங்கிரஸ் எம்.பி. ரஜனி அசோக்ராவ் பாட்டீல் விவகாரம் சட்ட நடவடிக்கை குழு பரிந்துரைகளின் அடிப்படையில் பட்ஜெட் கூட்டத் தொடருக்கு அப்பால் நீட்டிக்கப்பட்டுள்ளது என அவைத்தலைவர் ஜகதீப் தன்கர் தெரிவித்தார்.

    தி.மு.க.வின் திருச்சி சிவ, காங்கிரசின் சக்திசிங் கோஹில் ஆகியோர் காந்தியின் அறிக்கையை மாநிலங்களவையில் விவாதிக்கும் எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவின் ஆட்சேபணையை நிராகரிக்கும் தன்கரின் முடிவின் தாக்கங்கள் குறித்து விவாதிக்க முயன்றனர். ஆனாலும் அவர் தனது முடிவில் உறுதியாக இருந்தார்.

    இடைநீக்கம் விவகாரத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புக்கு இடையே அவைத்தலைவர் தன்கர் மாநிலங்களவையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.

    பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் அமர்வு எதிர்க்கட்சிகள் மற்றும் ஆளும் கட்சிகளின் அமளி காரணமாக முற்றிலும் முடங்கியது.

    • ராகுல் காந்திக்காக பாராளுமன்றத்தை நடத்த விடாமல் இடையூறு செய்தனர்.
    • கருப்பு உடை அணிந்து மீண்டும் பாராளுமன்றத்தை அவமதித்ததாக குற்றச்சாட்டு

    புதுடெல்லி:

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள்  ஒற்றுமையை வெளிப்படுத்தின. பாஜக மற்றும் மத்திய அரசுக்கு எதிராக பாராளுமன்றத்தில் ஒன்றிணைந்து குரல் கொடுத்தன. கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு மார்ச் 13ஆம் தேதி தொடங்கியதில் இருந்தே கூட்டாக போராட்டங்களை நடத்தினர். அதானி விவகாரம் தொடர்பாக பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்தவேண்டும் என எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர்.

    இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாஜக எம்.பி.க்கள் எதிர்முழக்கங்கள் எழுப்பினர். அதாவது, லண்டனில் இந்திய பாராளுமன்றம் குறித்து பேசியதற்கு ராகுல் காந்தி மன்னிப்பு கேட்கவேண்டும் என்ற கோரிக்கையில் பாஜக உறுதியாக இருந்தது. இரு தரப்பினரும் மாறி மாறி முழக்கங்கள் எழுப்பி அமளியில் ஈடுபட்டதால் பாராளுமன்ற இரு அவைகளிலும் பணிகள் முடங்கின. கடைசி நாளான இன்றும் மக்களவையில் எந்த பணியும் நடக்காமல் தேதி குறிப்பிடப்படாமல் அவை ஒத்திவைக்கப்பட்டது.

    பாராளுமன்ற முடக்கம் குறித்து மத்திய சட்டத்துறை மந்திரி கிரண் ரிஜிஜு கூறியதாவது:-

    ராகுல் காந்திக்காக காங்கிரஸ் மற்றும் அவர்களின் கூட்டணி கட்சியினர் பாராளுமன்றத்தை நடத்த விடாமல் இடையூறு செய்தனர். கடைசி நாளிலும் அவையை சீர்குலைத்தனர். கருப்பு உடை அணிந்து மீண்டும் பாராளுமன்றத்தை அவமதித்தனர்.

    பாராளுமன்றத்தின் கண்ணியம் காக்கப்பட வேண்டும். ஒரு எம்.பி. ராகுல் காந்திக்காக, காங்கிரசும், அவர்களின் ஆதரவாளர்களும் என்ன செய்கிறார்கள் என்பதை நாடே பார்த்துக் கொண்டிருக்கிறது.

    காங்கிரசும் அதன் கும்பல்களும் நீதிமன்றத்திற்கு அழுத்தம் கொடுப்பதற்காக சூரத் நீதிமன்றத்திற்கு எப்படி சென்றார்கள் என்பதை நாம் பார்த்தோம். அவர்கள் ஊர்வலம் நடத்திய விதம் கண்டிக்கத்தக்கது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அதானி விவகாரத்தை எழுப்பி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கமிட்டனர்.
    • மாநிலங்களவை மதியம் 2 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு கடந்த மாதம் 13-ந்தேதி தொடங்கியது. கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்தே, அதானி விவகாரம், ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற விவகாரம் மற்றும் ராகுல்காந்தி எம்.பி. பதவி பறிப்பு விவகாரம் ஆகியவற்றால் பாராளுமன்றத்தின் இரு அவையிலும் பணிகள் முடங்கின.

    அதானி விவகாரம் தொடர்பாக பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வலியுறுத்தி காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து முழக்கம் எழுப்பினர். இதேபோல் இந்திய ஜனநாயகம் குறித்து லண்டனில் பேசியதற்கு ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் பாஜக உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

    இந்நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று மக்களவை காலையில் கூடியது. அப்போது அதானி விவகாரத்தை எழுப்பி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கமிட்டனர். இதனால் அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. அவையை அமைதியாக நடத்துவதற்கு ஒத்துழைக்கும்படி அவைத்தலைவர் கேட்டுக்கொண்டார். எனினும் அமளி நீடித்தது. இதனையடுத்து மக்களவை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.

    இதேபோல் மாநிலங்களவையிலும் அமளி ஏற்பட்டது. இதன் காரணமாக மதியம் 2 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது.

    ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இன்று கருப்பு உடை அணிந்து பாராளுமன்றத்திற்கு வந்திருந்தனர். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அதானி விவகாரத்தில் பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என்று கூறி கோஷங்களை எழுப்பினார்கள்.
    • மேல்சபையிலும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு கடந்த மாதம் 13-ந்தேதி தொடங்கியது.

    அதானி விவகாரம், ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற விவகாரம் மற்றும் ராகுல்காந்தி எம்.பி. பதவி பறிப்பு விவகாரம் ஆகியவற்றால் பாராளுமன்றத்தின் இரு அவையிலும் எந்த அலுவல்களும் நடைபெறவில்லை. கூட்டம் தொடங்கியதில் இருந்தே அமளியால் பாதிக்கப்பட்டது. கடந்த 13 நாட்களாக பாராளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கின.

    இந்த நிலையில் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் இன்றும் அமளி ஏற்பட்டது. நேற்றைய விடுமுறைக்கு பிறகு பாராளுமன்ற மக்களவை இன்று காலை 11 மணிக்கு கூடியது.

    சபாநாயகர் ஓம்.பிர்லா இல்லாததால் அவரது இருக்கையில் ராஜேந்திர அகர்வால் இருந்தார். அவை தொடங்கியதுமே காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர் முழக்கமிட்டனர்.

    அதானி விவகாரத்தில் பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என்று கூறி கோஷங்களை எழுப்பினார்கள்.

    சபையின் மைய பகுதிக்கு வந்து அமளியில் ஈடுபட்டனர். அவர்கள் பதாகைகளும் வைத்து இருந்தனர். கூச்சல்-குழப்பம் காரணமாக அவையை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அவை 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.

    மேல்சபையிலும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர். அதானி குழும முறைகேடு குறித்து கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினார்கள். காங்கிரஸ் எம்.பி.க்களில் சிலர் கருப்பு உடை அணிந்து இருந்தனர். தொடர் முழக்கம் காரணமாக அவைத் தலைவர் ஜெகதீப் தன்கர் 2 மணி வரை ஒத்தி வைத்தார்.

    2 மணிக்கு பின்னர் அவை கூடியதும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் நாளை காலை 11 மணிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    • இந்தியா முழுவதும் 101 இடத்தில் நிலக்கரி சுரங்கங்கள் தோண்ட திட்டமிட்டு மூன்று இடங்கள் தமிழ்நாட்டில் தோண்டுவதற்காக மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
    • பாராளுமன்றத்தில் குரல் எழுப்பாதது ஏன்? இது மத்திய அரசும் சம்பந்தப்பட்ட விவகாரம்.

    சென்னை:

    சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்ற வளாகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    இந்தியா முழுவதும் 101 இடத்தில் நிலக்கரி சுரங்கங்கள் தோண்ட திட்டமிட்டு மூன்று இடங்கள் தமிழ்நாட்டில் தோண்டுவதற்காக மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஏற்கனவே என்.எல்.சி. சுரங்கத்தால் 105 கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. விவசாயிகள் கொந்தளித்து போய் இருக்கிறார்கள்.

    இந்த சூழ்நிலையில் டெல்டா பகுதியில் புதிதாக மூன்று சுரங்கங்கள் தோண்ட திட்டமிட்டு இருப்பது விவசாயிகளை கொந்தளிக்க வைத்துள்ளது. ஏற்கனவே தி.மு.க. ஆட்சியில் தான் மீத்தேன் எடுப்பதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த பிரச்சினைகளுக்கெல்லாம் அதுதான் காரணம்.

    தற்போது இந்த விவகாரத்திலும் தமிழக அரசு மத்திய அரசுக்கு கடிதம் எழுதிக்கொண்டிருந்தால் போதாது. 38 எம்.பி.க்கள் இருக்கிறார்கள். பாராளுமன்றத்தில் குரல் எழுப்பாதது ஏன்? இது மத்திய அரசும் சம்பந்தப்பட்ட விவகாரம். எனவே சட்டமன்றத்தில் மட்டும் பேசினால் போதாது. பாராளுமன்றத்திலும் பேசி இதை ரத்து செய்ய முழு மூச்சோடு தி.மு.க. எம்பிக்கள் கடமையாற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • காவிரி டெல்டா பகுதியில் நிலக்கரி எடுக்க மத்திய அரசு டெண்டர் அறிவித்ததற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.
    • புதிய நிலக்கரி சுரங்கம் தொடர்பாக மத்திய நிலக்கரித்துறை மந்திரி பதில் அளிக்க கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

    புதுடெல்லி:

    காவிரி டெல்டா பகுதியில் நிலக்கரி எடுக்க மத்திய அரசு டெண்டர் அறிவித்ததற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.

    நிலக்கரிகளை ஏல ஒப்பந்த நடைமுறையில் இருந்து டெல்டா பகுதிகளை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.

    இந்த நிலையில் புதிய நிலக்கரி சுரங்க விவகாரத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கோரி பாராளுமன்ற மக்களவையில் தி.மு.க. நோட்டீஸ் கொடுத்து உள்ளது.

    வேளாண் மண்டலங்களில் மத்திய அரசு புதிதாக நிலக்கரி சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து இந்த நோட்டீஸ் அளிக்கப்பட்டு உள்ளது.

    புதிய நிலக்கரி சுரங்கம் தொடர்பாக மத்திய நிலக்கரித்துறை மந்திரி பதில் அளிக்க கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

    • அதானி விவகாரத்தால் மேல்சபையில் கடும் அமளி ஏற்பட்டது.
    • மோடி-அதானி போன்ற முழக்கங்களை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுப்பினார்கள்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு கடந்த மாதம் 13-ந் தேதி தொடங்கியது.

    அதானி விவகாரத்தில் கூட்டுக்குழு விசாரணை கேட்டு எதிர்க்கட்சிகளும், இந்தியாவை அவமானப்படுத்திய விவகாரத்தில் ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஆளும் பா.ஜனதாவும் வலியுறுத்தி பாராளுமன்றத்தை முடக்கின. இதனால் 9 நாட்கள் இரு அவைகளும் பாதிக்கப்பட்டன.

    இதற்கிடையே அவதூறு வழக்கில் 2 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டதால் ராகுல்காந்தி எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

    காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த பிரச்சினையை கிளப்பியதால் இரு அவைகளும் பாதிக்கப்பட்டது. 12 நாட்களாக பாராளுமன்றம் முடக்கப்பட்டது. கடந்த 29-ந் தேதி பாராளுமன்றம் ஏப்ரல் 4-ந் தேதி வரை ஒத்தி வைக்கப்பட்டன.

    4 நாட்களுக்கு பிறகு பாராளுமன்றம் இன்று காலை 11 மணிக்கு மீண்டும் கூடியது. மக்களவையில் எம்.பி.யின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

    புனே தொகுதி எம்.பி. கிரீஷ் பாப்பட் கடந்த 29-ந் தேதி மரணம் அடைந்தார். திருச்சூர் மாவட்டம் சாலக்குடி தொகுதி முன்னாள் எம்.பி.யும், நடிகருமான இன்னசென்ட் கடந்த 26-ந் தேதி மரணம் அடைந்தார்.

    இருவரது மறைவுக்கும் அனுதாபம் தெரிவிக்கப்பட்டு அவை 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

    அதானி விவகாரத்தால் மேல்சபையில் கடும் அமளி ஏற்பட்டது.

    ராகுல்காந்தி எம்.பி. பதவி பறிக்கப்பட்ட தற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் காங்கிரஸ் எம்.பி.க்கள் கருப்பு உடையுடன் அவைக்கு வந்தனர். இதே போல் திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர்களும் முகத்தில் கருப்பு முகக்கவசம் அணிந்து இருந்தனர்.

    அவை கூடியதும் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முழக்கமிட்டனர். அதானி குழும மோசடி குறித்து பாராளுமன்றம் கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று அவர்கள் கோஷமிட்டனர்.

    இதே போல் ராகுல் காந்தி எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    மோடி-அதானி போன்ற முழக்கங்களை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுப்பினார்கள். இதனால் ஏற்பட்ட அமளியால் அவையை நடத்த முடியவில்லை. இதனால் அவைத்தலைவர் ஜெகதீப் தன்கர் 2 மணி வரை ஒத்திவைத்தார்.

    பிற்பகல் அவை தொடங்கியபோதும் இரு அவைகளிலும் அமளி நீடித்தது. இதனால் இரு அவைகளும் புதன்கிழமை காலை வரை ஒத்திவைக்கப்பட்டது. மகாவீர் ஜெயந்தி என்பதால் பாராளுமன்றத்திற்கு நாளை விடுமுறை விடப்பட்டுள்ளது.

    • ராகுல் காந்தி தகுதிநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து காங்கிரஸ் சார்பில் தொடர் போராட்டம் நடத்தப்படுகிறது.
    • பாராளுமன்ற வளாகத்தில் எதிர்ப்பு பதாகைகளை ஏந்தி ஊர்வலமாக சென்றனர்.

    புதுடெல்லி:

    அவதூறு வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதையடுத்து, அவர் எம்.பி. பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டார். இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. காங்கிரஸ் சார்பில் தொடர் போராட்டம் நடத்தப்படுகிறது.

    இந்த விவகாரம் இன்று பாராளுமன்றத்திலும் எதிரொலித்தது. காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் பெரும்பாலானோர் இன்று பாராளுமன்றத்திற்கு கருப்பு உடையில் வந்து எதிர்ப்பை பதிவு செய்தனர். அத்துடன், பாராளுமன்ற வளாகத்தில் எதிர்ப்பு பதாகைகளை ஏந்தி ஊர்வலமாக சென்றனர். அதானி விவகாரம், ராகுல் தகுதி நீக்கத்தை கண்டித்து முழக்கம் எழுப்பினர்.

    ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து பாராளுமன்ற இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. 

    • ராகுல் காந்தி தகுதி நீக்கத்தை கண்டித்து, கருப்பு உடையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பாராளுமன்றத்திற்கு வந்தனர்.
    • பாராளுமன்றத்தின் இன்றைய நிகழ்வுகள் தொடங்கிய 1 நிமிடத்தில் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    புதுடெல்லி :

    அவதூறு வழக்கில் 2 ஆண்டு தண்டனை பெற்ற ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தின் தொடர்ச்சியாக பாராளுமன்றத்தில் இன்று கருப்பு உடையில் பங்கேற்பதாக காங்கிரஸ் எம்.பி.க்கள். அறிவித்து இருந்தனர்.

    அதன்படி, ராகுல் காந்தி தகுதி நீக்கத்தை கண்டித்து, கருப்பு உடையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பாராளுமன்றத்திற்கு வந்தனர்.

    இதையடுத்து பாராளுமன்றத்தில் இருஅவைகளும் தொடங்கியது. ராகுல் காந்தியின் தகுதிநீக்கத்தை கண்டித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கம் எழுப்பிய நிலையில், மக்களவை மாலை 4 மணி வரையும், மாநிலங்களவை மதியம் 2 மணி வரையும் ஒத்திவைக்கப்பட்டது.

    பாராளுமன்றத்தின் இன்றைய நிகழ்வுகள் தொடங்கிய 1 நிமிடத்தில் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    இதனிடையே, ராகுல் காந்தியின் பதவி பறிப்பு விவகாரத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து பாராளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

    இந்த ஆலோசனை கூட்டத்தில் முதல்முறையாக திரிணாமுல் காங்கிரசும் பங்கேற்றுள்ளது.

    ×