search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94511"

    ஒரேநாள் இரவில் 7 தடவை நில அதிர்வு ஏற்பட்டதால் இரவு நேரம் என்றாலே பயம் ஏற்படும் சூழ்நிலை உள்ளதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.
    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் குடியாத்தம், பள்ளிகொண்டா, திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர், வாணியம்பாடி வரையில் இன்று அதிகாலை 4.17 மணி முதல் லேசான நில அதிர்வு ஏற்பட்டது.

    வேலூரில் இருந்து 59 கிலோ மீட்டர் தொலைவில் இந்த நில அதிர்வு ஏற்பட்டது. இந்த நில அதிர்வு ரிக்டர் அளவுகோலில் 3.6-ஆக பதிவாகியுள்ளது.

    ஏற்கனவே பலமுறை வேலூர் மாவட்டத்தில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. குஜராத்தில் துவங்கி திருப்பத்தூர் வரையில் பூமத்திய ரேகை நேர்கோடு என்பதால் இப்பகுதியில் அடிக்கடி நில அதிர்வு ஏற்படுவதாக கூறுகின்றனர்.

    நில அதிர்வு ஏற்பட்ட கிராமத்தில் வீடுகளில் விரிசல் ஏற்பட்ட காட்சி

    குடியாத்தம், தட்டப்பாறை மீனூர் கொல்லைமேடு உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து இரவில் 7 முறை நில அதிர்வு ஏற்பட்டது.

    அப்போது வீட்டின் பரண் மீது இருந்த பாத்திரங்கள் உருண்டு கீழே விழுந்தது. பீரோக்கள் சில அடி தூரம் நகர்ந்துள்ளது. கட்டில்கள் சில அங்குலங்கள் நகர்ந்துள்ளது.

    கால்நடைகள் தொடர்ந்து கத்தியபடி இருந்தன. மின்விசிறிகள் தாறுமாறாக சுழன்றது. இதனால் அச்சம் அடைந்த பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வந்தனர்.

    சில நிமிடங்களுக்கு பின் நில அதிர்வு நின்றது சில வினாடிகளுக்குப் பின் மீண்டும் மீண்டும் என 7 முறை நில அதிர்வு ஏற்பட்டது.

    இதில் 2 முறை சுமார் 3 வினாடிகள் வரை நில அதிர்வு நீடித்தது. அப்போது பயங்கர சத்தம் ஏற்பட்டதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.

    40 நாட்களில் 3-வது முறையாக நில அதிர்வு கண்டதால் கிராம மக்கள் பெரிதும் அச்சம் அடைந்துள்ளனர். இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில்:-

    குடியாத்தம் அடுத்த தட்டப்பாறை ஊராட்சி மீனூர் கொல்லைமேடு கிராம பகுதியில் கடந்த மாதம் 19-ந்தேதி 25-ந்தேதி ஆகிய 2 நாட்களில் இரவில் திடீர் என சில வினாடிகள் நில அதிர்வு ஏற்பட்டது. இன்று 7 முறை அதிர்வு ஏற்பட்டுள்ளது.

    இதுகுறித்து வருவாய்த் துறையினரும், அதிகாரிகளும் உடனடியாக ஆய்வு மேற்கொள்ள வேண்டும். வருங்காலங்களில் மிகப்பெரிய அளவில் இப்பகுதியில் நில அதிர்வு பூகம்பம் ஏற்படும் அபாயம் உள்ளதா என ஆய்வு செய்து பொதுமக்களுக்கு அதிகாரிகள் அச்சத்தை போக்க வேண்டும்.

    ஒரே வாரத்தில் 2 முறை அதிலும் ஒரேநாள் இரவில் 7 தடவை நில அதிர்வு ஏற்பட்டதால் இரவு நேரம் என்றாலே பயம் ஏற்படும் சூழ்நிலை உள்ளதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.

    ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே பெத்த திப்பபள்ளி அடுத்த சானுமா குலப்பள்ளி, பட்ட வான்ல பள்ளி ஆகிய கிராமங்களில் தொடர்ந்து 2 நாட்கள் நிலநடுக்கமும், பூமியில் இருந்து அதிக அளவு சத்தமும் ஏற்பட்டது.

    இதேபோல் தமிழக-ஆந்திர எல்லையான வேலூர் மாவட்டத்திலும் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


    இதையும் படியுங்கள்...அனைத்து விவகாரங்கள் குறித்து விவாதிக்கவும், பதில் அளிக்கவும் அரசு தயாராக உள்ளது: பிரதமர் மோடி
    வேலூர் மாவட்டத்தில் இன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.6 ஆக பதிவானது.
    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் இருந்து 59 கிமீ தொலைவில் இன்று அதிகாலை 4.17 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.6 என்று பதிவானதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்த நில அதிர்வு வரைபடங்கள் மூலம் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், பெரும்பாலான மக்களால் உணரப்படவில்லை. தற்போது இந்த நிலநடுக்கத்தால் எந்தவித பாதிப்புகளும் ஏற்படவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.


    சித்தூர் அருகே நிலநடுக்கம் மற்றும் பூமியில் இருந்து வந்த சத்தத்தை கேட்ட அப்பகுதி கிராம மக்கள் அலறியடித்துக் கொண்டு வீடுகளை விட்டு வெளியே வந்து தெருவில் தஞ்சமடைந்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பெத்ததிப்ப சமுத்திரம் அருகே உள்ள பட்டவான்ல பள்ளி மற்றும் சானுமா குலப்பள்ளியில் நேற்று முன்தினம் இரவு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. மேலும் பூமியில் இருந்து அதிக அளவில் சத்தம் கேட்டது.

    இதனால் வீட்டில் இருந்த பாத்திரங்கள் உருண்டு கீழே விழுந்தன. நிலநடுக்கம் மற்றும் பூமியில் இருந்து வந்த சத்தத்தை கேட்ட அப்பகுதி கிராம மக்கள் அலறியடித்துக் கொண்டு வீடுகளை விட்டு வெளியே வந்து தெருவில் தஞ்சமடைந்தனர்.

    இதேபோல் நேற்று மாலையில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் இந்த கிராம பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பீதியடைந்தனர்.

    இதுகுறித்து போலீசார் மற்றும் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். மண்டல பிரஜா பரிசத் தலைவர் கிரிதர் ரெட்டி மற்றும் அதிகாரிகள் கிராம பகுதிக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    லேசான அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், இதைக்கண்டு பொதுமக்கள் பீதியடைய தேவையில்லை என கிராம மக்களுக்கு தெரிவித்தனர். இருப்பினும் நிலநடுக்கம் மற்றும் பூமியில் வந்த சத்தம் காரணமாக அப்பகுதி மக்கள் பீதியில் இருந்து மீள முடியாமல் தவித்து வருகின்றனர்.

    ராஜஸ்தானின் ஜலோர் பகுதியில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலத்தின் ஜலோர் பகுதியில் இன்று அதிகாலை 2.26 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.

    இந்த நிலநடுக்கம் 4.6 ரிக்டர் அளவில் பதிவானது என தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

    ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த மக்கள், வீடுகள் குலுங்கியதில் அலறியடித்துக் கொண்டு வெளியேறினர்.
    மும்பை:

    மகாராஷ்டிராவின் கடலோர பகுதியான ரத்னகிரியில் இன்று அதிகாலை 2.36 மணிக்கு 4 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மும்பையில் இருந்து 350 கி.மீ தொலைவில் உள்ள ரத்னகிரி மாவட்ட நிலப்பரப்பில் இருந்து 5 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

    ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த மக்கள், வீடுகள் குலுங்கியதில் அலறியடித்துக் கொண்டு வெளியேறினர். மிதமான நிலநடுக்கம் என்பதால், பெரிதாக சேதம் எதுவும் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இருப்பினும், இந்த நிலநடுக்கத்தால் உயிர் சேதம் அல்லது பொருள் சேதம் குறித்து இதுவரை தகவல்கள் எதுவும் இல்லை என்று தேசிய நில அதிர்வு மையத் தலைவர் ஜே.எல் கௌதம் தெரிவித்துள்ளார்.

    ஆந்திராவின் முக்கிய நகரமான விசாகப்பட்டினத்தில் இன்று காலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் தஞ்சம் அடைந்தனர்.
    திருப்பதி:

    ஆந்திர மாநிலத்தில் கடற்கரையை ஒட்டியுள்ள நகரும் விசாகப்பட்டினம். இங்கு துறைமுகம், உப்பு தயாரிக்கும் தொழிற்சாலை, மீன்பிடித் துறைமுகம் உள்ளிட்டவை உள்ளன.

    ஆந்திராவின் முக்கிய நகரமான விசாகப்பட்டினத்தில் இன்று காலை 7.13 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. அக்கய்யபாலம்,  முரளி நகர், கடற்கரை சாலை, கஞ்சன் பாலம், மதுரா நகர், தாடி செட்ல பாலம் உள்ள பகுதிகளில் 10 வினாடிகள் நிலநடுக்கம் ஏற்பட்டது. 

    நிலநடுக்கத்தால் வீட்டிலிருந்த பாத்திரங்கள் உருண்டு கீழே விழுந்தது.

    இதனைக் கண்ட பொதுமக்கள் அலறி அடித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே வந்து தெருக்களில் தஞ்சம் அடைந்தனர். சில வீட்டு சுவர்களில் விரிசல் விழுந்தது.

    1.3 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் எந்தவித பாதிப்பும் ஏற்படாது. பொதுமக்கள் பீதி அடைய வேண்டாம் என தெரிவிக்கப்பட்டது.
    அந்தமான் - நிக்கோபார் தீவுகளில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது.
    புதுடெல்லி:

    அந்தமான் - நிக்கோபார் தீவுகளில் இன்று அதிகாலை 5.28 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது. 

    போர்ட் பிளேர் நகரின் அருகே ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3 அலகுகளாக பதிவானது. போர்ட் பிளேர் நகரிலிருந்து தென் கிழக்கே 218 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இந்த நிலநடுக்கத்தின் விளைவாக உயிரிழப்போ, உடமைகள் சேதமோ ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை.
    அரியானா மாநிலத்தில் இன்று இரவு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
    சண்டிகர்:

    அரியானா மாநிலத்தின் ஜஜ்ஜார் பகுதியில் இன்று இரவு 8.15 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. ஜஜ்ஜாரில் 5 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

    இந்த நிலநடுக்கம் 3.3 ரிக்டர் அளவில் பதிவானது என தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது.  நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு விவரங்கள் வெளியாகவில்லை.

    பிலிப்பைன்ஸ் நாட்டின் மின்டானாவ் தீவில் இன்று மாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் பீதியடைந்த மக்கள் உயிர் பயத்தில் வீடுகளைவிட்டு ஓட்டம் பிடித்தனர்.
    மணிலா:

    அடிக்கடி நிலநடுக்கங்களை சந்தித்துவரும் பிலிப்பைன்ஸ் நாட்டின் மின்டானாவ் தீவில் இன்று மாலை 3.42 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

    ரிக்டர் அளவுகோலில் 6.1 அலகுகளாக பதிவான இந்த நிலநடுக்கத்தால் பல பகுதிகளில் உள்ள கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. இதனால், பீதியடந்த மக்கள் உயிர் பயத்தில் வீடுகளைவிட்டு ஓட்டம் பிடித்து திறந்தவெளிகளில் தஞ்சம் அடைந்தனர்.

    இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் அருகாமையில் உள்ள இந்தோனேசியா நாட்டின் சில பகுதிகளிலும் உணரப்பட்டது.

    இன்றைய நிலநடுக்கத்தால் ஏற்பட்ட இழப்புகள் மற்றும் பாதிப்பு தொடர்பான உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை.
    தென்னமெரிக்கா கண்டத்தில் அமைந்துள்ள பெரு நாட்டை இன்று 8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது.
    லிமா:

    தென்னமெரிக்கா கண்டத்தில் அழகிய அமேசான் காடுகள் மற்றும் கண்ணை கவரும் மச்சு பிச்சு மலைத்தொடர்கள் என இயற்கை எழில்சூழ அமைந்துள்ள பெரு நாட்டில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது.

    உள்ளூர் நேரப்படி பிற்பகல் 1.11 மணியளவில் அல்ட்டோ அமேசானஸ் மாகாணத்தின் லகுனாஸ் மாவட்டத்தின் தென்கிழக்கே சுமார் 83 கிலோமீட்டர் தூரத்தில் பூமியின் அடியில் சுமார் 105 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கடுக்கத்தின் தாக்கத்தை 8 ரிக்டர்களாக  அமெரிக்க புவிசார் ஆய்வு மையம் மதிப்பீடு செய்துள்ளது.



    இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் அருகாமையில் உள்ள பிரேசில், கொலம்பியா மற்றும் ஈக்குவேடார் ஆகிய நாடுகளிலும் உணரப்பட்டதாக செய்திகள் கிடைத்துள்ளன. இன்றைய நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பான உடனடி தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை. 
    நிகோபார் தீவுகளில் 4.5 ரிக்டர் அளவுகோலில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
    போர்ட்பிளேர்:

    இந்தியாவின் தென்கிழக்கே அமைந்த நிகோபார் தீவுகளில் இன்று காலை 7.49 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.

    சுமார் 4.5 ரிக்டர் அளவுகோலில் பதிவான இந்த நிலநடுக்கம் 35 கி.மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல்கள் உடனடியாக வெளியாகவில்லை.
    அந்தமானில் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆக பதிவாகியுள்ளது.
    போர்ட்பிளேர் :

    அந்தமானில் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவாகியுள்ளது. நள்ளிரவு 12.39 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அங்குள்ள கட்டிடங்கள் லேசாக அதிர்ந்தன.

    நிலநடுக்கத்தால், சேதம் எதுவும் ஏற்பட்டதாக தற்போது வரை எந்த தகவலும் இல்லை. நிலநடுக்கத்தை  தொடரந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. 
    ×