search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மோடி"

    • தருமபுரி-மொரப்பூர் ரெயில் பாதையை பயன்பாட்டிற்கு கொண்டு வர பிரதமர் நரேந்திர மோடி அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
    • தற்போது இந்தியா 9 ஆண்டுகளில் உலகில் 5-வது பெரிய பொருளாதார நாடாக உயர்ந்துள்ளது.

    தருமபுரி:

    பாரதிய ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை தருமபுரியில் என் மனம் என் மக்கள் நடைப்பயணத்தை நேற்று மதியம் பாலக்கோட்டில் இருந்து தொடங்கி தொடர்ந்து பாப்பாரப்பட்டி பாரதமாதா ஆலயம், பென்னாகரம் அதனை தொடர்ந்து இரவு 8 மணிக்கு தருமபுரியில் நடைபயணத்தை மேற்கொண்டார்.

    தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பிருந்து 4 ரோடு வரை உள்ள ஒரு கிலோமீட்டர் நடைப்பயணம் மேற்கொண்டபோது மாவட்ட பொருளாளரும், நிகழ்ச்சி பொறுப்பாளருமான ஐஸ்வரியம் முருகன் அண்ணாமலை வரவேற்கும் வகையில் பிரம்மாண்ட ஏற்பாடுகளை செய்து இருந்தார்.

    பின்னர் நடைபயணத்தை முடித்துவிட்டு பொதுமக்களிடத்தில் அண்ணாமலை பேசியதாவது:-

    தருமபுரி சாதாரண மண் அல்ல. அதியமான் மன்னர்கள், அவ்வையார் வாழ்ந்த பகுதி. தமிழ்நாட்டில் தருமபுரி மாவட்டம் தொழில் வளர்ச்சி குறைந்த மாவட்டம்.

    இந்த மாவட்டத்தை சேர்ந்தவர்கள் இந்தியா முழுவதும் சென்று கடுமையான வேலை செய்து வருகிறார்கள். இந்த மாவட்டத்தில் அரசியல் கட்சிகள் சாதியை பிரதானமாக வைத்து அரசியல் செய்து கொண்டு வருகிறார்கள்.

    தருமபுரி-மொரப்பூர் ரெயில் பாதையை பயன்பாட்டிற்கு கொண்டு வர பிரதமர் நரேந்திர மோடி அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. உழைப்பு, கல்வி ஆகியவற்றில் முன்னேற்றம் இருந்தாலும் தருமபுரி மாவட்டம் சாதி அரசியலால் வளர்ச்சியில் பின்னோக்கியே சென்று கொண்டுள்ளது.


    பிரதமர் மோடி நம்புவது விவசாயிகள், ஏழைகள், பெண்கள், இளைஞர்கள் என்ற 4 சாதிகளை மட்டும் தான். இதில் ஏழை என்ற நிலை இனிமேல் இருக்கக் கூடாது என்பதற்காக மோடி பாடுபட்டு வருகிறார்.

    தருமபுரி மாவட்டத்தின் உற்பத்தி திறனை 1.7 சதவீத வளர்ச்சியில் இருந்து 5 சதவீதமாக மாற்றுவோம். அவ்வாறு மாற்றும் போது 5 லட்சம் பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். பாரத மாதா அனைவருக்கும் பொதுவானவர்.

    2014-ம் ஆண்டு இந்தியா உலக அளவில் 11-வது பெரிய பொருளாதார வளர்ச்சி அடைந்த நாடாக இருந்தது. ஆனால் தற்போது இந்தியா 9 ஆண்டுகளில் உலகில் 5-வது பெரிய பொருளாதார நாடாக உயர்ந்துள்ளது. பாரதப் பிரதமராக நரேந்திர மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 2028-ல் உலகின் 3-வது பொருளாதார நாடாக வளர்ச்சி அடையும். அது தான் வளர்ச்சி அடைந்த பாரதமாக அமையும்.

    2014-ம் ஆண்டு ரூ.86 ஆயிரமாக இருந்த தனிநபர் வருமானம் நரேந்திர மோடியின் ஆட்சியில் தற்போது ரூ.1 லட்சத்து 96 ஆயிரம் ஆக உயர்ந்ததுள்ளது. தமிழக அரசு ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை சரியாக செயல்படுத்தவில்லை.

    இந்த திட்டத்தை செயல் படுத்துவதில் சரியான திட்டமிடல் இல்லை என சி.ஏ.ஜி. அறிக்கை தெரிவித்துள்ளது. இதனால் ஒரு நபருக்கு சராசரியாக கிடைக்க வேண்டிய 40 லிட்டர் குடிநீரில் 26 லிட்டர் மட்டுமே கிடைக்கிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முன்னதாக பென்னாகரத்தில் நடைபெற்ற நடை பயணத்தில் பங்கேற்று பொதுமக்களிடையே பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பேசினார்.

    இந்நிகழ்ச்சியில் பா.ஜ.க. துணை தலைவர் கே.பி. ராமலிங்கம், தருமபுரி மாவட்ட பொருளாளர் ஐஸ்வரியம் முருகன் உள்ளிட்ட பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய நிர்வாகி கள் கலந்து கொண்டனர்.

    குளிர்கால கூட்டத்தொடர் பயனுள்ளதாக அமைய வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
    இந்திய பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன் பிரதமர் மோடி பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    1. இந்த குளிர்கால கூட்டத்தொடர் மிக முக்கியமானது.

    2. நாட்டின் வளர்ச்சிக்கு புதிய பாதை உருவாக்க வேணடும்.

    3. அனைத்து விவகாரங்கள் குறித்து விவாதிக்கவும், பதில் அளிக்கவும் அரசு தயாராக உள்ளது.

    4. குளிர்கால கூட்டத்தொடர் பயனுள்ளதாக அமைய வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர்.

    5. புதிய வகை ஒமிக்ரான் கொரோனா பரவிவரும் நிலையில் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

    இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.
    கருப்பு சட்டத்தினால் 700 விவசாயிகள் தங்களது உயிரை இழந்துள்ளனர் என்று ஏ.ஐ.எம்.ஐ.எம். தலைவர் அசாதுதீன் ஒவைசி தெரிவித்துள்ளார்.
    குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு பல்வேறு விவகாரங்கள் குறித்து நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது யாரும் எதிர்பார்க்காத வகையில், விவசாயிகள் மகிழ்ச்சி அடையும் வகையில் மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப்பெற மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக அறிவித்தார்.

    வேளாண் சட்டங்களின் பயன்களை ஒரு தரப்பினருக்கு புரிய வைக்க முடியவில்லை என்றும், விவசாயிகள் நலன் முக்கியம் எனவும் தெரிவித்தார்.

    மோடி அறிவிப்பிற்கு எதிர்க்கட்சிகள் உள்பட அனைத்து கட்சி தலைவர்களும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். பாராட்டுவதற்கு முன் விமர்சனத்தையும் முன் வைக்கின்றனர்.

    அந்த வகையில் எ.ஐ.எம்.ஐ.எம். தலைவர் அசாதுதீன் ஒவைசி தனது கருத்தை தெரிவித்துள்ளார். வேளாண் சட்டங்களை திரும்பப் பெற்றது குறித்து அசாதுதீன் கூறியிருப்பதாவது:

    முதல் நாளில் இருந்தே மூன்று வேளாண் சட்டங்களும் அரசியலமைப்பிற்கு எதிரானது என்று எதிர்கட்சிகள் சொல்லிக்கொண்டு வந்தன. மோடி அரசு இதுபோன்ற சட்டங்களை உருவாக்க, மோடி அரசுக்கு அரசியலமைப்பு உரிமை இல்லை. மோடியின் ஈகோவை திருப்தி படுத்தவே இந்த சட்டங்கள் உருவாக்கப்பட்டன. இந்த கருப்பு வேளாண் சட்டங்களால் 700 விவசாயிகள் தங்களது உயிர்களை இழந்துள்ளனர்.

    மோடி தனது ஈகோவை ஒதுக்கி வைத்திருந்தால், இந்த சட்டங்கள் உருவாக்கப்பட்டிருக்காது. விவசாயிகள் உயிர் இழந்திருக்கமாட்டார்கள். இது மிகவும் காலதாமதமான முடிவு. பொதுமக்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தும்போது இந்த அரசு பயப்படும் என்று நான் எப்போதுமே கூறுவேன். இந்த வெற்றி அனைத்து விவசாயிகளுக்கும் உடையதாகும்.

    இவ்வாறு ஒவைசி தெரிவித்துள்ளார்.
    இந்திய நேரப்படி இன்று மதியம் 3.15 மணிக்கு குஜராத் மாநிலம் துவார்கா பகுதியில் 5.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
    குஜராத் மாநிலத்தின் துவார்காவில் இருந்து வடமேற்கு பகுதியில் 223 கி.மீட்டர் தொலைவில் இன்று மதியம் 3.15 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் 10 கி.மீட்டர் ஆழத்தில்  மையம் கொண்டிருந்ததாக நில அதிர்வுக்கான தேசிய மையம் அறிவித்திருந்தது.

    இந்த நிலநடுக்கத்தால் சேதம் ஏற்பட்டதா? என்பது குறித்து தகவல் வெளியாகவில்லை. இந்த நிலையில், பிரதமர் மோடி, குஜராத் மாநில முதல்வர் பூபேந்திர பட்டேலிடம், நிலநடுக்கத்தால் எழுந்துள்ள சூழ்நிலை குறித்து போன் மூலம் கேட்டறிந்தார்.
    பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்ததையடுத்து, பல்வேறு மாநிலங்கள் வாட் வரியை குறைத்துள்ளன.
    சென்னை:

    பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 100 ரூபாயை தாண்டியதால் வாகன ஓட்டிகள் அரசு மீது கடும் அதிருப்தி அடைந்தனர். மத்திய மற்றும் மாநில அரசுகள் எரிபொருள் மீதான வரிகளை குறைக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது. சில மாநிலங்கள் வாட் வரியை குறைத்தன. ஆனால், மத்திய அரசு கலால் வரியை குறைக்காமல் இருந்தது. 

    இந்நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்துள்ளது. பெட்ரோல் மீதான கலால் வரியில் 5 ரூபாயும், டீசல் மீதான கலால் வரியில் 10 ரூபாயும் குறைத்துள்ளதால், இன்று முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைந்துள்ளது. அதேசமயம், பல்வேறு மாநிலங்களும் தங்கள் பங்கிற்கு வாட் வரியை குறைத்துள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

    இந்நிலையில், தீபாவளி பண்டிகையையொட்டி பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்த பிரதமர் மோடிக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நன்றி தெரிவித்து கடிதம் எழுதி உள்ளார். கலால் வரியை குறைத்திருப்பது வரவேற்கத்தக்க விஷயம் என்றும், அரசின் இந்த முடிவு,  சமூகத்தின் அனைத்து பிரிவினரின் வாங்கும் சக்தியை அதிகரிக்கும் என்றும் ஓ.பன்னீர்செல்வம் கூறி உள்ளார்.
    தீபாவளி பண்டிகையை தூய்மையான மற்றும் பாதுகாப்பான முறையில் கொண்டாடி, சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் பங்களிப்பதாக உறுதிமொழி எடுப்போம் என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தனது வாழ்த்து செய்தியில் கூறி உள்ளார்.
    புதுடெல்லி,

    நாடு முழுவதும் இன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி நாட்டு மக்கள் அனைவருக்கும் ஜனாதிபதி, ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள்  தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

    “தீபாவளி திருநாளில் நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். தீமை விலகி நன்மையும், இருள் விலகி ஒளி பிறக்கும் பண்டிகை தீபாவளி. நாம் அனைவரும் ஒன்றிணைந்து, இந்த பண்டிகையை தூய்மையான மற்றும் பாதுகாப்பான முறையில் கொண்டாடி, சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் பங்களிப்பதாக உறுதிமொழி எடுப்போம்’’ என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தனது வாழ்த்து செய்தியில் கூறி உள்ளார்.

    பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘நாட்டு மக்கள் அனைவருக்கும் தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள். இந்த தீபத்திருநாள்  தீபத்திருவிழா மக்களின் வாழ்வில் மகிழ்ச்சியையும், செழிப்பையும், நல்ல அதிர்ஷ்டத்தையும் தரவேண்டும் என்று வாழ்த்துகிறேன்’என பதிவிட்டுள்ளார்.

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்ட வாழ்த்து செய்தியில், ‘தீப ஒளி பாகுபாடின்றி அனைவரையும் ஒளிரச்செய்கிறது. இதுவே தீபாவளிச் செய்தி. உங்கள் அன்புக்குரியவர்களுடன் தீபாவளியை கொண்டாடுங்கள். அனைவரின் இதயங்களையும் இணைப்பவராக இருங்கள். அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்’ என கூறி உள்ளார்.
    கிளாஸ்கோவில் இந்திய பிரதமர் மோடி, மைக்ரோசாப்ட் இணை-நிறுவனர் பில் கேட்ஸை சந்தித்து உரையாடினார்.
    இந்திய பிரதமர் மோடி ஜி-20 உச்சி மாநாடு, பருவநிலை மாற்ற மாநாட்டில் கலந்து கொண்டார். பருவநிலை மாநாட்டில் கலந்து கொள்வதற்காக கிளாஸ்கோ சென்ற பிரதமர் மோடி, மாநாட்டிற்கிடையே உலகத் தலைவர்களை சந்திக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    மோடி, பில்கேட்ஸ்

    அந்த வகையில் உலக பணக்காரர்களில் ஒருவரும், மைக்ரோசாப்ட் இணை-நிறுவனருமான பில்கேட்ஸை சந்தித்து உரையாடினார்.
    பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டு ஊதியம் வழங்க உடனடியாக நிலுவைத் தொகையை வழங்கிட பிரதமருக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து ஊதியம் வழங்குகிறது. இந்தத் திட்டத்திற்காக மத்திய அரசு ஒதுக்க வேண்டிய நிதி ஒதுக்கப்படாமல் நிலுவையில் உள்ளது. இதனால் சுமார் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் ஊதிய வழங்க முடியாத நிலையில் தமிழக அரசு உள்ளது.

    இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், நிலுவை தொகையை உடனடியாக விடுவிக்கக்கோரி  பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

    பிரதமருக்கு மு.க. ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் ‘‘மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும். மத்திய நிலுவைத் தொகையை விடுவிக்காததால் 1,178 கோடி ரூபாய் ஊதியம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. 100 நாள் வேலைத்திட்ட ஊதியம் வழங்கப்படாததால் கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பாதிப்பை சந்தித்து வருகின்றன.

    பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டு ஊதியம் வழங்க உடனடியாக நிலுவைத் தொகையை வழங்கிட வேண்டும்’’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
    பிரதமர் மோடி தலைமையிலான புதிய அரசில் உத்தரபிரதேசத்தை சேர்ந்த சாத்வி நிரஞ்சன் ஜோதி இணை மந்திரியாக பதவியேற்று இருக்கிறார்.
    புதுடெல்லி:

    பிரதமர் மோடி தலைமையிலான புதிய அரசில் இணை மந்திரியாக பதவியேற்று இருப்பவர் சாத்வி நிரஞ்சன் ஜோதி (வயது 52). உத்தரபிரதேசத்தை சேர்ந்த இவர் அங்குள்ள பதேபூர் பாராளுமன்ற தொகுதியில் இருந்து சுமார் 70 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தார்.



    கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலிலும் வெற்றி பெற்று இருந்த இவருக்கு மோடியின் முந்தைய மந்திரி சபையில் உணவு பதப்படுத்துதல் துறைக்கான இணை மந்திரி பதவி அளிக்கப்பட்டு இருந்தது. அதன் தொடர்ச்சியாக தற்போதைய மந்திரி சபையிலும் தனது இடத்தை அவர் உறுதி செய்துள்ளார்.

    காவி உடை அணிந்து பெண் துறவியாக வலம் வரும் சாத்வி நிரஞ்சன் ஜோதி காடு வளர்த்தல், சமூக-கலாசார மதிப்பீடுகளை பாதுகாத்தல், பசு பாதுகாப்பு, ஏழை குழந்தைகள் மேம்பாடு மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மகளிருக்கு திருமண உதவி செய்தல் போன்ற நலத்திட்டங்களில் தன்னை ஈடுபடுத்தி வருகிறார்.

    இது ஒருபுறம் இருக்க, மதரீதியான கருத்துகளை கூறி சர்ச்சைகளிலும் இவர் சிக்கியுள்ளார். கடந்த 2014-ம் ஆண்டில் இவர் கூறிய சர்ச்சைக்குரிய கருத்துகளுக்காக பாராளுமன்றத்தில் வருத்தம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
    புதிய அமைச்சரவையில் தனக்கு பதவி வேண்டாம் என அருண் ஜெட்லி கூறிய நிலையில், அவரை பிரதமர் மோடி இன்று சந்தித்து பேசினார்.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கிறது. நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்க உள்ளார். ஜனாதிபதி மாளிகையில் நாளை மாலை பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. பிரதமருடன், பல்வேறு அமைச்சர்களும் பதவியேற்க உள்ளனர்.

    ஆனால், புதிதாக அமையவுள்ள அமைச்சரவையில் தனக்கு எந்த பதவியும் வேண்டாம் என தற்போது மத்திய நிதி மந்திரியாக பொறுப்பு வகிக்கும் அருண் ஜெட்லி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதினார். உடல்நிலையை கருத்தில் கொண்டு ஓய்வெடுக்க விரும்புவதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

    இந்நிலையில், பிரதமர் மோடி இன்று இரவு அருண் ஜெட்லியை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். அப்போது, 
    அமைச்சரவையில் இடம் வேண்டாம் என்ற முடிவை மறுபரீசிலனை செய்யுமாறு கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது. 

    உடல் நிலை காரணமாக பாஜக தலைமையகத்தில் நடைபெற்ற வெற்றிக் கொண்டாட்டத்திலும் அருண் ஜெட்லி பங்கேற்கவில்லை. கடந்த சில தினங்களாக பொது நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கவில்லை. எனினும், சமீபத்தில் தனது வீட்டில் நிதித்துறை பணிகள் தொடர்பாக, உயர் அதிகாரிகளை வரவழைத்து ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது. 
    பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக வெளியாகி இருக்கும் ‘பிஎம் நரேந்திர மோடி’ படத்தின் வசூல் நிலவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
    பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகி வெளியாகி இருக்கிறது. ஓமங்குமார் இயக்கி உள்ள இந்த படத்தில் பிரபல இந்தி நடிகர் விவேக் ஓபராய் மோடியாக நடித்துள்ளார்.

    ‘பிஎம் நரேந்திர மோடி’ என்று பெயரிடப்பட்ட இந்த படம் கடந்த ஏப்ரல் 12-ந்தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் தேர்தல் நேரம் என்பதால் படத்தை ரிலீஸ் செய்யக் கூடாது என தேர்தல் ஆணையம் தடை விதித்தது. இதை அடுத்து கடந்த வெள்ளிக்கிழமை மே 24-ந்தேதி படம் திரைக்கு வந்தது.

    ரெயில் நிலையத்தில் டீ விற்பனை செய்து வந்த மோடி எப்படி கடுமையாக உழைத்து பிரதமர் ஆனார் என்பதை பற்றி படம் விளக்குகிறது. நரேந்திர மோடியின் நல்லப் பக்கங்கள் மட்டுமே படத்தில் பேசப்படுகிறது. அமித்ஷா வேடத்தில் மனோஜ் ஜோஷியும், மோடியின் அப்பாவாக ராஜேந்திர குப்தாவும் நடித்துள்ளனர்.



    பா.ஜனதா தலைவர்கள் பிஎம் நரேந்திர மோடி படத்தை பாராட்டினாலும் பொதுவெளியில் படம் விமர்சன ரீதியாக வரவேற்பை பெறவில்லை. பெரும்பாலான விமர்சகர்கள் படத்துக்கு குறைந்த மதிப்பெண்களே வழங்கி இருக்கின்றனர்.

    இந்நிலையில் இந்த படம் மூன்று நாட்களில் நாடு முழுவதும் சேர்த்து ரூ.11.14 கோடி வசூல் செய்துள்ளது. முதல் நாளில், ரூ.2.88 கோடியும், இரண்டாவது நாளில் ரூ.3.76 கோடியும், மூன்றாவது நாளில் ரூ.4.50 கோடியும் வசூல் செய்துள்ளது.

    வரும் வாரங்களில் இந்த வசூல் குறையும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. பொதுமக்களிடம் போதிய வரவேற்பு இல்லாததே படம் தோல்வி அடைய காரணம் என்கிறார்கள்.
    ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சித் தலைவரும், ஆந்திரா முதல்-மந்திரியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவருமான ஜெகன்மோகன் ரெட்டி இன்று மோடியை சந்திக்க உள்ளார்.
    புதுடெல்லி:

    ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சித் தலைவரும், ஆந்திரா முதல்-மந்திரியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவருமான ஜெகன்மோகன் ரெட்டி நேற்று கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது மோடி அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளிப்பதா? அல்லது பிரச்சினைகளின் அடிப்படையில் ஆதரவு அளிப்பதா? என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.



    இந்நிலையில் ஜெகன்மோகன் ரெட்டி இன்று (ஞாயிற்றுக்கிழமை) டெல்லி செல்கிறார். மதியம் பிரதமர் நரேந்திர மோடியை அவர் சந்தித்து பேசுகிறார். பின்னர் அவர் டெல்லியில் உள்ள ஆந்திர பவன் அதிகாரிகளுடன் கலந்துரையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 
    ×