search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94549"

    வோடபோன் இந்தியா நிறுவனம் தனது ரெட் போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகையை குறைந்த விலையில் அறிவித்துள்ளது.




    வோடபோன் நிறுவன போஸ்ட்பெயிட் பயனர்களுக்கு அந்நிறுவனம் புதிய சலுகையை அறிவித்துள்ளது. பேசிக் ரெட் சலுகையின் கீழ் பயனர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினசரி டேட்டா உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

    புதிய ரூ.299 வோடபோன் ரெட் பேசிக் போஸ்ட்பெயிட் சலுகை அந்நிறுவனத்தின் விலை குறைந்த சலுகையாக இருக்கிறது. மற்ற ரெட் சலுகைகளை போன்றே இந்த சலுகையிலும் வோடபோன் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், இலவச ரோமிங், தினமும் 100 எஸ்எம்எஸ், 20 ஜிபி 3ஜி/4ஜி டேட்டா மற்றும் அதிகபட்சம் 50 ஜிபி டேட்டாவுக்கு ரோல்ஓவர் சலுகை உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. 

    மேலும் புதிய சலுகையுடன் 12 மாதங்களுக்கு வோடபோன் பிளே சந்தா இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த சலுகை செயலியில் மட்டும் பட்டியலிடப்பட்டு இருப்பதோடு தற்சமயம் தேர்வு செய்யப்பட்ட பயனர்களுக்கு மட்டும் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.

    ரிலையன்ஸ் ஜியோ போஸ்ட்பெயிட் சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்எம்எஸ், ஜியோ செயலிகளை இலவசமாக பயன்படுத்தும் வசதி, 25 ஜிபி 4ஜி டேட்டா உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. பாரதி ஏர்டெல் போஸ்ட்பெயிட் பயனர்களுக்கு 20 ஜிபி 4ஜி டேட்டா, ரோல்ஓவர் வசதி, அன்லிமிட்டெட் இலவச வாய்ஸ் கால் உள்ளிட்டவை ரூ.399-க்கு வழங்கப்படுகிறது.

    முன்னதாக வோடபோன் ரெட் பேசிக் 399 சலுகை, ரெட் என்டர்டெயின்மென்ட் என பெயர் மாற்றப்பட்டு பயனர்களுக்கு 40 ஜிபி 3ஜி / 4ஜி டேட்டா வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே இந்த திட்டத்தில் 20 ஜிபி டேட்டா வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

    இந்த சலுகையில் 200 ஜிபி வரை டேட்டா ரோல்ஓவர், ஒரு வருட வோடபோன் பிளே சந்தா, ஒரு வருட அமேசான் பிரைம் சந்தா உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இத்துடன் அன்லிமிட்டெட் உள்ளூர் மற்றும் தேசிய அழைப்புகள், ரோமிங் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
    இந்தியா, வங்காளதேசம், லாவோஸ், தென்கொரியா, இலங்கை ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி ஆகிற சோயாபீன்ஸ் உள்ளிட்ட கால்நடை தீவனங்களுக்கு வரியை ரத்து செய்து சீனா உத்தரவிட்டு உள்ளது. #China #Soybean #ImportTariffs #India
    பீஜிங்:

    சீனாவில் இருந்து இறக்குமதி ஆகிற பொருட்களுக்கு அமெரிக்காவும், அமெரிக்காவில் இருந்து இறக்குமதி ஆகிற பொருட்களுக்கு சீனாவும் கடுமையாக வரி விதித்து இருப்பதால் அவ்விரு நாடுகள் இடையே வர்த்தகப்போர் மூண்டு உள்ளது.

    இந்த நிலையில், அருகாமையில் உள்ள ஆசிய நாடுகளுடன் சீனா வர்த்தகத்தைப் பொறுத்தமட்டில் நல்லுறவு பராமரிக்க விரும்புவதாக தெரியவந்து உள்ளது.



    அந்த வகையில் இந்தியா, வங்காளதேசம், லாவோஸ், தென்கொரியா, இலங்கை ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி ஆகிற சோயாபீன்ஸ் உள்ளிட்ட கால்நடை தீவனங்களுக்கு வரியை ரத்து செய்து உத்தரவிட்டு உள்ளது.

    இதற்கான உத்தரவை அந்த நாட்டின் நிதி அமைச்சகம் பிறப்பித்து உள்ளது. இது ஜூலை 1-ந் தேதி முதல் அமல் ஆகிறது.

    சோயாபீன்ஸ் மீது 3 சதவீதமும், சோயாபீன்ஸ் புண்ணாக்கு மீது 2 சதவீதமும் சீனா வரி விதித்து வருகிறது.

    அமெரிக்காவில் இருந்துதான் சீனா அதிகளவில் சோயாபீன்ஸ் இறக்குமதி செய்து வந்தது.இனி இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் இருந்து கூடுதலாக சோயாபீன்ஸ் இறக்குமதி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.  #China #India #Tamilnews
    ரிலையன்ஸ் ஜியோவுடனான போட்டியை எதிர்கொள்ள பி.எஸ்.என்.எல். நிறுவன வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை அறிவிக்கப்பட்டிருக்கிறது.




    ஜியோவுடனான போட்டியை எதிர்கொள்ள பி.எஸ்.என்.எல். நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

    ரூ.1,999 விலையில் கிடைக்கும் புதிய சலுகையில் தினமும் 2 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை சுமார் 365 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. அந்த வகையில் பயனர்களுக்கு மொத்தம் 730 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.

    இந்தியாவில் கேரளா மாநிலத்தில் மட்டும் பி.எஸ்.என்.எல். நிறுவன 4ஜி சேவைகள் வழங்கப்படுகிறது. முதற்கட்டமாக பி.எஸ்.என்.எல். ரூ.1,999 சலுகை சென்னை மற்றும் தமிழ் நாடு வட்டாரங்களில் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. ஜியோ வரவுக்கு பின் வாய்ஸ் கால் மற்றும் டேட்டா சேவைகளுக்கான கட்டண முறை வெகுவாக மாற்றப்பட்டது. 

    அன்று முதல் கடந்த இரண்டு ஆண்டுகளாக மற்ற டெலிகாம் நிறுவனங்களும் தங்களது சேவை கட்டணங்களை அவ்வப்போது குறைத்து வருகின்றன. ரூ.1,999 விலையில் ஜியோ வழங்கும் சேவையில் 180 நாட்கள் வேலிடிட்டி மற்றும் 125 ஜிபி அதிவேக டேட்டா வழங்கப்படுகிறது.

    முன்னதாக பி.எஸ்.என்.எல். நிறுவன பிரீபெயிட் சலுகைகளை அந்நிறுவனம் மாற்றியமைத்து, பழைய சலுகைகளில் கூடுதல் டேட்டா வழங்குகின்றன. இத்துடன் பிரீபெயிட் சலுகைகளுடன் தனிப்பட்ட ரிங்-பேக் டோன்களை வழங்குகின்றன.
    புதிதாய் லேப்டாப் அல்லது கணினி வாங்குவோருக்கு 20Mbps வேகத்தில் பிராட்பேன்ட் இணைப்பை இலவசமாக வழங்குவதாக பி.எஸ்.என்.எல். தெரிவித்துள்ளது.
     




    பிரீபெயிட் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க பல்வேறு புதிய சலுகைகள அறிவித்து வரும் பி.எஸ்.என்.எல். தற்சமயம், பிராட்பேன்ட் சேவையில் புதிய பயனர்களை சேர்க்க திட்டமிட்டுள்ளது.

    பி.எஸ்.என்.எல். அறிவித்திருக்கும் புதிய சலுகையில் அந்நிறுவனம் 20Mbps வேகத்தில் பிராட்பேன்ட் இணைப்பை இலவசமாக வழங்குவதாக தெரிவித்துள்ளது. அதன்படி இலவச இணைப்பு கம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப் வாங்குவோருக்கு வழங்கப்படுகிறது. 

    இந்த சலுகையில் தேர்வாகும் வாடிக்கையாளர்களுக்கு பி.எஸ்.என்.எல். சமீபத்தில் அறிமுகம் செய்த பி.எஸ்.என்.எல். பிபிஜி காம்போ யுஎல்டி 45 ஜிபி திட்டம் வழங்கப்படுகிறது.

    இந்த சலுகை 20Mbps வேகத்தில் பி.எஸ்.என்.எல். அறிவித்த பல்வேறு சலுகைகளுடன் சேர்த்து அறிவிக்கப்பட்டது. பி.எஸ்.என்.எல். பிபிஜி காம்போ யுஎல்டி 45 சலுகையின் கட்டணம் ரூ.99 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

    இது குறித்து டெலிகாம் டாக் வெளியிட்டிருக்கும் தகவல்களின் படி புதிதாய் லேப்டாப் அல்லது கம்ப்யூட்டர் வாங்குவோருக்கு பி.எஸ்.என்.எல். சலுகை இலவசமாக வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    புதிய பிபிஜி காம்போ யுஎல்டி 45 ஜிபி சலுகையில் ரூ.99 விலையில் தினமும் 1.5ஜிபி டேட்டா 20Mbps வேகத்தில் வழங்கப்படுகிறது. தினசரி டேட்டா அளவை கடந்ததும் இன்டர்நெட் வேகம் 1Mbps ஆக குறைக்கப்படும். இத்துடன் இந்த சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் வழங்கப்படுகிறது.

    இந்த சலுகையுடன் பி.எஸ்.என்.எல். பிபிஜி காம்போ யுஎல்டி 150 ஜிபி சலுகையில் ரூ.199, பி.எஸ்.என்.எல். பிபிஜி காம்போ யுஎல்டி 300 ஜிபி சலுகை ரூ.299 மற்றும் பி.எஸ்.என்.எல். பிபிஜி காம்போ யுஎல்டி 600ஜிபி டேட்டா ரூ.399 விலையில் மூன்று சலுகைகள் அறிவிக்கப்பட்டன. இதில் ரூ.199 சலுகையில் தினமும் 5 ஜிபி டேட்டா, 10 ஜிபி டேட்டா மற்றும் 20 ஜிபி டேட்டா தினமும் வழங்கப்படுகிறது.
    வோடபோன் ரெட் போஸ்ட்பெயிட் சலுகைகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. அதன் படி பயனர்களுக்கு அதிகபட்சம் 75 ஜிபி டேட்டா மற்றும் பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன.





    இந்திய டெலிகாம் சந்தையில் ரிலையன்ஸ் ஜியோ வரவுக்கு பின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களும் தங்களது சேவை கட்டணங்களை குறைத்து வருகின்றன. இதனால் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் மற்றும் மலிவு விலையில் டேட்டா உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. ஜியோவுடனான போட்டியை பலப்படுத்த வோடபோன் தனது போஸ்ட்பெயிட் சலுகைகளை மாற்றியமைத்து இருக்கிறது. 

    வோடபோன் ரெட் பேசிக் 399 சலுகை தற்சமயம் ரெட் என்டர்டெயின்மென்ட் என பெயர் மாற்றப்பட்டுள்ளது. மாற்றியமைக்கப்பட்ட சலுகையில் பயனர்களுக்கு 40 ஜிபி 3ஜி / 4ஜி டேட்டா வழங்கப்படுகிறது, முன்னதாக இந்த திட்டத்தில் 20 ஜிபி டேட்டா வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    இந்த சலுகையில் 200 ஜிபி வரை டேட்டா ரோல்ஓவர், ஒரு வருட வோடபோன் பிளே சந்தா, ஒரு வருட அமேசான் பிரைம் சந்தா உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இத்துடன் அன்லிமிட்டெட் உள்ளூர் மற்றும் தேசிய அழைப்புகள், ரோமிங் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

    வோடபோன் ரெட் டிராவலர் ரூ.499 திட்டம் தற்சமயம் ரெட் என்டர்டெயின்மென்ட் பிளஸ் என பெயர் மாற்றப்பட்டுள்ளது. புதிய திட்டத்தில் தற்சமயம் 75 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. முன்னதாக இந்த சலுகையில் 40 ஜிபி டேட்டா வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 



    டேட்டாவுடன் அன்லிமிட்டெட் உள்ளூர், வெளியூர் அழைப்புகள், அன்லிமிட்டெட் ரோமிங் மற்றும் 200 ஜிபி டேட்டா ரோல்ஓவர், ஒரு வருட வோடபோன் பிளே சந்தா, ஒரு வருட அமேசான் பிரைம் சந்தா உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இத்துடன் ரூ.300 மதிப்புள்ள டிவைஸ் ப்ரோடெக்ஷன் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது.

    ரிலையன்ஸ் ஜியோ ரூ.199 போஸ்ட்பெயிட் சலுகையில் மாதம் 25 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் அழைப்புகள், அன்லிமிட்டெட் எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. மாதம் நிர்ணயிக்கப்பட்ட 25 ஜிபி டேட்டா நிறைவுற்றதும், ஒரு ஜிபி டேட்டா ரூ.20 கட்டணத்தில் தொடர்ந்து அதிவேக டேட்டா பயன்படுத்த முடியும்.

    ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.399 மற்றும் ரூ.499 போஸ்ட்பெயிட் சலுகைகளும் மாற்றியமைக்கப்பட்டன. இவற்றில் அன்லிமிட்டெட் அழைப்புகள், அன்லிமிட்டெட் ரோமிங் வழங்கப்படுகிறது. ரூ.399 சலுகையில் 20 ஜிபி டேட்டா, ரூ.499-க்கு 40 ஜிபி டேட்டா, ஒரு வருட அமேசான் பிரைம் சந்தா உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
    ரிலையன்ஸ் ஜியோ ஏற்கனவே வழங்கி வந்த ரூ.299 பிரீபெயிட் சலுகை மாற்றியமைக்கப்பட்டு தற்சமயம் முன்பை விட கூடுதல் டேட்டா வழங்குகிறது.




    ரிலையன்ஸ் ஜியோ பயனர்களுக்கு அந்நிறுவனம் டபுள் தமாக்கா சலுகையை சமீபத்தில் அறிவித்தது. இந்த சலுகையில் பயனர்களுக்கு தினமும் 3 ஜிபி டேட்டா வழங்கப்பட்டது. இதுதவிர ரூ.299 சலுகை மாற்றியமைக்கப்பட்டு கூடுதலாக 1 ஜிபி 4ஜி டேட்டா வழங்குகிறது.

    முன்னதாக ரூ.299 சலுகையில் பயனர்களுக்கு தினமும் 3 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், 100 எஸ்எம்எஸ், ஜியோ செயலிகளை பயன்படுத்தும் வசதி உள்ளிட்டவை வழங்கப்பட்டது. தற்சமயம் இதே சலுகையில் பயனர்கள் தினமும் 4.5 ஜிபி டேட்டா மற்றும் இதர சலுகைகளை 28 நாட்களுக்கு பயன்படுத்த முடியும். 

    புதிய அறிவிப்பின் கீழ் ஜூன் 30-ம் தேதிக்குள் ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு இந்த சலுகைகள் வழங்கப்படுகிறது. உலக கோப்பை கால்பந்து போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், புதிய அறிவிப்பு கால்பந்து ப்ரியர்களுக்கு பயன்தரும் வகையில் அமைந்துள்ளது. ரூ.299 சலுகை தவிர ரிலையன்ஸ் ஜியோவின் இதர பிரீபெயிட் சலுகைகளும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

    ரிலையன்ஸ் ஜியோ ரூ.149, ரூ.249, ரூ.399 மற்றும் ரூ.449 பிரீபெயிட் சலுகைகளில் பயனர்களுக்கு தினமும் 3 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இந்த சலுகைகளின் வேலிடிட்டி மாற்றப்படவில்லை. ரூ.198, ரூ.398, ரூ.448 மற்றும் ரூ.498 சலுகைகளில் தினமும் 3.5 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இந்த சலுகைகளுடன் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்எம்எஸ் மற்றும் ஜியோ செயலிகளை பயன்படுத்தும் வசதி வழங்கப்படுகிறது. 

    ரூ.799 சலுகையில் பயனர்களுக்கு தினமும் 5.5 ஜிபி மற்றும் 6.5 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இத்துடன் ரூ.300 மற்றும் அதற்கும் அதிக விலையில் ரீசார்ஜ் செய்வோருக்கு ரூ.100 தள்ளுபடி வழங்கப்படுகிறது. ரூ.300 மற்றும் அதற்கும் குறைந்த விலையில் ரீசார்ஜ் செய்வோருக்கு மைஜியோ செயலியின் போன்பெ வாலெட்டில் 20% தள்ளுபடி வழங்கப்படுகிறது.
    ஐடியா நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு அந்நிறுவனம் 30 ஜிபி வரை இலவச டேட்டா வழங்குகிறது. இதை பெற என்ன செய்ய வேண்டும் என தொடர்ந்து பார்ப்போம்.




    ஐடியா செல்லுலார் நிறுவனம் கடந்த மாதம் ஆறு வட்டாரங்களில் வோல்ட்இ சேவைகளை துவங்கியது பின் கூடுதலாக ஒன்பது வட்டாரங்கள் மற்றும் இறுதியாக ஐந்து வட்டாரங்களில் வோல்ட்இ சேவைகளை துவங்கியது. இந்தியா முழுக்க 20 வட்டாரங்களில் தற்சமயம் ஐடியா வோல்ட்இ சேவைகள் வழங்கப்படுகிறது. 

    இந்நிலையில் ஐடியா வாடிக்கையாளர்களுக்கு 10 ஜிபி இலவச டேட்டா வழங்குவதாக அறிவித்துள்ளது. முதல் வோல்ட்இ சேவைகளை மேற்கொள்வோருக்கு 10 ஜிபி டேட்டாவும், நான்கு வாரங்களுக்கு பின் சேவை குறித்த விமர்சனங்களை வழங்குவோருக்கு 10 ஜிபி டேட்டா மற்றும் எட்டாவது வாரத்தில் மீண்டும் விமர்சனம் வழங்குவோருக்கு 10 ஜிபி டேட்டா என மொத்தம் 30 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.

    வோல்ட்இ சேவைக்கு அப்கிரேடு செய்யும் ஐடியா வாடிக்கையாளர்களுக்கு ஹெச்டி தரத்தில் வாய்ஸ் கால்கள், அதிவேக கால் செட்டப் நேரம், 4ஜி டேட்டா உள்ளிட்ட சேவைகளை பயன்படுத்த முடியும். இத்துடன் வோல்ட்இ சேவையில் அழைப்புகளை மேற்கொள்ள பயனர்கள் எவ்வித கூடுதல் கட்டணும் செலுத்த வேண்டியதில்லை. இதற்கான கட்டணம் பயனர் தேர்வு செய்திருக்கும் திட்டத்தில் சேர்க்கப்பட்டிருக்கும்.

    இத்துடன் 4ஜி வோல்ட்இ நெட்வொர்க் கிடைக்காத இடத்தில் பயனர்கள் தானாக 2ஜி/3ஜி நெட்வொர்க்-க்கு மாற்றப்பட்டு விடும். தற்சமயம் தேர்வு செய்யப்பட்ட ஸ்மார்ட்போன்களில் மட்டும் ஐடியா வோல்ட்இ வழங்கப்படும் நிலையில் விரைவில் பல்வேறு நிறுவன சாதனங்களில் வோல்ட்இ வழங்கப்பட இருக்கிறது.

    ஐடியா வாடிக்கையாளர்களுக்கு வோல்ட்இ அம்சம் தானாக ஆக்டிவேட் செய்யப்படும் நிலையில், இவ்வாறு ஆக்டிவேட் ஆகாத பட்சத்தில் பயனர்கள் ‘ACT VOLTE’ என டைப் செய்து 12345 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும். வோல்ட்இ சேவையை பயன்படுத்துவோர் தங்களது ஐடியா 4ஜி சிம் கார்டை ஸ்மார்ட்போனின் சிம் ஸ்லாட் 1-இல் போட வேண்டும்.
    இந்தியாவில் ஐபோன் வாங்குவோரை கவர ஆப்பிள் நிறுவனம் சார்பில் அதிரடி திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய சலுகை குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



    ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்து வரும் ஐபோன்களில் தேர்வு செய்யப்பட்ட மாடல்களுக்கு முன்பணம் இல்லாமல், குறைந்த வட்டியில் மாத தவனை முறை வசதி வழங்கப்படுகிறது.

    ஐபோன் 7, ஐபோன் 7 பிளஸ், ஐபோன் 8, ஐபோன் 8 பிளஸ் மற்றும் ஐபோன் X போன்ற மாடல்களுக்கு இந்த சலுகை பொருந்தும் என்பதோடு பயனர்கள் 18 மாதங்களுக்கு மாத தவனை செலுத்த வேண்டும். இந்தியாவில் வழங்கப்பட்ட தனியார் மற்றும் பொதுத் துறை வங்கிகளின் கிரெடிட் கார்டுகளுக்கு வழங்கப்படுகிறது.

    இத்துடன் கேப்பிட்டல் ஃபர்ஸ்ட், ஹெச்டிபி நிதி சேவைகள் மற்றும் ஹெச்டிஎஃப்சி வங்கி சார்பில் வழங்கப்பட்ட டெபிட் கார்டுகளுக்கும் தவனை முறை வசதி வழங்கப்படுகிறது. 

    மேலும் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ், ஆக்சிஸ் வங்கி, பேங்க் ஆஃப் பரோடா, ஹெச்டிஎஃப்சி வங்கி, ஹெச்எஸ்பிசி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, இண்டஸ்இன்ட் வங்கி, ஜெ&கே வங்கி, கோடாக் மஹேந்திரா வங்கி, ஆர்பிஎல் வங்கி, ஸ்டேன்டர்டு சேட்டர்டு வங்கி, பாரத ஸ்டேட் வங்கி, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா மற்றும் யெஸ் பேங்க் உள்ளிட்ட வங்கிகளின் கிரெடிட் கார்டுகளுக்கும் மாத தவனை முறை வசதி வழங்கப்படுகிறது.



    அனைத்து சலுகைகள் மற்றும் முழு விவரங்கள் இந்தியாஸ்டோர் (indiaistore.com) வலைத்தளத்தில் பட்டியலிடப்பட்டிருக்கிறது. இதில் மாத தவனையை கணக்கிட பிரத்யேக கால்குலேட்டர் இடம்பெற்றிருக்கிறது. ஆப்பிள் இந்த சலுகையை அறிவித்திருக்கும் ஐபோன் மாடல்கள் மற்றும் அவற்றுக்கான மாத தவனை சார்ந்த விவரங்களை இந்த வலைத்தளத்தில் தெரிந்து கொள்ள முடியும்.

    இத்துடன் ஆக்சிஸ் வங்கி கிரெடிட் கார்டு, சிட்டி கிரெடிட் கார்டு, ஹெச்டிஎஃப்சி கிரெடிட் கார்டு, ஹெச்டிஎஃப்சி டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு, ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டு மற்றும் ஸ்டான்டர்டு சேட்டர்டு கிரெடிட் கார்டுகளுக்கு கூடுதலாக 5% கேஷ்பேக் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

    முதல்முறை அறிவிக்கப்பட்டு இருக்கும் சலுகையில் 18 மாதங்களுக்கு தவனை முறையை தேர்வு செய்வோருக்கு மட்டும் கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இந்த காலக்கட்டத்தில் ஒரு கார்டுக்கு இரண்டு பரிமாற்றங்களை செய்ய அனுமதிக்கப்படுகிறது, இதற்கான கேஷ்பேக் தொகை பரிமாற்றம் நடைபெற்றதில் இருந்து 120 நாட்களுக்குள் கிரெடிட் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஆஃப்லைன் விற்பனை மையங்களில் வழங்கப்படும் இந்த சலுகை ஜூன் 15-ம் தேதி முதல் செப்டம்பர் 30-ம் தேதி வரை வழங்கப்படுகிறது. தற்சமயம் ஆப்பிள் மற்றும் சிட்டிபேங்க் இணைந்து ஐபேட், மேக்புக் மற்றும் ஆப்பிள் வாட்ச் சாதனங்களை வாங்குவோருக்கு ரூ.10,000 வரை கேஷ்பேக் வழங்குகிறது. இந்த சலுகை சிட்டிபேங்க் கார்டுகளை வைத்திருப்போருக்கு மட்டும் ஜூலை 31, 2018 வரை வழங்கப்படுகிறது.
    ஏர்டெல் நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு அந்நிறுவனம் தனது ரூ.99 சலுகையை மாற்றியமைத்துள்ளது. அந்த வகையில் முன்பை விட இம்முறை இருமடங்கு டேட்டா வழங்கப்படுகிறது.

    ரிலையன்ஸ் ஜியோவுக்கு போட்டி ஏற்படுத்தும் வகையில், பாரதி ஏர்டெல் நிறுவனம் தனது ரூ.99 பிரீபெயிட் சலுகையை மாற்றியமைத்துள்ளது.

    28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ரூ.99 சலுகையில் ஏர்டெல் நிறுவனம் முன்னதாக 1 ஜிபி டேட்டா வழங்கி வந்தது. அந்த வகையில் ரூ.99 சலுகைக்கு ரீசார்ஜ் செய்வோருக்கு இனி 2 ஜிபி டேட்டா வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏர்டெல் போன்றே ரிலையன்ஸ் ஜியோ பயனர்களுக்கு ரூ.98 சலுகையில் 2 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இத்துடன் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் மற்றும் 300 எஸ்எம்எஸ் 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.

    போட்டியை மேலும் கடுமையாக்க பிஎஸ்என்எல் நிறுவனமும் தன் பங்கிற்கு டேட்டா சுனாமி சலுகையில் தன் பயனர்களுக்கு தினமும் 1.5 ஜிபி டேட்டாவை 26 நாட்களுக்கு வழங்குகிறது.

    மேம்படுத்தப்பட்ட ஏர்டெல் சலுகை பயனர்களுக்கு வழங்கப்படுவதாக டெலிகாம் டாக் தெரிவித்துள்ளது. இந்த சலுகையில் அன்லிமிட்டெட் உள்ளூர், வெளியூர் மற்றும் ரோமிங் அழைப்புகள், தினமும் 100 எஸ்எம்எஸ் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. 

    ஜியோ வழங்கும் ரூ.98 சலுகையில் பயனர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் மற்றும் 300 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. இது ஏர்டெல் வழங்கும் 2500-க்கும் அதிக எஸ்எம்எஸ்-களை விட அதிகம் ஆகும். அன்லிமிட்டெட் வாய்ஸ் காலிங்-இல் ஏர்டெல் மற்றும் ஜியோ சார்பில் எவ்வித கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை.

    ஏர்டெல் தவிர ஐடியா செல்லுலார் நிறுவனமும் ரூ.109 விலையில் புதிய சலுகையை சில வட்டாரங்களில் அறிவித்தது. இதில் பயனர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், 1 ஜிபி டேட்டா 14 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. 
    ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவன நேரலை டிவி செயலிகளில் 2018 உலக கோப்பை கால்பந்து போட்டிகளை இலவசமாக லைவ் ஸ்டிரீமிங் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவன நேரலை டிவி செயலிகள் - ஜியோ டிவி ஆப் மற்றும் ஏர்டெல் டிவி செயலிகளில் உலக கோப்பை கால்பந்து போட்டிகளை இலவசமாக நேரலையில் ஸ்ட்ரீம் செய்ய முடியும் என அறிவித்துள்ளன.

    ரஷ்யாவில் நடைபெற இருக்கும் 2018 உலக கோப்பை கால்பந்து போட்டிகள் ஜூன் 14-ம் தேதி துவங்கி ஜூலை 15-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதனை ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் சேவைகளை பயன்படுத்துவோர் இலவசமாக பார்த்து ரசிக்க முடியும். கூடுதலாக இந்தியா மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகளிடையே நடைபெறும் டெஸ்ட் கிரிக்கெட் தொடரையும் இலவசமாக பார்க்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஏர்டெல் டிவி செயலியில் உலக கோப்பை 2018 கால்பந்து போட்டிகளை வாடிக்கையாளர்கள் வெவ்வேறு உள்ளூர் மொழிகளில் பார்த்து ரசிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் போட்டி அட்டவணை விவரங்களும் வங்கப்படுகிறது. போட்டி மட்டுமின்றி, இதர சுவாரஸ்ய வீடியோக்களையும் செயலியில் பார்த்து ரசிக்க முடியும். இலவச சேவைகளை பெற பயனர்கள் தங்களின் ஏர்டெல் டிவி செயலியை அப்டேட் செய்ய வேண்டும்.


    கோப்பு படம்

    இதேபோன்று ஜியோ டிவி செயலியிலும் பிரீமியம் ஸ்போர்ட் தரவுகளை இலவசமாக பார்த்து ரசிக்கும் வசதி வழங்கப்படுகிறது. ஏற்கனவே குறிப்பிடப்பட்டதை போன்று உலக கோப்பை கால்பந்து போட்டிகள் மட்டுமின்றி இந்தியா ஆஃப்கானிஸ்தான் அணிகள் விளையாடும் டெஸ்ட் கிரிகெட் போட்டிகளையும் இலவசமாக பார்த்து ரசிக்க முடியும். 

    ஜியோ டிவி செயலியை பயன்படுத்துவோர் எண்ணிக்கை பத்து கோடிகளை கடந்து இருப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. ஏர்டெல் டிவி செயலியை சுமார் ஐந்து கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர். சமீபத்தில் ஏர்டெல் டிவி ஆப் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரை இலவசமாக பயன்படுத்த முடியும் என ஏர்டெல் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
    ரிலையன்ஸ் ஜியோ நிறுவன பிரீபெயிட் சலுகைகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. மேம்படுத்தப்பட்ட சலுகைகளில் கிடைக்கும் கூடுதல் டேட்டா விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
    புதுடெல்லி:

    ரிலையன்ஸ் ஜியோ டேட்டா சலுகைகள் இந்த ஆண்டு துவக்கத்தில் மாற்றியமைக்கப்ப்டடன. எனினும் ஏர்டெல் சமீபத்தில் அறிவித்த கூடுதல் சலுகைகளுக்கு போட்டியாக ரிலையன்ஸ் ஜியோ புதிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.

    ஜியோ டபுள் தமாக்கா என அழைக்கப்படும் புதிய சலுகையில் வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யப்பட்ட சலுகைகளில் மேற்கொள்ளும் பிரீபெயிட் ரீசார்ஜ்களில் கூடுதலாக 1.5 ஜிபி டேட்டா கூடுதலாக வழங்கப்படுகிறது. ஜூன் 12-ம் தேதி முதல் ஜூன் 30-ம் தேதி வரை இந்த சலுகையை பயனர்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

    ஏர்டெல் ரூ.399 மற்றும் ரூ.149 சலுகைகளில் கூடுதல் டேடட்டா வழங்குவதாக அறிவித்த நிலையில், ஜியோ புதிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. ஜியோ டபுள் தமாக்கா சலுகையுடன் ரூ.499 விலையில் புதிய சலுகையை அறிவித்துள்ளது. மூன்று மாதங்களுக்கும் அதிக வேலிடிட்டி கொண்டிருக்கும் புதிய சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 3.5 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.

    ஜியோ டபுள் தமாக்கா சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 1.5 ஜிபி டேட்டா கூடுதலாக வழங்கப்படுகிறது. அந்த வகையில் ரூ.149, ரூ.349 மற்றும் ரூ.449 சலுகைகளை ரீசார்ஜ் செய்யும் போது 1.5 ஜிபி டேட்டா வழங்கப்பட்ட நிலையில், தற்சமயம் தினமும் 3 ஜிபி டேட்டா பெற முடியும்.



    இத்துடன் தினமும் 2 ஜிபி டேட்டா வழங்கும் ரூ.198, ரூ.398 மற்றும் ரூ.498 சலுகைகளில் தினமும் 3.5 ஜிபி டேட்டா வழங்கபப்டுகிறது. இதேபோன்று ரூ.299 (தினமும் 3 ஜிபி), ரூ.509 (தினமும் 4 ஜிபி) மற்றும் ரூ.799 (தினமும் 5 ஜிபி) சலுகைகளில் கூடுதலாக 1.5 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. அந்த வகையில் இந்த சலுகைகளை ரீசார்ஜ் செய்யும் போது பயனர்களுக்கு தினமும் முறையே 4.5 ஜிபி, 5.5 ஜிபி மற்றும் 6.5 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. 

    கூடுதல் டேட்டா அறிவிக்கப்பட்டு இருக்கும் சலுகைகளின் வேலிடிட்டியில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. தினசரி டேட்டா அளவு நிறைவுற்றதும், டேட்டா வேகம் குறைக்கப்படும். இத்துடன் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்எம்எஸ் மற்றும் ஜியோ செயலிகளை பயன்படுத்த முடியும்.

    ஜியோ அறிவித்து இருக்கும் புதிய ரூ.499 சலுகையில் 91 நாட்களுக்கு தினமும் 3.5 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாத வாக்கில் ரிலையன்ஸ் ஜியோ ரூ.499 விலையில் அறிவித்த சலுகையின் விலை சமீபத்தில் ரூ.449 ஆக குறைத்தது. முன்னதாக பயனர்கள் பெற்றிருந்த வவுச்சர்களை பயன்படுத்தி புதிய சலுகைகளை ரீசார்ஜ் செய்து கொள்ள முடியும். 

    மேலும் ரூ.300-க்கும் அதிக விலை கொடுத்து மைஜியோ செயலியில் ரீசார்ஜ் செய்து போன்பெ மூலம் பணம் செலுத்தினால் ரூ.100 வரை தள்ளுபடி பெற முடியும். ரூ.300-க்கும் குறைந்த கட்டணம் செலுத்தி ரீசார்ஜ் செய்யும் போது 20 சதவிகிதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.
    ஆப்பிள் இந்தியா மற்றும் சிட்டிபேங்க் இணைந்து ஆப்பிள் நிறுவன சாதனங்களை வாங்குவோருக்கு அதிகபட்சம் ரூ.10,000 வரை சலுகை வழங்குகின்றன.
    புதுடெல்லி:

    ஆப்பிள் இந்தியா மற்றும் சிட்டிபேங்க் இணைந்து ஆப்பிள் சாதனங்களை வாங்குவோருக்கு கேஷ்பேக் வழங்குகின்றன.

    அந்த வகையில் ஐபேட், ஆப்பிள் வாட்ச், ஆப்பிள் பென்சில் மற்றும் பேக்புக் சாதனங்களை வாங்குவோருக்கு சிறப்பு கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இன்று (ஜூன் 11) துவங்கும் இந்த சலுகை ஜூலை 31-ம் தேதி வரை வழங்கப்படுகிறது. சிட்டி கார்ப்பரேட் கார்டுகளை தவிர இந்தியாவில் வழங்கப்பட்ட அனைத்து சிட்டிபேங்க் கிரெடிட் கார்டுகளை கொண்டு பணம் செலுத்தி இந்த சலுகையை பெற முடியும்.

    கேஷ்பேக் சலுகை ஒரு கிரெடிட் கார்டுக்கு ஒருமுறை மட்டுமே வழங்கப்படும். வாடிக்கையாளர்கள் மாத தவணை முறையை (EMI) தேர்வு செய்தாலும் பெற முடியும். கேஷ்பேக் தொகை பரிமாற்றம் செய்தது முதல் 90 நாட்களுக்குள் கிரெடிட் கார்டு கணக்கில் சேர்க்கப்பட்டு விடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



    புதிய கேஷ்பேக் சலுகையின் கீழ் ரூ.10,000 கேஷ்பேக் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து மேக்புக் வேரியன்ட்கள், அனைத்து வித ஐபேட் சாதனங்களுக்கும் ரூ.5,000 வரை கேஷ்பேக், அனைத்து வித ஆப்பிள் வாட்ச் மாடல்களுக்கும் ரூ.5,000 கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இதேபோன்று ஆப்பிள் பென்சில் வாங்குவோருக்கு ரூ.1,000 கேஷ்பேக் வழங்கப்படுகிறது.

    கேஷ்பேக் சலுகையை சேர்த்தால் என்ட்ரி-லெவல் மேக்புக் ஏர் விலை ரூ.67,200, ஐந்தாம் தலைமுறை என்ட்ரி லெவல் ஐபேட் விலை ரூ.23,000-க்கு பெற முடியும். இதே போன்று ஆப்பிள் வாட்ச் 1 சாதனத்தை ரூ.18,950, ஆப்பிள் பென்சில் ரூ.6,600 விலையில் வாங்கிட முடியும்.

    புதிய சலுகை ஆப்பிள் அதிகாரப்பூர்வ ஆஃப்லைன் விற்பனையாளர்களிடம் மட்டுமே வழங்கப்படுகிறது. இதற்கான பரிமாற்றங்கள் ப்ளூடஸ் / பைன் லேப்ஸ் பிஓஎஸ் டெர்மினல்களில் மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டும். இத்துடன் மற்ற சிட்டிபேங்க் சலுகைகளை சேர்க்க முடியாது.
    ×