search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    1.5 ஜிபி கூடுதல் டேட்டா வழங்கும் ரிலையன்ஸ் ஜியோ

    ரிலையன்ஸ் ஜியோ நிறுவன பிரீபெயிட் சலுகைகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. மேம்படுத்தப்பட்ட சலுகைகளில் கிடைக்கும் கூடுதல் டேட்டா விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
    புதுடெல்லி:

    ரிலையன்ஸ் ஜியோ டேட்டா சலுகைகள் இந்த ஆண்டு துவக்கத்தில் மாற்றியமைக்கப்ப்டடன. எனினும் ஏர்டெல் சமீபத்தில் அறிவித்த கூடுதல் சலுகைகளுக்கு போட்டியாக ரிலையன்ஸ் ஜியோ புதிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.

    ஜியோ டபுள் தமாக்கா என அழைக்கப்படும் புதிய சலுகையில் வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யப்பட்ட சலுகைகளில் மேற்கொள்ளும் பிரீபெயிட் ரீசார்ஜ்களில் கூடுதலாக 1.5 ஜிபி டேட்டா கூடுதலாக வழங்கப்படுகிறது. ஜூன் 12-ம் தேதி முதல் ஜூன் 30-ம் தேதி வரை இந்த சலுகையை பயனர்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

    ஏர்டெல் ரூ.399 மற்றும் ரூ.149 சலுகைகளில் கூடுதல் டேடட்டா வழங்குவதாக அறிவித்த நிலையில், ஜியோ புதிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. ஜியோ டபுள் தமாக்கா சலுகையுடன் ரூ.499 விலையில் புதிய சலுகையை அறிவித்துள்ளது. மூன்று மாதங்களுக்கும் அதிக வேலிடிட்டி கொண்டிருக்கும் புதிய சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 3.5 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.

    ஜியோ டபுள் தமாக்கா சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 1.5 ஜிபி டேட்டா கூடுதலாக வழங்கப்படுகிறது. அந்த வகையில் ரூ.149, ரூ.349 மற்றும் ரூ.449 சலுகைகளை ரீசார்ஜ் செய்யும் போது 1.5 ஜிபி டேட்டா வழங்கப்பட்ட நிலையில், தற்சமயம் தினமும் 3 ஜிபி டேட்டா பெற முடியும்.



    இத்துடன் தினமும் 2 ஜிபி டேட்டா வழங்கும் ரூ.198, ரூ.398 மற்றும் ரூ.498 சலுகைகளில் தினமும் 3.5 ஜிபி டேட்டா வழங்கபப்டுகிறது. இதேபோன்று ரூ.299 (தினமும் 3 ஜிபி), ரூ.509 (தினமும் 4 ஜிபி) மற்றும் ரூ.799 (தினமும் 5 ஜிபி) சலுகைகளில் கூடுதலாக 1.5 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. அந்த வகையில் இந்த சலுகைகளை ரீசார்ஜ் செய்யும் போது பயனர்களுக்கு தினமும் முறையே 4.5 ஜிபி, 5.5 ஜிபி மற்றும் 6.5 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. 

    கூடுதல் டேட்டா அறிவிக்கப்பட்டு இருக்கும் சலுகைகளின் வேலிடிட்டியில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. தினசரி டேட்டா அளவு நிறைவுற்றதும், டேட்டா வேகம் குறைக்கப்படும். இத்துடன் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்எம்எஸ் மற்றும் ஜியோ செயலிகளை பயன்படுத்த முடியும்.

    ஜியோ அறிவித்து இருக்கும் புதிய ரூ.499 சலுகையில் 91 நாட்களுக்கு தினமும் 3.5 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாத வாக்கில் ரிலையன்ஸ் ஜியோ ரூ.499 விலையில் அறிவித்த சலுகையின் விலை சமீபத்தில் ரூ.449 ஆக குறைத்தது. முன்னதாக பயனர்கள் பெற்றிருந்த வவுச்சர்களை பயன்படுத்தி புதிய சலுகைகளை ரீசார்ஜ் செய்து கொள்ள முடியும். 

    மேலும் ரூ.300-க்கும் அதிக விலை கொடுத்து மைஜியோ செயலியில் ரீசார்ஜ் செய்து போன்பெ மூலம் பணம் செலுத்தினால் ரூ.100 வரை தள்ளுபடி பெற முடியும். ரூ.300-க்கும் குறைந்த கட்டணம் செலுத்தி ரீசார்ஜ் செய்யும் போது 20 சதவிகிதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.
    Next Story
    ×