search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94549"

    வோடபோன் நிறுவன போஸ்ட்பெயிட் பயனர்களுக்கு புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய சலுகையில் பயனர்களுக்கு 90 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது. #Vodafone



    வோடபோன் நிறுவன பிரீபெபெயிட் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு புதிய சலுகைகளையும், பழைய சலுகைகளை மாற்றியமைப்பதை பல்வேறு டெலிகாம் நிறுவனங்கள் சமீப காலங்களில் அடிக்கடி செய்து வருகின்றன. எனினும், போஸ்ட்பெயிட் சலுகை சார்ந்த அறிவிப்புகள் வெளியாகி சிலகாலம் ஆகிவிட்டது என்றே கூறலாம்.

    இந்த கவலையை போக்கும் விதமாக வோடபோன் புதிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. வோடபோன் அறிவித்திருக்கும் புதிய புதிய போஸ்ட்பெயிட் சலுகையில் பயனர்களுக்கு ரூ.11,498 மதிப்பிலான பலன்கள் வழங்கப்படுகிறது. இதுகுறித்து டெலிகாம் டாக் வெளியிட்டிருக்கும் தகவல்களில் மாதம் ரூ.649 கட்டணத்தில் ரெட் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

    பலன்களை பொருத்தவரை எவ்வித கட்டுப்பாடும் இன்றி அன்லிமிட்டெட் உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள் மற்றும் அன்லிமிட்டெட் ரோமிங் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. டேட்டா பலன்களை பொருத்தவரை திட்டத்தில் மாதம் 90 ஜி.பி. டேட்டா, மற்றும் 200 ஜி.பி. வரை டேட்டா ரோல்ஓவர் சலுகையும் வழங்கப்படுகிறது.



    இத்துடன் 12 மாதங்களுக்கான வோடபோன் பிளே சந்தாவும் இச்சலுகையில் வழங்கப்படுகிறது. இதை கொண்டு பயனர்கள் நேரலை டி.வி. மற்றும் திரைப்படங்களை இலவசமாக பார்த்து ரசிக்க முடியும். இத்துடன் ஒரு வருடத்திற்கான அமேசான் பிரைம் சந்தாவும் வழங்கப்படுகிறது. 

    இவைதவிர புதிய சலுகையை தேர்வு செய்வோர் ஐபோன் ஃபார்எவர் சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ.649 மற்றும் அதற்கும் அதிக கட்டணம் கொண்ட போஸ்ட்பெயிட் திட்டங்களுக்கு இச்சலுகை வழங்கப்படுகிறது. இதில் ஐபோனை தவறுதலாக கீழே போடும் போது ஏற்படும் சேதத்தை சரி செய்து கொள்ளலாம். 

    இச்சலுகையில் அதிகபட்சம் ரூ.15,000 வரையிலான தொகைக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். எனினும் ஐபோன் ஃபார்எவர் சலுகையில் ஐபோனினை சரி செய்யவோ அல்லது மாற்றிக் கொள்ளவோ ரூ.2000 மற்றும் அதற்கான ஜி.எஸ்.டி. வரியை செலுத்த வேண்டியிருக்கும். 

    இத்துடன் பழைய ஐபோன்களை கொடுத்து புதிய ஐபோனினை வாங்கிக்கொள்ளும் சலுகையும் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் ஐபோன் 5எஸ் மற்றும் அதற்கும் பழைய ஐபோன்களை கொடுத்து வாடிக்கையாளர்கள் புதிய ஐபோனினை பெற்றுக் கொள்ளலாம். இதில் பயனர்கள் தங்களது ஐபோனினை அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளரிடம் வாங்கியிருப்பதோடு ஐபோன் 18 மாதங்களுக்குள் வாங்கியதாக இருக்க வேண்டும்.
    புழல் சிறையில் குற்றவாளிகளுக்கு சிறப்பு வசதிகளை செய்து கொடுக்க ரூ.2 லட்சம் வரையில் லஞ்சம் கொடுக்கப்படுவதாக சிறை காவலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
    செங்குன்றம்:

    புழல் சிறையில் சட்ட விரோதமாக பல்வேறு செயல்கள் நடைபெறுவதாக குற்றச்சாட்டு இருந்து வருகிறது.

    இந்த நிலையில் சிறையில் குற்றவாளிகளுக்கு சிறப்பு வசதிகளை செய்து கொடுக்க ரூ.2 லட்சம் வரையில் லஞ்சம் கொடுக்கப்படுவதாக சிறை காவலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    இது தொடர்பாக 20-க்கும் மேற்பட்ட சிறை காவலர்கள் போலீஸ் டி.ஜி.பி. மற்றும் சிறை துறை தலைவர் ஆகியோருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறி இருப்பதாவது:-

    புழல் மத்திய சிறையில் சிறை விதிகளுக்கு புறம்பாகவும், எதிராகவும் பணம் படைத்த குற்றவாளிகளுக்கும், தீவிரவாதிகளுக்கும் குறிப்பிட்ட சில ரவுடிகளுக்கும், ஆதரவாக சிறை நிர்வாகம் செயல்பட்டதன் விளைவாக சிறை அபாய கட்டத்தை நெருங்கி விட்டது.

    பணம் படைத்த மற்றும் பல கோடி மோசடி வழக்குகளில் (குட்கா வழக்கில் உள்ள குற்றவாளிகளுக்கும்) செல்போன், கஞ்சா, சிகரெட் மற்றும் பலவிதமான சுவையான உணவுகள் வழங்கப்படுகின்றன. இதற்கு சிறை துறை அதிகாரிகள் உதவி செய்கிறார்கள்.

    குற்றவாளிகளை சந்திக்க வரும் நண்பர்கள், உறவினர்கள் சிறப்பு நேர்காணல் என்ற பெயரில் தனியாக சந்திக்க அனுமதிக்கப்படுகிறார்கள். அது போன்று வருபவர்களிடமும் பணம் வசூலிக்கப்படுகிறது.

    ஒரு குற்றவாளிக்கு சலுகைகள் கிடைக்க வேண்டுமென்றால் முதல் கட்டமாக ரூ.2 லட்சம் கொடுக்க வேண்டும். போதைப் பொருள் கடத்தல், கொலை வழக்கு கைதிகள், தீவிரவாதிகளுக்கும் சலுகைகள் காட்டப்படுகின்றன.

    அவர்கள் அடைக்கப்பட்டுள்ள பகுதி சட்ட விரோத செயல்களுக்கு கூடாரமாக இருந்து வருகிறது. எந்த ஒரு சிறைக் காவலரும் அங்கு செல்ல இயலாது. தீவிரவாதிகள் அவர்களை உள்ளே அனுமதிக்கவில்லை.

    போதைப் பொருள் கடத்தல் குற்றவாளிகள் சிறையின் உள்ளே இருந்தபடியே வெளிநாடுகளுக்கு போதை பொருளை கடத்தி வருகிறார்கள். இவர்களுக்கு தேவையான செல்போன்களையும் சிம்கார்டுகளையும் கடத்தி சென்றும் சிறைக்கு வெளியில் இருந்து வீசியும் உதவிகள் செய்யப்படுகின்றன.

    தீவிரவாதிகள் எங்களில் பலரை கொலை செய்து விடுவதாகவும் மீறி அவர்களை எதிர்த்து செயல்பட்டால் பணியிட மாற்றம் செய்து விடுவதாகவும் மிரட்டுகிறார்கள். ஏற்கனவே இது போன்ற நேர்மையாக இருந்த பல சிறைக் காவலர்களை பணியிட மாற்றம் செய்துள்ளதாகவும் கூறி மிரட்டுகிறார்கள்.

    இதுபற்றி சிறை துறை அதிகாரியிடம் கூறியபோது இவையெல்லாம் அரசு சம்பந்தப்பட்டது. நீங்கள் இதை கண்டு கொள்ள வேண்டாம் என்று புறக்கணித்து விட்டார். மேலும் தீவிரவாதிகள் சம்பந்தப்பட்டவை எல்லாம் நாம் எதுவும் செய்ய இயலாது. காவல் துறைதான் செய்ய வேண்டும். அதனால் உங்கள் பணிகளை மட்டும் நீங்கள் செய்யுங்கள் எனக் கூறி விட்டார்.

    புழல் சிறையில் நடக்கும் முறைகேடுகளுக்கு அதிகாரிகள் துணை போவது பற்றி நேரடியாக எங்களிடம் ரகசிய விசாரணை மேற்கொண்டால் நாங்கள் எங்களிடம் உள்ள பல ஆதாரங்களை தர தயாராக உள்ளோம். இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #PuzhalJail
    வோடபோன் நிறுனத்தில் இணையும் புதிய வாடிக்கையாளர்களுக்கு 56 நாட்கள் வேலிடிட்டி கொண்ட புதிய சலுகை அறிவிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #Vodafone



    வோடபோன் நிறுவன புதிய வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் ரீசார்ஜ் சலுகையின் கட்டணம் ரூ.351 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும். இச்சலுகையில் பயனர்களுக்கு வாய்ஸ் கால் மற்றும் எஸ்.எம்.எஸ். வழங்கப்படுகிறது.

    வோடபோன் பிரீபெயிட் சேவையில் இணையும் புதிய பயனர்களுக்கு அறிவிக்கப்பட்டிருக்கும் முதல் முறை ரீசார்ஜ் சலுகையில் பயனர்களுக்கு எவ்வித டேட்டா பலன்களும் வழங்கப்படவில்லை. இச்சலுகையில் ரிலையன்ஸ் ஜியோ போன்று எவ்வித கட்டுப்பாடும் இன்றி அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் வழங்கப்படுகிறது.

    வோடபோன் ரூ.351 பலன்கள்:

    வோடபோனின் புதிய ரூ.351 சலுகையில் பயனர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் எவ்வித கட்டுப்பாடும் இன்றி வழங்கப்படுகிறது. இத்துடன் தினமும் 100 எஸ்.எம்.எஸ்., 56 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. இச்சலுகையில் எவ்வித டேட்டா பலன்களும் வழங்கப்படவில்லை என்பதால், டேட்டா பயன்படுத்த விரும்பும் பயனர்கள் தனியே டேட்டா சலுகையை தேர்வு செய்ய வேண்டும்.



    புதிய சலுகை பற்றிய விவரங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கும் நிலையில், இச்சலுகை ஒவ்வொரு வட்டாரத்திற்கும் ஏற்ப மாறுபடும் என கூறப்படுகிறது. இத்துடன் புதிய சலுகையில் வோடபோன் பிளே சந்தாவும் இலவசமாக வழங்கப்படுகிறது. இச்சலுகை பயனர்களுக்கு டிசம்பர் 2018 முதல் வழங்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

    புதிய சலுகையில் டேட்டா பலன்கள் சேர்க்கப்படாத நிலையில், மற்ற முதல் முறை ரீசார்ஜ்களில் டேட்டா பலன்கள் வழங்கப்படுகிறது. ரூ.176 சலுகையில் பயனர்களுக்கு 1 ஜி.பி. டேட்டா, தினமும் 100 எஸ்.எம்.எஸ்., அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் உள்ளிட்டவை 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது.

    இதேபோன்று ரூ.229 சலுகையில் தினமும் 1 ஜி.பி. டேட்டா, தினமும் 100 எஸ்.எம்.எஸ்., அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் உள்ளிட்டவை 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இவற்றுடன் ரூ.496 மற்றும் ரூ.555 விலையிலும் சலுகைகள் வழங்கப்படுகின்றன. இவற்றில் தினமும் 1.4 ஜி.பி. டேட்டாவும், 100 எஸ்.எம்.எஸ்., அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. இவற்றின் வேலிடிட்டி  முறையே 84 மற்றும் 90 நாட்கள் ஆகும்.

    வோடபோன் சமீபத்தில் ரூ.1,999 விலையில் புதிய சலுகையை அறிவித்தது. புதிய சலுகை 365 நாட்கள் வேலிடிட்டி கொண்டிருக்கிறது. இத்துடன் தினமும் 1.5 ஜி.பி. 2ஜி/3ஜி/4ஜி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
    வோடபோன் நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு 365 நாட்கள் வேலிடிட்டி வழங்கும் புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. #Vodafone #offer



    ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.1,699 சலுகைக்கு போட்டியாக வோடபோன் ரூ.1,999 விலையில் புதிய சலுகையை அறிவித்துள்ளது. ஏர்டெல் மற்றும் வோடபோன் நிறுவனங்களின் புதிய சலுகை ஒரு வருட வேலிடிட்டி வழங்குகின்றன.

    ரூ.1699 சலுகையை போன்று புதிய சலுகை 365 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. எனினும், புதிய ரூ.1,999 சலுகையில் தினமும் 1.5 ஜி.பி. 2ஜி/3ஜி/4ஜி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. முந்தைய ரூ.1699 சலுகையில் தினமும் 1 ஜி.பி. டேட்டா வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.



    முதற்கட்டமாக வோடபோன் சலுகை கேரளாவில் மட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த சலுகை மற்ற வட்டாரங்களிலும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரிலையன்ஸ் ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு இதே பலன்களை ரூ.1,699 சலுகையில் வழங்குகிறது.

    முன்னதாக வோடபோன் நிறுவனம் ரூ.119 விலையில் புதிய சலுகையை அறிவித்தது. இந்த சலுகையில் பயனர்களுக்கு தினமும் 1 ஜி.பி. டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் உள்ளிட்டவை 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. ஏற்கனவே வோடபோன் ரூ.169 விலையில் இதேபோன்ற சலுகைகளுடன் வோடபோன் பிளே ஆப் பயன்படுத்தும் வசதியும் வழங்குகிறது.
    வோடபோன் நிறுவன வாடிக்கையாளர்களுக்கு ரூ.119 விலையில் புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இச்சலுகையில் பயனர்களுக்கு தினமும் 1 ஜி.பி. டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் வழங்கப்படுகிறது. #Vodafone #offers



    வோடபோன் நிறுவன வாடிக்கையாளர்களுக்கு ரூ.119 விலையில் புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய சலுகையில் பயனர்களுக்கு தினமும் 1 ஜி.பி. டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் உள்ளிட்டவை 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. 

    புதிய வோடபோன் சலுகை ரூ.169 சலுகையை போன்ற பலன்களை வழங்குகிறது. இச்சலுகையில் தினமும் 1 ஜி.பி. டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இத்துடன் வோடபோன் பிளே ஆப் பயன்படுத்தும் வசதியும் வழங்கப்படுகிறது.

    எனினும், புதிய ரூ.119 சலுகை தேர்வு செய்யப்பட்ட சில வாட்டாரங்களில் மட்டும் வழங்கப்படுகிறது. ரூ.169 சலுகை இந்தியாவின் பெரும்பாலான வட்டாரங்களில் வழங்கப்படுகிறது. ரூ.119 சலுகையில் டேட்டா மற்றும் வாய்ஸ் கால் மட்டும் வழங்கப்படுவதால் வாடிக்கையாளர்கள் எஸ்.எம்.எஸ். சேவையை இலவசமாக பயன்படுத்த முடியாது. ரூ.169 சலுகையில் தினமும் 100 எஸ்.எம்.எஸ். வழங்கப்படுகிறது.



    வோடபோன் சலுகையை போன்றே ஐடியா செல்லுலார் பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கும் ரூ.119 விலையில் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இச்சலுகை ஆந்திர பிரதேசம், தெலங்கானா மற்றும் கேரளா உள்ளிட்ட வாட்டாரங்களில் வழங்கப்படுவதாக தெரிகிறது.

    முன்னதாக வோடபோன் நிறுவனம் ரூ.169 விலையில் பிரீபெயிட் சலுகையை அறிவித்தது. இச்சலுகையில் பயனர்களுக்கு தினமும் 1 ஜி.பி. டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. ரூ.169 சலுகை வோடபோன் இந்தியா அதிகாரப்பூர்வ வலைதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது.

    ஏர்டெல் நிறுவனமும் ரூ.169 விலையில் பிரீபெயிட் சலுகையை அறிவித்தது. இச்சலுகையில் வோடபோன் வழங்குவதை போன்ற பலன்கள் வழங்கப்படுகிறது. எனினும், ரிலையன்ஸ் ஜியோ ரூ.149 விலையில் தினமும் 1.5 ஜி.பி. டேட்டா, தினமும் 100 எஸ்.எம்.எஸ்., அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
    வோடபோன் நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு ஒரு வருட வேலிடிட்டி வழங்கும் புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. #Vodafone #offers



    ஐடியா செல்லுலார் நிறுவனத்துடன் இணைந்தபின் வோடபோன் நிறுவனம் தொடர்ந்து புதிய சலுகைகளை அறிவித்து வருகிறது. கடந்த சில வாரங்களில் மட்டும் வோடபோன் பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது. அந்த வரிசையில் வோடபோன் நிறுவனம் அதன் பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு ரூ.1,699 விலையில் புதிய சலுகையை அறிவித்துள்ளது.

    ஒரு வருட வேலிடிட்டி கொண்டிருக்கும் புதிய சலுகையில் பயனர்களுக்கு வாய்ஸ் மற்றும் டேட்டா பலன்கள் கிடைக்கும். ஒரு வருட வேலிடிட்டி என்பதால் வாடிக்கையாளர்களுக்கு 365 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. மற்ற அன்லிமிட்டெட் சலுகைகளை போன்றே ரூ.1,699 சலுகையிலும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் எவ்வித கட்டுப்பாடுகளின்றி வழங்கப்படுகிறது.



    இதுதவிர தினமும் 100 எஸ்.எம்.எஸ்., 1 ஜி.பி. 3ஜி / 4ஜி டேட்டா வழங்கப்படுகிறது. நிர்ணயிக்கப்பட்ட டேட்டா தீர்ந்ததும் டேட்டா வேகம் குறைக்கப்படும். இத்துடன் வோடபோன் பிளே பயன்படுத்தும் வசதியும் வழங்கப்படுகிறது. இதை கொண்டு வாடிக்கையாளர்கள் நேரலையில் தொலைகாட்சி மற்றும் திரைப்படங்களை பார்த்து ரசிக்கலாம்.

    வோடபோனின் புதிய சலுகை ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.1,699 சலுகைகளுக்கு போட்டியாக அமைந்துள்ளது. ஏர்டெல் ரூ.1,699 சலுகையில் தினமும் 1 ஜி.பி. டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை 365 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது.

    ஒருவருட சலுகை தவிர வோடபோன் மூன்று புதிய டாப்-அப் ரீசார்ஜ்களை அறிவித்தது. ரூ.50 விலையில் அறிவிக்கப்பட்ட முதல் சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு ரூ.39.7 டாக்டைம் வழங்கப்படுகிறது. மற்ற இருசலுகைகள் ரூ.100 மற்றும் ரூ.500 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

    இந்த இரு சலுகைகளிலும் முழுமையான டாக்டைம் வழங்கப்படுகிறது. வோடபோன் ரூ.154 பிரீபெயிட் சலுகையில் ஆறு மாதங்களுக்கு வேலிடிட்டி வழங்கப்படுகிறது. #Vodafone #offers
    பி.எஸ்.என்.எல். நிறுவன பிரீபெயிட் பயனர்களுக்கு ரூ.269 விலையில் புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பயனர்களுக்கு 2.6 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது. #bsnl #offers



    குடியரசு தினத்தை முன்னட்டு பி.எஸ்.என்.எல். நிறுவனம் தனது பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகையை அறிவித்துள்ளது. 

    ரூ.269 விலையில் அறிவிக்கப்பட்டிருக்கும் புதிய சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு 26 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. இத்துடன் 2.6 ஜி.பி. டேட்டா, 2600 நிமிடங்கள் வாய்ஸ் கால், 260 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இச்சலுகை குடியரசு தினத்தையொட்டி குறுகிய காலக்கட்டத்திற்கு மட்டும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. 



    அந்த வகையில் புதிய ரூ.269 சலுகையை வாடிக்கையாளர்கள் ஜனவரி 26 (குடியரசு தினம்) முதல் ஜனவரி 31 ஆம் தேதி வரை மட்டுமே தேர்வு செய்ய முடியும். இச்சலுகை நாடு முழுக்க அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்கப்படுகிறது. ஏற்கனவே குறிப்பிடப்பட்டு இருப்பதை போன்று இச்சலுகை குடியரசு தினத்தை கொண்டாடும் வகையில் நாடு முழுக்க அறிவிக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக பி.எஸ்.என்.எல். தனது ரூ.99 சலுகையை மாற்றியமைத்து. அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் சேவையை மட்டும் வழங்கும் இச்சலுகையில் ஏற்கனவே 24 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்பட்ட நிலையில், தற்சமயம் 26 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது.

    இதுதவிர ரூ.899 விலையில் பி.எஸ்.என்.எல். புதிய சலுகையை அறிவித்தது. இதில் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 1.5 ஜி.பி. டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 50 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை 180 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது.
    வோடபோன் நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இச்சலுகையில் பயனர்களுக்கு தினமும் 1.6 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது. #Vodafone #offers



    இந்திய டெலிகாம் சந்தையில் தற்சமயம் நீண்ட நாள் வேலிடிட்டி வழங்கும் சலுகைகளுக்கான போட்டி ஏற்பட்டுள்ளது. ரிலையன்ஸ் ஜியோ மற்றும் வோடபோன் நிறுவனங்கள் துவங்கிய இந்த போட்டியில் ரூ.1,699 சலுகையில் ஒரு வருடத்திற்கு வேலிடிட்டி வழங்கப்படுகிறது.

    இருநிறுவனங்களை தொடர்ந்து ஏர்டெல் ரூ.1,699 விலையில் புதிய சலுகையை 360 நாட்கள் வேலிடிட்டியுடன் அறிவித்தது. இத்துடன் ரூ.998 மற்றும் ரூ.597 விலையில் இரண்டு புதிய சலுகைகளை ஏர்டெல் நேற்று அறிவித்தது. இந்நிலையில், வோடபோன் தன்பங்கிற்கு புதிய சலுகையை அறிவித்துள்ளது.

    வோடபோன் அறிவித்திருக்கும் ரூ.479 சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 1.6 ஜி.பி. டேட்டா, 84 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. அந்த வகையில் முழு வேலிடிட்டி காலத்தில் வோடபோன் வாடிக்கையாளர்களுக்கு மொத்தம் 134.4 ஜி.பி. டேட்டா கிடைக்கும்.



    இத்துடன் புதிய சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிட்டெட் உள்ளூர், வெளியூர் மற்றும் ரோமிங் அழைப்புகள் நாடு முழுக்க வழங்கப்படுகிறது. இதுதவிர தினமும் 100 எஸ்.எம்.எஸ். 84 நாட்களுக்கும், இலவச லைவ் டி.வி., திரைப்படங்கள் மற்றும் பல்வேறு பலன்களை வோடபோன் ஆப் மூலம் வழங்குகிறது. 

    வோடபோன் அறிவித்திருக்கும் புதிய சலுகை ஜியோவின் ரூ.399 சலுகைக்கு போட்டியாக அமைந்துள்ளது. ஜியோ வழங்கும் ரூ.399 சலுகையில் தினமும் 1.5 ஜி.பி. டேட்டா 84 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்குகிறது.
    ரிலையன்ஸ் ஜியோ நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு அந்நிறுவனம் இரண்டு புதிய சலுகைகளை நீண்ட வேலிடிட்டியுடன் அறிவித்துள்ளது. #reliancejio #offers



    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது விலை குறைந்த சலுகையை ரூ.49 விலையில் கடந்த ஆண்டு அறிவித்தது. இந்த சலுகை ஜியோபோன் பயனர்களுக்கு மட்டும் அறிவிக்கப்பட்டது. இதில் வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்பட்டது. 

    இந்நிலையில், ரிலையன்ஸ் ஜியோ தற்சமயம் நீண்ட வேலிடிட்டி கொண்ட இரண்டு புதிய சலுகைகளை அறிவித்துள்ளது. ரூ.594 மற்றும் ரூ.297 விலையில் அறிவிக்கப்பட்டுள்ள இரு சலுகைகளும் ஜியோபோன் பயன்படுத்துவோருக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. 



    ரூ.594 விலையில் அறிவிக்கப்பட்டுள்ள சலுகையில் பயனர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 0.5 ஜி.பி. அதிவேக டேட்டா (டேட்டா தீர்ந்ததும் வேகம் 64Kbps ஆக குறைக்கப்படும்), 28 நாட்களுக்கு 300 எஸ்.எம்.எஸ். மற்றும் ஜியோ செயலிகளை இலவசமாக பயன்படுத்தும் வசதி வழங்கப்படுகிறது. இதன் வேலிடிட்டி 168 நாட்கள் ஆகும்.

    ரூ.297 விலையில் அறிவிக்கப்பட்டிருக்கும் ஜியோ சலுகையில் பயனர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 0.5 ஜி.பி. அதிவேக டேட்டா (டேட்டா தீர்ந்ததும் வேகம் 64Kbps ஆக குறைக்கப்படும்), 28 நாட்களுக்கு 300 எஸ்.எம்.எஸ். மற்றும் ஜியோ செயலிகளை இலவசமாக பயன்படுத்தும் வசதி உள்ளிட்டவை 84 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.

    முன்னதாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் டிசம்பர் 31, 2018 வரையிலான மூன்றாவது காலாண்டு வருவாய் அறிக்கை வெளியானது. அதில் ரிலையன்ஸ் ஜியோவின் மொத்த வருவாய் ரூ.10,383 கோடியாக அதிகரித்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
    பாரதி ஏர்டெல் நிறுவனம் அறிமுகம் செய்திருக்கும் புதிய சலுகையில் தினமும் 1 ஜி.பி. டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் உள்ளிட்டவை ஒரு வருடத்திற்கு வழங்கப்படுகிறது. #Airtel #offers



    ஏர்டெல் நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய சலுகையில் பயனர்களுக்கு தினமும் 1 ஜி.பி. டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் மற்றும் எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை 365 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. 

    365 நாட்கள் வேலிடிட்டி வழங்கும் புதிய சலுகைக்கான கட்டணம் ரூ.1,699 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய சலுகை ஜியோவின் வருடாந்திர சலுகைக்கு போட்டியாக அமைந்துள்ளது. ஏர்டெல் ரூ.1,699 சலுகை அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.



    அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 1 ஜி.பி. டேட்டா, எஸ்.எம்.எஸ். சலுகை தவிர ஏர்டெல் டி.வி. செயலியின் பிரீமியம் தரவுகளை இலவசமாக பார்த்து ரசிக்கும் வசதியும் வழங்கப்படுகிறது.

    ஏர்டெல் அறிவித்துள்ள புதிய சலுகை அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. எனினும், புதிய சலுகை அந்நிறுவன வலைதளத்தில் இதுவரை பதிவேற்றம் செய்யப்படவில்லை.

    ஜியோ வழங்கும் வருடாந்திர சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 1.5 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது.
    பி.எஸ்.என்.எல். நிறுவன பிரீபெயிட் பயனர்களுக்கு ரூ.399 சலுகையில் தினமும் 3.21 ஜி.பி. டேட்டா வழங்கும் படி மாற்றப்பட்டுள்ளது. #BSNL



    பி.எஸ்.என்.எல். நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த ரூ.399 சலுகை மாற்றப்பட்டுள்ளது. அதன்படி ரூ.399 சலுகையில் பயனர்களுக்கு தினமும் 3.21 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது.

    முன்னதாக கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் பி.எஸ்.என்.எல். நிறுவனம் ரூ.399 விலை சலுகையை அறிவித்தது. இச்சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், இலவச பிரத்யேக ரிங் பேக் டோன் உள்ளிட்டவை 74 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. அதன்படி பயனர்களுக்கு மொத்தம் 237.54 ஜி.பி. டேட்டா கிடைக்கும்.

    பி.எஸ்.என்.எல். நிறுவன வலைதளங்களின் வெவ்வேறு வட்டாரங்களில் ரூ.399 பிரீபெயிட் சலுகையில் தினமும் 3.21 ஜி.பி. வழங்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த 1 ஜி.பி. டேட்டாவை விட 2.21 ஜி.பி. வரை அதிகம் ஆகும். நிர்ணயிக்கப்பட்ட 3.21 ஜி.பி. டேட்டா தீர்ந்ததும் டேட்டா வேகம் நொடிக்கு 80 கே.பி.யாக குறைக்கப்படும்.



    கூடுதல் டேட்டா தவிர ரூ.399 பி.எஸ்.என்.எல். சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ்., பிரத்யேக ரிங் பேக் டோன் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் சேவை டெல்லி மற்றும் மும்பை போன்ற வட்டாரங்களுக்கும் பொருந்தும்.

    பி.எஸ்.என்.எல். நிறுவனம் ரூ.399 விலை சலுகையை கடந்த ஆண்டு ராக்கி பண்டிகைக்கு அறிவித்தது. பிரீபெயிட் பயனர்களுக்கு 2.21 ஜி.பி. கூடுதல் டேட்டா ஜனவரி 31 ஆம் தேதி வரை வழங்கப்படுகிறது.
    பி.எஸ்.என்.எல். நிறுவன போஸ்ட்பெயிட் பயனர்களுக்கு அந்நிறுவனம் புதிய சலுகையை அறிவித்துள்ளது. புதிய சலுகையில் பயனர்களுக்கு 120 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது. #BSNL #Offers
    பி.எஸ்.என்.எல். நிறுவனம் தனது போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகையை அறிவித்துள்ளது. இந்திய டெலிகாம் சந்தையில் ஏற்பட்டுள்ள போட்டி காரணமாக மற்ற நிறுவனங்கள் தங்களது சலுகைகளை மாற்றியமைத்தும், அவ்வப்போது புதிய சலுகைகளை அறிவித்தும் வருகிறது.

    இந்நிலையில், பி.எஸ்.என்.எல். ரூ.798 விலையில் புதிய சலுகையை அறிவித்துள்ளது. போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்களுக்கு அறிவிக்கப்பட்டு இருக்கும் இச்சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் எவ்வித கட்டுப்பாடும் இன்றி வழங்கப்படுகிறது. இத்துடன் தினமும் 100 எஸ்.எம்.எஸ்., 120 ஜி.பி. 2ஜி/3ஜி டேட்டா வழங்கப்படுகிறது.

    போஸ்ட்பெயிட் சலுகை என்ற வகையில் ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா போன்று புதிய பி.எஸ்.என்.எல். சலுகையில் பயனர்களுக்கு டேட்டா ரோல் ஓவர் சலுகை வழங்கப்படவில்லை. இதனால் வாடிக்கையாளர்கள் பயன்படுத்தாத டேட்டா ஒவ்வொரு மாதமும் பயனற்று போகும்.



    புதிய பி.எஸ்.என்.எல். சலுகையை தேர்வு செய்யும் வாடிக்கையாளர்ளுக்கு ஒரு வருடத்திற்கான அமேசான் பிரைம் சந்தா மற்றும் மூன்று மாதங்களுக்கு நெட்ஃப்ளிக்ஸ் சந்தா வழங்கப்படுகிறது. பி.எஸ்.என்.எல். ரூ.798 போஸ்ட்பெயிட் சலுகை தற்சமயம் கர்நாடகா வட்டாரத்திற்கு மட்டும் அறிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில், மற்ற வட்டாரங்களில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு விரைவில் இச்சலுகை அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    பி.எஸ்.என்.எல். ரூ.798 சலுகை பாரதி ஏர்டெல் நிறுவனம் வழங்கி வரும் ரூ.799 போஸ்ட்பெயிட் சலுகைக்கு போட்டியாக அமைந்துள்ளது. இச்சலுகையில் பயனர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் எவ்வித கட்டுப்பாடும் இன்றி வழங்கப்படுகிறது. இத்துடன் தினமும் 100 எஸ்.எம்.எஸ்., 100 ஜி.பி. 2ஜி / 3ஜி / 4ஜி டேட்டா வழங்கப்படுகிறது.

    இதுதவிர ஒரு வருடத்திற்கான அமேசான் பிரைம் சந்தா மற்றும் மூன்று மாதங்களுக்கு நெட்ஃப்ளிக்ஸ் சந்தா, ஜீ5 சேவையில் இலவச திரைப்படங்கள், நிகழ்ச்சிகள் மற்றும் 100 ஜி.பி. வரை டேட்டா ரோல்ஓவர் வசதி வழங்கப்படுகிறது. #BSNL #Offers
    ×