search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94574"

    பிரதமர் மோடிக்கு பொருளாதாரம் பற்றி எதுவும் தெரியாது என்று சுப்பிரமணிய சாமி கூறியுள்ளார். #SubramanianSwamy #PMModi

    சென்னை:

    பா.ஜனதா எம்.பி. சுப்பிரமணிய சாமி கொல்கத்தாவில் நடந்த நிகழ்ச்சியில் பேசியதாவது:-

    உலக அளவில் இந்திய பொருளாதாரம் 5-வது இடத்தில் உள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதமாக கூறி வருகிறார். ஆனால் உண்மையில் நமது பொருளதாரம் அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தப்படியாக 3-வது இடத்தில் உள்ளது. இருந்தாலும் பிரதமர் மோடி ஏன் 5-வது இடத்தில் இருப்பதாக சொல்லி வருகிறார் என்பது புரியவிலலை.

    பிரதமருக்கு பொருளாதாரம் தெரியாதது தான் அதற்கு காரணம். அவருக்கு மட்டுல்ல நிதிஅமைச்சர் அருண்ஜெட்லிக்கும் பொருளாதாரம் தெரிய வில்லை. அன்னிய செலாவணி மதிப்பை அடிப்படையாக வைத்து அவர்கள் இருவரும் நாட்டின் பொருளாதாரம் 5-வது இடத்தில் உள்ளதாக கூறுகிறார்கள். ஆனால் அந்த மதிப்பு தொடர்ந்து மாறக்கூடியது. அதனை அடிப்படையாக கொண்டு பொருளாதார வளர்ச்சியை கணக்கிடுவது மிகவும் தவறாகும்.

     


    தற்போதைய நிலையில் அந்த விகிதத்தை கொண்டு கணக்கிட்டால் நாட்டின் பொருளாதாரம் 5-வது இடத்தில் அல்ல 7-வது இடத்தில் இருக்கிறது.

    உண்மையில் பொதுமக்களின் வாங்கும் திறனை அடிப்படையாக கொண்டே நாட்டின் பொருளாதாரம் நிர்ணயிக்கப்பட வேண்டும். அவ்வாறு நிர்ணயித்தால் இந்திய பொருளாதாரம் தற்போது உலக அளவில் 3-வது இடத்தை வகிக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார். #SubramanianSwamy #PMModi

    தனது கருத்து சுதந்திரத்தில் தலையிட பாரதிய ஜனதாவுக்கு உரிமை கிடையாது என தமிழிசை கருத்துக்கு கனிமொழி பதிலடி கொடுத்துள்ளார். #Kanimozhi #TamilisaiSoundararajan
    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் நேற்று நடந்த தி.மு.க. கூட்டணி செயல்வீரர்கள் கூட்டத்தில் வேட்பாளர் கனிமொழி எம்.பி. பேசியதாவது:-

    நாட்டில் கருத்து சுதந்திரம் இல்லை என்றால் கனிமொழி பேச முடியுமா? என்று பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கேட்டு உள்ளார். கனிமொழி பேசுவதற்கு உரிமை நீங்கள் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. இது பெரியார், அண்ணா பெற்றுத் தந்து இருக்கக்கூடிய உரிமை. இதில் கை வைக்கக்கூடிய அதிகாரம் பா.ஜனதாவுக்கு கிடையாது.



    இங்கே மேடையில் இருக்கும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் அனைத்து தலைவர்களும், தி.மு.க. என்ற மாபெரும் இயக்கமும் என்னுடன் உள்ளது. ஆகையால் என்னுடைய கருத்து சுதந்திரத்தை பற்றி நான் பேசவில்லை. மாணவி சோபியாவின் கருத்து சுதந்திரம் பறிக்கப்பட்டதே? அதைப்பற்றி கேட்கிறேன். பா.ஜனதாவுக்கு எதிராக கருத்து தெரிவித்தவர்கள் எத்தனையோ பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். இந்த நாட்டில் பா.ஜனதாவுக்கு எதிராக கருத்து தெரிவிக்கும் அரசியல்வாதிகள் எந்த அளவுக்கு பாதிக்கப்படுகிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும்.

    இவ்வாறு அவர் பேசினார். #Kanimozhi #TamilisaiSoundararajan
    பாராளுமன்ற தேர்தலில் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவேன் என்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். #ponradhakrishnan #bjp #parliamentelection

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி பாரதீய ஜனதா வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கன்னியாகுமரி மாவட்டத்துக்கு கடந்த 5 ஆண்டுகளாக யாரும் செய்யாத பல திட்டங்களை பாரதீய ஜனதா அரசு செய்து இருக்கிறது. 50 ஆண்டுகளில் செய்ய வேண்டியதை, தேசிய ஜனநாயக கூட்டணி அரசு 5 ஆண்டுகளில் செய்து முடித்திருக்கிறது. அந்த சாதனைகளை கூறி நாங்கள் வாக்கு கேட்போம்.

    கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் முதல் நபராக நாங்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளோம். எங்கள் அணிதான் மிகப்பெரிய வெற்றியை பெறும். சுமார் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் நான் வெற்றி பெறுவேன். கடந்த முறை தேர்தல் அறிக்கையில் கூறியபடி ஹெலிகாப்டர் தளம் அமைப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துள்ளது. பாரதீய ஜனதா தேர்தல் அறிக்கை விரைவில் வெளியிடப்படும். மக்களுக்கு வேலைக்காரனாக உள்ள என்னிடம் அதிகம் எதிர் பார்க்கிறார்கள். அதை நிச்சயம் நான் செய்வேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    குமரி மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் நாகர்கோவிலில் உள்ள அ.தி.மு.க. கட்சி அலுவலகத்தில் நடந்தது. தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார்.

    இதில் அ.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் எஸ்.ஏ.அசோகன் (கிழக்கு), ஜான் தங்கம் (மேற்கு), அவைத்தலைவர் சேவியர் மனோகரன், முன்னாள் எம்.எல்.ஏ. ராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    தேர்தலில் சிறப்பாக பணிபுரிந்து பா.ஜ.க.வுக்கு அதிக வாக்குகளை பெற்று தரும் அ.தி.மு.க. நிர்வாகிக்கு 5 பவுன் தங்க சங்கிலி பரிசாக வழங்கப்படும். 2-வது இடத்தை பிடிக்கும் அ.தி.மு.க. நிர்வாகிக்கு 3 பவுன் தங்க சங்கிலி, 3-வது இடத்தை பிடிப்பவருக்கு 1 பவுன் மோதிரமும் வழங்கப்படும் என்று அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் எஸ்.ஏ. அசோகன் தெரிவித்து உள்ளார். #ponradhakrishnan #bjp #parliamentelection

    கேரளாவில் பிரசித்திபெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் அமைந்துள்ள பத்தனம்திட்டா பாராளுமன்ற தொகுதியின் பாஜக வேட்பாளராக அம்மாநில பாஜக பொதுச்செயலாளர் கே.சுரேந்திரன் போட்டியிடுகிறார். #BJPticketforSurendran #Pathanamthitta
    திருவனந்தபுரம்:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி சில மாநிலங்களில் போட்டியிடும் 11 வேட்பாளர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியலை அக்கட்சியின் டெல்லி தலைமை இன்று வெளியிட்டது.

    கேரளாவின் பத்தனம்திட்டா பாராளுமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளராக சுரேந்திரன் போட்டியிடுவார் என இந்த பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    சில மாதங்களுக்கு முன்னர் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் பெண்களை வழிபாடு செய்ய அனுமதிக்கும் விவகாரத்தில் கேரள மாநில பாஜக தலைவர் ஸ்ரீதரன் பிள்ளை, பொதுச்செயலாளர் கே.சுரேந்திரன் ஆகியோரின் பெயர்கள் ஊடகங்களில் பரவலாக காணப்பட்டது நினைவிருக்கலாம்.

    ஆர்.எஸ்.எஸ். மற்றும் அகிலபாரத் வித்யா பரிஷத் இயக்கத்தின் ஆரம்பகால உறுப்பினராக இருந்த சுரேந்திரன் தற்போது வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பத்தனம்திட்டா பாராளுமன்ற தொகுதிக்குள் சபரிமலை ஐயப்பன் கோவில் உள்ளது குறிப்பிடத்தக்கது. #BJPticketforSurendran #Pathanamthitta  
    காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல் மந்திரியும் மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவருமான மெகபூபா முப்தி அனந்த்நாக் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார். #MehboobaMufti #LokSabhaelection #Anantnagseat
    ஜம்மு:

    87 இடங்களை கொண்ட ஜம்மு-காஷ்மீர் மாநில சட்டசபைக்கு கடந்த 2015-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஜம்மு-காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி 28 இடங்களையும், பா.ஜ.க. 25 இடங்களையும், ஜம்மு-காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி 15 இடங்களையும், காங்கிரஸ் கட்சி 12 இடங்களையும் இதர கட்சிகள் 6 இடங்களையும் பிடித்தன.

    அங்கு ஆட்சி அமைக்க 44 இடங்கள் தேவை என்ற நிலையில் ஜம்மு-காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி பா.ஜ.க. ஆதரவுடன் கடந்த 1-3-2015 அன்று ஆட்சி அமைத்தது. பி.டி.பி. எனப்படும் ஜம்மு-காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் முப்தி முகம்மது சயீத் முதல் மந்திரியாகவும், பா.ஜ.க. தரப்பில் நிர்மல் சிங் துணை முதல் மந்திரியாகவும் பொறுப்பேற்றனர். 

    முப்தி முகம்மது சயீத் மறைவுக்கு பின்னர் அவரது மகள், மெகபூபா முப்தி தலைமையில் அம்மாநிலத்தில் பிடிபி - பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. சமீபகாலமாக ஆளும் கூட்டணி கட்சிகளுக்குள் கருத்து மோதல் இருந்துவந்ததாக தெரிகிறது.

    இந்நிலையில், காஷ்மீர் மாநில சட்டசபையில் இடம்பெற்றுள்ள பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரையும் டெல்லி வரும்படி பா.ஜ.க. தலைவர் அழைப்பு விடுத்தார். இன்று எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை நடத்திய பின்னர் மெகபூபா முப்தி தலைமையிலான கூட்டணி அரசில் இருந்து விலகுவதாக பா.ஜ.க. அறிவித்தது.

    தேசிய அரசியலில் பெரும் திருப்புமுனையாக அமைந்த இந்த அறிவிப்புக்கு பின்னர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் தனது முதல் மந்திரி பதவியை மெகபூபா முப்தி ராஜினாமா செய்தார். அங்கு பத்து மாதங்களாக ஜனாதிபதி ஆட்சி நடந்து வருகிறது. 

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள 6 பாராளுமன்ற தொகுதிகளுக்கு ஏப்ரல் 11 முதல் மே 6-ம் தேதிவரை 5 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.

    இந்த தேர்தலில் அனந்த்நாக் தொகுதியில் போட்டியிடப் போவதாக அம்மாநிலத்தின் முன்னாள் முதல் மந்திரியும் மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவருமான மெகபூபா முப்தி இன்று தெரிவித்துள்ளார். #MehboobaMufti #LokSabhaelection #Anantnagseat
    பாஜக மூத்த தலைவரான எல்.கே.அத்வானியின் உழைப்பின் பலனை அமித் ஷா மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் அனுபவித்து வருவதாக சிவசேனா கட்சி குற்றம்சாட்டியுள்ளது. #Advani #AmitShah #Modi #Shivsena
    மும்பை:

    பாஜக மூத்த தலைவர்களான அத்வானி மற்றும் அடல் பிகாரி வாஜ்பாய் ஆகியோரது வழிகாட்டலால் உருவாக்கப்பட்ட பாஜகவின் பலன்களை அமித் ஷா, மோடி ஆகியோர் அனுபவித்து வருகின்றனர் சிவசேனா குற்றம்சாட்டியுள்ளது.

    இதுதொடர்பாக, சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில் இன்று வெளியாகியுள்ள கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

    இந்திய அரசியலில் பீஷ்மாச்சாரியராக திகழ்ந்து வருபவர் பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி. ஆனால் அவரது பெயர் பாராளுமன்ற தேர்தலுக்கான பாஜக வேட்பாளர்கள் பட்டியலில் இடம்பெறாததில் ஆச்சர்யம் இல்லை. அத்வானியின் சகாப்தம் பாஜகவில் முடிவுக்கு வந்துவிட்டது.



    குஜராத் மாநிலம் காந்தி நகர் தொகுதியில் 6 முறை தேர்வு பெற்றுள்ளார். ஆனால் தற்போது அந்த தொகுதியில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா போட்டியிடுகிறார். இதன் அர்த்தம் அவரை வலுக்கட்டாயமாக ஓய்வுபெற வைத்துவிட்டனர்.

    பாஜகவை தோற்றுவித்தவர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் அத்வானி. அவருக்கு பூரண ஒத்துழைப்பு நல்கியவர் அடல் பிகாரி வாஜ்பாய். ஆனால், தற்போது இவர்கள் இருவரது இடத்தை மோடியும், அமித் ஷாவும் வகிக்கின்றனர். இதிலிருந்து கட்சியில் மூத்த தலைவர்களுக்கு உரிய மரியாதை வழங்கப்படுவதில்லை என உறுதியாகிறது.

    பாஜக மூத்த தலைவரான அத்வானியின் அயராத உழைப்பின் பலனை பாஜக தேசிய தலைவர் அமித் ஷா மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் அனுபவித்து வருகின்றனர் எனவும் குற்றம் சாட்டியுள்ளது.#Advani #AmitShah #Modi #Shivsena
    பாஜகவுடன் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு காரணமாக சத்ருகன் சின்கா நாளை அல்லது நாளை மறுநாள் ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரசில் இணைகிறார். #congress #shartrughansinha
    பாட்னா:

    பிரபல இந்தி நடிகரும், பா.ஜனதா எம்.பி.யுமான சத்ருகன்சின்கா பிரதமர் மோடியை கடுமையாக விமர்சனம் செய்து வந்தார்.

    ஆனால் பா.ஜனதா மேலிடம் அவரை கட்சியில் இருந்து நீக்கவில்லை. அவர் போட்டியிட்டு 2 முறை வென்ற பாட்னா சாகிப் தொகுதியில் மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத்தை நிறுத்த பா.ஜனதா மேலிடம் முடிவு செய்தது.

    இதை தொடர்ந்து தனது தேர்தல் நிலைப்பாடு குறித்து ஹோலி பண்டிகைக்கு பிறகு அறிவிப்பதாக சத்ருகன் சின்கா தெரிவித்து இருந்தார்.

    தற்போது ரவிசங்கர் பிரசாத் பாட்னா சாகிப் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதிருப்தி அடைந்துள்ள சத்ருகன் சின்கா காங்கிரஸ் கட்சியில் இணைகிறார்.



    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாளை (24-ந்தேதி) அல்லது நாளை மறுநாள் (25-ந்தேதி) பீகார் செல்கிறார். அப்போது அவர் ராகுல் முன்னிலையில் காங்கிரசில் சேர்கிறார்.

    சத்ருகன் சின்கா காங்கிரஸ் கட்சி சார்பில் பாட்னா சாகிப் தொகுதியில் 3-வது முறையாக போட்டியிடுகிறார்.

    அவர் 2009 தேர்தலில் 1.66 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்திலும், 2014 தேர்தலில் 2.65 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்திலும் பா.ஜனதா சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த முறை காங்கிரஸ் சார்பில் நிற்கிறார். அந்த தொகுதியில் அவருக்கு தனிப்பட்ட செல்வாக்கு அதிகமாக இருக்கிறது.

    சத்ருகன்சின்கா, வாஜ்பாய் மந்திரிசபையில் சுகாதாரம் மற்றும் குழந்தைகள் நல மந்திரியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. #congress #shartrughansinha
    தேசியக் கட்சிகளான பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் ஆகியவை மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் தோல்வி அடைந்துவிட்டதாக பிரகாஷ் ராஜ் குற்றம்சாட்டியுள்ளார். #LSPolls #PrakashRaj
    சென்னை:

    நடிகர் பிரகாஷ்ராஜ் கடந்த ஒரு ஆண்டாக அரசியல் நடவடிக்கைகள் குறித்து கருத்து தெரிவித்து வந்தார். பெங்களூருவில் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் படுகொலையின்போது, பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக விமர்சித்தார். இதனால் பா.ஜனதா தலைவர்கள் பலரும் பிரகாஷ் ராஜுக்கு எதிராக கருத்து தெரிவித்தனர்.

    சமூக வலைதளங்கள் மூலமாக பா.ஜனதா அரசு மீது பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வந்த பிரகாஷ் ராஜ் நேரடி அரசியலில் களமிறங்குவதாக அறிவித்தார். கடந்த ஜனவரி 1-ந்தேதி ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகளை டுவிட்டரில் பதிவிட்ட பிரகாஷ் ராஜ், ‘புதிய மாற்றத்துக்கான நேரம் இது. எனக்கான பொறுப்புகள் கூடி உள்ளன. உங்கள் அனைவரின் ஆதரவுடன், வரும் பாராளுமன்ற தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட உள்ளேன். தொகுதி குறித்த விவரம் விரைவில் அறிவிக்கப்படும். பாராளுமன்றத்திலும் மக்களுக்கான அரசு வேண்டும்’ என பதிவிட்டார். அதன் பின்னர் வரும் தேர்தலில் பெங்களூரு மத்தியத் தொகுதியில் போட்டியிடுவதாக அவர் டுவிட்டரிலேயே அறிவித்தார்.



    கடந்த மாதமே தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய பிரகாஷ் ராஜ் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். ஆளும் பா.ஜனதா எம்.பியான பி.சி.மோகனை எதிர்த்து பெங்களூரு மத்திய தொகுதியில் போட்டியிடுகிறார். பிரகாஷ் ராஜுக்கு ஆதரவு தெரிவிப்பதாக ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி அந்தத் தொகுதிக்கான வேட்பாளரை இதுவரை அறிவிக்கவில்லை.  

    வேட்பு மனுத் தாக்கலுக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரகாஷ் ராஜ், ‘தேசியக் கட்சிகளான பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் ஆகியவை மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் தோல்வி அடைந்துவிட்டன. நான் மக்களின் குரலாக இருக்க விரும்புகிறேன்’ என்று தெரிவித்தார்.

    பிரகாஷ்ராஜ் காங்கிரஸ் கட்சியிடம் ஆதரவு கேட்டு இருந்தார். தற்போது அந்த கட்சியையும் அவர் விமர்சித்து இருப்பதால் காங்கிரஸ் பிரகாஷ்ராஜ் கோரிக்கையை ஏற்கவில்லை என்பது தெரிய வந்துள்ளது. #LSPolls #PrakashRaj
    ஆந்திர முன்னாள் முதல்-மந்திரி என்.டி.ராமாராவின் மகள் புரந்தேஸ்வரி பா.ஜனதா கட்சி சார்பிலும், அவரது கணவர் டக்குபதி வெங்கடேஸ்வர ராவ் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி சார்பிலும் தேர்தலில் போட்டியிட உள்ளனர். #LSPolls #BJP #YSRCongress
    நகரி:

    ஆந்திர முன்னாள் முதல்-மந்திரி என்.டி.ராமாராவின் மகள் புரந்தேஸ்வரி. முன்னாள் மத்திய மந்திரியான இவர் பா.ஜனதா சார்பில் விசாகப்பட்டினம் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார். இவரது கணவரும், முன்னாள் மந்திரியுமான டக்குபதி வெங்கடேஸ்வர ராவ் பர்ச்சூர் சட்டமன்ற தொகுதியில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடுகிறார்.

    கடந்த 2004-ம் ஆண்டு சந்திரபாபு நாயுடுவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தெலுங்குதேசம் கட்சியில் இருந்து விலகிய இவர்கள் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தனர். பின்னர் நடந்த தேர்தலில் வெற்றி பெற்று மந்திரியான புரந்தேஸ்வரி, மாநில பிரிவினை காரணமாக காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பா.ஜனதாவில் இணைந்தார்.



    அரசியலில் இருந்து விலகி இருந்த அவரது கணவர் வெங்கடேஸ்வரராவ் சமீபத்தில் அமெரிக்காவில் வசித்து வரும் தனது மகன் ஹிதேஷ் செஞ்சுராமுடன், ஜெகன் மோகன் ரெட்டியை சந்தித்து ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

    இந்த நிலையில், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் சார்பில் ஆந்திர சட்டசபை தேர்தலில், பர்ச்சூர் தொகுதியில் அமெரிக்க குடியுரிமை பெற்ற தனது மகனுக்கு பதிலாக வெங்கடேஸ்வர ராவ் போட்டியிட உள்ளார். கணவன்-மனைவி இருவரும் வெவ்வேறு கட்சியில் போட்டியிட உள்ளனர். #LSPolls #BJP #YSRCongress
    உத்தர பிரதேசத்தில் பாஜக சார்பில் நடைபெற்ற ஹோலி பண்டிகை விழாவின்போது மேடை சரிந்ததில் விவசாய சங்கத் தலைவர் உள்ளிட்ட பலர் காயமடைந்தனர். #StageCollapsed #HoliMilan
    சம்பால்:

    உத்தர பிரதேச மாநிலம் சம்பால் நகரில் பாஜக சார்பில் ஹோலி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டிருந்தது. முக்கிய நிர்வாகிகள் மேடையில் தோன்றி உரையாற்றினர்.



    நிகழ்ச்சி தொடங்கிய சிறிது நேரத்தில், மேலும் சிலர் மேடையில் ஏறியதால் இட நெருக்கடி ஏற்பட்டது. அப்போது பாரம் தாங்காமல் திடீரென மேடை சரிந்து விழுந்தது. மேடையில் நின்றிருந்த அனைவரும் விழுந்தனர். இதில் பாஜக விவசாய சங்கத் தலைவர் அவ்தேஷ் யாதவ் உள்ளிட்ட பலர் காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். #StageCollapsed #HoliMilan
    கர்நாடக மாநிலத்தில் எடியூரப்பா ஆட்சிக்காலத்தில் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பாஜக தலைவர்களுக்கு ரூ.1800 கோடி லஞ்சம் அளிக்கப்பட்டதாக வெளியான தகவலை லோக்பால் விசாரிக்க காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. #Congressseeksprobe #Rs1800crorepayoffs #BJPleaderss1800crore
    புதுடெல்லி:

    கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல் மந்திரி எடியூரப்பா இல்லத்தில் வருமான வரித்துறை சோதனையின்போது கைப்பற்றப்பட்ட டைரியில் காணப்பட்ட விபரம் என்று எடியூரப்பாவின் கையொப்பத்துடன் பிரபல ஆங்கில பத்திரிகை ஒரு பரபரப்பான தகவலை வெளியிட்டுள்ளது.

    கடந்த 2017-ம் ஆண்டிலிருந்து வருமான வரித்துறை அலுவலகத்தில் பாதுகாப்பாக வைத்துள்ள இந்த டைரியின் சில பக்கங்களின் நகல்களில் எடியூரப்பா லஞ்சமாக சம்பாதித்த பணத்தில் இருந்து சுமார் 1800 கோடி ரூபாய் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங், அருண் ஜெட்லி உள்ளிட்ட பாஜக முக்கிய தலைவர்களுக்கு அளிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.



    இந்நிலையில், டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் கட்சியின் மூத்த செய்தி தொடர்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா, ’கடந்த 2017-ம் ஆண்டில் கைப்பற்றப்பட்ட இந்த டைரியில் காணப்படும் ஆதாரங்களின் அடிப்படையில் இதில் குறிப்பிடப்பட்டுள்ள நபர்களின்மீது மோடி தலைமையிலான மத்திய அரசு இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஏன்?’ என கேள்வி எழுப்பினார்.  லஞ்சப்பணம் பங்குபோடும் விவகாரம் தொடர்பாக சில தலைவர்கள் எடியூரப்பாவுடன் நடத்திய உரையாடல்களையும் அவர் படித்துக் காட்டினார்.

    இந்த லஞ்சப்பணத்தை பாஜக தலைவர்கள் வாங்கினார்களா?, இல்லையா? என்பதை பிரதமர் மோடி உடனடியாக தெளிவுப்படுத்த வேண்டும். இந்த ஆதாரத்தில் தகுந்த முகாந்திரம் இருப்பதால் பிரதமர் மோடி மற்றும் பாஜக தலைவர்கள் அனைவரிடமும் புதிதாக நியமிக்கப்பட்ட லோக்பால் நீதிபதி விசாரணை நடத்த வேண்டும் எனவும் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா வலியுறுத்தியுள்ளார். #Congressseeksprobe #Rs1800crorepayoffs #BJPleaderss1800crore
    பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவரான மாயாவதி ரபேல் ஊழலில் ரகசிய ஆவணங்களை மறைக்கும் காவலாளி என மோடியை சாடியுள்ளார்.#Mayawati #BSP #PMModi #BJP
    லக்னோ:

    உத்தரபிரதேசத்தில் பாஜகவை வீழ்த்த மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் மற்றும் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து பாராளுமன்ற தேர்தலில் களமிறங்கியுள்ளன.

    இந்நிலையில் பிரதமர் மோடி, பாராளுமன்ற தேர்தலையொட்டி இணையதள பயன்பாட்டளர்களை கவரும் முனைப்புடன் கடந்த வாரம் 'காவலாளி (சவுகிதார்) நரேந்திர மோடி ' என தனது டுவிட்டர் பக்கத்தில் பெயர் மாற்றம் செய்தார்.

    இதேபோல் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா மற்றும் மத்திய மந்திரிகள், பாஜகவை சேர்ந்த முதல் மந்திரிகள், மாநில மந்திரிகள் மற்றும் பல்லாயிரக்கணக்கான பாஜக பிரமுகர்களும் மோடியைப் பின்பற்றி தங்களது டுவிட்டர் கணக்குகளில் தங்களது பெயர்களுக்கு முன்னால் ‘காவலாளி’ (சவுகிதார்) என்ற அடைமொழியை இணைத்துள்ளனர்.



    இதையடுத்து பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவரான மாயாவதி, இதனை சுட்டிக்காட்டி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

    பிரதமர் மோடி மற்றும் அவரது மந்திரிகள் என அனைவரும் காவலாளி (சவுகிதார்) என தங்கள் பெயரினை மாற்றியுள்ளனர். இந்த காவலாளிகள் ரபேல் ஊழல் விவகாரத்தில் முக்கிய ஆவணங்கள் திருடப்பட்டதை மறந்துள்ளனர். இந்த ஆவணங்கள் தேர்தல் மற்றும் தங்கள் கட்சியின் பெயர் கெட்டு விடக்கூடாது என்பதற்காக மறைக்கப்பட்டுள்ளன.

    இது போன்ற காவலாளி நம் நாட்டிற்கு நிச்சயம் தேவையா? பாஜக தலைவர்கள் விரும்பும் எந்த பாணியில் வேண்டுமானலும் இருக்கலாம். ஆனால் பெயரை மாற்றியது போல், சட்டம் ஒழுங்கினை காக்கும் காவலாளியாக இருக்க வேண்டும். மக்கள் இதையே விரும்பி ஏற்பார்கள்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #Mayawati #BSP #PMModi #BJP
    ×